இப்படி பாட்டு போட்டா லைஃப் டைம் செட்டில்மென்ட்… ஷான் ரோல்டன் இசைப் பயணம்!

ஜோக்கர் படம் பார்த்துட்டு தனுஷ் ஷான் ரோல்டன்கிட்ட உங்கள மீட் பண்ணி தனியா நிறைய பேசனும்னு சொல்லியிருக்காரு. ஷான் ஸ்டுடியோவுக்குப் போய் ஜோக்கர் ஆல்பம் பிளே பண்ணி நிறைய ஒப்பினியன் சொல்லியிருக்காரு. ஷான் செம ஷாக். அப்புறம் இளையராஜா பாட்டைப் போட்டு அதைப் பத்தி பேசியிருக்காங்க. கடைசில நான் செம இளையராஜா ஃபேன். முடிஞ்சா என்னை இம்ப்ரஸ் பண்ணிடுங்க-னு சேலஞ்ச் பண்ணியிருக்காரு. ஆனால், முதல்நாள் டியூன்லாம் கேவலமா வந்துருக்கு. அப்புறம், வெண்பனி மலரே டியூனை சும்மா பாடி காமிச்சிருக்காரு. தனுஷ் செம இம்ப்ரஸ். பக்கத்துல இருந்து டிசு எடுத்து கொடுத்து, இந்தப் பாட்டு எனக்குன்றுக்காரு. உங்க மியூசிக் என்னனு உலகத்துக்கு நான் காட்றேன்னு தனுஷ் சொல்லியிருக்காரு. உண்மையாவே ஷான் பாட்டுலாம் கேக்கும்போது யார்யா நீ? எப்படி இப்படிலாம் மியூசிக் பண்ற?-னுதான் கேட்க தோணும்.

Sean Roldan
Sean Roldan

சாண்டில்யன்னு ரொம்ப ஃபேமஸான எழுத்தாளர் இருக்காரு. அவரோட பேரன்தான் ஷான் ரோல்டன். இவர் அம்மா, அப்பா ரெண்டு பேருமே இசைக்கலைஞர்கள்தான். அதனால், சின்ன வயசுல இருந்தே இசை தானா அவரோட லைஃப்ல இருந்துட்டே இருந்துருக்கு. நிறைய கச்சேரிகள்லலாம் பாடியிருக்காரு. ராகவேந்திர ராஜா ராவ்-ன்றதுதான் அவரோட உண்மையான பெயர். கச்சேரி பாடும்போது அந்தப் பெயர் சரியா இருக்கும். ஆனால், பேண்ட்னு வரும்போது அந்தப் பெயர் செட் ஆகாது. வேறபெயர் வேணும்னு நினைச்சு, சாண்டில்யன்ல இருந்து ஷான் எடுத்து, கூகுள்ல நார்மலா சர்ச் பண்ணி ரோல்டன் அப்டின்றதையும் சேர்த்து ஷான் ரோல்டன்னு தன்னோட பெயரை மாத்திக்கிட்டாரு. ஆனால், இன்னைக்கு அந்தப் பெயர் தமிழ் சினிமா இசைத்துறைல எல்லாரையும் கவனிக்க வைக்கிற ஒரு பெயரா மாறியிருக்கு.

ஷான் ரோல்டன் அண்ட் ஃப்ரண்ட்ஸ்னு ஒரு பேண்ட் வைச்சிருந்தாரு. அந்த பேண்ட்ல அவர் வாசிச்ச நிறைய பாடல்கள் சினிமா பாடல்களைத் தாண்டி வேறலெவல் ஹிட்டு. எப்போனா, ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி. அந்த பேண்ட்லதான் பிரதீப் குமார்லாம் இருந்துருக்காரு. பிரதீப் குமாரோட மியூசிக் ஸ்டைலை மாத்திவிட்ட ஆளே ஷான் ரோல்டன்தான். எதார்த்தமான சம்பவங்களை, எளிமையான வரிகள்ல, கேட்சியான மியூசிக்ல சொல்லலாம்னு பிரதீப்க்கு சொல்லிக் கொடுத்த ஆசானே, ஷான் ரோல்டன்தான். அதேமாதிரி சந்தோஷ் நாராயணனும் நிறைய இடத்துல, “ஷான் ரோல்டன்தான் என்னோட குரு”னு சொல்லியிருக்காரு. சந்தோஷ் சொல்ற மாதிரி ஷான் ரோல்டனும் “சந்தோஷ் தான் என்னோட குரு”னு சொல்லுவாரு. ஏன்னா, சந்தோஷ் இல்லைனா ஷான் ரோல்டன் சினிமாக்குள்ளயே வந்துருக்க மாட்டாராம்.

விஜய் டி.வி சூப்பர் சிங்கர்ல இருக்குற ஃபேமஸான மியூசிசியன் ஷான் ரோல்டன் பேண்ட்ல வொர்க் பண்ணியிருக்காரு. அது யாரு? நமக்குலாம் புடிச்ச ஷான் ரோல்டன் வாய்ஸ் அவருக்கு புடிக்கவே புடிக்காதாம் ஏன்? பாடுறதுல ஷான் ரோல்டனுக்கு இன்ஸ்பிரேஷன் யாரு? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. இதுக்குலாம் பதில் சொல்றேன்.

இசை எப்பவுமே மக்களுக்கானதுனு ஷான் ரோல்டன் எப்பவும் நம்புவாரு. அதுனால, பிரதீப் குமார், ஷான் ரோல்டன் எல்லாரும் சேர்ந்து பீச் சைட்ல குரூப்பா பாட ஆரம்பிச்சாங்க. ஃபஸ்ட் யார்ரா இவனுங்கனுதான் எல்லாரும் பார்த்துருக்காங்க. அப்புறம், பாட்டு நல்லாருக்கேனு 4 பேர் சேர்ந்துருக்காங்க. அந்தப் பக்கமா கார்ல போறவங்க நின்னு கேக்க ஆரம்பிச்சிருக்காங்க. வாராவாரம் இப்படி பண்ண ஆரம்பிச்சதும் நிறைய பேர் தொடர்ந்து அவங்க பாட்டைக் கேட்க வர தொடங்கியிருக்காங்க. இப்படி அவங்களுக்கு குட்டி ஃபேன் பேஸ் உருவாக ஆரம்பிச்சிருக்கு. விஜய் டி.வி சூப்பர் சிங்கர்னு சொன்னா மணி அண்ட் பேண்ட் தானாவே நியாபகம் வருவாங்க. அவங்க ஷான் ரோல்டன் பேண்ட்ல வாசிச்சிருக்காங்க. சினிமா மியூசிக்கைத் தாண்டி இவங்க பாட்டு கோலிவுட்ல நிறைய பேர்கிட்ட போய் சேருது. அப்படி சி.வி.குமார் கிட்டயும் ஷான் ரோல்டனைப் பத்தி பேசுறாங்க. அப்போதான் வாயை மூடி பேசவும் படம் தயாரிக்க சி.வி.குமார் தயாராகிட்டு இருந்தாரு. அந்தப் படத்துக்கு ஷான் ரோல்டனை மியூசிக் பண்ண வைக்க கமிட் பண்றாங்க.

வாயை மூடி பேசவும் படத்துக்கு மியூசிக் பண்றது ரொம்பவே சவாலான விஷயம். ஏன்னா, நிறைய இடத்துல மௌனம்தான் இருக்கும். அந்த மௌனத்தை மியூசிக் மட்டும்தான் நிரப்பும். அதை ரொம்பவே அழகான மியூசிக்கால நிரப்பியிருப்பாரு. சதுரங்க வேட்டை படத்துக்கும் ஷான்தான் மியூசிக். அதுல ‘முன்னே என் முன்னே’னு ஒரு பாட்டு இருக்கும். செமயா இருக்கும். என்னோட ரொம்ப ஃபேவரைட்டான ஆல்பம்னா அது முண்டாசுப்பட்டி. ரொம்ப வித்தியாசமான ஒரு சவுண்ட இந்த படம் முழுக்கவே இருக்கும். எல்லாரையும் கவனிக்க வைச்ச படம்னா அது ஜோக்கர். என்னங்க சார் உங்க சட்டம், ஜாஸ்மினு பாட்டுலாம் சான்ஸே இல்ல. இந்தப் படத்துல மியூசிக் கேட்டுட்டு ரஜினி “உங்க இசை இளையராஜா போடுறது மாதிரி இருக்கு”னு சொல்லியிருக்காரு. பா.பாண்டி எல்லாருக்கும் தெரியும். இன்னைக்கும் நிறைய பேரோட ஃபேவரைட் பாட்டு வெண்பனி மலரேதான். வி.ஐ.பி-ல வர்ற இறைவனாய் தந்த இறைவியே பாட்டு. ப்பா, அப்படியே உயிரை உருவி எடுக்குற பாட்டு.

மஹந்தி சர்கஸ் படமும் மியூசிக்கலா செம படமா இருக்கும். கோடி அருவி, வெயில் மழையே, வெள்ளாட்டு கண்ணழகி – இந்த மூண்டு பாட்டும் தரமா இருக்கும். உலக அளவுல கவனிக்கப்பட்ட ஒரு படம்னா அது ஜெய்பீம் தான். அந்தப் படத்துலயும் மியூசிக்கை பிரிச்சு விட்ருப்பாரு. மண்ணிலே ஈரமுண்டு பாட்டுலாம் கேட்டு கண்ணுல கண்ணீர் வராத இசைப்பிரியர்களே இருக்க முடியாது. செண்டுமல்லி, தல கோதும், பி.ஜி.எம் எல்லாமே ஜெய்பீம்ல செமயா இருக்கும். இப்படிலாம் எப்படி பாட்டு போடுறீங்கனு கேட்டா, “நான் நிறைய மியூசிக் கேப்பேன். கதவைப் பூட்டிட்டு ஆறு மணி நேரம் சோறு, தண்ணி இல்லாமல் மியூசிக் கேப்பேன்”னு சொல்லுவாரு. அதேபோல, அடுத்த பத்து வருஷத்துக்கு எனக்கு எந்தப் படமும் கிடைக்கலனாலும் பரவால்ல நான் மியூசிக் கேட்டுட்டே வாழ்ந்துருவேன்னு செமயா பதில் சொல்லுவாரு.

Sean Roldan
Sean Roldan

ஷான் ரோல்டன் கச்சேரி பாடி முடிச்சதும் நிறைய பேர் அவர் வாய்ஸ கலாய்ப்பாங்களாம். நமக்கு வாய்ஸ் நல்லா இல்லை, அதனால கம்போஸிங்ல ஸ்ட்ராங் ஆகலாம்னுதான் மியூசிக் டைரக்‌ஷன்குள்ளயே ஷான் வந்துருக்காரு. இருந்தாலும் பாட்டுப் பாடுறதை விடலை. ஏன்னா, வர்றவங்களுக்கு பாடி காமிக்கணும்ல அதனால. ஆனால், அந்த வாய்ஸ்ல ஏதோ ஒரு மேஜிக் இருக்குனு எல்லா நியூ சென்சேஷன் மியூசிக் டைரக்டர்களுக்கும் தெரிஞ்சிருக்கு. வாயை மூடி பேசவும், சதுரங்க வேட்டை, ஜிகர்தண்டா, குக்கூ, முண்டாசப்பட்டி-னு எல்லா படங்கள்லயும் சும்மா பாடுன பாட்டை அப்படியே இயக்குநர்கள் புடிச்சுப்போய் படத்துல வைச்சதுதானாம். ஆனால், எல்லாருக்கும் இவர் வாய்ஸ் புடிக்க ஆரம்பிச்சது, கண்ணான கண்ணே பாட்டுல இருந்துதான். அப்படி உருக வைக்கிற வாய்ஸ். ஷான் ரோல்டன் பாடுறதுக்கு அந்தோனி தாசன் செம இன்ஸ்பிரேஷன்னு சொல்லியிருக்காரு.

இறுதி சுற்றுல வா மச்சானே, ஜில் ஜங் ஜக்-ல ரெட்ரோடு பாட்டுலாம் அல்டிமேட்டா பாடியிருப்பாரு. ஷான் ரோல்டன்னு சொன்னதும் நமக்கு இன்னைக்கு டக்னு நியாபகம் வர்ற பாட்டு ‘அடியே அழகே’ பாட்டுதான். இந்தப் பாட்டை கஷ்டப்பட்டு இழுத்துட்டு வந்துதான் அவரை பாட வைச்சிருக்காங்க. ஆனால், ஹிட்டுனா ஹிட்டு பேய் ஹிட்டு இந்தப் பாட்டு. ரீசண்டா வந்த குதிரை வால் படத்துல ‘பறந்து போகின்றேன்’ பாட்டு ஷான் பாடியிருப்பாரு. என்னோட ரீசண்ட் அடிக்ட் இந்தப் பாட்டுதான். நிறைய பேரோட ஸ்டேட்டஸ்ல இந்தப் பாட்டை இன்னைக்கு கேட்க முடியுது. ஆக்சுவலா, ஷான் பாடுன எல்லாப் பாட்டையும் வேற ஒரு குரல்ல கேட்கவே முடியாது. அப்படி பாடுனாலும், திரும்ப அந்தப் பாட்டைக் கேட்கணும்னா ஷான் ரோல்டன் வாய்ஸ் தான் செலக்ட் பண்ணுவோம். எக்ஸாம்பிள், சீம ராஜா படத்துல, உன்னை விட்டா யாரும் எனக்கில்ல பாட்டு வரும். அந்தப் பாட்டை சத்யபிரகாஷ், ஷான் ரோல்டன் ரெண்டு பேரும் பாடியிருப்பாங்க. ஆனால், நிறைய பேர் ஃபேவரைட் ஷான் பாடுனதுதான். அதுக்கு அந்த வாய்ஸ்தான் காரணம் அவ்வளவுதான்.

நிறைய படம் பண்ணனும்னுலாம் ஷான் ரோல்டனுக்கு ஆசை இல்லை. ஆனால், பண்ற சில படங்கள் பேசுபொருளா மாறனும்ன்றதுல ரொம்ப தெளிவா இருப்பாரு. அது நல்லதுதான். ஆனால், அவரோட ரசிகர்கள் ஆசைப்படுற மாதிரி நிறைய படங்கள் அவர் பண்ணனும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top