ஜெயிக்கவே முடியாத சிச்சுவேஷன்ல இருந்த மேட்ச்களை ஜெயிக்க வைக்குற வித்தையை பஞ்சாப் டீமுக்காக செஞ்சுட்டு இருக்க இரண்டு பேர்தான் ஷஷாங்க் சிங் – அஷூடோஷ் ஷர்மா காம்போ… நாங்க எடுக்கணும்னு நினைச்சது இவரை இல்லீங்கனு ஐபிஎல் ஏலத்தப்போ அழுகாச்சி ஆட்டம் ஆடுன பஞ்சாப் டீம் மேனேஜ்மெண்டே அவரை தலைநிமிர்ந்து பாக்குற அளவுக்கான பெர்ஃபாமன்ஸை ஒருத்தர் காட்ட, இன்னொருத்தரோ பும்ராவோட யார்க்கர்ல ஸ்வீப் அடிச்சு சிக்ஸர் பறக்கவிட்டுட்டு இருக்காரு.. இந்த சீசன்ல குஜராத், மும்பைனு ரெண்டு மேட்ச்கள்ல அனல் பறக்கவிட்ட இந்த இரண்டு பேர் பத்திதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.
ஷஷாங்க் சிங்
சத்தீஸ்கர்தான் சொந்த மாநிலம்னாலும் சின்ன வயசுல இருந்து பேட் புடிச்சு விளையாடுனது எல்லாம் மும்பைலதான். மும்பை பிளேயர்ஸான ஜஹீர்கான், ரஹானே, வசீம் ஜாஃபர் மாதிரியான பிளேயர்ஸுக்கு கோச்சா இருந்த வித்யாதர் பரத்கர்தான் இவரோட கோச்சும். மிடில் ஆர்டர் பேட்டரான இவர் மும்பைக்காக ரெட் பால் கிரிக்கெட் ஆடணும்னு ஆசைப்பட்டவர். சூர்யகுமார் யாதவ், ரஹானே, ஸ்ரேயாஸ்னு மும்பை டீம் மிடில் ஆர்டர் ஸ்ட்ராங்கா இருக்கவே, சொந்த மாநிலமான சத்தீஸ்கர் டீமுக்காக ரஞ்சி ஆடப்போனார். ஐபிஎல்னு பார்த்தா கிட்டத்தட்ட 7 வருஷமா விளையாடிட்டு இருக்காரு ஷஷாங்க். 2017ல டெல்லி டீம், 2019ல ராஜஸ்தான், 2022ல ஹைதராபாத் டீமுக்காக ஆடியிருக்கார். 2022 சீசன்ல 10 மேட்ச் விளையாடியும் சன்ரைசர்ஸுக்காக பெரிய அளவுல ஒரு மேட்ச் வின்னிங் பெர்ஃபாமன்ஸ் கொடுக்க முடியல. இப்படியான நிலைமைலதான் போன ஐபிஎல் ஏலத்துல ஷஷாங்கை அடிப்படை விலையான 20 லட்ச ரூபாய்க்கு எடுத்தது பஞ்சாப். எடுத்ததுக்குப் பிறகு நாங்க எடுக்க நினைச்சது பெங்கால் பிளேயர் ஷஷாங்க், அதனால இந்த முடிவை மாத்த ஆப்ஷன் இருக்கானு ஏலத்தை நடத்துன மல்லிகாகிட்ட ரெக்வெஸ்ட் பண்ணாங்க. ஆனா, அதை அவங்க ஏத்துக்காத நிலைமைல வேற வழியே இல்லாம பஞ்சாப் டீம் செட்டப்புக்குள்ள வந்தாரு ஷஷாங்க் சிங்.
இவரோட பேட்டிங்கை நெட் பிராக்டீஸ் அப்பவே சரியா கணிச்ச பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான், முதல் மேட்ச்லயே வாய்ப்புக் கொடுக்குறாரு. ஆனா, அந்த மேட்ச்ல டக் அவுட்டாகி வெளியேறுனாலும் அவர் மேல வைச்ச நம்பிக்கையை மட்டும் தவான் கைவிடல. குஜராத் மேட்ச்ல அதுக்கு கைமேல பலன் கிடைக்குது. 200 ரன் டார்கெட்டை நோக்கி விளையாடுன பஞ்சாப் டீம் 70/4-னு தத்தளிச்சுட்டு இருந்தப்போ ஷஷாங்க் களத்துக்கு வர்றாரு. மேட்ச் கிட்டத்தட்ட கையை விட்டுப் போயிடுச்சுங்குற சூழ்நிலைல 29 பால்ல 61 ரன் அடிச்சு ஜெயிச்சுக் கொடுக்குறாரு. அந்த மேட்ச்ல ஷஷாங்க ஃபிஃப்டி போட்டு பேட்டைத் தூக்கிக் கொண்டாடுனப்போ, டக் அவுட்ல இருந்த ஒட்டுமொத்த பஞ்சாப் டீம் மேட்ஸுமே இவரைக் கண்டுக்காம இருந்த வீடியோ பயங்கர வைரல். அப்போ கமெண்ட்ரில இருந்த ஆகாஷ் சோப்ரா, இதைப் பார்த்து அதிர்ச்சியானாரு. ஆனா, அதையெல்லாம் பெருசா எடுத்துக்காம உங்களுக்கும் சேர்த்துதான் நான் அடிக்குறேன்னு பேட் மூலமா பதில் கொடுத்த ஷஷாங்க் சிங்கின் அந்தக் குணம்தான் அவரை இந்த இடத்துக்குக் கொண்டுவந்திருக்கு. எஸ்ஆர்ஹெச் மேட்ச்லயும் இதே நிலைமைதான் கடைசி ஓவர்ல 3 சிக்ஸர் அடிச்சும் 2 ரன் வித்தியாசத்துல பஞ்சாப் தோத்தது. அந்த மேட்ச்ல அடிச்ச 46, ஆர்சிபி கேம்ல quick fire 21-னு பஞ்சாப் டீமுக்கான சிறந்த ஃபினிஷரா மேட்ச்களை முடிச்சுக் கொடுத்துட்டு இருக்காரு. எஸ்ஆர்ஹெச் மேட்ச் முடிஞ்சதுக்குப் பிறகு பேசின பஞ்சாப் கேப்டன் தவான், மேட்ச் நம்ம கைலதாங்குற நம்பிக்கையைக் கொடுத்தாங்க ஷஷாங்கும், அஷூடோஷும்னு பேசிருப்பாரு. ஷஷாங்க் சிங்கைப் பொறுத்தவரைக்கும் 2022ல எஸ்ஆர்ஹெச்சுக்காக விளையாடுன 10 டி20 கேம்தான் அவரோட எக்ஸ்பீரியன்ஸே… ஆனால், இந்த சீசன்ல தவிர்க்க முடியாத பெர்ஃபாமரா மிரட்டிட்டு இருக்காரு.
அஷூடோஷ் ஷர்மா
ஷஷாங்க் குஜராத் மேட்ச்ல எப்படி வெறியாட்டம் ஆடுனாரோ, அதேமாதிரி ஒரு பெர்ஃபாமன்ஸை அஷூடோஷ் மும்பை மேட்ச்ல ஆடுனாரு. அதுவும் பும்ராவோட யார்கரை ஸ்வீப் பண்ணி இவர் அடிச்ச சிக்ஸரை மும்பை கிரவுட் கொஞ்சம் அதிர்ச்சியாத்தான் பார்த்துச்சு. அந்த மேட்ச்ல தனியொரு ஆளா, பஞ்சாப் டீமை வெற்றிக்கோட்டுக்குப் பக்கத்துல வரைக்கும் கூட்டிட்டுப் போன அஷூடோஷ், மும்பை மேட்ச் வரைக்குமே மொத்தம் 18 டி20 கேம்தான் ஆடிருந்தாரு. அதுல அவரு அடிச்சிருந்த சிக்ஸர் கவுண்ட் மட்டும் 43. அதாவது ஒரு மேட்சுக்கு குறைஞ்சது 2 சிக்ஸர்கள். அதான் அவரோட டிராக் ரெக்கார்டு. மும்பை மேட்ச் அப்போ, பும்ரா ஓவர்ல அடிச்ச சிக்ஸரைப் பார்த்துட்டு ஜாஹீர்ஹான் ஒரு படி மேல போய், `ஹே எப்புடுறா?’னு ஆச்சர்யக்குறி காட்டுனாரு. மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த அஷூடோஷுக்கு இதுதான் முதல் ஐபிஎல் சீசன். இதுக்கு முன்னாடி மத்தியப்பிரதேசம், ரயில்வேஸுக்காக விளையாடியிருக்காரு. 2018ல மத்தியப் பிரதேச டீமுக்காக அறிமுகமானவரு, ரயில்வேஸ் டீமுக்கு போனதுக்குப் பின்னாடி ஒரு சோகமான சம்பவம் இருக்கு. 2018, 2019 சீசன்கள்ல நல்ல பெர்ஃபாமன்ஸ் கொடுத்தும், 2020க்குப் பிறகு கிட்டத்தட்ட 3 சீசன்களா எந்தவொரு வாய்ப்புமே கிடைக்காம இருந்துருக்கு. அதுக்குப் பின்னாடி இருந்தது ம.பி டீமோட கோச்தான்னு தெரிஞ்சும் ஒண்ணும் பண்ண முடியாத சூழ்நிலை. டீமோட பிராடீஸுக்கு வாய்ப்புக் கிடைக்காம ரெண்டு மூணு மாசமா கிரவுண்டையே பார்க்காம ஹோட்டல் ரூம்லயே அடைஞ்சு கிடந்திருக்காரு. அப்படியான சூழல்லதான் 2023ல ஒரு திருப்புமுனை நடந்துச்சு. ரயில்வேஸ்ல வேலையும் கொடுத்து, டீமுக்காக ஆடுற வாய்ப்பும் கிடைக்கவே அந்த வாய்ப்பைக் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டாரு. ஐபிஎல் தொடங்குறதுக்கு ஆறு மாசம் முன்னாடி யுவராஜ் சிங்கோட ரெக்கார்டை உடைச்சு டொமஸ்டிக் சர்க்கிள்ல ஒரு அதிர்வலையை ஏற்படுத்துறார். அருணாச்சலப்பிரதேசத்துக்கு எதிரான சையது முஷ்டாக் அலி டோர்னமெண்ட் மேட்ச்ல 11 பால்ல ஃபிஃப்டி அடிச்சு மிரட்டுன கையோட பஞ்சாப் டீம் இவரை ஒப்பந்தம் பண்ணாங்க. Rest is History!!!
Also Read – டெஸ்ட் கிரிக்கெட்டின் நான்காவது இன்னிங்ஸ் மாஸ்டர் கிளாஸ்… தரமான 4 சம்பவங்கள்!