சொந்தத் தொழில் செய்பவரா நீங்க.. ஹோம்லோனுக்கு முன் நோட் பண்ண வேண்டிய 4 விஷயங்கள்!

சொந்தத் தொழில், வியாபாரம் செய்பவர்கள் வீட்டுக்கடனுக்கு (ஹோம்லோன்) விண்ணப்பிக்கப் போறீங்களா… அதற்கு முன்னர் நீங்கள் கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்..

ஹோம்லோன்

மாதசம்பளம் வாங்குபவர்களின் கிரெடிட் ஹிஸ்டரி எளிதாகக் கிடைத்துவிடும் என்பதால், அவர்களுக்கு ஹோம்லோனும் விண்ணப்பித்தவுடன் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். அவர்களின் மாத ஊதியம், செலவு, சேமிப்பு போன்ற விவரங்களும் கிடைத்துவிடும். அதேநேரம், சொந்தத் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஹோம்லோன் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. காரணம், அவர்களது கிரெடிட் வொர்த்தினஸ் எனப்படும் கடனைத் திரும்பச் செலுத்தும் திறன் குறித்து கடன் வழங்கும் வங்கிகளுக்கோ அல்லது நிறுவனங்களோ உரிய தகவல் கிடைப்பதில்லை என்பதுதான்.

வீடு
வீடு

சொந்தத் தொழில் என்றால், ஃப்ரிலான்ஸிங், வழக்கறிஞர்கள், பட்டயக் கணக்காளர்கள், சொந்தமாக பிராக்டிஸ் செய்யும் மருத்துவர்கள், ஸ்டூடியோ போன்ற தனியாக தொழில் செய்பவர்கள் இதில் அடங்குவார்கள். அப்படி சொந்தத் தொழிலோ, வியாபாரமோ செய்பவர்கள் ஹோம்லோனுக்கு அப்ளை பண்ணுவதற்கு முன்னர் கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்…

  • மாத ஊதியம் பெறுபவர்களைப் போலல்லாமல், சொந்தத் தொழில் செய்பவர்கள் லோன் பெறுவதற்கு ஏகப்பட்ட டாக்குமெண்ட்களைக் கொடுக்க வேண்டி வரலாம். மாதாந்திர அளவில் நீங்கள் செலுத்தும் வாடகைத் தொகை, வீட்டு உரிமையாளரோடு போட்டுக்கொண்ட ஒப்பந்தம் போன்றவற்றை, உங்களின் மாத வருமானம் எப்படி இருக்கிறது என்பதற்கு சான்றாகக் கொடுக்கலாம். அத்தோடு, சமீபத்தில் வருமான வரித் தாக்கல் செய்ததற்கான ஆதாரங்களைக் கொடுக்கலாம்.
  • உங்கள் பெயரிலுள்ள சொத்துகள் குறித்த விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் அல்லது அடமானமாக உங்கள் அசையும்/அசையா சொத்துப் பத்திரங்களைக் கொடுக்கலாம். கிரெடிட் வொர்த்தினஸுக்காக இரண்டு வருடங்களுக்குள் எடுக்கப்பட்ட டிரைவிங் லைசென்ஸ் அல்லது பாஸ்போர்ட் நகலைக் கொடுக்கலாம்.
  • உங்கள் கிரெடிட் ஸ்கோரை உயர்த்திக் கொள்ளும்பட்சத்தில், கடன் எளிதாகக் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் கூடும். உதாரணமாக, உங்கள் வங்கிக் கணக்கில் சேமிப்பை அதிகரிப்பது அல்லது ஏற்கனவே உங்களுக்கு இருக்கும் கடன் தொகைகளை முழுமையாக செட்டில் செய்வது போன்றவை உதவலாம். இதன்மூலம், கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான உங்கள் திறனை அதிகரித்துக் காட்ட முடியும்.
  • உங்களுக்கு ஒருவர் உத்திரவாதம் (Guarantor) கொடுக்கும் நிலையில், லோன் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம். நீங்கள் வாங்கும் கடனை சரியான முறையில் கட்டத் தவறினால், அவரும் பாதிக்கப்படுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பொதுவாக, உங்களுக்கு உத்திரவாதம் அளிப்பவர் குடும்ப உறுப்பினர்களாகவோ அல்லது நண்பர்களாகவோதான் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. உங்களுக்கு வேலை அளிப்பவராகக் கூட இருக்கலாம்.

Also Read – உங்கள் கனவு வீட்டைக் கட்டலாம் பாஸ் சிக்கனமா… 5 டிப்ஸ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top