Pre-Wedding போட்டோஷூட்டிங்கின்போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்… அந்த போட்டோஷூட்டில் கலக்க முக்கியமான 4 விஷயங்களை நீங்கள் கவனமாகக் கையாள வேண்டும்.
Pre-Wedding போட்டோஷூட்
கடந்த சில ஆண்டுகளாக Pre-Wedding போட்டோஷூட்டுக்கான வரவேற்பு எகிறியிருக்கிறது. திருமணத்துக்கு எப்படி பிளான் பண்றாங்களோ… அதே அளவு முக்கியத்துவத்தோடு இதற்காகவும் பிளான் பண்றதுண்டு. பல தீம்களில் யோசித்து இதற்காகவே ஒரு ஐடியாவைப் பிடிச்சு ஷூட் பண்றதைப் பலர் வாடிக்கையாகவே வைச்சிருக்க்காங்க. கேரளாவைச் சேர்ந்த பல போட்டோக்கள் இப்படி வைரலாகுறதையும் நாம பார்த்திருப்போம். இதற்காக பெரிய பட்ஜெட்களும் ஒதுக்கப்படுகின்றன. திருமணத்துக்கு முன்பு உங்கள் வாழ்க்கைத் துணையோடான பயணத்தைத் தொடங்கும்போது, அது எப்போதும் உங்கள் நினைவில் இருக்கும்படியான போட்டோஷூட்டாக இருக்கும்படி பிளான் பண்ணிக்கோங்க.
அப்படி Pre-Wedding போட்டோஷூட் பிளான் பன்றப்ப கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள் என்னென்ன?
Expereinced போட்டோகிராபர்
Pre-Wedding போட்டோஷூட்டுக்கு பிளான் பண்ணும்போது, உங்க போட்டோகிராபரை அவரோட அனுபவத்தை வைச்சு தேர்வு பண்ணுங்க. ஏன்னா, திருமணத்துக்கு முன்னாடி எடுக்குற போட்டோஷூட் என்பதால விரைவில் தம்பதிகளாகப் போகிறவர்களை வித்தியாசமான சூழலில், அவர்கள் Comfortable-ஆ எப்படி ஃபீல் பண்ண வைக்கலாம் என்பதை அனுபவம் வாய்ந்த போட்டோகிராபர்கள் அறிந்திருப்பார்கள். அதேசமயம், அனுபவம் இல்லாத போட்டோகிராபர்களை நீங்கள் தேர்வு செய்ய நேர்ந்தால், நீங்க எதிர்பார்க்குற எமோஷன் போட்டோஷூட்ல கிடைக்காமப் போக நிறைய வாய்ப்பு இருக்கு. அதேமாதிரி, பல பேருக்கு போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்போது செயற்கையான உணர்ச்சிகளே வரும். அந்த மாதிரியான சூழல்களை சமாளித்து எப்படி பெஸ்டான் அவுட்புட்டைக் கொண்டுவரணும் என்பதும் Expereinced போட்டோகிராபர் ஈஸியா பண்ணிடுவார்.
மேக்-அப் ஆர்டிஸ்ட்
போட்டோகிராபர் மாதிரியே இன்னொரு முக்கியமான விஷயம் மேக்-அப் ஆர்டிஸ்ட்.
போட்டோஷூட்டுக்காக நீங்க பிளான் பண்ணி வைச்சிருக்க ஒவ்வொரு டிரெஸ்ஸுக்கும் ஏத்த மாதிரியான மேக்-அப் எப்படி இருக்கணும், அதற்கான பெஸ்ட் சாய்ஸ் என்ன என்பது பற்றியெல்லாம் நீங்க கவலைப்படாம இருக்கணும்னா, நிச்சயமா மேக்-அப் ஆர்டிஸ்ட் ஒருத்தரோட உதவி உங்களுக்குத் தேவை. நாமளே மேக்-அப் போட்டுக்கலாம்னு நீங்க நினைச்சா, அது நீங்க எதிர்பார்க்குற ரிசல்ட் கொடுக்காமப் போகலாம். அதேமாதிரி, கடைசிநேர ரஷ்ஷைத் தவிர்க்க போட்டோஷூட் பிளான் பண்றதுக்கு ஒரு மாசம் முன்னாடியே மேக்-அப் ஆர்டிஸ்டை புக் செஞ்சுடுங்க. மேலும், உங்களுக்கு எந்த மாதிரியான ஹேர் ஸ்டைல், மேக்-அப் லுக் வேணும்னு நினைக்கிறீங்களோ, அதுக்கான டெஸ்ட் எடுத்துடுறதும் நல்லது.
ஆடைகள் தேர்வு
ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்ல என்ன மாதிரியான ஆடைகளைத் தேர்வு செய்யப்போறோம்ன்றதை முன்னாடியே பிளான் பண்ணிக்கங்க. உங்க லொக்கேஷன் பேக்ரவுண்டுக்கு ஏத்தபடி இருவருக்கும் தலா 3-4 உடைகளை செலக்ட் பண்ணி வைச்சுக்கோங்க. இதுக்காக கொஞ்சம் ரிசர்ச் பண்ணி, உங்க வுட்பி கூட ஆலோசனை பண்ணி தெளிவா முடிவுக்கு வாங்க. அதேமாதிரி, போட்டோஷூட்டுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடியே அந்த உடைகள் எல்லாம் உங்க கைக்கு வர்ற மாதிரி பிளான் பண்ணிக்கோங்க. கடைசி நேரத்தில் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து தப்பிக்க இது உதவும்.
லொகேஷன்
பிரபலமான வரலாற்றுப் பின்னணி கொண்ட கோட்டையோ அல்லது மலைகள்சூழ் காடோ, சிம்பிளான பேக்ரவுண்ட் இருக்கும் பூங்காவோ, போட்டோஷூட்டை எங்க நடத்தப் போறோம்ன்றது ரொம்பவே முக்கியமான அம்சம். லொகேஷனைக் கரெக்டா முடிவு பண்ணிட்டீங்கனா, அடுத்தடுத்த விஷயங்களுக்கு பிளான் பண்றது ஈஸி. நீங்க செலக்ட் பண்ற லொகேஷன்களில் உங்க பிரைவசிக்கு எதுவும் பிரச்னை வராதுன்கிறதையும் செக் பண்ணிடுறது நல்லது. உங்க மனசுக்கு நெருக்கமான அல்லது ரொம்பவும் பிடிச்ச இடங்களைத் தேர்வு பண்றது இன்னும் ஸ்பெஷலான நினைவுகளைக் கொடுக்கும். அதேமாதிரி, போட்டோஷூட்டின் போது தேவையில்லாத ரிஸ்குகள் எடுப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.
Also Read – கல்யாணத்துல இப்படியும் கெத்து காட்டலாம்… மணப்பெண்ணின் மாஸ் என்ட்ரி ஐடியாக்கள்!