பெஸ்ட் காம்போ | ஹாரிஸ்கூட க்ரிஷ், சந்தோஷ் கூட பிரதீப், ஜி.வி.பிரகாஷ்கூட சைந்தவி, யுவன்கூட யுவன் சேரும்போது வர்ற பாடல்கள் எல்லாம் நம்மள போட்டு தாக்கும்.. தலைகீழா போட்டு திருப்பும். இந்த காம்போ ஏன் ஸ்பெஷல்.. என்னென்ன பெஸ்ட் பாடல்களை இந்த காம்போ நமக்கு கொடுத்துருக்காங்கனு சொல்றேன்.. எல்லாரும் சேர்ந்து வைப் பண்ணுவோம். அப்போ, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன், விஜய் ஆண்டனி, அனிருத்துக்குலாம் எந்த சிங்கர் பெஸ்ட் காம்போ?
ஹாரிஸ் ஜெயராஜ் – க்ரிஷ்
விண்டேஜ்ல ஹாரிஸ்னு ராக்கி பாய் ஒருத்தர் இருந்தாரு. அவர் எதாவது ட்யூன் கம்போஸ் பண்ணா.. அதுல யார பாட வைக்கலாம்னு யோசுச்சா.. அவரோட ஃபஸ்ட் சாய்ஸ்.. க்ரிஷ்தான். இன்னைக்கு நாம வைப் பண்ற நிறைய ஹாரிஸ் பாடல்களை பாடுனது க்ரிஷ்தான். உன்னாலே உன்னாலேல ஜூன் போனால் ஜூலை காற்றே பாட்டுக்கு ஹாரிஸ் ஃப்ரஷான வாய்ஸ் தேடிட்டு இருந்துருக்காரு. அப்போ அவருக்கு கிடைச்ச கோல்டு தான் க்ரிஷ். ஆனால், இவங்க காம்போல முதல்ல ரிலீஸ் ஆன பாட்டு.. மஞ்சள் வெயில் மாலையிலேதான். செம மேட்டர் ஒண்ணு இதுல இருக்கு. மஞ்சள் வெயில் மாலையிலே பாட்டு ட்யூன் வைச்சு நியூயார்க்ல கௌதம் ஷுட் பண்ணிட்டு இருந்துருக்காங்க. அந்த ஷூட்டிங்கை க்ரிஷ் நின்னு வேடிக்கை பார்த்துருக்காரு. அப்புறம், ஹாரிஸ்கிட்ட இருந்து பாட்டு பாடுறதுக்கு ஃபோன் வந்துருக்கு.. பார்த்தா மஞ்சள் வெயில் மாலையிலே பாட்டு. 4 கதவு வாழ்க்கைல ஒரே நேரத்துல திறந்த மாதிரி ஃபீல் பண்ணிருக்காரு, க்ரிஷ். வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவேனு ஆரம்பிக்கும்போதே.. மண்டை, மனசுலாம் தனியா உடம்புல இருந்து பிரிஞ்சு போகும். அந்த ஒரு பாட்டுலயே அவ்வளவு கூஸ்பம்ப்ஸ் மொமண்ட்ஸ் இருக்கும். வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற வழியில் வழியில்னு லைன் ஸ்டார்ட் ஆகி.. யாரோ யாரோ யாரோ அவள் அப்டினு ஹைக்கு போகி.. இரு தண்டவாளம் ஒட்டிச்செல்லனு சாஃப்ட்டா முடியும். ச்சே.. என்னா பாட்டுயா!
உன்னாலே உன்னாலேல 4 பாட்டு க்ரிஷ் பாடுனதுதான். ஜூன் போனால், உன்னாலே உன்னாலே, இளமை உல்லாசம்லா எல்லாருக்கும் தெரியும். ஆனால், ரொம்ப குட்டியான பாட்டு சிறு சிறு உறவுகள் பிரிவுகள் ஏன் பாட்டு. சோகமான பாட்டுதான், ஆனால்.. அதுக்குள்ள வைப் ஒண்ணு இருக்கும். எத்தனை தடவை திரும்ப திரும்ப கேட்டாலும் சலிக்காது. சாட்ஃப்ஃபா, லவ்லியா, மெலடியாதான் க்ரிஷ் ஹாரிஸ்க்கு பாடுவார்னு நீங்க நினைச்சா தப்பு. அடுத்து பீமால ஒரு முகமோ.. இரு முகமோனு மாஸா பாட்டு பாட வைச்சுருப்பாரு. ஜிம்ல வொர்க் அவுட் பண்ணும்போது அந்தப் பாட்டைக் கேட்டா.. 10 கிலோ எக்ஸ்ட்ரா தூக்கலாம். வாரணம் ஆயிரம் படத்துல அடியே கொல்லுதே பாட்டு முதல்ல பாடும்போது, ஹாரிஸ் போரா இருக்குனு ஃபீல் பண்ணி ஹார்டா வேணும்னு சொல்லியிருக்காரு. உடனே, 2 நாள் ட்ரை பண்ணி, நாம இப்போ கேக்குற அடியேனு அந்த ஹார்ட் வாய்ஸ்ல பாடியிருக்காரு. அந்த பாட்டுல அந்த இடத்துக்கு இன்னும் வேல்யூ அதிகம். ஹாரிஸ் எந்தப் பாட்டு கம்போஸ் பண்ணாலும், முதல்ல இவரை வைச்சு ட்ரை பண்ணிடுவாராம். நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, முன்தினம் பார்த்தேனே, ஹஸிலி ஃபிஸிலி எல்லாம் இவர் ஆரம்பத்துல பாடுனதுதான். என் ஃப்ரண்ட போல யாரு மச்சான், ஓ சூப்பர் நோவா, ரெட்டைக் கதிரே, அண்டார்டிகா வெண்பனியிலேனு இந்த காம்போ நம்மளை அவ்வளவு வைப் பண்ண வைச்சிருக்கு.
சந்தோஷ் நாராயணன் – பிரதீப்
பிரதீப் குமார் பாட்டுக்கு வைப் பண்றவன்தான்டா உண்மையான இளந்தாரிப்பயன்ற ரேஞ்சுக்கு ரிப்பீட் மோட்ல கேட்டு வைப் பண்ணிட்டு இருக்காங்க. பிரதீப் வாய்ஸ்னு சொன்னாலே சந்தோஷ் மியூசிக் தான் முதல்ல நியாபகம் வரும். ஆக்சுவலா, மத்த மியூசிக் டைரக்டர்ஸ் – சிங்கர்ஸ் கதைலாம் கேட்டா, எமோஷன் இருக்கும், அவரு கூப்பிட்டத என் வாழ்க்கைல மறக்க முடியாதுனு கண்ணீர் இருக்கும், ஆனால், இவங்கக்கிட்ட கேட்டா.. ஒருநாள் சும்மா அவனை பார்க்க போனேன். டேய், 2 ட்யூன் இருக்கு பாடிட்டு போறியானு கேட்டான். நானும் சரின்னு பாடிட்டேன்ற ரேஞ்சுலதான் கதைகள் இருக்கும். ஏன்னா, இவங்களோட அந்த ஃப்ரெண்ட்ஷிப் பாண்டிங்க் அப்படி. சினிமாக்குலாம் மியூசிக் பண்றதுக்கு முன்னாடில இருந்து ரெண்டு பேரும் ஒண்ணா அட்டிப் போட்டு அட்ராசிட்டி பண்ணிட்டு திரியுறாங்க. ஆசை ஒரு புல்வெளி பாட்டுதான் ரெண்டு பேரோட காம்போல வந்த ஃபஸ்ட் பாட்டு. அந்தப் பாட்டுக்கே இன்னும் முழுசா எவனும் வைப் பண்ணி முடிக்கலை. அதுக்குள்ள அடுத்த 50 வருஷத்துக்கு வைப் பண்ண பாடல்களை இந்தக் காம்போ கொடுத்துருக்காங்க. அப்புறம் சந்தோஷ் மியூசிக் பண்ற எல்லா படத்துலயும் ஒரு பாட்டாவது பிரதீப் மியூசிக் பண்ணிடுவாரு. குறிப்பிட்டு சொல்லணும்னா, ஆகாயம் தீப்பிடிச்சா. வித்தியாசமான கதைக் களம்லாம் இல்லை. ஆனால், அந்த சவுண்ட்.. லிரிக்ஸ்.. வாய்ஸ்.. எல்லாம் சேர்ந்து நம்மள மயக்கிருச்சு.
மனிதன்ல அவள் பாட்டு.. சொல்லும்போதே பறந்து போகின்றேன் மோட்தான். மெது மெதுவா.. விரி விரிவா.. விழியறிவா.. எனக்கானவே நீதான் கிட்ட வறியானு பிரதீப் பாட்டை நம்ம காதலிகள்கிட்ட கண்ணுல படுற மாதிரி ஸ்டேட்டஸ் வைச்சா, எவ்வளவு பெரிய சண்டையா இருந்தாலும் சரியாக 99.999% வாய்ப்புகள் இருக்கு. மெஜிசியன்யா நீ பிரதீப். மாய நதி, கண்ணம்மா, கார்குழக் கடவையே பாட்டுலாம் சொல்லத்தேவையில்ல. ஒவ்வொன்னும் தங்கம். ஆனால், ரெண்டு பேர் காம்போலயும் பாட்டு வந்து ரொம்ப நாளாச்சு. சீக்கிரம் மாஸா ஒண்ணு கொடுங்க.
ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி
வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்ற மாதிரி பாட்டுனு வந்துட்டா ஜி.வி யாருக்கும் சும்மாலாம் பாட்டு கொடுக்கமாட்டாரு. அது மனைவியா இருந்தாலும் சரிதான். இந்த ஸ்டேட்மெண்டுக்கு அசுரன் பாட்டு செம எக்ஸாம்பிள். எள்ளுவய பூக்கலையே பாட்டை முதல்ல சைந்தவி பாடியிருக்காங்க. ஆனால், டைரக்டர் மாத்த சொன்னா மாத்திடுவேன். எனக்கு வைக்கம் விஜயலக்ஷ்மி பாடுனா நல்லாருக்கும்னு தோனுதுனு சொல்லி ரெக்கார்ட் பண்ணியிருக்காரு. வெற்றிமாறனுக்கு சைந்தவி வாய்ஸ் புடிச்சுப்போக அதுவே வைச்சிருக்காங்க. அந்தப் பாட்டு ஹிட்டுக்கு நானே சாட்சினு கோடி பேர் கைதூக்குவாங்க. அதுக்கு நானே சாட்சி.
மதராசப்பட்டினம்னு சொன்னா எல்லாருக்கும் பூக்கள் பூக்கும் தருணம்தான் நியாபம் வரும். ஆனால், ஆருயிரே ஆருயிரேனு பாட்டு இருக்கு. சைந்தவி பாடுனதுதான். மனசை அப்படி கவ்வி புடிச்சுக்குற மாதிரியான பாட்டு. ரெண்டு பேர் காம்போலயும் வந்த பெஸ்ட் மெலடினா, விழிகளில் ஒரு வானவில் பாட்டு. மழைக்கும் மியூசிக்குக்கும் அந்த விஷுவலுக்கும் சைந்தவி வாய்ஸ் அவ்வளவு செட் ஆகியிருக்கும். வெயில் காலம்தான் அந்தப் பாட்டை கேளுங்க.. மழை 4 நிமிஷம் பெய்துட்டு போகும். நிறைய பேரோட ஃபேவரைட், மயக்கம் என்னல வர்ற பிறை தேடும் இரவிலே உயிரே. இந்த ஒரு பாட்டு, எமோஷன், வரிகள்லாம் பத்தி பேசணும்னா சில பல யுகங்கள் தேவைப்படும். மனசெல்லாம் மழையே, உயிரின் உயிரே, யாரோ இவன், யார் இந்த சாலையோரம், இரவாக நீ, என் ஜீவன், எள்ளு வய பூக்கலையே, கையிலே ஆகாசம்னு இவங்க காம்போ லிஸ்ட் ரொம்ப பெருசு.
Also Read – ரோட்ல சிரிச்சுட்டு போறவங்களைப் பார்த்து அழுதுருக்கேன்- நடிகர் ஜெயபிரகாஷ் கதை!
தமிழ் சினிமா மியூசிக் டைரக்டர்ஸ் நிறைய பேரை மிஸ் பண்ணிட்டீங்கனு நீங்க நினைக்கலாம். ஆனால் யோசிச்சுப்பார்த்தா, ஏ.ஆர்க்கு ஏ.ஆர்தான் பெஸ்ட் காம்போவா இருக்காரு.. ஏ.ஆர்.ரஹ்மான் பெரும்பாலும் அவரே மியூசிக் போட்டு அவரே இப்போலாம் பாடிட்டு போய்டுறாரு. கடைசியா வந்த பத்து தல, வெந்து தணிந்தது காடுனு அந்த லிஸ்ட் ரொம்ப பெருசு. அனிக்கு அனி.. அனிருத் விட்டா இன்னும் கொஞ்சம் நாள்ல பாடகராவே மாறிடுவார் போல.. எனக்கு எவனும் தேவையில்ல, நானே பாடுறேன்.. உனக்கு தேவைனா சொல்லு, உனக்கும் வந்து பாடி கொடுக்குறேன்னு சுத்துறாரு. ஆனால், வொர்த்து டியூட். யுவனுக்கு யுவன்.. யுவன் வாய்ஸ்ல ஈரம் இருக்குனு ஏ.ஆர் சொன்னது உண்மைதான்.. ஆனால், அதுக்காக நான் மட்டும்தான் பாடுவேன்னு அடம் பிடிச்சு பாடுற மாதிரி கொஞ்சம் ஃபீல் ஆகுது. விஜய் ஆண்டனிக்கு விஜய் ஆண்டனி.. அவர் வைபே தனி.. நீங்க எவ்வளவு வேணும்னாலும் பாடலாம், நாங்க கேப்போம். இத் ஹிப் ஹாப் தமிழாக்கு ஹிப் ஹாப் தமிழானுதான்.. ஏன்னா அவர் பாடுறதை அவரால மட்டும்தான் பாட முடியும்.. இப்படிதான் மற்ற மியூசிக் டைரக்டர்கள் இப்போ பண்ணிட்டு இருக்காங்க. இந்த காம்போல உங்க ஃபேவரைட் காம்போ என்னனு கமெண்ட்ல சொல்லுங்க.