கங்கை அமரன் – மணிமேகலையின் காதல் கைகூடியது இப்படித்தான்..!

தமிழ் சினிமாவின் அடையாளங்களின் ஒருவரான இளையராஜாவுக்கு, ஆரம்ப காலத்தில் இருந்து பக்கபலமாக இருப்பவர் அவரது தம்பி கங்கை அமரன். எழுத்தாளர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், இயக்குநர் என பல திறமைகளை தனக்குள் கொண்டவர். இவரது மனைவி மணிமேகலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். கங்கை அமரன் மற்றும் இவரின் மகன்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி என இவரின் குடும்பம் மட்டுமின்றி இவர்களின் குடும்ப நண்பர்கள் பலரும் சோகத்தில் இருக்கிறார்கள்.

கங்கை அமரனுக்கும் மணிமேகலைக்கும் நடந்தது காதல் திருமணம். இவர்களின் காதல் கைக்கூடுவதற்கு மிகமுக்கிய காரணமாக பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருந்திருக்கிறார். அவர் என்ன செய்தார் என்பதைப் பார்ப்பதற்கு முன்னால், கங்கை அமரனும் எஸ்.பி.பி.யும் எப்படி நெருக்கிய நண்பர்களானார்க்ள் என்பதைப் பார்க்கலாம்.

பண்ணைபுரத்தில் இருந்து சென்னைக்கு வந்த இளையராஜா சகோதரர்கள் முதலில் நாடகங்களுக்கு இசையமைத்து வந்தனர். பாரதிராஜாவின் உதவியால் அப்போது லைட் மியூசிக் ட்ரூப் வைத்திருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியமின் நட்பு கிடைத்தது. இளையராஜா சகோதரர்களின் திறமையை கண்ட எஸ்.பி.பிக்கு எப்படியாவது இவர்களை தனது கச்சேரிகளில் வாசிக்க வைக்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. எஸ்.பி.பி அப்போது தெலுங்கில் மட்டுமே கச்சேரிகள் பண்ணிட்டு இருந்தார். இவர்களையும் அந்த கச்சேரியில் வாசிக்க வைக்க, எஸ்.பி.பி மியூசிக் ட்ரூப்பின் கலரே மாறியிருக்கிறது. அதை பெரிதும் ரசித்த எஸ்.பி.பி பல வருடங்கள் இவர்களோடு பயணித்தார். இளையராஜா சகோதரர்களோடு எஸ்.பி.பி நன்கு பழகி வந்ததாலும் கங்கை அமரனின் அதிக அன்பு காட்டக்கூடியவராக எஸ்.பி.பி இருந்திருக்கிறார். ‘வாங்க சார்; ஓகே சார்’ என ஆரம்பித்த இவர்களது நட்பு பிற்காலத்தில் ‘டேய் பாலு’ என பேசும் அளவுக்கு வளர்ந்தது. ஒரு கட்டத்தில் கங்கை அமரன் தனது காதலியோடு கடிதத்தில் பேசுவதற்கே எஸ்.பி.பி.தான் உதவியிருக்கிறார்.

கங்கை அமரன் தனது மனைவியான மணிமேகலையை காதலித்த சமயத்தில் அவரை சந்தித்து பேசுவதற்கே படாத பாடுபட்டிருக்கிறார். கடிதம் மூலமாக பேசுவதும் பெரிய போராட்டமாக இருந்திருக்கிறது. அந்த சமயத்தில்தான் எஸ்.பி.பி இவர்களின் காதலுக்கு உதவியிருக்கிறார். மணிமேகலையின் வீட்டிற்கு பின்னால், தெலுங்கு பேசும் ஒரு குடும்பம் வசித்து வந்திருக்கிறது. எஸ்.பி.பி.யின் தாய்மொழியும் தெலுங்கு என்பதால், அந்த தெலுங்கு குடும்பமும் எஸ்.பி.பி.க்கு தெரிந்தவர்களாக இருந்திருக்கிறார். அவர்களின் வீட்டிற்கு செல்வதுபோல் சென்று, பின் வீட்டில் இருந்த மணிமேகலையிடம் கங்கை அமரன் கொடுத்த கடிதத்தை கொடுத்திருக்கிறார். மணிமேகலை கொடுக்கும் கடிதத்தையும் கங்கை அமரனிடமும் கொடுப்பார். இப்படி அவர்களின் காதலுக்கு உதவியாக இருந்த எஸ்.பி.பி அவர்களது குடும்ப நண்பராகவும் இருந்தார். கங்கை அமரனின் காதலுக்கு மட்டுமல்லாது, இளையராஜாவுக்கும் கங்கை அமரனுக்கும் எதாவது சண்டை வந்தாலும் இவர்களை சமாதானப்படுத்துவதும் எஸ்.பி.பி.தான்.

Also Read – `கைரேகை நிபுணர்.. டிரெட்லாக்ஸ் ஹேர்ஸ்டைல் பின்னணி’ – பாப் மார்லி பற்றிய 9 சுவாரஸ்யங்கள்!

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top