தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணி கொண்ட நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் நடிகர் போண்டா மணிக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. கவுண்டமணி தொடங்கி வடிவேல், விவேக் என முன்னணி காமெடி நடிகர்களுடன் இவர் செய்த காமெடிகள் இன்றும் எவர்கிரீனாக மிளிர்கின்றன. குறிப்பாக இவரும் வடிவேலுவும் திரையில் அடித்த லூட்டிகள் குபீர் ரகம்.
நகைச்சுவை நடிகர் போண்டா மணி நமது `Tamilnadu Now’ யூடியூப் சேனலுக்குப் பிரத்யேகமாகப் பேட்டி அளித்திருக்கிறார். இலங்கை வாழ்க்கையில் தொடங்கி ரஜினி, கவுண்டமணி, வடிவேலு, விவேக் போன்றவர்களுடன் நடித்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்திருக்கிறார்.
இந்தியாவுக்கு அகதியா வந்த தனக்கு முதல் சினிமா வாய்ப்பு கிடைத்தது எப்படி…. முத்து ஷூட்டிங் அப்போ தனக்கு டூப் போடுபவரின் சட்டை கிழிந்த நிலையில், ரஜினி செய்த நெகிழ்ச்சியான செயல்!, அதிமுக-காரனா கருணாநிதியைப் பார்த்தப்போ, அவர் தனக்கே உரிய பாணியில் சொன்ன அட்வைஸ்… யோகிபாபுவின் நல்ல மனசு… இப்படி பல விஷயங்கள் பத்தி மனம் திறந்து பேசியிருக்கும் போண்டா மணியின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டியை கீழே இருக்கும் லிங்க்ல பாருங்க… பார்த்துட்டு மறக்காம உங்க கருத்துகளை கமெண்ட்ல சொல்லுங்க… வி ஆர் வெயிட்டிங்..!
Also Read – கோலிவுட் 2021: டாப் 10 தமிழ் சினிமா ஹீரோக்கள்!