ரவி பஸ்ரூர்!
மும்பை ரயில் நிலையம், ஒரு இளைஞர் சேரில் அமர்ந்திருக்கிறார். கையில் பெரிய பெரிய பெட்டிகள்… அந்த நேரத்துல மும்பையில மிகப்பெரிய குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்கிறது. காவல்துறை மும்பை முழுவதும் முடக்கிவிடப்பட்டு தேடுதல் வேட்டையை தொடர்கிறது. அப்போது ரயில் நிலையத்தில் பெரிய பெட்டிகளை வைத்துக் கொண்டு சாதாரணமாக ஒரு இளைஞர் அமர்ந்திருப்பதைக் கண்ட காவல்துறை அதிகாரிகள் தீவிரவாதியா இருப்பார்னு முடிவு பண்ணி, பெட்டிகளை சோதனை செய்றாங்க. பெட்டிக்குள்ள ஒண்ணும் இல்லனு தெரிஞ்சதுக்கு அப்புறமா, அதுல இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து உடைச்சிட்டு போறாங்க. காவல்துறைக்கு அது வெறும் பொருள். ஆனா, அந்த இளைஞனுக்கு வாழ்க்கையைக் கொடுக்கப் போற முதலீடு. எல்லாமே கண்ணு முன்னால சுக்குநூறா உடைஞ்சதை பார்த்துட்டு, வெறும் கையோட அழுதுக்கிட்டே ரயில் ஏறி பெங்களூரு வர்றாரு. அடுத்ததா முதலீடுக்கு வழியில்லாம கிட்னி விற்பனை செய்யபோனது, 5 ரூபாய்கூட காசு இல்லாமல் பசிக்கு தவிச்சதுனு அதனால பட்ட கஷ்டங்கள் ஏராளம். அந்த இளைஞர் ரவி பஸ்ரூர். இன்னைக்கு கேஜிஎப்ல கேட்ட அந்த இசைக்குச் சொந்தக்காரர். ஏழ்மையான பின்னணியில இருந்து வந்த அவரோட பயணத்தைப் பத்தித்தான் இந்த வீடியோவுல பார்க்கப் போறோம்.
Begining!
ரவி பஸ்ரூர் கர்நாடக மாநிலம் உடுப்பி பக்கத்துல இருக்க பஸ்ரூர்ல பிறந்தார். சின்ன வயசுலயே படிப்பு ஏறலை. ஆனா குடும்ப சிற்பத் தொழிலை கத்துக்கிறார். சிற்ப வேலைகள் செய்யுறப்போ, பட்டறையில எப்பவுமே பாட்டு ஓடிட்டே இருக்கும். அதைக் கேட்டு இசை ஆர்வம் வர ஆரம்பிக்கிது. இதுபோக கிராமத்துல திருவிழாக்கள்ல இசை அமைக்கிறப்போ அதை பார்த்து இன்ஸ்பையர் ஆகி, அங்கேயே தபேலா வாசிக்கிறதுல ஆரம்பிச்சு இசைக்கருவிகளை ஒன்பை ஒன்னா கத்துக்கிறார். 10-ம் வகுப்பு முடிச்சிட்டு, படிப்பை விட்டுட்டுட்டார், ரவி பஸ்ரூர். அப்போ ஊர்ல ஆர்கெஸ்ட்ரா வச்சு நடத்துறார். நீ பெங்களூருவுக்கு போய் சிற்பத் தொழிலைக் கத்துக்கோனு அனுப்ப, கஷ்டப்பட்டு காசு சேர்த்துவச்சு கீபோர்டு வாங்கிட்டு பெங்களூருவுக்கு போறார். பெங்களூருவுல இருந்துகிட்டு நிறைய முயற்சிகள் எடுக்கிறார். காலைல சிற்பம் செய்றது, மாலை இசையமைப்பாளர் வாய்ப்பு தேடுறதுனு முயற்சிகள் எடுக்க எதுவுமே கைகொடுக்கலை. வாய்ப்பு தேடுற இடங்கள்ல ‘கீபோர்டு மட்டும் வச்சுக்கிட்டு இசையமைப்பாளரா ஆக முடியாது, இன்னைக்கு கம்யூட்டர்லதான் மியூசிக் பண்றாங்க’னு அட்வைஸ் கிடைக்க, கம்ப்யூட்டரும் வாங்கி பயன்படுத்துறார், ஆனாலும் வாய்ப்புகள் அமையல. அதனால மும்பைக்கு போய் மியூசிக் வாய்ப்பு தேடலாம்னு முடிவு பண்ணி புறப்பட்டார். அங்கயும் காலைல சிற்ப வேலைகள், நைட்டு பப்புகள்ல வாய்பு தேடி அலையுறாரு. மும்பைல இருந்த பிரபலமான பப்புகள்லதான் எல்லா சினிமா சம்பந்தப்பட்ட ஆட்களும் அன்னைக்கு வந்துகிட்டிருந்தாங்க. ஒவ்வொரு பப்பா ஏறி இறங்குறாரு. கடைசியா ஒரு பப்ல வேலை கிடைச்சது. அவரும் ரொம்பவே சந்தோஷத்தோட வீட்டுக்கு வர்றாரு. இங்கதான் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அவருக்கு காத்திருக்குது.
Also Read – ரஜினிகாந்த் அ.தி.மு.க-வை எதிர்க்கக் காரணமான அண்ணாமலை! #SilverJubilee #TNNYoutube
இசைப் பயணத்தின் முதல் அடி!
அடுத்த நாளே பப்ல ஜாய்ன் பண்ண சொன்னதால, சிற்ப வேலையை வேணாம்னு சொல்லி விட்டுட்டு பப்புக்கு கிளம்புறார். ஆனா, அன்னைக்கு பப்புக்கு அதிகாரிகள் வந்து சீல் வச்சுட்டு போயிட்டாங்க. இதைப் பார்த்த ரவி பஸ்ரூர் ரொம்பவே மனசுடைஞ்சு போறார். இதனால வெக்ஸ் ஆகி பெங்களூருக்கே போயிடலாம்னு முடிவு பண்ணி தன்னோட பொருட்களை எல்லாம் பேக் பண்ணிட்டு கிளம்புறார். அப்போதான் காவல்துறை அதிகாரிகள் ரயில் நிலையத்துல இவரை செக் பண்ணி இவரோட பொருட்களை எல்லாம் உடைச்சிடுறாங்க. அழுகிட்டே பெங்களூரு டிரெயின் ஏறுறார். அந்த 16 மணிநேர பயணத்துல வாழ்க்கையில பல தற்கொலை எண்ணங்கள் வருது. தற்கொலை முயற்சியும் செய்ய முடிவெடுக்கிறார். ஆனால் மனசுக்குள் ஏதோ தடுக்க, கடைசி சான்ஸ் டிரை பண்ணி பார்க்கலாம்னு முடிவெடுத்து பெங்களூருவுல இறங்குறார். அப்போ அவருக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வருது. நம்மகிட்டதான் கிட்னி இருக்கே அதை விற்பனை செஞ்சு, அது மூலமா கருவிகளை வாங்கி இசையமைப்பாளர் ஆகலாம்னு முடிவு பண்ணி ஒரு ஹாஸ்பிட்டலுக்கு போறார். எல்லா டெஸ்ட்களும் முடிச்சு, ஆப்பரேஷன் பண்ணலாம்னு வெயிட் பண்ணிட்டு இருந்த நேரத்துல அவருக்கு ஒரு பயம் வந்துருக்கு. ஒருவேளை ரெண்டு கிட்னியும் எடுத்துட்டா என்ன ஆகுறதுனு நினைச்சவர், பாத்ரூம் போய்ட்டு வர்றேன்னு சொல்லிட்டு அங்க இருந்து எஸ்கேப் ஆகியிருக்கார்.
நண்பர் செய்த உதவி!
அப்புறமா பொது கழிப்பிடம், குளியலறை பக்கத்துலயே தினமும் மூன்று ரூபாய் கொடுத்து அங்கயே தங்குறார். கிடைச்ச வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறார், ரவி. அப்போ அவர் நண்பர் காமத்ங்குறவர், இவரை தங்க பட்டறைக்கு வேலைக்கு கூட்டிட்டு போறார். அந்த பட்டறை ஓனர், ரவியைப் பார்த்து, உனக்கு பெரிய எதிர்காலம் இருக்கு. நீ பட்டறைக்கு நேர்ந்துவிட்டவன் இல்லை. உன்னை அப்பாயிண்மெண்ட் வாங்கிட்டு வந்து நிறையபேர் பார்ப்பாங்கனு சொன்னார். பதிலுக்கு ரவி, “சார், விளையாடாதீங்க, ஒரு 5 ரூபாய் இருந்தா கொடுங்க, வெளிய போய் சாப்பிட்டு வர்றேன். சாப்பிட்டு மூணு நாள் ஆச்சு, பசிக்குது”னு சொல்ல, உனக்கு என்ன ஆசைனு கேட்குறார். எனக்கு மியூசிக் டைரக்டர் ஆசைனு சொல்ல, கீ போர்டு மற்றும் பொருட்கள் வாங்க 35,000 ரூபாய் எடுத்து ரவி பஸ்ரூருக்கு கொடுத்தார். என்னடா யார்னே தெரியாத ஒரு ஆளு நமக்கு இவ்ளோ உதவிகளை செய்றாரேனு திகைச்சு போறார். நன்றி சொல்லிட்டு அர்ஜூன் தான்யாங்குற இசையமைப்பாளர்கிட்ட உதவியாளரா சேர்றார். சுமார் 64 வருடங்களுக்கு உதவியாளரா வேலை செய்றார். இதை எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்ட கே.ஜி.எப் இயக்குநர் பிரசாந்த் நீல் தன்னோட முதல் படமான உக்ரம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். அப்போது ஆரம்பித்த பயணம் இப்போது கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2, சலார் வரை வந்து நிற்கிறது. இவரது இசையை பார்த்த சல்மான்கான் அடுத்த படத்துக்கு இசையமைக்க கமிட் செய்திருக்கிறார்.
மெனெக்கெடல்!
கேஜிஎப் டிரெய்லருக்காக மட்டும் இவர் இசையமைச்சது 51 மியூசிக் ட்ராக்ஸ். 50 மியூசிக் ட்ராக்ஸை பிரிபேர் பண்ணி தனக்கு திருப்தியில்லாமல் கடைசியா போட்ட டியூன்தான் படத்துல நாம பார்த்த இசை. பிரசாந்த் நீல் எவ்வளவு மெனெக்கெட்டாரோ, அந்த அளவுக்கு ரவி பஸ்ரூரும் மெனெக்கெட்டார். கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தில் வந்த டூஃபான் பாட்டுல மட்டும் 25 புது பாடகர்களை அறிமுகம் செஞ்சு பாட வச்சார். கே.ஜி.எப் படத்துல வர்ற பல மியூசிக் டிராக்குகள்ல இரும்பு அடிக்கிற சப்தங்கள் நிரம்பி இருக்கும். இசைக்கு நிறைய லைவ்வா நிஜ கருவிகளை வைத்தே கம்போஸ் பண்ணும் வழக்கத்தை இன்னும் கடைபிடிக்கிறார். இசையமைப்பாளர் ஆவதற்கு முன்னரே பல படங்களுக்கு பாடல்களைப் பாடியுள்ளார். அதேபோல சொந்த ஊரான பஸ்ரூர்லயே தன்னோட மியூசிக் ஸ்டுடியோவை திறந்திருக்கிறார். நிறையபேர் சினிமா இசையமைப்பாளராக வரணும்ங்குறதுதான் அவரோட ஆசை. அதேபோல லாக்டவுன் நேரங்கள்ல அப்பாவோட சிற்ப பட்டறைல வேலை செய்தார். எப்பவுமே பழசை மறக்கக்கூடாதுங்குறதுல ரவி பஸ்ரூர் உறுதியா இருக்கார்.
ரவி பஸ்ரூர் பெயர் காரணம்!
ரவி பஸ்ரூர் என்பது அவருடைய பெயரே இல்லை. இரண்டு தற்கொலை முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இரண்டாவது தற்கொலை முயற்சி முயற்சித்து தோல்வியடைந்த நேரத்தில் ரவி என்பவர் இவருக்கு 35,000 ரூபாய் கொடுத்து பெரும் உதவிகள் செய்துள்ளார். இவருடைய சொந்த ஊர் பஸ்ரூர். இரண்டையும் சேர்த்து ரவி பஸ்ரூர் என மாற்றிக் கொண்டார். இவருடைய நிஜப்பெயர் யாருக்குமே தெரியாது.
இவரோட மியூசிக்ல உங்களுக்கு பிடிச்ச பாட்டு எதுனு கமெண்ட்ல சொல்லுங்க.
Very nice article and right to the point. I am not sure if this is actually the best place to ask but
do you people have any thoughts on where to employ some professional
writers? Thanks in advance 🙂 Najlepsze escape roomy