ஆர்.எஸ்.சிவாஜி

‘ஹாலிவுட் கலைஞன்’ ஆர்.எஸ்.சிவாஜி-யின் அறியாத பக்கங்கள்!

ஹாலிவுட் படத்துல வொர்க் பண்ணியிருக்கார், நம்ம ஆர்.எஸ்.சிவாஜி. ஆமாங்க, தமிழ் படங்கள்ல சின்ன சின்ன வேடங்கள்ல நடிகரா மட்டும்தான் தெரியும். ஆனா தலைவன் சினிமாவுல வொர்க் பண்ணாத டிபார்ட்மெண்ட்டே கிடையாதுனு சொல்ற அளவுக்கு எல்லா ஏரியாக்கள்லேயும் புகுந்து விளையாடியிருக்கார். நடிகர், இயக்குநர் சந்தானபாரதியின் சகோதரரும் கூட.

ஆர்.எஸ் சிவாஜியைப் பத்தி வெளிவர்ற தகவல்கள் எல்லாமே உங்களுக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கலாம். இன்னும் ஆச்சர்யமான தகவல்களை பார்க்கலாம் வாங்க. இங்க ஒரு முக்கியமான விஷயம். கடந்த வருஷம் தமிழ்நாடு நவ் சார்புல கோல்டன் கார்ப்பெட் அவார்ட் கொடுத்தோம். அதுல ஆர்.எஸ். சிவாஜிக்கு விருது கொடுத்து கெளரவித்திருந்தோம். அப்போ அவர் ரொம்பவே நெகிழ்ச்சியான தகவல்களை ஷேர்  பண்ணியிருந்தார். இன்னும் சொல்லப்போனா அவருக்கு வாழ்நாளில் முதல் முதலில் விருது கொடுத்து கெளரவித்தது தமிழ்நாடு நவ் டீம்தான்.

பன்னீர் புஷ்பங்கள் படத்தில் பாரதி-வாசு என இரட்டை இயக்குநர்கள் இயக்கின படங்கள்ல சின்ன ரோல்ல நடிகரா அறிமுகம் ஆனவர். ஆனா அவர் அந்த படத்துக்குள்ள போனது உதவி இயக்குனராத்தான். உதவி இயக்குநரா ஆரம்பிச்ச அவரோட பயணம் சவுண்ட் டிசைனர், நடிகர், லைன் ப்ரொடியூசர்னு பல பரிமாணங்கள்ல சினிமாவுல வேலை பார்த்திருக்கார். நடிகர் கமல்ஹாசன் கூடவே பல வருஷங்கள் டிராவல் பண்ணவர். இன்னும் சொல்லப்போனால் இவரோட கடைசிக் காலம் வரைக்கும் இவருக்கான மருந்துகளை கொடுத்து கவனிச்சதும் ராஜ்கமல் இண்டர்நேஷனல்தான். பல படங்கள்ல குணச்சித்திர வேடத்துலேயும், காமெடி ரோல்கள்லேயும் நடிச்சு புகழ்பெற்றவர். அதுலயும் அபூர்வ சகோதரர்கள்ல இவர் பேசின சார், நீங்க எங்கயோ போயிட்டீங்க சார்னு பேசுற அந்த டயலாக்லாம் இன்னைக்கு வரைக்கும் பேமஸ். அதேபோல சமீபமா ரிலீஸான லக்கிமேன் படம் வரைக்கும் நடிச்சு முடிச்சிருக்கார். கோலமாவு கோகிலாவுல நயனுக்கு அப்பா, கார்கியில சாய் பல்லவிக்கு அப்பானு ரோல்கள் பண்ணார். இது ரெண்டுமே இவரோட வித்தியாசமான கேரக்டர்னு கூட சொல்லலாம்.  அதுலயும் கார்கி படத்துல இவர் நடிப்புல காட்டியிருந்த முதிர்ச்சி வேறலெவல்ல இருந்தது.

ஆரம்பக் காலக்கட்டம் முதலே உதவி இயக்குநராவும், நடிகராவும் டிராவல் பண்ணிட்டிருந்த ஆர். எஸ். சிவாஜிக்கிட்ட நடிகர் கமல் கூப்பிட்டு ஆளவந்தான் படத்தை கொடுத்து இதுக்கு சவுண்ட் டிசைனர் நீங்கதான்னு சொல்லி வொர்க் பண்ண வைச்சார். அப்படி சவுண்ட் டிசைனர் ஆனவர் தொடர்ச்சியா சந்திரமுகினு ஆரம்பிச்சு ஹாலிவுட்ல 3 படங்கள் வொர்க் பண்ணார். அதேபோல விருமாண்டியில ஆரம்பிச்சு உன்னைப்போல் ஒருவன் வரைக்கும் பல படங்கள்ல லைன் புரொடியூசரா வொர்க் பண்ணியிருக்கார். அதுலயும் மருதநாயகம் படத்துல இவர் அசிஸ்டெண்ட்டா வொர்க் பண்ணும்போது, இவருக்கு ஹார்ட்ல ப்ளாக் ஆகி, ஹாஸ்பிட்டல்ல அட்மிட்டாகி குணமாகினார். அதையெல்லாம் கவனிச்சது, நடிகர் கமல்ஹாசன்தான்.

ஆர்.எஸ்.சிவாஜியை பொறுத்தவரைக்கும் நடிகன் வேற; ஸ்டார் வேறதான். நடிகன்னா அது பாரபட்சம் பார்க்காம இறங்கி நடிக்கணும், ஸ்டார்னா அது ஜொலிக்கிற மாதிரியன கேரக்டர்கள் பண்ணாலே போதும், அப்படினு பிரிச்சு பார்க்கிறவர். அதேபோல  உதவி இயக்குநரா வேலை பார்த்திட்டிருக்கும்போது, நடிகர்கள்கிட்ட போய் நீங்க சரியா நடிக்கலைனு சொல்ற ஆளும் இவர்தான். நடிகர்கள் கோவப்படுவாங்களேனு என்னைக்குமே கவலைப்பட்டதும் இல்லை. ஏன்னா, நல்லா நடிக்கலைனு நான் சொல்லலாம், மக்கள் சொல்லக் கூடாது. அப்புறம் நீங்க நடிகனாகவே முடியாதுனு அவங்ககிட்டேயே சொல்லக் கூடிய தைரியம் மிக்கவர். நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தனும் இவரும்தான் சினிமாவுல ரொம்ப க்ளோஸ். இவங்க ரெண்டுபேருக்குள்ளயுமே ஒற்றுமை இருக்கு. இவங்க ரெண்டுபேரும்தஹன். அந்தக் காலக்கட்டத்துல இருந்தே சினிமாவுக்கு வெளில எங்கயுமே அது சார்ந்த விழாக்களுக்கோ, விருந்துக்கோ போறது இல்லை. கடைசியா பிரதாப் போத்தன் இயக்க இருந்த படத்துக்குகூட இவரைத்தான் கூப்பிட்டு பேசியிருக்கார். அதேபோல ஸ்கிரிப்ட்டைக் கேட்கிறப்போவே இந்த இடத்துல பிசிறுதட்டுதுனு சொல்றதுல இவர் கில்லாடியும் கூட. நடிகர் கமல், இயக்குநர் பி.வாசுனு பல இயக்குநர்கள்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்திருக்கார்.

Also Read – டோலிவுட் ரீமேக் கிங்… வெங்கடேஷ் ஜர்னி!

இவருக்கு ரெண்டு ஆசைதான் இதுவரைக்கும் இருந்திருக்கு. அதுல ஒன்னு இயக்குநராகணும், இன்னொரு ஆசை, மிரட்டலான வில்லனா நடிக்கணும். இது ரெண்டுமே கடைசி வரைக்கும் நிறைவேறாமலேயே போயிடுச்சு. இவரைப் பார்க்க சாதாரண ஆள் மாதிரித்தான் தெரியும். ஆனா ஸ்டண்ட்க்காக இவர் எடுத்த ரிஸ்க்குகள் எல்லாம் வேற ரகம். உதாரணமா மைக்கேல் மதன காமராஜன் படத்துல ஃபோட்டு கார்மேல ஜம்ப் பண்ணி தவ்வி ஒரு ஷாட் பண்ணியிருப்பார். அதை கமலே செய்ய வேணாம்னு சொன்னாராம். ஆனா ஆர்.எஸ் சிவாஜி அதைக் கேட்கவே இல்லை. முழுசா அந்த ஷாட்டை ஒரிஜினலா பண்ணார். இசைஞானி இளையராஜா ஆபீஸ்க்கு எப்போ வேணாலும் போய் பார்க்கிற உரிமை கொண்ட ஒன்றிரண்டு நபர்கள்ல ஆர்.எஸ்.சிவாஜி-யும் ஒருத்தர். சினிமா உலகத்துல இவர் திரைக்கு பின்னால பார்த்த வேலைகள்தான் அதிகம். பெரிய அளவுல ஜொலிக்க முடியாம இயற்கையோட கலந்தாலும், நல்ல நடிகனா தமிழ்நாட்டு மக்கள் மத்தியில எப்போவுமே இருப்பார், ஆர்.எஸ்.சிவாஜி.

எனக்கு இவர் நடிப்புல கார்கி படம்தான் ரொம்ப பிடிக்கும், உங்களுக்கு எந்த படம் பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top