ஓம் பிரகாஷ்

அஜித்தின் சீக்ரெட், நயன்தாராவின் ஃபேவரெட்..! விடாமுயற்சி கேமராமேன் ஓம் பிரகாஷ் சம்பவங்கள்

விடாமுயற்சியில புதுசா நிரவ்ஷாக்கு பதிலா ஜாய்ன் பண்ணியிருக்கார், கேமராமேன் ஓம் பிரகாஷ். இன்னைக்கு அவரைப் பத்தித்தா இந்த வீடியோவுல பார்க்கப்போறோம்.

எல்லா ஒளிப்பதிவுக்கும் பின்னாலதான் ஒருபடம் உருவாகுது. என்னடா ஒளிப்பதிவாளரைப் பத்தி சொல்றதுக்கு என்ன இருக்குனு நினைக்கலாம். ஆனா, ஒருபடத்துக்கு அவங்க போடுற அந்த மெனெக்கெடல் ரொம்பவே முக்கியமானது. அதுல வெரைட்டி காட்டும் நம்ம ஓம் பிரகாஷ் கொஞ்சம் ஸ்பெஷல்தான். ஏன்னா, இவரால அஜித்தின் ஆரம்பத்துக்கும் ஒளிப்பதிவு பண்ணுவார், களவாணி படத்துக்கும் ஒளிப்பதிவு பண்ணுவார். இப்போ விடாமுயற்சியில புது கேமராமேனா ஜாய்ன் பண்ணியிருக்கார். ஆனா, இதெல்லாம் விட இன்னும் ஏராளமான சம்பவங்களை பண்ணினவர்தான் நம்ம நீரவ் ஷா.

பிறந்தது கோயம்புத்தூர். காலேஜ் வரைக்கும் அங்கேதான் படிச்சார். சின்ன வயசுல இருந்தே போட்டோகிராபி மேல ஒரு ஈர்ப்பு இருந்தது. கேமரா பத்தி எல்லாத்தையும் கத்துக்கிட்டது அப்பாவோட ஸ்டுடியோவுலதான். அம்மா, அப்பா ரெண்டுபேருமே ஓவிய ஆசிரியரா இருந்ததால படிச்சதும் டிப்ளமோவுலயும் ஓவிய படிப்புதான். வீட்ல சினிமாவுக்கு போறேன்னு சொன்னப்போ எதிர்ப்புகள் அதிகமா வர ஆரம்பிச்சது. ஆனா அவங்க அப்பாவோட நண்பர் ஸ்டில்ஸ் ரவிதான் ஒம் பிரகாஷை சினிமாவுக்குள்ள கூட்டி வந்தார். அவர் மூலமா ஒளிப்பதிவாளர் கே.எம். பன்னீர் செல்வத்துக்கிட்ட உதவி ஒளிப்பதிவாளரா வேலை பார்த்தார். சின்ன வயசுலயே பார்த்த கமர்சியல் சினிமாக்கள் ஏற்படுத்தின தாக்கத்தால கமர்சியல் சினிமாக்கள் பண்ணனும். ஆனா அதுல ஒரு லைவ் ஃபீல் இருக்கணும்னு முடிவு பண்ணி தொழிலைக் கத்துக்கிறார். அப்போதான் நீரவ் ஷா, வேல்ராஜ் எல்லோரும் பழக்கமாகுறாங்க. நிறைய டிஸ்கஸ் பண்றார். அப்புறம் ஒரு கட்டத்துல தனியா ஒளிப்பதிவாளரா களமிறங்குறார். 2,500 விளம்பரப் படங்களுக்கு மேல எடுக்கிறார்.

முதல் படமான எங்கே எனது கவிதை படத்துல வொர்க் பண்றார். அடுத்ததா மலையாளத்துல மோகன்லாலோட வாண்டட் படத்துல வொர்க் பண்றார். இங்கதான் கொஞ்சம் லைவ்வை அனலைஸ் பண்றார். அதுக்குப் பின்னால தெலுங்கு பக்கம் போய், பிரபாஸ், நாகார்ஜூனானு ஸ்டார் ஹீரோஸ்கூட வொர்க் பண்ணிட்டு, களவாணி படம் மூலமா தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். இதுக்கு முன்னால தஞ்சாவோரோட அழகை யாரும் அப்படி காட்டியிருக்க மாட்டாங்கன்னே சொல்லலாம். அந்த அளவுக்கு லைவ்வான படம். மலையாள சினிமா மாதிரி ஃபீல்குட் படம்னா இன்னைக்கு வரைக்கும் அது களவாணிதான்னு சொல்ற அளவுக்கு தரமான படம். இயக்குநர் பாரதிராஜாவே ‘தஞ்சாவூர்ல கேமரா வைக்க இயக்குநர்களும், கேமராமேன்களும் தயங்குவாங்க. வயல் பச்சைப் பசேல்னு இருந்தாலும், நிறைய இடங்கள் மைதானம் மாதிரி இருக்கிறதால ப்ரேம் ப்ளீச் ஆகும். ஆனா, நீ செம்மையா பண்ணியிருக்கே’னு வாழ்த்தியிருக்கார்.

அடுத்ததா அதே இயக்குநர் சற்குணத்தோட வாகை சூடவா படம் வொர்க் பண்றார், ஓம் பிரகாஷ். இதுவும் லைவ் ஃபீலைக் கொடுத்த படம்னே சொல்லலாம். அதுக்கு முன்னால பீரியட் காலக்கட்டத்தை இந்த அளவுக்கு லைவ்வாவும், தத்ரூபமாவும் காட்டின படங்கள்ல வாகை சூடவாவுக்கு முக்கியமான பங்கு இருக்கு. இது கெளதம் மேனனை ஈர்க்க, நீதானே என் பொன் வசந்தம் படத்துல வொர்க் பண்ண கூப்பிட்டார். அதுலயும் தன்னோட ஆஸ்தான லைவ் ஃபீலைக் கொடுத்திருப்பார். இதுபோக கேமரா ஆங்கில்ஸ்ம் வித்தியாசமா தர்றார். பார்க்கவே அழகா இருக்கு. அடுத்துதான் பண்ணதெல்லாம் போதும், கமர்சியல் பக்கம் போகலாம்னு நினைக்கிறப்போ, அஜித்தோட ஆரம்பம் படம் கிடைக்குது. பில்லாவை ஸ்டைலிஷா கொடுத்த இயக்குநர் அப்படிங்குறதால செம்ம ஸ்டைலிஷா எதிர்பார்ப்பார்னு எல்லாத்தையும் ப்ரிப்பேர் பண்ணிட்டு போறார். அங்க போனா உங்க ஸ்டைல்ல எடுங்கனு ஃப்ரீடம் கிடைக்குது. ஆரம்ப படத்துலயும் ப்ளூடோன் மெயிண்டைன் ஆகிட்டே இருக்கும். இதுபோக அஜித்க்கு கார்ல அடிபட்டப்போ அதைக் காருக்குள்ள இருந்து கவர் பண்ண நேரடி சாட்சியும் ஓம் பிரகாஷ்தான்.

அந்த ஸ்பாட்டில் அஜித்துக்கு அடிபட்டு கால் முறிவு ஏற்பட்டும் எந்த விதமான ரியாக்‌ஷனும் முகத்தில் அஜித் காட்டவே இல்லையாம். ஷாட் கட் சொன்ன பின்னாலதான் வலியை கேமராவுக்கு காட்டியதைப் பார்த்து மிரண்டு போனார், ஓம் பிரகாஷ். அதுக்குப் பின்னால இப்போ விடா முயற்சியில நிரவ் ஷா விலக, ஓம் பிரகாஷ் இணைஞ்சிருக்கார். சுமார் 10 வருஷம் கழிச்சு இப்போதான் இந்த கூட்டணி ஒன்னு சேருது. அடுத்ததா ஓம் பிரகாஷை தனுஷ் குத்தகைக்கு எடுத்துக்கிட்டார்னே சொல்லலாம். தனுஷோட அனேகன், மாரி, மாரி 2, பட்டாஸ், திருச்சிற்றம்பலம், நானே வருவேன்னு பல படங்கள்ல வொர்க் பண்ணார். இடையில காஷ்மோரால நயன்தாராகூட சேர்ந்து வொர்க் பண்ணார். இவரோட வொர்க் பிடிச்சுபோனதால அடுத்ததா ஹீரோயின் ஓரியண்டட் கதையான அறம் படத்துக்கு நீங்கதான் சினிமாட்டோகிராஃபி பண்ணனும்னு வாண்டட்டா நயன்தாரா கூப்பிட்டு வொர்க் பண்ணாங்க. அறம் படத்துக்கு இயக்கம் ஒரு பில்லர்ன்னா, அதுக்கு ஒளிப்பதிவுதான் அஸ்திவாரம்னே சொல்லலாம். அந்த அளவுக்கு மெனெக்கெடல் இருந்தது.

ஓம் பிரகாஷை பொறுத்தவரைக்கும் ஒளிப்பதிவு பண்ற படங்கள்ல கலர்ஃபுல் லைட்டிங்ஸை வைக்கிறதை விரும்ப மாட்டார். அப்படி இயக்குனர் அடம் பிடிச்சு கேட்டாத்தான் வைப்பார். இவர் பண்ற படங்கள்ல நைட் எஃபெக்ட் காட்சிகளுக்கு அதிகமா மெனெக்கெடுவார். இதுக்கு திருச்சிற்றம்பலம் படத்துல தனுஷூம், நித்யாமேனனும் டான்ஸ் ஆடுற பாட்டாகட்டும், நானே வருவேன்ல வர்ற வீரா சூரா பாட்டாகட்டும் எல்லாமே தரமான ஒளிப்பதிவா சொல்லலாம். திருச்சிற்றம்பலத்துல எங்கேயுமே வீட்டை பிரிச்சு செட்டு மாதிரி அமைக்காம, வீட்டுக்கு ஏத்த மாதிரி கேமரா ஆங்கிள்ஸ் வைச்சு படமாக்கிட்டார். ரேஸ் சீன்கள்லாம் இதுக்கு முன்னாலயே நிரவ்ஷா முடிச்சுட்டாலும், ஓம் பிரகாஷாலயும் அதை பண்ண முடியும். ஆரம்பம் போட் சேசிங் சீன்ஸ்களை அதுக்கு உதாரணமா சொல்லலாம்.

Also Read – சூப்பர் ஸ்டாருக்கு ‘நோ’.. மக்களுக்காக இலவச மருத்துவமனை! நடிகர் கஞ்சா கருப்பு சறுக்கிய கதை!

ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷோட அப்பா சினிமாவுல வேலை பார்த்திருக்கார். ‘ரஜினிமுருகன்’ படத்திலும் ஒரு ரோல் பண்ணியிருப்பார். படத்தில் ராஜ்கிரன் இறந்ததை கேள்விப்பட்டு வயசான ஒருத்தர் வருவார். அவர்தான் ஓம் பிரகாஷோட அப்பா.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top