இதுவரை தமிழ் சினிமாவில் கோலோச்சிக்கொண்டிருந்த விஜய், இனி வரும் காலங்களில் பான் – இந்தியா ஹீரோவாக ஜொலிக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். இப்படியொரு அசுர வளர்ச்சிக் கண்டிருக்கும் விஜய், சிறுவயதில் தான் ஒரு பாடகராகும் முயற்சியில் இருந்ததையும், அதுபற்றி அறிந்த பாடகர் எஸ்.பி.பி மிக முக்கியமான அட்வைஸ் ஒன்றைத் தந்ததன் விளைவாகத்தான் விஜய்க்கு நடிப்புமீது ஆர்வம் வந்ததையும் பற்றி இப்போதுப் பார்க்கலாம்.

விஜய்யின் தாயார் ஷோபா, ஒரு மேடைப் பாடகர். ஆரம்பத்தில் கேள்வி ஞானம் மூலம் பாட ஆரம்பித்தவர் பின்னாட்களில்தான் முறையான கர்நாடக சங்கீதமே கற்றுக்கொண்டார். ஆனால், தன்னைப் போல தன் மகன் சிரமப்பட்டுவிடக் கூடாது என நினைத்த ஷோபா, சிறு வயதிலேயே விஜய்யை முறைப்படி சங்கீதம் கற்றுக்கொள்ள வைத்தார். இன்னும் சொல்லப்போனால் அப்போதெல்லாம் விஜய்க்கும் தன் அம்மாவைப் போலவே பாடகர் ஆகவேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தது. அதன்படி முறையாக சங்கீதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்த விஜய், பதின் வயதைத் தொட்டிருக்கும்போதெல்லாம் நன்கு பாட ஆரம்பித்துவிட்டார்.

இந்தக் காலகட்டத்தில் ஒருமுறை எஸ்.பி.பியை குடும்பத்துடன் சந்தித்தனர் விஜய்யின் பெற்றோர்கள். அப்போது பதின் பருவத்தில் இருந்த விஜய்யை பற்றியும் அவரைப் பாடகராக கொண்டு வரும் முயற்சியில் இருப்பதையும்பற்றி சொல்லியிருக்கிறார்கள். இதைக் கேட்டு மகிழ்ந்த எஸ்.பி.பி, விஜய்யை சில பாடல்கள் பாடச் சொல்லியிருக்கிறார். விஜய்யும் அந்தப் பாடல்களைப் பாடி முடிக்க அதுவரை கண்களை மூடிக் கேட்டுக்கொண்டிருந்த எஸ்.பி.பி, தீர்க்கமாகப் பேச ஆரம்பித்தார். “இந்தப் பையன் ரொம்ப நல்லாப் பாடுறான். நிச்சயமா இவன் ஒரு திறமையான பாடகன். அதுல எந்த சந்தேகமும் இல்ல. ஆனால், ஒரு பின்னணிப் பாடகனுக்கு வெவ்வேறு சிச்சுவேஷனுக்கும் வெவ்வேறு மனிதர்களுக்கும் வெவ்வேறு வகைப் பாடல்களுக்கும் பொருந்தக் கூடிய குரல் இருப்பது முக்கியம். அது இருந்தாதான் முழு நேர பாடகராகப் பிரகாசிக்க முடியும். இந்தக் குரல்ல அது இல்லை. அதனால, பாட்டு பாடலாம்.. ஆனா பாடுறதை யே முழு நேர வாழ்க்கையாகத் தேர்ந்தெடுக்காமால் இருக்குறது நல்லது’’ என உபதேசித்தார்.
எஸ்.பி.பியின் இந்த உபதேசித்துக்குப் பிறகுதான், விஜய்யை ஒரு பாடகராக்க வேண்டும் என ஆசைப்பட்ட பெற்றோர் அந்தத் திட்டத்தை கைவிட்டு அவரை மருத்துவம் படிக்க வைக்க முயற்சித்தனர். ஆனால் விஜய்யோ யாரும் எதிர்பாராதவகையில் தனக்கு நடிப்பு மீதிருக்கும் கனவை வெளிப்படுத்தி, பல போராட்டங்களுக்குப் பிறகு அதை சாத்தியப்படுத்தி இன்று தென்னிந்திய சினிமாவின் எம்பரராக உச்சம் தொட்டு நிற்கிறார்.
Also Read : ரிலீஸுக்கு முன்பே `நாயகன்’ படத்தைப் பார்த்த ரஜினியின் ரியாக்ஷன்..!






These are truly fantastic ideas in on the topic of blogging.
You have touched some good factors here. Any way keep up wrinting.
Khám phá thế giới giải trí trực tuyến đỉnh cao tại MM88, nơi mang đến những trải nghiệm cá cược thể thao và casino sống động.
kuwin sở hữu kho game đa dạng từ slot đến trò chơi bài đổi thưởng, mang đến cho bạn những giây phút giải trí tuyệt vời.