திருமலையை விஜய் தேர்ந்தெடுத்த கதை தெரியுமா..?

90’ஸ் கிட்ஸ் விஜய் ரசிகர்களுக்கு 2003 தீபாவளியை அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியாது. ஏன்னா அந்த வருச தீபாவளிக்குதான் விஜய்யின் கரியர் திருப்புமுனை படமான திருமலை வெளியாச்சு. அதுவும் தனியா வரலை, ஆஞ்சநேயா வரட்டும் அடுத்த சூப்பர்ஸ்டார் யாருன்னு தெரியும்னு அஜித் ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுக்குற அளவுக்கு நம்பிக்கையா இருந்த ஆஞ்சநேயா, சென்சேசனல் டைரக்டரா இருந்த பாலா டைரக்சன்ல சூர்யாவும் விக்ரமும் சேர்ந்து நடிச்ச பிதாமகன்னு கூட போட்டி போட்ட படங்கள்லாம் சாதாரண படங்கள் இல்லை.  ஏன்னா ஆஞ்சநேயா டைரக்டர் அதுக்கு முன்னாடி வல்லரசு ஹிட் கொடுத்த டைரக்டர் மகாராசன், பாலா பத்தி சொல்லவே வேணாம். ஆனா, திருமலைல.. யாரோ ஒரு புது டைரக்டர் படத்துல விஜய் நடிக்கிறாருப்பான்னு கொஞ்சம் அசால்டாதான் இந்தப் படத்தை எல்லாம் பாத்தாங்க.  ஆனா அந்த ரேஸ்ல திருமலைதான், கமர்சியலாவும் சரி, விமர்சனரீதியாகவும் சரி ஒரு பேலன்ஸ்டான வெற்றிய குவிச்சுது. இந்தப் படத்துல வாழ்க்கை ஒரு வட்டம்னு ஜெயிக்கிறவன் தோப்பான் தோக்குறவன் ஜெயிப்பான்னு விஜய் பேசின பஞ்ச் சொல்லி வெச்சு அடிச்சமாதிரி அமைஞ்சது. ஏன்னா அதுவரைக்கும் தமிழன், பகவதி, வசீகரா, புதிய கீதைனு ஒருமாதிரியா இருந்த விஜய் கிராஃப் திருமலைக்கு பிறகு தொடர்ந்து ஏறுமுகத்துல போக ஆரம்பிச்சுது. இப்படி விஜய்க்கு திருப்புமுனையா அமைஞ்ச திருமலை படத்தோட வெற்றிக்கு காரணமான 4 முக்கிய காரணங்கள் பற்றி இப்போ பார்க்கலாம்.

Thirumalai
Thirumalai

விஜய்

இந்தப் படத்தை விஜய் தேர்ந்தெடுத்த கதையே ஒரு சுவாரஸய்ம்தான். அசிஸ்டெண்ட் டைரக்டர் ஒருத்தர் ஸ்கிரிப்ட் ஒண்ணு எழுதி அதை தெலுங்குல பிரபாஸை வெச்சு பண்றதுக்காக தீவிரமா முயற்சி பண்ணிக்கிட்டிருந்தாரு. இதனால அந்த அசிஸ்டெண்ட் டைரக்டர் வேற எந்த படத்துலயும் வேலை செய்யாததால பொருளாதாரரீதியா ரொம்பவே சிரமப்பட்டிருக்காரு. அப்போ கைமாத்து வாங்குறதுக்காக அவர் போன் பண்ணது இயக்குநர் ராதாமோகனுக்கு. அவரும் அப்போ டைரக்டர் ஆகலை. அவர் அப்போ கோ டைரக்டரா வேலை பார்த்துக்கிட்டிருந்த படம்  விஜய்யோட‘புதிய கீதை’. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து பணம் வாங்கிட்டுபோக சொல்லி ராதாமோகன் கூப்புடவே அந்த அசிஸ்டெண்ட் டைரக்டரும் அங்க வந்திருக்கார். போன இடத்துல ராதாமோகன், ‘டேய்.. விஜய் ஒரு நல்ல கமர்சியல் கதை எதிர்பார்க்குறாரு. எனக்குதான் அந்த மாதிரிலாம் எழுத வராது. உனக்குதான் நல்லா வருமே .இண்ட்ரோ தர்றேன். கதை சொல்றியா’ என சொல்ல, ‘ஹேய் அவர்லாம் கேப்பாரா.. வேணாம் விடுப்பா’ன்னு தயங்கியிருக்காரு அந்த அசிஸ்டெண்ட் டைரக்டர் . ‘நீ வா.. சொல்லிப்பார்ப்போம். நடந்தா ஓகே, இல்லன்னா நீ உன் வேலையைப் பாரு’ என அழைத்துப்போய் விஜய்யிடம் இண்ட்ரோ கொடுத்திருக்கிறாரு. அவர்கிட்ட ஓரிரு வார்த்தைகள் பேசுன விஜய் கடைசியா, ‘உங்க நம்பரை என் மேக்கப்மேன்கிட்ட கொடுத்துட்டு போங்க, பார்க்கலாம்’னு சொல்லி அனுப்பியிருக்கிறார். விஜய் எங்க கூப்புடப்போறாருன்னு அங்கிருந்து கிளம்பிப்போன அந்த அசிஸ்டெண்ட் டைரக்டர், ராதாமோகன்கிட்ட வாங்கின பணத்துல லைட்டா டிரிங்க்ஸ் சாப்பிட்டு படுத்து தூங்கியிருக்காரு. அப்போ லேட் நைட்ல ஒரு புது நம்பர்ல இருந்து போன் வர, எடுத்திருக்கிறார் அந்த அசிஸ்டெண்ட் டைரக்ட்ர். ‘நான்தான் விஜய் பேசுறேன்’ என போன் குரல் பேச, ஃப்ரெண்ட்ஸ்தான் கலாய்க்குறாங்கன்னு நினைச்ச அவர்,  அலட்சியமா பதில் சொல்லிட்டு வெச்சிருக்கிறார். திரும்பவும் போன் வரவும்தான் லைட்டா அலெர்ட் ஆகியிருக்கிறாரு.. அவர் இருக்கிற கண்டிசனை நல்லாவே புரிஞ்சுக்கிட்ட விஜய், ‘இல்ல நாளைக்கு ஷூட்டிங் கேன்சல் ஆச்சு. உங்க கதையைக் கேக்கலாம்னு பார்த்தேன்.

நீங்க இருக்குற கண்டீசனுக்கு காலையில வரமுடியுமா’ன்னு தயங்க, ‘அய்யோ சார்.. கரெக்ட் டைம் வந்துடுறேன்’ என வாக்குறுதி கொடுத்து சொன்னமாதிரியே காலையிலே கரெக்ட் டைம்ல விஜய்யை சந்திச்சு கதை சொல்லியிருக்கிறார். அந்த கதைதான் ‘திருமலை’, அந்த உதவி இயக்குநர்தான் ரமணா. இந்த சந்திப்பு நடந்த அடுத்த பத்தாவது நாள்ல படத்தோட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கு.  நாளைக்கு ஷூட்டிங் கேன்சல்னு  தெரிஞ்சதும் ரெஸ்ட் எடுக்கனும்னு நினைக்காம, இன்னைக்கு ஒருத்தர் கதை இருக்குன்னு சொன்னாரே அதை கேட்டுடுவோமேன்னு விஜய் காட்டுன அந்த ஆர்வத்துல தொடங்கி இந்தப் படத்துக்காக விஜய் செஞ்ச மெனக்கெடல்கள் அதிகம்தான். ‘பொட்டிக்கீதா..’ னு கேட்குற சென்னை ஸ்லாங் மாடுலேசன் மீட்டரை கரெக்ட்டா விஜய் பிடிச்சதுலேர்ந்து தொடங்கி, டிரிம் பண்ண தாடி மீசை, சட்டை காலரிலிந்து எடுக்குற சிகரெட், ப்ரவுன் டோன் காஸ்டியூம்ஸ், ‘வாழ்க்கை ஒரு வட்டம்’னு ரியல் லைஃபை கனெக்ட் பண்ற பஞ்சஸ்னு விஜய் இந்த படம் மூலமா தன் ஃபேன்ஸூக்கு கொடுத்தது அல்டிமேட் டிரீட். குறிப்பா இந்தப் படத்துக்காக டிசைன் ஆன லுக்ல அடுத்த 10 வருஷத்துக்கும் மேல விஜய் நடிச்சாருன்னா விஜய்க்கும் விஜய் ஃபேன்ஸூக்கும் அந்த லுக் எவ்வளவு பிடிச்சுப்போயிருக்கும்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. படம் ரிலீஸுக்கு முந்தின நாள் பெப்சி உங்கள் சாய்ஸ்ல சர்ப்பரைஸா ‘தாம் தக்க தீம்தக்க’ பாட்டைப் போட்டுட்டாங்க, அந்தப் பாட்டையும் அதுல லாரன்ஸுக்கு ஈக்குவலா விஜய் போட்ட ஸ்டெப்ஸையும் பார்த்து விஜய் ரசிகர்களே மிரண்டு போய்ட்டாங்க,எப்படா விடியும் எப்படா தியேட்டர்ல படத்தை பாக்கலாம்னு வெறித்தனமா வெயிட் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. படத்துல விஜய் லாரன்ஸைப் பாத்து,  ஆனா உன்ன எனக்கு பிடிக்கும் தல, எல்லோரும் ஓரமா நின்னு வேடிக்கை பாத்தப்ப, நீ மட்டும் தில்லா வந்து மோதுனல்ல, அது எனக்கு பிடிச்சிருந்துச்சு தலனு விஜய் பேசுன டயலாக்லாம் வேற லெவல்ல கனெக்ட் ஆகி ஃபேன்ஸை டிரிக்கர் பண்ணுச்சு.

ரமணா

Ramana
Ramana

ஒரு ஏழை பையன் – பணக்காரப் பெண் இடையே காதல், அதை எதிர்க்குற பொண்ணோட அப்பாங்கிற அரத பழசான கதைதான் என்றாலும் அதை rawness கலந்து ரமணா ப்ரெசண்ட் பண்ண விதம் ரொம்பவே புதுசா இருந்தது. குறிப்பா விஜய்யை அவர் போட்ரைட் பண்ணியிருந்த விதமும் டயலாக் டெலிவரி ஸ்டைலும் பாடி லேங்குவஜூம் அதுவரை விஜய் பண்ணிடாத பாணியில இருந்ததால எல்லோருக்குமே படம் பிடிச்சுப்போனது. குறிப்பா, நம்ம தியேட்டர்ல உன் படத்தை ஓட்டாத, ஸ்கீரின் கீஞ்சிடும்ங்கிற மாதிரியான ரமணாவோட புது பாணியிலான மாஸ் டயலாக்குகள் ரொம்பவே வித்தியாசமா இருந்ததால எல்லோருக்கும் பிடிச்சுது. இந்தப் படம் தெலுங்குல சுமந்த் – சார்மி நடிப்புல கௌரிங்குற பேர்ல ரீமேக் ஆகி அங்கேயும் வெற்றிப்படமா அமைஞ்சுது. ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட சில மொழிகள்லயும் திருமலை டப் ஆகி அங்கேயும் நல்ல கலெக்சனைப் பார்த்தது. அந்த அளவுக்கு ரொம்ப ஸ்டிராங்கா இருந்த ரமணாவின் எழுத்து படத்தோட வெற்றிக்கு மிகப்பெரிய ப்ளஸ்

வித்யாசாகர்

Thirumalai
Thirumalai

இந்தப் படத்துக்கு வித்யாசாகர் போட்ட தாம் தக்க தீம்தக்க, திம்சுகட்ட, அழகூரில் பூத்தவளே, வாடியம்மா ஜக்கமா, நீயா பேசியதுன்னு எல்லா பாட்டுமே ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சதில்லங்கிற மாதிரிதான் இருக்கும். இன்னும் சொல்லப்போனா ஆரமப்த்துல பெரிய பேச்சு இல்லாம இருந்த திருமலை மேல ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட, ரிலீஸுக்கு முன்னாடியே செம்ம ஹிட்டான பாடல்களுக்கு மிகப்பெரிய பங்கு இருந்துச்சு.  அதைப் படமாக்குன விதத்துலயும் ரசிகர்களே நல்லாவே கவர்ந்தது. இதுல ‘நீயா பேசுனது’ பாட்டு படமாக்கப்பட்ட விதத்திற்கு ரமணாவுக்கு இன்ஸ்பிரேசனா இருந்தது அஜித் நடிச்ச ‘கண்டுக்கொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்துல வர்ற ‘சந்தனத் தென்றலே’ பாட்டுங்கிறதுதான் ஆச்சர்யமான உண்மை. 

Also Read – அலைபாயுதே ஏன் பிளாக்பஸ்டர்… 5 காரணங்கள்!

மனோஜ் கே விஜயன்

‘அரசு’ங்கிற வில்லன் கேரக்டர் திருமலை படத்துக்கு மிகப்பெரிய பலமா அமைஞ்சுது. வெள்ளை வேட்டி, சட்டை போட்டுக்கிட்ட்டு கையில் அரிவாள தூக்கிக்கிட்டு துரத்துற டெம்ப்ளேட்  வில்லன்களை தொடர்ந்து காட்டிவந்த அப்போதைய தமிழ் சினிமாவுல பார்க்க அழகா டீசண்டா, டக் இன் பண்ணி, பாரதிதாசன் கவிதைகள் சொல்லி வில்லத்தனம் பண்ற ‘அரசு’ மாதிரியான ஒரு கேரக்டர் திருமலைக்கு முன்பும் திருமலைக்கு பின்பும் தமிழ் சினிமா பார்க்கலை. இப்படியான வித்யாசமான வில்லன் கேரக்டர் வடிவமைப்பு படத்தோட வெற்றிக்கு முக்கிய காரணமா அமைஞ்சுது

Manoj K Vijayan
Manoj K Vijayan

அந்த வருச தீபாவளி ரேஸ்ல ‘ஆஞ்சநேயா’ அட்டர் ஃபிளாப் ஆக, ‘பிதாமகன்’ விமர்சன ரீதியா பெரிய பேர் வாங்கியிருந்தாலும் கலெக்சனா ஓகேவா வசூல் பண்ணியிருந்த நிலையில விஜய்யோட ‘திருமலை’, ஓரளவு நல்ல விமர்சனத்தையும் மிகப்பெரிய வசூலையும் வாரி குவிச்சுது. இன்னும் சரியான சொல்லனும்னா இன்னைக்கு நாம பாத்துக்கிட்டிருக்கிற விஜய்யை நாம மட்டுமல்ல,விஜய்யே கண்டுபிடிச்சது திருமலை படத்துலேர்ந்துதான். அந்தவகையில ‘திருமலை’ படம் எப்போதுமே விஜய்க்கும் விஜய் ரசிகர்களுக்கும் எப்போதும் close to heart –ஆ இருக்கும்.  

17 thoughts on “திருமலையை விஜய் தேர்ந்தெடுத்த கதை தெரியுமா..?”

  1. You actually make it appear so easy together with your presentation however I
    find this matter to be actually one thing that I believe I’d never understand.
    It sort of feels too complex and very huge
    for me. I am looking ahead to your next submit, I’ll try to
    get the hang of it! Escape rooms hub

  2. After I initially commented I appear to have clicked the -Notify me when new comments are added- checkbox and now every time a comment is added I recieve four emails with the exact same comment. Perhaps there is an easy method you can remove me from that service? Cheers.

  3. Having read this I believed it was very informative. I appreciate you spending some time and effort to put this information together. I once again find myself spending a lot of time both reading and posting comments. But so what, it was still worth it!

  4. Spot on with this write-up, I seriously feel this website needs a great deal more attention. I’ll probably be back again to see more, thanks for the advice.

  5. Great site you have got here.. It’s difficult to find good quality writing like yours nowadays. I truly appreciate people like you! Take care!!

  6. I’m very happy to find this great site. I need to to thank you for ones time for this fantastic read!! I definitely really liked every little bit of it and I have you saved to fav to look at new things on your site.

  7. The next time I read a blog, I hope that it doesn’t disappoint me as much as this one. I mean, I know it was my choice to read, nonetheless I genuinely thought you would probably have something helpful to say. All I hear is a bunch of crying about something you can fix if you were not too busy looking for attention.

  8. I’m very happy to find this web site. I wanted to thank you for ones time just for this fantastic read!! I definitely savored every bit of it and I have you saved to fav to see new stuff in your site.

  9. I’m impressed, I must say. Seldom do I encounter a blog that’s equally educative and entertaining, and without a doubt, you have hit the nail on the head. The problem is something that not enough folks are speaking intelligently about. I’m very happy I came across this during my hunt for something relating to this.

  10. Everything is very open with a precise explanation of the challenges. It was definitely informative. Your website is very helpful. Thank you for sharing!

  11. After I initially left a comment I seem to have clicked on the -Notify me when new comments are added- checkbox and from now on whenever a comment is added I get 4 emails with the exact same comment. Is there a means you can remove me from that service? Thanks.

  12. I’m amazed, I have to admit. Rarely do I come across a blog that’s equally educative and engaging, and without a doubt, you have hit the nail on the head. The problem is something too few men and women are speaking intelligently about. I’m very happy that I found this during my search for something regarding this.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top