விராட் கோலி

விராட் கோலி இந்தியால மட்டுமில்ல.. The Global Superstar… 3 முக்கிய காரணங்கள்!

`விராட் கோலி உலக அளவுல 340 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்ஸோட சோசியல் மீடியால மிகப்பெரிய ஃபேன் ஃபாலோயிங் இருக்க 3-வது ஆள். லிப்ரான் ஜேம்ஸ், டாம் பிரேடி, டைகர் வுட்ஸ்னு இவங்க 3 பேர் சேர்ந்திருக்க எண்ணிக்கையை விட அது அதிகம். அதனாலதான், இது லாஸ் ஏஞ்சலிஸ் 2028 ஒலிம்பிக்ஸ், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியோட கிரிக்கெட் கம்யூனிட்டிக்கும் ஒரு வின் வின் வின் சிச்சுவேஷன்’- ஒலிம்பிக்ல கிரிக்கெட்டை சேர்த்தது பத்தி லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக் கேம்ஸ் கமிட்டியோட டைரக்டர் நிகோலோ கேம்பிரியானோவோட வார்த்தைகள் இவை. விராட் கோலி ஜஸ்ட் இந்தியன் கிரிக்கெட்டோட கிங் மட்டுமில்ல அவர் ஒரு குளோபல் ஸ்போர்ட்ஸ் சூப்பர் ஸ்டார்ங்குறதுக்கான 3 தரமான காரணங்கள் பத்தி பார்க்கலாமா?

ஃபுட்பால் ஸ்டார்ஸ்

ஃபுட்பாலோடு ஒப்பிடுகையில் கிரிக்கெட்டுக்கான ரசிகர்களை உலக அளவில் எடுத்துக் கொண்டால் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் சொல்லப்போனால் ஃபுட்பாலில் நடக்கும் லீக்குகளின் அடியொற்றிதான் ஐபிஎல், சிபிஎல் மாதிரியான லீக் மேட்சுகளே கொண்டுவரப்பட்டன. அந்த அளவுக்கு உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டது ஃபுட்பால். அந்த ஸ்டார்ஸுக்கான ரீச்சும் வேற லெவல்ல இருக்கும். அதேநேரம், ஃபுட்பால் ஸ்டார்ஸ் பல பேர் நேரடியாகவே பல்வேறு சந்தர்ப்பங்களில், `நான் விராட் கோலியோட ஃபேன்’னு பெருமையாவே பதிவு பண்ணிருக்காங்க. இங்கிலாந்து சூப்பர் ஸ்டார் டேவிட் பெக்காம் முதல்முறையா இந்தியா வந்தது பத்தி பேசுறப்போ நியூஸிலாந்து செமிஃபைனல்ல கோலியோட ரெக்கார்டையும் குறிப்பிட்டு நேரில் பார்த்ததில் மகிழ்ச்சினும் சொல்லிருப்பார். செமிஃபைனலுக்கு முன்னாடி ஜெர்மன் பிளேயர் மியூலர், தனக்கு விராட் கோலி அனுப்பிய இந்தியன் டீம் ஜெர்ஸியை அணிந்தபடி வேர்ல்டு கப்புக்கு வாழ்த்தும் சொல்லிருப்பார்.

இங்கிலாந்தின் ஹேரி கேன் தொடங்கி இத்தாலியின் செர்ஜியோ ராமோஸ், பிரேசிலின் மார்செலோ வியாரானு பலரும் விராட்டோட ஃபேன் பாய்ஸ்தான். சுனில் சேத்ரி – விராட் கோலி பாண்டிங் பத்தி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கிறிஸ்டியானோ ரொனால்டோவே தன்னோட பாப்புலாரிட்டி, விராட் கோலியை விட கம்மிதான்ற மாதிரி ஒரு விளம்பரத்துல நடிச்சிருப்பாரு. இப்படி இன்டர்நேஷனல் ஃபுட்பால் ஸ்டார்ஸ் மத்தில கோலியோட Fame பத்தி நிறைய இன்ஸிடண்ட்ஸ் சொல்லலாம்.

இன்ஃப்ளூயன்ஸ்

ஒரு கிரிக்கெட் பிளேயர் மத்த ஸ்போர்ட்ஸ்கள்லயும் ஆதிக்கம் செலுத்த முடியும்னு நிரூபிச்சவர் விராட் கோலி. அவரோட ஃபைட்டிங் ஸ்பிரிட்டை பல விளையாட்டுகள்லயும் கமெண்டேட்டர்ஸ் மென்ஷன் பண்ணிருக்காங்க. எனக்குத் தெரிஞ்சு கிரிக்கெட்டை குளோபல் லெவல் இன்ஃப்ளூயன்ஸுக்குக் கொண்டுபோன முதல் இந்தியன் கிரிக்கெட்டர் விராட்டாத்தான் இருப்பார்னு நினைக்கிறேன். போன ஜூலைல நடந்த விம்பிள்டன் சீரிஸ் அப்போ டிஸிபாஸூடனான மேட்ச்ல அல்கராஸ் விளையாடுன விதத்தைப் பார்த்து எக்ஸைட்டடான கமெண்டேட்டர்ஸ், `இவரோட ஆட்டத்தைப் பார்த்தா கிரிக்கெட்ல விராட் கோலியையும் பேஸ்கெட் பால்ல மைக்கேல் ஜோர்டனைப் பாக்குற மாதிரியும் இருக்கு’னு குறிப்பிடுவாங்க. டென்னிஸ் பிரபலங்கள் ஜோகோவிச், ரோஜர் ஃபெடரர் வரைக்கும் விராட்டோட நல்ல ராப்போ மெயிண்டெய்ன் பண்றாங்க.

விராட்டின் 50-வது சதத்துக்கு ஜோகோவிச் வாழ்த்தும் சொல்லிருந்தார். அதேமாதிரி அமெரிக்காவின் ஃபேமஸான என்.பி.ஏ ஸ்டார் ரிச்சர்ட் ஜெஃப்பர்ஸன் ஹோஸ்ட் பன்ற தி ஸ்போர்ட்ஸ் கேப்ஸ்’ ஷோல சக வீரரான லிப்ரான் ஜேம்ஸை விட விராட் கோலியோட பாப்புலாரிட்டி பெருசுனு சுட்டிக்காட்டியிருப்பார். எம்.எம்.ஏ ஃபைட்டர் ரிது போகத், விராட்டோட மிகப்பெரிய ஃபேன்.அவரோட நெகர் கிவ் அப் ஆட்டிடியூட் எப்பவுமே என்னோட இன்ஸ்பிரேஷன்’னும் சொல்லிருப்பாங்க.

Also Read – இதுல மினிமம் 15 டிஷ் சாப்பிட்டிருந்தாதான் நீங்க உண்மையான Foodie!

பிராண்ட் விராட் கோலி

இந்தியன் டீமோட கல்ச்சர்ல மாற்றத்தைக் கொண்டுவந்ததுல பிராண்ட் விராட் கோலிக்கு முக்கியமான பங்கிருக்கு. டிரா-ங்குற டிபன்சிவ் மைண்ட் செட்ல இருந்து இந்தியன் டீம் கங்குலி காலத்துல கொஞ்சம் கொஞ்சமா வெளிவர டிரை பண்ணுச்சு. ஆனா, கோலி காலத்துல வெற்றி ஒண்ணுதான் இலக்குனு ஆட ஆரம்பிச்சாங்க. இங்கிலாந்தோட Baz Ball கான்செப்டுக்கெல்லாம் கோலி முன்னோடி.

இதுமட்டுமில்ல, பிளேயர்ஸோட பிட்னெஸ் விஷயத்துல ஃபுட்பால் பிளேயர்ஸுக்கே சவால் விடுற அளவுக்கு ஒரு ஸ்டாண்டர்டைக் கொண்டு வந்து, இது பெருமை இல்லீங்க சார்; ஒவ்வொரு பிளேயரோட கடமைனு முன்னாடி நின்னு காட்டிட்டு இருக்கார். பிட்னெஸ் பத்தின விவாதங்கள் முன்ன எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வேர்ல்டு கப்ல அதிகமாகியிருக்கு. இந்த ரெண்டு விஷயங்களும் `யார்றா இந்த மனுஷன்’னு சர்வதேச சமூகம் விராட் கோலியைத் திரும்பிப் பார்க்க வைச்சுச்சு.

விராட்டோட எந்த குவாலிட்டி ரொம்ப முக்கியமானதுனு நீங்க நினைக்குறீங்க. அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.

2018 இங்கிலாந்து டெஸ்ட் சீரிஸ்ல விராட் தடுமாறிட்டு இருந்தப்ப, நிறையவே ட்ரோல்ஸ் வந்துச்சு.. அப்பவே, இந்தப் பையன் மிகப்பெரிய குளோபல் சூப்பர் ஸ்டார். கிரிக்கெட் ஸ்டேஜ்ல இருக்க எல்லா ரெக்கார்டையும் நிச்சயம் உடைப்பான்னு ஆஸ்திரேலியாவோட முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கணிச்சுச் சொல்லிருப்பார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top