`ரஞ்சிதமே’ பாடலாசிரியர் விவேக் எழுதுனா பாடல்களா இதெல்லாம்?

வாரிசு படத்துல பாடலாசிரியர் விவேக் எழுதுன ரஞ்சிதமே, தீ தளபதி பாடல் வரிகளையெல்லாம் கலாய்க்கிற போஸ்ட்களை, மீம்ஸ்களை ரீசண்டா சோஷியல் மீடியால பார்க்க முடிஞ்சுது. அந்தப் பாட்டை எழுதுன விவேக்கோட பழைய பாடல்களையெல்லாம் தூசி தட்டி எடுத்துப் பாருங்க. கவிஞனா மனுஷன் எவ்வளவு கவித்துமான, அழகான வரிகளை எழுதியிருக்காருனு புரியும். நிறைய பாடல்களை தேடிப் பார்க்கும்போது, என்னங்க சொல்றீங்க, இந்த பாடல்களையெல்லாம் விவேக்கா எழுதுனாருனு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. குறிப்பா சந்தோஷ் – விவேக் கூட்டணில வந்த எல்லா பாட்டும் செம. அப்படியான பாடல்களை தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

Vivek - AR Rahman - Vijay
Vivek – AR Rahman – Vijay

கவிதை புத்தகம் எழுதிட்டு பாடல் எழுத நிறைய மியூசிக் டைரக்டர்ஸ்கிட்ட வாய்ப்பு கேட்டு சுத்திட்டு இருந்த ஒருத்தர்தான், இன்னைக்கு முன்னணி இசையமைப்பாளர்களுக்கும் முன்னணி நடிகர்களுக்கும் பாடல் எழுதும் பாடலாசிரியர் விவேக். அவரோட கவிதைகளை படிச்சிட்டுதான் சந்தோஷ் நாராயணன் எனக்குள் ஒருவன் படத்துல பூ அவிழும் பொழுதில் பாட்டு எழுத கூப்பிட்ருக்காரு. முதல் பால்ல சிக்ஸர் அடிக்கிறதுலாம் ரொம்ப கஷ்டம். ஆனால், விவேக் அடிச்சிருக்காரு. இன்னைக்கு வரைக்கும் அவர் எழுதுன பெஸ்ட் பாடல்கள்ல இந்தப் பாட்டு கண்டிப்பா சிறப்பான இடத்துல இருக்கும். “பூ அவிழும் பொழுதில், ஓராயிரம் கனா. ஓர் கனவின் வழியே அதே நிலா” தொடக்கமே அப்படி நம்மள இதமா உணர வைக்கும். பிரதீப் குரல் கொஞ்சம் கொஞ்சமா அந்த வரிகளை நமக்குள்ள இஞ்செக்ட் பண்ணும். என்னமா எழுதியிருக்காரு, செம ரௌண்டு வரப்போறாருனு அப்பவே தோணும். அடுத்து 36 வயதினிலேல வாடி ராசாத்தி பாட்டு. சிங்கப்பெண்ணேனு இன்னைக்கு நிறைய பேர் சில்லறைய சிதற விடலாம். ஆனால், அதுக்காகலாம் வாடி ராசாத்தியை அடிச்சுக்க முடியாது. ஜோதிகா செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பிக்கும்போது, பெண்களுக்காக, அதுவும் கல்யாணம் ஆன பெண்களோட கனவுக்கான ஆந்தமா இந்தப் பாட்டை விவேக் எழுதியிருப்பாரு. வாடி ராசாத்தியை போஸ்டர்ல போடுங்கனு ஜோதிகா ஐடியா கொடுத்துருக்காங்க. தங்கமுன்னு ஊரு உன்னை மேல தூக்கி வைக்கும், திண்டுக்கல்லு பூட்டு ரெண்டு மாட்டி பூட்டி வைக்கும், வாடி ராசாத்தி, உன்னை நீயே காப்பாத்தினு சத்தமே இல்லாமல் விவேக் சரியான சம்பவத்தை இந்தப் பாட்டுல பண்ணியிருப்பாரு.

இறுதி சுற்று படத்துல வா மச்சானே பாட்டைத் தவிர எல்லாப் பாடல்களையும் பாடலாசிரியர் விவேக்-தான் எழுதியிருப்பாரு. ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு எமோஷன்ல இருக்கும். இப்படியொரு ஆல்பம் மியூசிக் டைரக்டருக்கோ, லிரிசிஸ்டுக்கோ கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அப்படியே கிடைச்சாலும் சில பாட்டு மிஸ் ஆகும். ஃபேவரைட் லிஸ்ட்ல இல்லாமல் போகும். ஆனால், இந்தப் படத்துல விவேக் எழுதுன எல்லாப் பாட்டும் எவர்கிரீன் ஃபேவரைட். “என் சிரிப்பு உடைஞ்சு சிதறி கிடக்கு, எப்ப வருவ எடுத்துக்க? உன் நினைப்பில் மனசு கதறி கிடக்கு. என்னைக் கொஞ்சம் சேர்த்துக்க” பிரிவின் வலியை இந்த வரிகளைவிட வேற எப்படி சிம்பிளா எக்ஸ்பிளையின் பண்ண முடியும்? ஹே சண்டைக்காரா பாட்டுல, “உனைப் பார்த்ததும் வழியோரமா உயிரோட ஒருபாதி கழண்டோடுதடா”னு வரும். இந்த லைன் நல்லாருக்கேனு தோணும்போது, அடுத்த லைன் அதைவிட பெஸ்ட்டா இருக்கும். இப்படி எந்த லைன் உங்களுக்கு புடிக்கும்னு கேட்டா, எந்த லைன சொல்றதுனு நம்மளே கன்ஃபியூஸ் ஆயிடுவோம். விவேக் சொல்லுவாரு, என்றென்றும் புன்னகைல்னு மாதவன் பைக் ஓட்டிட்டு வர்றதை பார்த்துருக்கேன். அதெல்லாம் அவ்வளவு புடிக்கும். அவருக்கே திரும்ப இந்தப் படத்துல பைக் ஓட்டிட்டு வரும்போது பாட்டு ஒண்ணு எழுதிருக்கேன்னு மகிழ்ச்சியை சொல்வாரு. இறுதி சுற்றை கட் பண்ணா, இறைவி. மனிதினு பாட்டு ஒண்ணு எழுதியிருப்பாரு. மனிதன் என்ற சொல்லுக்குள்ளே அடங்காதே பெண்ணே, மனிதி வெளியே வானு மனிதின்ற வார்த்தையை காயின் பண்ணி புல்லரிக்க வைச்சிருப்பாரு. யாரோ வந்து சுதந்திரம் கொடுக்க நீயோ அடிமை இல்லை, உன் மனதில் சுதந்திரம் உண்டு நீயே உணர்ந்து கண்டுபிடினு எழுதியிருப்பாரு. எல்லாருக்குமே இந்த வரிகள் பொருந்தும்.

Vivek

மெலடியான, கருத்துள்ள பாடல்களையேதான் எழுதுறாரு, ஜாலியா மனுஷன் பாட்டு எழுதவே இல்லையோ அப்டினு நீங்க கேட்டீங்கனா, ஷூட் தி குருவி பாட்டு கேளுங்க. வாழ்க்கைல தோத்த ஒருத்தன் பாடுற மாதிரி பாட்டுதான் இது. ஆனால், மஜா பண்ணி வைச்சிருப்பாரு. லெட்டர் எழுதுற மாதிரி பாட்டு வரும். நடுவுல ராதா ரவிலாம் வந்து “வறேன்புள்ள, சாரி போறேன் புள்ள”னு ஃபன் பண்ணிட்டு போவாரு. “இவன் வேற எட்டுக்கடையில் காதுக்குள்ள கத்துறான், கெட்ட கோவம் வருதுங்க”னு ஜாலியான வாழ்க்கை தோல்வியா இருக்கும். எத்தனை தடவைக் கேட்டாலும் அலுக்கவே அலுக்காத பாட்டு, அடியே அழகே. அதை எழுதுனது விவேக்தான். அவ்வளவு ஃபீல் குட்டான பாட்டு. ஜஸ்டின் மியூசிக், விவேக் லிரிக்ஸ், ஷான் ரோல்டன் வாய்ஸ் எல்லாம் சேர்ந்து பாட்டை வேற ஒரு இடத்துக்கு எடுத்துட்டுப் போய்ருக்கும். ரொம்பவே சிம்பிளான வரிகள். “போனா போறா தானா வருவா மெதப்புல திரிஞ்சேன், வீராப்பெல்லாம் வீணா போச்சு பொசுக்குனு உடைஞ்சேன்”னு ஈகோலாம் தூக்கிப் போட்டுட்டு போற மாதிரி உணர்வு வரும். மனிதன் படத்துல மொத்தம் 3 பாட்டு எழுதியிருக்காரு. அதுல ரெண்டு பாட்டு எவர்கிரீன் ஹிட்டு.

Also Read – எல்லாமே அட்டகாசமானவை – த்ரிஷா பண்ண 13 சர்ப்ரைஸ் கேரக்டர்கள்!

அழகழகா அவ தெரிவா, உயிர் உரிவானு பிரதீப் வாய்ஸ்ல பாட்டு அப்படியே உள்ளப்போய் என்னமோ பண்ணும். “எனக்கானவளே நீதான் கிட்ட வறியா தொிஞ்சா, செஞ்சே மன்னிப்பே கிடையாதா, உடனே என்ன உதறிப்போனா சாியா, இனிமே நானும் உயிரும் அட தனியா”னு கெஞ்சுற மாதிரியான பாட்டு. பொய் வாழ்வா வலியே தீர்வா பாட்டைக் கேட்டா தனி நம்பிக்கை வரும். “இந்த வெறுமை, விடாதா ஒரு சிறகு விழாதா, சிறு பறவை எழாதா அது,கனவத் தொடாதா, இந்த ஏக்கங்கள் எல்லாம் வீணா”னு கேள்வி கேட்டு, இல்லை உன் வாழ்க்கைல அர்த்தம் இருக்கு போனு சொல்ற வரிகள்லாம் செமயா இருக்கும். கொடி படத்துல ஏய் சுழலி, சிருக்கி வாசம், துருவங்கள் பதினாறு படத்துல உதிரா காயயங்கள், கபாலில உலகம் ஒருவனுக்கா பாட்டுல ராப் வரிகள்னு பெஸ்ட் வரிகளை எழுதிட்டு இருந்தாரு. ஆனால், தன்னோட கவித்துவத்தையும் தமிழ் உணர்வையும் உச்சமா காட்டுனது ஆளப்போறான் தமிழ்ன்லதான். தமிழர்களின் ஆந்தமாகவே மாறிப்போச்சு. அன்பைக் கொட்டி எங்க மொழி அடித்தளம் போட்டோம். மகுடத்தை தறிக்கிற ழகரத்தை சேர்த்தோம்னு சும்மா இந்த வரிகளை சொன்னாலே உடம்பு புல்லரிக்கும். அப்படியொரு மாஸ் சம்பவம் பண்ணியிருப்பாரு.

Vivek - Vijay
Vivek – Vijay

மெர்சல்ல மாச்சோல தங்க்லீஷ் வைச்சு வரிகளை எழுதியிருப்பாரு, மெர்சல் அரசன்ல சென்னை வார்த்தைகளை வைச்சு எழுதி அசத்தியிருப்பாரு. சர்கார்ல சிம்டாங்காரன்ல அந்த வரிகள் எல்லாமே அப்படிதான் இருக்கும். ஒருவிரல் புரட்சினு அரசியல் சார்ந்த சம்பவம் ஒண்ணையும் இந்த பாட்டு வரிகள்ல பண்ணியிருப்பாரு. ஆனால், மெர்சல் சர்காருக்கு இடையில் மேயாத மான்ல பாடல் வரிகள் பிரிச்சிருப்பாரு. தங்கச்சி, அட்ரெஸ், ரத்தின கட்டி, மேகமோ அவள் எல்லாமே அல்டிமேட். ரொம்ப வித்தியாசமா இருந்தது, அட்ரெஸ் பாட்டுதான். அடியே எஸ்.மது, பி.எஸ்.சி எம்.பி.ஏ பார் வரிகள்லாம் கேட்டா அவ்வளவு ஜாலியா இருக்கும். இங்க கட் பண்ணா, பரியேறும் பெருமாள். இந்தப் படத்துல நமக்கு புடிச்ச பாடல்களை பாடலாசிரிய விவேக்-தான் எழுதியிருக்காரு. வா ரயில்விடப் போலாமா, உனக்கின்னும் கோவமா? மன்னிச்சிரு போலாம்வானு சமாதானப்படுத்துற பாட்டு. அவ்வளவு கியூட்டா இருக்கும். ஆனால், ரொம்ப நம்மள உணர்ச்சிவயப்பட வைக்கிறது கருப்பி பாட்டுதான். மாரி செல்வராஜ்கூட சேர்ந்து இதை எழுதியிருப்பாரு. “கருப்பன், செவப்பன், சாமி, சாத்தான், அடிமை, ஆண்டான், மயிரு, மட்ட” வரிகளை கேட்கும்போது கோவம் ஒண்ணு வருமே, அதெல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு இருக்கும்.

வட சென்னை படத்துல கார்குழல் கடவையே, என்னடி மாயாவி நீனு ரெண்டு பாட்டு எழுதியிருக்காரு. என்னடி மாயாவில, “பட்டா கத்தி தூக்கி இப்போ மிட்டாய் நறுக்குற”னு பாட்டு வரிகளாயிருக்கட்டும், கார்குழல் கடவையேல, “கார்குழல் கடவையே, என்னை எங்கே இழுக்கிறாய்” வரிகளாகட்டும் காதல் தழும்ப தழும்ப உருகியிருப்பாரு. உணர்ச்சிகளை பெருசா வெளிய காட்டாத மனுஷன், ஆனால், அவரிகள்ல அவ்வளவு உணர்வுகள் இருக்கு. பேட்டல உல்லால பாட்டு வரும், சில் ஃபீல் வேணும்னா இதைக் கேக்கலாம். “உனக்காக நில்லு, எதுவேணும் சொல்லு, சந்தோசம் குடுக்காத, எதுனாலும் தள்ளு”னு வேற மோடுக்கு போய் பாட்டை கொடுத்துருப்பாரு.  இன்னைக்கு நிறைய காதலர்கள் காலர் டியூனா இருக்குற போதை கனமே பாட்டும் இவர் எழுதுனதுதான். குலு குலு படத்துல அன்பரேனு பாட்டு ஒண்ணு வரும். ரீசண்ட் டைம்ஸ்ல விவேக் எழுதுன பெஸ்ட் பாட்டு. “அண்டை வீட்டு தேநீர் வாசமோ, ஆறு போன்ற நேசமோ, பக்கம் நின்றும் தூர தேசமோ, பாதி பூவின் பாசமோ” வரிகளைப் பார்த்துட்டு யாருயா நீ இப்படி எழுதியிருக்கனுதான் கேட்க தோணும். ஒவ்வொரு வரியும் அப்படி எழுதியிருப்பாரு. அன்பரேன்ற வார்த்தையே நம்மளை கட்டியணைச்சு ஆறுதல் சொல்ற மாதிரி இருந்துச்சு. விஜய்யோட பீஸ்ட் மோட் பாட்டும் இவர் எழுதுனதுதான். பிகில், தர்பார், மகான், டான், திருச்சிற்றம்பலம், பிரின்ஸ்லாம் சொல்ல தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.

பாடலாசிரியர் விவேக் பாடல்களை ஆழமாப் பார்த்தா அதுல நமக்கு ஆறுதல் தரும் அவ்வளவு வார்த்தைகள் இருக்கும். அதைதான் இந்த வீடியோ வழியா சொல்ல நினைக்கிறேன். உங்களோட ஃபேவரைட் பாட்டு எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top