ஒரு சில சிங்கர்ஸ் ஓட வாய்ஸ் நமக்கு கேட்டதும் ரொம்ப பிடிச்சு போகும், யார் இவங்க இப்படி பாடுறாங்க-ன்னு தோணும், நம்ப மனசுக்கு அந்த குரல் நெருக்கமாக மாறும். அப்படி எல்லாரையும் யோசிக்க வெச்சா பொண்ணு தான் சனா மொய்துட்டி. என்னடா எல்லாரும் திடீர்-ன்னு மலையாளம் பாட்டுக்கு வைப் பண்ணிட்டு இருக்கீங்க? அப்படி என்ன பாட்டு அது? யாரு பாடுனாங்க? டிக் டாக் முழுக்க இவங்க பாட்டு-க்கு டான்ஸ் ஆடிட்டு இருக்காங்க, சொல்லுங்க யாரு அந்த பொண்ணு-ன்னு எல்லாரையும் ஒரே பாட்டு மூலம் கவனிக்க வெச்சவங்க தான் கருத்த பெண்ணே சாங் பாடுன சிங்கர் சனா மொய்துட்டி.

இசை புயல் ரஹ்மான் சார் சனாவை மீட் பண்ண அப்போ என்ன சொன்னாரு, இவங்க தமிழ்-ல என்னென்ன பாட்டு பாடி இருக்காங்க? இவங்க பாடிய மற்ற பாடல்கள் என்ன? – இதெல்லாம் பத்தி தான் வீடியோல பார்க்க போறோம்.
சனா பிறந்தது மும்பையில் தான், இவங்களோட 5 வயசுலையே இசை ஆர்வம் இருக்கு-ன்னு கண்டு புடிச்சு அவங்க அம்மா மியூசிக் கத்துக் கொடுத்து இருக்காங்க. சுந்தரி கோபால கிருஷ்ணன் கிட்ட 6 வருஷம் கர்நாடக சங்கீதம் கத்துகிட்டாங்களாம். அதன் பிறகு மதுவந்தி டீச்சர் கிட்ட 7 வருஷம் ஹிந்துஸ்தானி படிச்சு இருக்காங்க. இது ரெண்டுமே சனா ஓட மியூசிக் ஜர்னி-க்கு அடித்தளம் போட்டது-ன்னு சொல்லலாம்.
சனாவுக்கு 7 வயசு இருக்கும்போது முதல் முறையா ஸ்டேஜ்-ல பாடி இருக்காங்க. இப்படியே பாடி பாடி பல ஸ்டேஜ்ல Perform பண்ண சனா அவங்க 18 வயசுலையே 500-க்கும் மேற்பட்ட ஸ்டேஜ்ல பாடி இருக்காங்கலாம். சின்ன வயசுல சனா ரொம்ப டெரர் பீஸ்-ன்னு நினைச்சு யாரும் பேச மாட்டாங்களாம், ஆனா அப்படியே கொஞ்சம் கொஞ்சமா வளர வளர சனா ரொம்ப சேட்டை பண்ணி எல்லாருக்கும் புடிச்ச வாலு பெண்ணா மாறிட்டாங்க. இதை சனாவே ஒரு தடவ ஷேர் பண்ணி இருந்தாங்க.

மியூசிக்ல சனாவுக்கு பல வைரைட்டி தெரியும், கார்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி கிளாசிக், வெஸ்டர்ன் மியூசிக்-ன்னு அனைத்து வகை பாடல்களும் சனா ரொம்ப அழகா பாடுவாங்க. இதை தவிர்த்து பாப் -மியூசிக் பாடல்களையும் ஸ்டேஜ்ல பாடிட்டு வர்றாங்க. மியூசிக் மட்டும் இல்லாம St. Francis Institute Of Technolgy-la கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பும் முடிச்சு இருக்காங்க. இப்படியே சனாவோட இசை பயணத்தில் புதிதாக ஆரம்பம் ஆனது தான் அவங்க யூடியூப் சேனல். தமிழ், இங்கிலீஷ், ஹிந்தி, மலையாளம், கன்னட, குஜராத்தி, பஞ்சாபி-ன்னு பல மொழியில் கவர் சாங்ஸ் பாடி ரீலிஸ் பண்ணிட்டு இருக்காங்க, இதில் வரும் விஷ்வலுகளுக்கும் சனாவே சூப்பரா டான்ஸும் ஆடிடுவாங்க. இது இல்லாம சனா அவங்களோட பாடல்களுக்கு ராப் வரிகளும் எழுதிட்டு வர்றாங்க.
Also Read – எதே…அடுத்த சிவகார்த்திகேயன் கவினா? அலசி பார்த்துடுவோமா?
இப்படியே வேற வேற மொழிகளில் பாடல்களை ஒன்றாக சேர்த்து ஒரே கவர் சாங்காக பாடிட்டு இருந்த சனா, Song Recreate பண்ணவும் ஸ்டார்ட் பண்ணாங்க.
அப்படி ஹிட் அடிச்ச பாட்டு தான் ‘ கருத்த பெண்ணே’ – தென்மாவின் கொம்பத் படத்தில் வரும் இந்த பாட்டை பாடி தான் சனா பல தமிழ் ரசிகர்கள் மனசுல இடம் புடிச்சாங்க. இந்த பாடலை சனா சூஸ் பண்ண மோகன்லாலும் காரணம், ஏன்னா அந்த படத்தில் அவர் தன் ஹீரோ, சனாவுக்கும் இந்த உலகத்துலையே எனக்கு புடிச்ச ஹீரோ மோகன்லால் தான்-ன்னு சொல்லி இருக்காங்க.
ஆனா, பாடல் உருவான அப்போ இது இவ்ளோ பெரிய ஹிட் ஆகும்-ன்னு நினைக்கலையாம். ரிலீஸ் பண்ண 2 வாரத்தில் 8 மில்லியன் வியூஸ் வந்த வீடியோ-வுக்கு இப்போ மொத்தமா 40 மில்லியன் வியூஸ் ஏறி இருக்கு. இந்த பாட்டு ரிலீஸ் ஆனா டைம்-ல டிக் டாக் முழுக்க ஊரே இந்த பாட்டுக்கு சனா டான்ஸ் ஆடுற மாதிரி டான்ஸ் வீடியோ எடுத்து போட்டுட்டு இருந்தாங்க. இன்னொரு பக்கம் இதுக்கு ஒரு சிலர் நெகட்டிவ் கமெண்ட்-களையும் போட்டுட்டு இருந்தாங்க. ஆனா சனா அதுல போகஸ் பண்ணாம,இது பாட்டுக்கு கிடைச்ச வெற்றி, நாங்க டீம் -மா ஒர்க் பண்ணதுக்காக எங்களுக்கு கிடைச்ச ஒரு நல்ல வாய்ப்பாக தான் இதை பாக்குறோம்-ன்னு சொல்லிட்டு அடுத்த கவர் சாங் பண்ண ரெடி ஆகிட்டாங்க.
இது இல்லாம ‘கண்ணாடி கூடும்’ பாடலும் சனாவுக்கு பெரிய ஹிட் கொடுத்துச்சு.
சரி சனா Independent பாடல்கள் தான் பாடிட்டு இருக்காங்க-ன்னு நினைச்ச அது தான் இல்லை, கண் மூடி பாக்குறதுக்குள்ள ரஹ்மான் மியூசிக்-ல பாடுனது மட்டும் இல்லாம ரஹ்மான் கூடவே சேர்ந்து ஒரு டூயட் பாடலை பாடி இருக்காங்க. மொகஞ்சதாரோ படத்தில் ‘Tu Hai’ பாட்டு தான் அது. இந்த வாய்ப்பு அவங்களுக்கு எப்படி கெடைச்சுதுன்னா இவங்க பாடிய மற்ற பாடல்களை கேட்டுட்டு ரஹ்மான் சார் ஸ்டூடியோவுல இருந்து கூப்பிட்டு இருக்காங்க. சின்ன வயசுல இருந்தே ரஹ்மான் ஓட பெரிய ரசிகையாக இருந்த சனாவுக்கு அன்னைக்கு அவ்ளோ பதட்டமா இருந்ததாம். ஆனா ‘ரஹ்மான் சார் ரொம்ப நல்லா டீல் பண்ணாரு, நிறைய ஸ்டைல்ல பாட சொன்னாரு, பாட்டு பாடி காமிச்சேன்னு சனா ஒரு பேட்டியில் இதை ஷேர் பண்ணி இருக்காங்க. அது மட்டும் இல்லாம ரஹ்மான் சார் டீம்-ல இருந்த எல்லாருமே ரொம்ப நல்ல கவனிச்சுகிட்டதாவும் சொல்லி இருக்காங்க.

இது இல்லாம சினிமாவில் சனா நிறைய பாடல்களை பாடி இருக்காங்க. ரிசெண்ட்டா வந்த பொன்னியின் செல்வன் படத்தில் வரும் ‘சொல்’ சாங் ஓட மலையாளம் வெர்ஷன் சனா பாடுனது தான். இவங்க பாடிய மற்ற பாடல்கள் மாறா படத்தில் வரும் ‘ஒரு அறை உனது’ , 24 படத்தில் வரும் ‘மெய் நிகரா’ போன்றவையும் சனா-வின் தென் குரலில் வெளிவந்த பாடல்கள் தான். ஹிந்தி படங்களிலும் சில பாடல்களை சனா பாடி இருக்காங்க. 2019-ல ரெட் எஃப் எம் நடத்திய விருது விழாவில் சிறந்த பாடகி அவார்டும் சனாவுக்குக் கொடுத்தாங்க.
தமிழ் பாடல்கள்னு பார்த்த, என்ன சொல்ல, சாய்ந்து சாய்ந்து, முன்தினம் பார்த்தேனே, மருதாணி, சண்டை கோழி, கண்மணி அன்போடு, ஒரு நாள் போன்ற பல பாடல்களை செமையா பாடி கவர் சாங் பண்ணி இருப்பாங்க. உங்களுக்கு சனா பாடிய எந்த பாட்டு ரொம்ப புடிக்கும்? சனா வேற எந்த பாட்டை கவர் சாங்கா பண்ணலாம்-ன்னு கமெண்ட்ல ஒரு நல்ல சாய்ஸ் கொடுங்க.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
Thanks for one’s marvelous posting! I truly eenjoyed reading it,
you are a great author.I will make certain to bookmark your
blog and will often come back at some point. I want
to encourage you continue your great job, have a nice afternoon! https://Glassiuk.wordpress.com/