STR-ன் வெறித்தனமான ரசிகர்… யார் இந்த `கூல்’ சுரேஷ்?

கடந்த சில வருடங்களில் இவரைக் கடக்காமல் நாம் வந்திருக்கவே முடியாது. டி.ராஜேந்தர் பிரஸ் மீட் கொடுத்தாலும் சரி, சிம்பு படம் ரிலீஸ் ஆனாலும் சரி கூல் சுரேஷ் ஆதங்கமா பேசுற வார்த்தைகள் கன்டென்ட் ஆகிடுது. இதுல சோகம் என்னன்னா அது இவருக்கும் தெரியுது. போற வர்ற இடத்துல அதுக்கும் உருக்கமா ஒரு பதிவு பண்றார். அது இன்னும் சோகமாகி, அது இன்னொரு கன்டென்ட் ஆகிடுது. இப்படி கன்டென்ட்டுக்கு மேல கன்டென்ட்டை கொடுக்கிற இந்த கூல் சுரேஷ் யார்?

சாதா சுரேஷான இவர் `கூல்’ சுரேஷ் ஆனது எப்படி?

இந்தக் கதை கிட்டத்தட்ட மாஸ்டர் படத்துல வர்ற பவானி விஜய் சேதுபதியோடது மாதிரி இருக்கும்.  இவர் ஸ்கூல் படிக்கும்போது ஏதோ சேட்டை பண்ணிட்டார்னு வீட்டுல இருந்து அப்பா அம்மாவை கூட்டிட்டு வர சொல்லிருக்காங்க. கூட்டுட்டு வந்தாதான் ஸ்கூலுக்கு வரணும்னு வேற சொல்லிருக்காங்க. இதுனால இவருக்கு பழக்கமான ஒரு அயர்ன் கடைக்கார அண்ணன்கிட்ட போய் சொல்லிருக்கார். அவரோட தம்பியை அனுப்பி இவரோட அண்ணன்னு சொல்லுனு அனுப்பி வெச்சிருக்கார். பிரச்னை அப்போதைக்கு முடிஞ்சது. அதுக்கு அப்பறம் 6 மாசம் கழிச்சு ஒரு பிரச்னை வந்திருக்கு இந்த டைம் ப்ரின்சிபல் கிட்ட. அப்பவும் அவரையே கூட்டிட்டு போயிருக்கார் இந்த டைம் வசமாக மாட்டிக்கொண்டார். வீட்டுல பயங்கரமா திட்டி இவரை ஃபாரின் அனுப்பி வெச்சிருக்காங்க. சிங்கப்பூர்ல ஒரு வேலை பார்த்துட்டு இருந்திருக்கார். அங்க கெத்து காட்டணும்னு முடிவு பண்ணி நிறைய பேரை மிரட்டி வேலை வாங்கியிருக்கார். இதை பார்த்த அவரோட ஓனர் இவருக்கு கீழ 15 பேரை கொடுத்து இவங்களை பார்த்துக்கனு சொல்லிருக்கார். அந்த சமயம் ஒரு ஏரியாவுல Cool அப்டினு ஜுவல்லரி கடையைப் பார்த்துருக்கார். அதே கடைக்கு போய் கூல்னு ஒரு செயின் ரெடி பண்ணி அதையே மாட்டிகிட்டார். இப்படித்தான் இவர் கூல் சுரேஷ் ஆகியிருக்கார். அங்க இருந்து அப்படியே வந்தவர் இங்க சினிமாவுல சேர்ந்துருக்கார். 

கூல் சுரேஷ்
`கூல்’ சுரேஷ்

STRன் தீவிர விசிறி

வெளியில் பல காமெடிகளை பண்ணிட்டு இருந்தாலும் STR-க்கு இப்படி ஒரு ரசிகரானு ஆச்சர்யப்பட வைக்கிறதும் இவர்தான். பல இடங்கள்ல மீம்ஸ், ட்ரோல்ஸ் வருது, அதை இவரும் பார்க்கறார், வெளில பிரஸ் ஆட்களைப் பார்த்தா அவர் சொல்றதையும் இவர் பண்றார். சிம்பு சினிமாவுக்கு வந்த காலத்துல இருந்து அவரோட ஃபேனா இருக்கேன்னு இவரே சொல்லிக்கிறார். சிம்பு கௌரவ டாக்டர் பட்டம் வாங்குனா அந்த யுனிவர்சிட்டிக்கு வெளில சூர்யவம்சம் ஸ்டைல்ல நின்னு வேடிக்கை பார்க்கறார். படம் ரிலீஸ் ஆகுறதுல பிரச்னைன்னா கண்ணீர் சிந்தி சினிமா படுற கஷ்டங்களைச் சொல்றார். அதே படம் ரிலீஸ் ஆகி பயங்கர ஹிட்டாச்சுன்னா, STR மாநாடு… எல்லாரும் கொஞ்சம் வழிய விடு’னு மாஸ் டயலாக் சொல்றார். சக்ஸஸ் மீட்ல, `வெந்து தனிந்தது காடு… தமிழனுக்கு வணக்கத்தைப் போடு’னு அடுத்த படத்த்தையும் தூக்கி பேசுறார். இப்படி சிம்புக்கு எப்படியெல்லாம் சப்போர்ட் பண்ண முடியுமோ எல்லா வழிலேயும் சப்போர்ட் பண்றார். இப்படி ஒரு நண்பன் எல்லாருக்கும் இருக்கணும்ல!

TR ஃபாலோயர் :

STR-க்கு எவ்வளவு பெரிய ரசிகனோ அதே அளவுக்கான விஸ்வாசம் TR மேலயும் இருக்கு. TR இல்லாத TR பிரஸ் மீட்டை கூட நம்ம பார்த்திடலாம். ஆனா, கூல் சுரேஷ் இல்லாத ஒரு பிரஸ் மீட்டை நம்ம பார்க்க முடியாது. கை கும்பிட்டு கை கட்டிட்டு அமைதியா கூட்டத்தில் ஒருவனா நின்னுட்டு இருப்பார். திடீர்னு எதையாது செஞ்சு விடுவார், அது வைரலாகிடும். TR வெச்சிருக்க லட்சிய திராவிட முன்னேற்ற கழகம்ல 2018-ல சேர்ந்துருக்கார். இவர் மட்டுமில்லாம இவரோட நண்பர்கள் 60 பேரை சேர்த்து விட்டிருக்கார். சிங்கப்பூர்ல கூட இப்படி ஆள் திரட்டிதான், அவரோட வேலையில அடுத்த கட்டத்துக்கு போனார். அப்படி இந்த 60 பேரை சேர்த்துவிட்டு அரசியலின் அடுத்த கட்டத்துக்கு போக வாழ்த்துகள் கூல்.  

சினிமா பயணம்

2001-ல இருந்து பல சினிமாக்கள்ல பல சின்ன சின்ன ரோல்கள்ல இவர் நடிச்சிருக்கார். நமக்கு இவரை தெரிஞ்சது காக்க காக்க படத்துல இருந்துதான். அந்த ஆசிட் அடிக்கிற சீன்ல இவர் ‘ஹேய் சிச்சுக்கா’னு அந்த ஒரு ஸ்கூல் படிக்கிற பொண்ணை ஈவ் டீசிங் பண்ணுவார். இதுதான் இப்ப வரைக்கும் இவரோட டிரேட் மார்க்கா இருக்கு. பல படங்கள் பல ரோல்கள்ல நடிச்சவர் தயாரிப்பளாவும் ஆக போறேன்னு சொன்னார். பிக் பாஸ் முதல் சீசன்ல கலந்துகிட்ட ஜூலியை ஹீரோயினா வெச்சு பண்ண போறதா சொன்னார். இப்ப 4 வருஷம் கழிச்சு பிக் பாஸ் அல்டிமேட்ல  ஜூலி உள்ள போயிருக்காங்க. இன்னும் ஒரு படம் கூட வரலை. 

சினிமாவிலும் அரசியலிலும் ஜெயிக்க வாழ்த்துகள் கூல் பாய்!

Also Read – தமிழ் சினிமா கற்றுக்கொடுத்த காதல்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top