ஜானே ஜான்

அட்டகாசமான த்ரில்லர் ஜானே ஜான்.. சறுக்கிய இடம் இதுதான்!

மொத்தமா 7 முக்கியமான கேரக்டர்களை வைச்சு சினிமா எடுக்க முடியுமா? அதுலயும் 3 கேரக்டர்களை சுத்தி மட்டுமே கதை நகருமா? அப்படிங்குற ஆச்சர்யத்தை கொடுத்து அசத்தியிருக்கிற சினிமாதான் நெட்ஃப்ளிக்ஸ்ல ரிலீஸாகியிருக்கிற ஜானே ஜான். இப்படி ஒரு அட்டகாசமான த்ரில்லர் ரொம்ப நாளைக்கு அப்புறமா வந்திருக்குனு கூட சொல்லலாம். அதுக்காக இந்தப்படத்துல சிக்கலே இல்லைனு சொல்லவே முடியாது. இந்தப்படத்துலயும் அங்கங்க சின்ன சின்ன லேக்ஸ் இருக்கு. ஆனா மொத்தமா இந்தப்படம் எப்படி இருந்துச்சு, என்னவெல்லாம் சிக்கல் அப்படிங்குறதைத்தான் இந்த வீடியோவுல பார்க்க போறோம்.

2005-ம் வருஷம் ஜப்பானிய எழுத்தாளரான ஹெய்கோ ஹிகாஷினோ எழுதி உலகம் முழுவதும் ரொம்பவே ஃபேமஸான நாவல் ‘தி டிவோஷன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ்’. இதை தழுவி இயக்குநர் சுஜோய் கோஷ் ஜானே ஜான் படத்தை இயக்கியிருக்கார். இந்தோ-நேபாள எல்லையில இருக்கிற கலிம்பாங் அப்படிங்குற மலைக்கிரமத்துல தன்னொட மகள்கூட வாழ்ந்துகிட்டு வர்றாங்க மாயா டிஸோஸா (கரீனா கபூர்). 14 வருஷத்துக்கு முன்னால பார் டான்ஸரா இருந்தவர். கணவனோட கொடுமை தாங்க முடியாம தப்பிச்சு வந்து, மலைக்கிராமத்துல சின்ன கஃபே நடத்திட்டு வர்றாங்க. அந்த ஊர்ல இருக்கிற ஸ்கூல்ல கணக்கு டீச்சரா வொர்க் பண்ணிட்டு இருக்கார்.நரேன் (ஜெய்தீப் அஹ்லாவத்). ஊரே டீச்சர்னு அவ்ளோ மரியாதையா கூப்பிடுற அளவுக்கு பேமஸ். ஆனா, அவருக்கு மாதா மேல ஒரு ஈர்ப்பு. மாயாவோட பக்கத்து வீட்டுக்காரரான அவர் மாயாவோட எல்லா நிகழ்வுகளையும் கவனிச்சுக்கிட்டே வர்றார். அமைதியா மகளோட சந்தோஷமா போற மாயாவோட வாழ்க்கையில 14 வருஷத்துக்கு அப்புறமா மறுபடியும் கணவர் அஜித்(செளரப் சச்தேவா) என்ட்ரி கொடுக்கிறார். கணவனோட நடந்த தகராறுல கணவனை மாயா கொன்னுடுறாங்க. இப்போ என்ன பண்றதுன்னு தெரியாம நிற்கிற மாயாவுக்கு உதவ முன்வர்றார், கணக்கு டீச்சர் நரேன். கொலையை மறைக்க சில சம்பவங்களை ரெண்டுபேருமே பண்றாங்க. இதுக்கு இடையில இறந்த அஜித்தை தேடி மாயாவோட இடத்துக்கு வர்றார், போலீஸ் அதிகாரி கரண் (விஜய் வர்மா). கடைசியா கொலையை கண்டுபிடிச்சாரா, கரீனா தப்பிச்சாராங்குறதுதான் கதை.

முதல்ல வாழ்த்துக்கள் சொல்ல வேண்டியது இயக்குநர் சுஜய் கோஷ்க்குத்தான் முந்தைய படமான கஹானி மாதிரியே இதுலேயும் டைரக்டர் டச் நல்லாவே இருக்கு. எடுத்துக்கிட்ட லொகேஷன்கள், சிறந்த நடிகர்கள் தேர்வுனு மேக்கிங்லயே பாதி கிணத்தை தாண்டுறார். இதுபோக த்ரில்லருக்காக அவர் எடுத்துக்கிட்ட திரைக்கதையும் சூப்பர். இதுக்கு மேல ஒரு சிறப்பு என்னன்னா ஜப்பானிய நவலை இந்திய ரசிகர்களுக்கு ஏத்த மாதிரி நாவலோட கதைக்கரு சிதையாம கொடுத்திருகிறார். மெயின் கதைக்குள்ள போக சில நொடிகள்தான் எடுத்துக்கிறார், இயக்குநர். அதுக்கப்புறம் ஜெட் வேகம்தான். படத்தோட மூட் டார்க் அப்படிங்குறதுக்காக முழுமையான டார்க் இல்லாம அங்கங்க லைட்டர் வெர்ஷன்லயும் படம் டிரான்ஸ்பார்மாகுது. டார்க் டோன் டிராவல் ஆகுறப்போ, மனசு படபடப்பாவே வச்சிருக்கிறார், இயக்குநர். எடுத்துக்கிட்ட கதைக்காக சினிமாத்தமா எதுவும் செய்யாம ஸ்டன்னிங்கான முடிவு ஜானே ஜான்.

அடுத்ததா இந்த படத்தோட பில்லர்னா கணக்கு டீச்சரா வர்ற ஜெய்தீப் அஹ்லாவத்தை சொல்லலாம். கண்களாலயும், பாடிலாங்வேஜாலையும் அட்டகாசமான மிரட்டலான நடிப்பு. என்னடா இவ்ளோ புகழ்றானு நீங்க நினைக்கலாம். ஆனா படம் பார்த்தா அதுக்கப்புறம் இது உண்மைனு நீங்க நம்பலாம். கணக்கு போட்டுக்கிட்டே கொலையை மறைக்க போற திட்டங்கள்லாம் அல்டிமேட். அடுத்ததா கரீனா கபூருக்கு ரொமம்ப நாளைக்கு அப்புறமா நடிக்க ஸ்கோப் இருக்கிற படம். அமைதியா டிராவல் ஆகுற அவங்களோட இடம் திடீர்னு வேற ஒரு மோடுக்கு மாறுகிறப்போ, வாவ் மோடுக்கு கூட்டிட்டு போறார். போலீஸ்காரர் வந்து விசாரிக்கிறப்போ பதைபதைப்போட தவிக்கிற இடமும், திடமா பதில் சொல்ற இடம்னு வேரியேஷன்ல அசத்துறார். இதுபோக அடுத்ததா கவனம் ஈர்க்கக் கூடியவர் விஜய் வர்மா. விசாரணை அதிகாரியா வர்ற அவர் படத்தை லைட்டர் வெர்ஷனுக்கு கூட்டிப்போறார். இந்த மூணுபேரை மட்டும் மெயினா வச்சுக்கிட்டு போறதால மத்த கேரக்டர்களுக்கு பெரிசா வேலையில்லை. பார்க்கிறவங்களை ஒருவிதமான திகில் மனநிலையிலயே வச்சிருந்ததும், க்ளைமாக்ஸூம் இந்த படத்தோட வெற்றிக்கு காரணம். திகிலைக் குறையாம கொண்டுபோனது சச்சின் – ஜிகரோட பின்னணி இசைதான். எடுத்துக்கிட்டது மலைப்பகுதிங்குறதால ஒளிப்பதிவாளர் அவிக் முகோபாத்யா புகுந்து விளையாடியிருக்கார். ஒவ்வொரு ப்ரேம்லயும் இருள் இருந்துக்கிட்டே இருக்கு. அது படத்தோட மூடை கெடுக்காம பார்த்துக்குது.

Also Read – `நடிப்பு அரக்கன்’ எஸ்.ஜே.சூர்யா – தமிழ் சினிமாவுக்கு ஏன் முக்கியம்?

இப்போ இந்த படத்துல இருக்கிற சிக்கல்களை பார்க்கலாம். முதல் பாதி விறுவிறுப்பா போற திரைக்கதை, ரெண்டாவது பாதியில ஒரே இடத்துல சுத்துற மாதிரியான உணர்வை கொடுக்குது. ஜெய்தீப்புக்கும், விஜய்வர்மாவுக்கும் இடையில நடக்கிற கான்வர்ஷேசன் ஒரு கட்டத்துக்கு மேல போரடிக்கிற மாதிரியான உணர்வைக் கொடுக்குது. அதேபோல மாயா மேல டீச்சருக்கு ஈர்ப்பு வர்றதுக்கும், கரீனாவுக்கு உதவியதுக்காக டீச்சர் ஜெய்தீப் சொன்ன காரணமும் ஒத்துக்கிற மாதிரி இல்லை. என்னடா சினிமாத்தனம் இல்லாம போகுதேனு நினைக்கிறப்போ, போலீஸ் விஜய்வர்மா விரக்தியில ஊருக்கு திரும்புறப்போ, திடீர்னு ஒரு விஷயம் ஸ்ட்ரைக் ஆகி கொலையை கண்டுபிடிக்க போற இடம் அக்மார்க் சினிமாத்தனம். படத்தோட இன்னொரு சொதப்பல் க்ளைமாக்ஸ். நாவல்ல வேணா அந்த மாதிரி க்ளைமாக்ஸ் இருக்கலாம். ஆனா சினிமாவுக்கும் அப்படி வைக்கணும்னு அவசியம் இல்லை. இந்த க்ளைமாக்ஸ் எந்த விதத்துலயும் படத்துக்கு கைகொடுக்கவே இல்லை. ஏன்னா க்ளைமாக்ஸ் பார்க்கிறப்போ அதிர்ச்சி வரணும், இல்லை சர்ப்ரஸ் வரணும். ஆனா இது எதுவுமெ வரலைங்குறதுதான் சோகம். த்ரிஷ்யம் படத்தோட ஸ்டைல்ல எடுத்துட்டு போய் க்ளைமாக்ஸ்ல கோட்டை விட்டாங்கனுதான் சொல்லணும். ஒரு படத்தோட க்ளைமாக்ஸ்தான் படத்துக்கு ரொம்பவே முக்கியம். குப்பையான திரைக்கதைகள்கூட இங்கதான் எஸ்கேப் ஆகுது. ஆனா ஆரம்பத்துல இருந்து ரொம்ப கச்சிதம கொண்டுபோயிட்டு க்ளைமாக்ஸ்ல சொதப்பியதால முழுமையான நிறைவா இந்த படம் இல்லை. இதுக்கு முன்னால த்ரிஷ்யம் மாதிரியான கதைகள் கூட் ஜப்பானிய நாவலோட அடிப்படையாத்தான் எடுக்கப்பட்டது. முன்னாலயே இதுமாதிரியான படம் பார்த்ததாலயோ என்னவோ, படம் பெரிய திருப்தியை கொடுக்கலை. அதுக்காக சோதிக்கவும் இல்லை.

அடுத்த மைனஸ்னா படம் ரெண்டேகால் மணிநேரம் ஓடுது. அதுல 20 நிமிஷத்துல இருந்து அரை மணிநேரத்தை குறைச்சிருக்கலாம். முன்னால நாவலை அடிப்படையா வைச்சு சஸ்பெக்ட் எக்ஸ் படம் ரிலீஸ் ஆகிடுச்சு. இந்த ஜானே ஜான் அதோட அதிகாரப்பூர்வ ரீமேக். ஒரிஜினலை பார்த்தவங்களுக்கு ஜானே ஜான் பெரிசா தெரியாது. ஆனா அப்படில்லாம் இல்லை நான் ஃப்ரெஷ்ஷா பார்க்கிறேன்னு நினைச்சு பார்த்தா நிச்சயமா த்ரில் கியாரண்டி.

எனக்கு இந்த படத்துல பிடிச்சது, கணக்கு டீச்சரா வர்ற ஜெய்தீப் அஹ்லாவத் கேரக்டர்தான். உங்களுக்கு என்ன கேரக்டர் பிடிக்கும் அப்படிங்குறதை கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top