மன்சூர் அலிகான் ரொம்ப கேவலமான மனுஷன். அவரை நினைச்சு ரொம்பவே வெட்கப்படுறேன்னு நம்ம ஜிகர்தண்டா டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் எக்ஸ் தளத்துல போஸ்ட் பண்ணியிருந்தாரு. கார்த்திக் சுப்புராஜ்ட இருந்து இந்த கண்டனம் வர்றது மிகவும் முக்கியமானது. அதேபோல மன்சூர் அலிகானோட மிகத்தீவிரமான ஃபேன் லோகேஷ், மன்சூர் அலிகான் பேசுனதைக் கேட்டு மனசே உடைஞ்சு போச்சு. ரொம்பவே கோவம் வருது. நாங்க எல்லாருமே ஒரே டீமா வேலை பார்த்தவங்க. எந்த துறையா இருந்தாலும் பெண்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், யாரா இருந்தாலும் சமமா நடத்தப்படணும். மன்சூர் அலிகான் பேச்சை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்னு சொல்லியிருந்தாரு. மன்சூர் அலிகான் பேச்சு அவ்வளவு பேரை கோவப்பட வைச்சிருக்கு. இவ்வளவு பச்சையா மன்சூர் அலிகான் பேசுனது கண்டிக்கத்தக்கது. அவரை மாதிரி அருவெருப்பா இல்லாமல் ரொமாண்டிக்கா கியூட்டா.. மேடைல ஹீரோயின்ஸை பார்த்து ஜொள்ளுவிட்ட நடிகர்கள் யாரெல்லாம்?
கழுகு.. காக்கா.. இப்படி என்னதான் குட்டிக்கதை சொல்லி சூப்பர் சண்டைகள் நடந்தாலும் ரஜினிகாந்த் ஹீரோயின்ஸை பத்தி அவ்வளவு அழகா பேசுவாரு. காலம் காலமா ஐஸ்வர்யா ராய் படத்து மனுஷன் பேசுன விஷயங்கள், சமீபத்துல தமன்னா பத்தி பேசுன விஷயங்கள் எல்லாம் இதுக்கு சாட்சி. வயசானாலும் தலைவர் ரஜினிக்கு சைட் அடிக்கிற ஸ்டைல் இன்னும் குறையல. எந்திரன் ஆடியோ லாஞ்ச்ல மனுஷன் பேசுனது இருக்கே. “எத்தனையோ உலக அழகிங்க இருக்காங்க. ஐஸ்வர்யா ராய் மாதிரி உலக அழகிகளை பார்க்க முடியாது” – நார்மலா எல்லாரும் சொல்ற ஸ்டேட்மெண்ட். அதுக்கும் மேல போய், பார்க்குறதுக்கு மட்டும் அழகில்ல.. நின்னா, நடந்தா, நீந்துனா, மேக்கப் இல்லாமலும் ரொம்ப அழகுனு வர்ணிச்சு தள்ளியிருப்பாரு. ஐஸ்வர்யா ராய்கூட ரொமான்ஸ் பண்ண போனாலே, அங்க நின்னுட்டு அமிதாப் மிரட்டுற மாதிரியே இருக்கும்னுவாரு.
இன்னொரு மேடைல அவங்ககூட வொர்க் பண்ண பல படங்கள்ல வெயிட் பண்ணதா சொல்லுவாரு. பொன்னியின் செல்வன்லகூட ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியா.. அதான், பெரிய பழுவேட்டையரா நடிக்கிறேன்னு மணிரத்னம்கிட்ட கேட்டதா மனுஷன் பேசியிருப்பாரு. நம்ம ஊர்ல ஐஸ்வர்யா ராய்க்குதான் நிறைய புலம்பல்ஸ் இருக்கும்போல. பார்த்திபன் சும்மாவே சொல்ல வேணாம் நடிகைகள் யாராவது மேடைல வந்தாங்கனா அவங்க அழகை வர்ணிக்கிறேன், நடிப்பை வர்ணிக்கிறேன்னு பொளந்துகட்டுவாப்புல. ரெட் கார்பெட்ல ஐஸ்வர்யா ராய், பார்த்திபனை முன்னாடி நடக்க சொன்னது சம்பந்தமே இல்லாமல் செம காண்ட்ரோவெர்ஸி ஆச்சு. அதுக்கு பதில் சொல்லும்போது ஆஷ் மேடம் கைவெச்சா நாம ஆஷ் ஆயிடுவோம்னு ரைமிங்க கொட்டிவாரு.
தமிழ்ல எந்த ஹீரோயின் பெயர் சொன்னாலும் பார்த்திபன் அங்க இருப்பாரு. கிருபானந்த வாரியார், மஞ்சு வாரியார் – ரெண்டு பேருக்கும் வித்தியாசம் இல்லை. அவர் ஆன்மீகம் பேசுவார். இவங்க பெண்மீகம் பேசமாட்டாங்க.. செயல்படுத்துவாங்கன்னுவாரு. அடேங்கப்பா நோட் பண்ணுங்கப்பா, மோட்லதான் இருக்கும். கிருபானந்தா வாரியர் காதை கவ்வுவாரு, நீங்க வந்தா மனசை கவ்விடுவீங்கன்னுவாரு. யாராவது அவரை சொல்லி நிறுத்துங்கடான்னுதான் இருக்கும். நீங்க அழகா பேசணும்னு அவசியம் இல்லை. அழகே தமிழ் பேசும்போது, எதுக்கு அழகா இருக்கணும்னு வெளுத்துகெட்டுவாரு. நித்யானந்தா கைலாசானு ஒண்ணு கிரியேட் பண்ணிருக்காரு. அங்க போக பாஸ்போர்ட் தேவையில்லைனு சொன்னா எவ்வளவு சந்தோஷம் இருக்குமோ அவ்வளவு சந்தோஷத்தோட அவார்ட் கூப்பிடு போறேன்னுவாரு. பூக்கள் மலர்ந்து பார்த்துருப்பீங்க, பூக்கள் சிரிச்சு பார்த்துருக்கீங்களா? பூப்பதைத் தவிர பூவுக்கு வேறென்ன தெரியும்? அதன் பெயர் பூ என்றாவது தெரியுமானு கவிதை எழுதியிருப்பேன். அதேமாதிரி, இந்த பெண்ணுக்கு தான் எவ்வளவு பெரிய அழகுனு தெரியுமா? கொள்ளை அழகு, கொள்ளை போகும் அழகுனு தனக்கு தெரியுமா மலருக்கு? இவங்க மலர் டீச்சர், டீச்சரை சைட் அடிக்காதவங்க, கலாய்க்கிறவங்க இருக்கவே முடியாது. ஆனால், 2 பேர் இவங்களை சைட் அடிக்கல. ஒருத்தன் இன்னும் பொறக்கலை.. இன்னொருத்தன் செத்துட்டான்னு பேசியே அவங்களை சிரிக்க வைப்பாரு. என்னனா, சாய் பல்லவியே போதும்னு சொல்ற அளவுக்கு பேசியிருப்பாரு.
ஜெயிலர்ல தமன்னாகூட ஒரு பாட்டு இருக்குனு ரஜினியை ஆரம்பத்துலயே நெல்சன் ஹைப் ஏத்து விட்ருக்காரு. காவாலா பாட்டுக்கு தமன்னாகூட டான்ஸ் ஆட கூப்பிடுவாங்கனு மனுஷன் வெயிட் பண்ணிட்டே இருந்துருக்காரு. கடைசி நாள் கூப்பிட்டு ஒரே ஒரு ஸ்டெப் ஆட சொல்லியிருக்காங்க. மனுஷன் நொந்து போய் ஸ்டேஜ்ல.. என்ன தமன்னாகூட சரியா பேசக்கூட விடலைனு புலம்புனாரு. அவராவது பரவால்ல, நெல்சன்கிட்ட ஏன் கூப்பிடலனு கேட்டதுக்கு.. ஃப்ரேம் பாருங்க.. எவ்வளவு அழகா இருக்கு. படம் முழுக்க அவர்தான இருக்காரு. கொஞ்சம் வெயிட் பண்ண சொல்லுங்கன்ருக்காரு. அப்பவும் மேடைல இவர் விடுறதா இல்லை. அதே செட்டப்ல இன்னொரு இடத்துல ஆட வைச்சாங்க. தமன்னா அதுல ஃப்ரேம்லகூட இல்லை. புரோமோல அனிக்கு தமன்னா புடிக்குன்றாரு. ஆனால், நெல்சனுக்குதான் புடிச்சிருக்கு. என்ன கேட்டா ரெண்டு பேரையும்விட ரஜினிக்குதான் ரொம்ப புடிச்சிருக்கு இன்னும் நிறைய செலிபிரிட்டீஸ் இருக்காங்க. பார்த்திபனும் ரஜினியுமா முக்கால்வாசி ஃபில் பண்ணதால உங்களுக்கு செகண்ட் பார்ட் வேணும்னா கமெண்ட்ல சொல்லுங்க.
Saleth Viado