Rasi Temples: சிம்ம ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய பதஞ்சலிநாதர் ஆலயம்!

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் தங்கள் ராசிக்கு அதிபதி யார் என்பதைத் தெரிந்துகொண்டு, அவர்களின் ராசிக்குரிய கோயில்களில் சென்று வழிபட்டால் நல்ல பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். ஒவ்வொருவரும் பிறக்கும்போதே நட்சத்திரமும் ராசியும் உடன் வந்துவிடும். நமது ராசியைத் தெரிந்துகொண்டு அதன் பலன்களுக்கேற்ப நம் வாழ்க்கையைத் திட்டமிட்டுக் கொண்டு இறைவனை சரணடைவது வாழ்வில் எல்லா நற்பேறுகளையும் பெற உதவும் என்கிறார்கள் ஜோதிட சாஸ்திர வல்லுநர்கள். வாழ்வில் மிகப்பெரிய தடைகள் ஏற்படும்போது, தங்கள் ராசிக்குரிய கோயில்களில் சென்று வழிபட்டால் அதிலிருந்து மீண்டு வரலாம் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இன்று சிம்ம ராசி க்கான அதிபதி யார்… அவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் என்ன என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளலாம்.

சிம்ம ராசி

சிம்ம ராசி

மகரம், பூரம் மற்றும் உத்திரம் 1-ம் பாதம் முடிய உள்ள நட்சத்திரங்கள் சிம்ம ராசியில் அடங்கும். சிம்ம ராசியில் பிறந்தவர்கள் அவசியம் சென்று வழிபட வேண்டிய கோயில் திருக்கானாட்டுமுள்ளூரில் அருளும் பதஞ்சலி நாதர் திருக்கோயிலாகும். ராகு தோஷ பரிகாரத் தலமாகவும் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கோயிலாகவும் இது விளங்குகிறது.

பதஞ்சலி நாதர் திருக்கோயில்

கடலூர் மாவட்டம் திருக்கானாட்டுமுள்ளூரில் பதஞ்சலி நாதர், ஸ்ரீகோல்வளைக்கை அம்மையாருடன் அருள்புரிகிறார். பதஞ்சலி நாதரை தரிசித்து, அவரை மனமுருக வேண்டினால் சிம்ம ராசிக்காரர்கள் குடும்பம் செழிக்கும், தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. சோழநாட்டின் பாடல்பெற்ற காவிரி வடகரை தலங்களில் இது 32-வது தலமாகும். சித்திரை மாதம் முதல் மூன்று நாட்கள் நடக்கும் சூரிய பூஜை சிறப்பு வாய்ந்தது. இந்த ஆலயம் காலை 7-9 மற்றும் மாலை 6-7.30 மணி வரை திறந்திருக்கும்.

பதஞ்சலி நாதர் திருக்கோயில்

எப்படிப் போகலாம்?

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள காட்டுமன்னார் கோவிலில் இருந்து 9.2 கி.மீ தூரத்தில் இருக்கிறது திருக்கானாட்டுமுள்ளூர். இந்த ஊரை கானாட்டாம்புலியூர் என்றும் அழைக்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிதம்பரத்துக்குப் பேருந்து, ரயில் போக்குவரத்து வசதி இருக்கிறது. அங்கிருந்து காட்டுமன்னார்கோவில் சென்று, அங்கிருந்து பேருந்து, வாடகை வண்டிகளில் செல்லலாம். அருகிலிருக்கும் விமான நிலையம் புதுச்சேரி.

பதஞ்சலி நாதர் திருக்கோயில்

மிஸ் பண்ணக் கூடாத இடங்கள்

  • சிதம்பரம் ஸ்ரீநடராஜர் ஆலயம்
  • ஸ்ரீ பிரணவ வியாக்ரபுரீசுவரர் திருக்கோயில்-ஓமாம்புலியூர்
  • ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீசௌந்தரநாதர் திருக்கோயில், திருநாரையூர்
  • ஸ்ரீசட்டைநாதர் திருக்கோவில், சீர்காழி 17 கி.மீ
  • ஸ்ரீவைத்தீஸ்வரன் திருக்கோவில், திருப்புள்ளிருக்குவேளூர்

Also Read : Rasi Temples: மிதுன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில் எது?

திருவிழாக்கள்

சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை

பதஞ்சலி நாதர் பற்றி சுந்தரர் பாடிய பாடல்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 32வது தலம் ஆகும்.

அருமணியை முத்தினை ஆன்அஞ்சும் ஆடும் அமரர்கள்தம் பெருமானை அருமறையின் பொருளைத்

திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத் தெரிவரிய மாமணியைத் திகழ்தரு செம்பொன்னைக்

குருமணிகள் கொழித்திழிந்து சுழிந்திழியுந் திரைவாய்க் கோல்வளையார் குடைந்தாடும் கொள்ளிடத்தின் கரைமேல்

கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக் கானாட்டு முள்ளூரிற் கண்டு தொழுதேனே.

தேவாரப் பதிகம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top