யுவன் ஷங்கர் ராஜா – மதன் கார்க்கி, முதல் பாடலின் செம சீக்ரெட் தெரியுமா?

இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ, குவியமில்லா ஒரு காட்சிப் பேழை, கிளை ஒன்றில் மேடை அமைத்து, பென்சிலை சீவிடும் பெண் சிலையே இப்படி கவித்தும் கலந்து எழுதற கவிஞனாகவும், அமரேந்திட பாகுபலியாகிய நான்னு மாஸா வசனம் எழுதுற வசனகர்த்தாவாகவும், நிம்டா ச்ச் தூஸ்ராஸ் டெல்மீ-னு புதுசா மொழியை உருவாக்குற ஒருத்தராகவும் இருக்குறவரு மதன் கார்க்கி. வைரமுத்து பையனா இருந்தாலும் ஹோட்டல்ல வேலை பார்த்ததுல இருந்து முன்னணி படங்கள்ல வொர்க் பண்ற கலைஞனா மாறுன வரை, அவரோட பயணம் ரொம்ப சுவாரஸ்யமானது.

மதன் கார்க்கி
மதன் கார்க்கி

மதன் கார்க்கி சினிமால போய் பாடல்கள் எழுதலாம்னு முடிவு பண்ணதும், முதல்ல போய் சந்திச்சது யுவன் ஷங்கர் ராஜாவைதான். வைரமுத்துவோட பையன்னு சொல்லாமலேயேதான் சான்ஸ் கேட்டுருக்காரு. எழுதுன பாடல்வரிகள் எல்லாம் காமிச்சிருக்காரு. ஆனால், யுவன் ஆஃபிஸ்ல இவரை வைரமுத்து பையன்னு கண்டுபிடிச்சிட்டாங்க. “நல்லாருக்கு. நல்ல புராஜெக்ட்ல ஒண்ணா சேர்ந்து வொர்க் பண்ணலாம்”னு யுவன் சொல்லிருக்காரு. ரொம்ப நாள் யுவன்கிட்ட இருந்து ஃபோன் வரலை. அந்த நேரத்துல வேற இடங்கள்லயும் வாய்ப்புகள் தேட ஆரம்பிச்சிருக்காரு. ஷங்கர், வித்யாசாகர்கூடலாம் வொர்க் பண்ண ஆரம்பிச்சிட்டாரு. ஒருநாள் வெங்கட்பிரபு ஃபோன் பண்ணி, “நீங்க என்னோட பிரியாணி படத்துக்கு பாட்டு எழுதனும். யுவனும் ஆசைப்படுறாரு”னு சொல்லியிருக்காரு.

யுவன் ஷங்கர் ராஜா

யுவன் ஷங்கர் ராஜாவுக்கு 100 வது படம். அந்தப் படத்துல பாம் பாம் பெண்ணேனு அந்தப் பாட்டை எழுதிருப்பாரு. ரெக்கார்ட்லாம் பண்ணி முடிச்சதுக்கு அப்புறம்தான் வெங்கட் பிரபு ஒரு விஷயத்தை கண்டுபிடிச்சிருக்காரு. அந்தப் பாட்டுல “பொன்மாலை ஒன்று மீண்டும் உண்டானதே, ஏதேதோ எண்ணம் எல்லாம் மீண்டும் பூக்கின்றதே”னு மதன் கார்க்கி வரிகள் எழுதியிருப்பாரு. இளையராஜா – வைரமுத்து சேர்ந்து வேலை பார்த்த முதல் பாட்டு ‘பொன்மாலை பொழுது’, அவங்க கடைசியா வேலை பார்த்த பாட்டு ‘ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்’. அதை நினைவுபடுத்துற விதமாதான் இந்த வரிகளை எழுதியிருக்காரு. யுவன் – மதன் கார்க்கி சேர்ந்து வொர்க் பண்ண முதல் பாடல் இதுதான்.

வைரமுத்து
வைரமுத்து

வைரமுத்து முதல்ல எழுதுன பாட்டு ‘பொன்மாலை பொழுது’ பாட்டு. அன்னைக்குதான் மதன் கார்க்கியும் பிறந்தாரு. அதாவது மார்ச் 10, 1980. சின்ன வயசுல இருந்து அவர் பாட்டு எழுதுறதைப் பார்க்குறது, பாட்டு எழுதி முடிச்சதும் வைரமுத்து வாசிச்சுக் காட்டும்போது கேக்குறதுனு அந்த சூழல்லயே மதன் வளர்ந்தவர். ஆனால், பாடலாசிரியர் ஆகணும்ன்றதுலாம் அவருக்கு சின்ன வயசுல விருப்பமா இல்லை. கவிதைகள்கூட எழுதமாட்டாரு. ஆனால், கதைகள் நிறைய எழுதுவாரு. காமிக்ஸ் மாதிரி படங்கள் வரைஞ்சு எழுதுவாரு. அப்புறம் ஸ்டடீஸ்லாம் முடிக்கிறாரு. பி.ஹெச்.டி பண்ணும்போது அவரே மியூசிக்லாம் கேட்டு அதுக்கு ஏத்த மாதிரி பாடல் வரிகள் எல்லாம் எழுதுவாராம். அப்போதான். சரி நம்மளாலயும் லிரிக்ஸ் எழுத முடியும்னு நம்பிக்கை வந்துருக்கு. வைரமுத்து தன்னோட பசங்களுக்கு நிறைய அனுபவம் வரணும்ன்றதுக்காக, பல விஷயங்களை அறிமுகப்படுத்தியிருக்காரு. மெக்கானிக் ஷாப்லயெல்லாம் வேலை செய்ய விட்ருக்காராம்.

மதன் கார்க்கி
மதன் கார்க்கி

ஆஸ்திரேலியால சிலபல வருஷங்கள் படிச்சாரு. அங்க ரெஸ்டாரெண்ட்ல வேலை பார்த்துருக்காரு. செஃப் வேலையெல்லாம் பார்த்துருக்காரு. இத்தாலியன் உப்புமா, ஜாப்பனிஸ் சாம்பார்னு நிறைய புது வெரைட்டி டிரை பண்ணுவாராம். புக் படிக்கிறது, மியூசிக் கேக்குறது, குழந்தைங்களை பார்த்துக்குறது, வரையுறதுனு ஏகப்பட்ட விஷயங்களை ட்ரை பண்ணிட்டே இருப்பாராம். அப்பாவோட பெயரை சொல்லாமல்தான் ஷங்கர் கிட்ட போய் வாய்ப்பு கேட்டேன்னு மதன் கார்க்கி சொல்லுவாரு. ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ், தொழில்நுட்பத்துறைல இருக்குற அறிவு இதெல்லாம் பார்த்துட்டுதான் ஷங்கர் மதன் கார்க்கிக்கு வாய்ப்பு கொடுத்துருக்காரு. எந்திரன்ல மதன் கார்க்கியோட ரைட்டிங் பார்த்துட்டு நண்பன் படத்துலயும் டயலாக் எழுத வாய்ப்பு கொடுத்துருக்காரு. எந்திரன் படத்துல பூம் பூம் ரோபோடா, இரும்பிலே ஒரு இருதயம்னு 2 பாடல்கள் எழுதவும் செய்திருக்காரு. முதல் முதல்ல மதன் கார்க்கி எழுதுன பாடல் இவைதான். ஆனால், ஃபஸ்ட் ரிலீஸ் ஆனப் பாட்டு கண்டேன் காதலை படத்துல ஓடோ ஓடோ பாட்டுதான்.

மதன் கார்க்கி
மதன் கார்க்கி

சினிமால பாடல் எழுதுற ஆசை வந்தத வைரமுத்துக்கிட்ட மதன் கார்க்கி சொன்னதும் வேணாம்னுதான் சொல்லிருக்காரு. அதனாலயே அவருக்கு தெரியாமல் வாய்ப்புகளை தேட ஆரம்பிச்சிருக்காரு. முதல் பாடல் மதன் கார்க்கி எழுத்துல வெளி வந்ததுக்கு அப்புறம் யார்கிட்டயும் அவர் தேடிப் போய் வாய்ப்பு கேட்டதே இல்லையாம். அவரோட வரிகள் ரொம்பவே நல்லாருக்குறதைப் பார்த்துட்டு வரிசையா வாய்ப்புகள் வர ஆரம்பிச்சிருக்கு. பெரிய படங்கள்ல நிறைய நல்ல பாடல்கள் எழுதியிருந்தாலும், அவர் எழுதுனதுல எல்லாரையும் கவனிக்க வைச்ச வரினா, கோ படத்துல வர்ற ‘என்னமோ ஏதோ’ பாடல் வரிகள்தான். அதுல குவியம் இல்லா ஒரு காட்சிப் பேழைனு ஒரு வரி வரும். அதுக்கு அர்த்தம் சொல்லிலாம் நிறைய பேர் சிலாகிச்ச தருணங்களை பார்த்திருப்போம். அவரோட பெஸ்ட் பாடல்களை லிஸ்ட் போட்டு பேசுனா பேசிட்டே இருக்கலாம். இருந்தாலும் சில பாடல்களை சொல்றேன்.

நான் ஈ
நான் ஈ

நெஞ்சில் நெஞ்சில், அஸ்க் லஸ்கா, வாயை மூடி சும்மா இருடா, ஏலே கீச்சான், அடியே, ஒசக்க ஒசக்க, ஃபை ஃபை ஃபை, வான் எங்கும் நீ, மாஞ்சா போட்டுதான், பச்சை வண்ணப் பூவே, பிறவி என்ற துண்டில் முள்ளில், பாகுபலி பாடல்கள், நான் ஈ பாடல்கள், மிருதா மிருதா, கூகுள் கூகுள், எந்திர லோகத்து சுந்தரியே இப்படி மதன் கார்க்கி எழுதின நல்ல பாடல்கள் நிறைய இருக்கு. ஆனால், எனக்கு ரொம்ப ஃபேவரைட்டான பாட்டு ‘ஏன் என்றால் உன் பிறந்தநாள்’. ஒரு லைவ் ஷோ நடக்கும் அதுல பறவைகள் பாடும். இலைகள் கைகள் தட்டும். அதுல ஜெயிக்கிற பறவையை உன் காதுல கூட செய்வேன்னு அந்தப் பாட்டு அவ்வளவு கவித்துவமா இருக்கும். அதேபோல, பூக்களே சற்று ஓய்வெடுங்கள் பாட்டு. ஐ என்றால் அது அழகு என்றால்னு படத்தோட டைட்டிலுக்கு ஏத்த மாதிரி ஐ, ஐ, ஐ-னு நிறைய ஐ வரும். தமிழ்ல மட்டுமில்ல 7-ம் அறிவு படத்துல சைனீஸ் பாட்டு எழுதியிருப்பாரு.

ராஜ மௌலி
ராஜ மௌலி

ஹைதராபாத்ல இருந்து ஒருநாள் மதன் கார்க்கிக்கு ஃபோன் வந்துச்சு. எல்லாமே நல்லா போய்கிட்டு இருந்த மதன் கார்க்கி பயணத்தை அடுத்த லெவலுக்கு அந்த ஃபோன் கொண்டு போச்சு. ராஜ மௌலியோட ஃபோன் கால்தான் அது. பாடல்கள் எழுதணும்னு சொல்லிருக்காங்க. “ராஜ மௌலி யாருனு எனக்கு தெரியாது. டப்பிங் படங்கள் பண்றதில்ல”னு சொல்லிருக்காரு. அப்புறம் வைரமுத்து மூலமா ஃபோன் பண்ணி “ராஜ மௌலி பெருசா வளர்ந்து வர்ற முக்கியமான டைரக்டர்”னு சொல்லிருக்காரு. அப்புறம் கூகுள் பண்ணி பார்த்துட்டு மீட் பண்ண போய்ருக்காரு. அந்த மீட்டிங்ல நான் ஈ படத்தோட கதையை சொல்லியிருக்காரு. இதுக்காகவா என்னை அங்க இருந்து வர சொன்னீங்கனுதான் முதல்ல நினைச்சிருக்காரு. ஆனால், ரொம்பவே சவாலா இருந்துருக்கு. பாடல்களை எழுதத் தொடங்கிருக்காரு. “பென்சிலை சீவிடும் பெண் சிலையே” வரிகள்லாம் பார்த்துட்டு மதன் கார்க்கியை ரொம்பவே ராஜமௌலிக்கு புடிச்சிருக்கு. அப்போ, டயலாக்ஸ் எழுதுவீங்களா அப்டினு கேட்டுட்டு. அடுத்தப் படத்துல சேர்ந்து வேலை பார்க்கலாம்னு சொல்லியிருக்காரு. அதுதான் பாகுபலி.

Also Read: மனச்சான்று, கீச்சுக்கருத்து, முப்பாட்டன் – சீமான் தமிழுக்கு பண்ண சேவைகள்!

பாகுபலி படத்துல காளகேயர்கள் பயன்படுத்துற மொழியை வடிவமைத்தது மதன் கார்க்கிதான். மொழி மேல மிகுந்த ஆர்வம் மதன் கார்க்கிக்கு உண்டு. இன்னைக்கும் அந்த மொழி மக்கள் மத்தில காமெடியா புழக்கத்துல இருக்கு. அந்த மொழிக்கு கிடைச்ச வரவேற்பைப் பார்த்துட்டு “கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம்” ஆய்வு செய்து அந்த மொழிக்கு எழுத்து வடிவங்களை கொடுத்துருக்காங்க. அந்த மொழிக்குப் பெயர் கிளிகி. தாய்மொழி தவிர்த்து பிற மொழியை கத்துக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனால், இந்த கிளிகி மொழி மிகவும் சுலபமான மொழினு மதன் கார்க்கி சொல்லியிருக்காரு. லிரிக்ஸ் இஞ்சினீயரிங் அப்டின்றதுலயும் மதன் கார்க்கி நிறைய சம்பவங்களை பண்ணியிருக்காரு. டெக்னாலஜி – மொழி இந்த ரெண்டையும் வைச்சு மனுஷன் புதுசு புதுசா என்னென்னமோ பண்ணிட்டு இருக்காரு. பாகுபலியை தொடர்ந்து புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், சீதா ராமம்னு பல பான் இந்தியா படங்கள்ல மதன் கார்க்கி வொர்க் பண்ணியிருக்காரு. சீதா ராமம்ல அவர் எழுதுன பாடல்கள் எல்லாமே இப்போ நிறைய பேரோட பிளே லிஸ்ட்டை ரூல் பண்ணிட்டு இருக்கு.

எல்லா பாடலாசியர்கள்கிட்டயுமே மொழி வளமும் கற்பனைத்திறனும் கவித்துவமும் அதிகமா இருக்கும். ஆனால், தொழில்நுட்ப ரீதியா அவங்க கொஞ்சம் பலவீனமானவங்களாதான் இருப்பாங்க. மதன் கார்க்கி அதுலயும் பெஸ்ட்டா இருக்குறதால வெறும் பாடல்களை மட்டும் எழுதுவதோடு நிறுத்தாமல் காலத்துக்கு ஏற்ப மொழியை அடுத்தகட்டத்துக்கும் எடுத்து செல்ல முயற்சி பண்றாரு. அவர் எழுதுன பாடல்கள்ல உங்களோட ஃபேவரைட் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top