ரஜினி - லோகேஷ்

லோகேஷ் – ரஜினி காம்போ… லோகேஷ் முன் இருக்கும் 5 கேள்விகள்!

ரஜினியோட அடுத்த படமான Thalaivar 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போறதா அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தாச்சு. இன்னைக்கு தேதிக்கு நம்பர் ஒன்  டைரக்டர் லோகேஷ், என்னைக்கு தேதிக்கும் நம்பர் ஒன்னா இருக்குற சூப்பர் ஸ்டார்னு இந்த படத்துக்கு எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமா இருக்கும். ஆனா இந்த அறிவிப்பு சில கேள்விகளையும் எழுப்பியிருக்கு. அந்த கேள்விகளையும் அதற்கான பதில்களையும்தான் பார்க்கப்போறோம்.

லோகேஷ் - ரஜினி

லோகேஷ்க்கு இதில் விருப்பமில்லையா?

‘ப்ரோ லோகேஷை கட்டாயப்படுத்தி பண்ண வைக்கிறாங்க ப்ரோ..’னு குயிலைப் புடிச்சு கூண்டில் அடைச்சி பாட்டெல்லாம் போட்டு எடிட் பண்றாங்க. ப்ரோ உங்களை மெரட்டி இந்த ட்வீட் போட வச்சாங்கனா லைட்டா கண் சிமிட்டுங்க நாங்க புரிஞ்சுக்கிறோம்னு ஏகப்பட்ட ட்வீட்கள். லோகி பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே சொல்றீங்க.. எப்பிடிடா தெரியும். வலைப்பேச்சுல கேட்டீங்களானு விசாரிச்சா அறிவிப்பு ட்வீட்ல அவர் எமோஜியே யூஸ் பண்ணலையாம்.. அதனால இப்பிடி ஒரு பொரளியை கெளப்பி விடுறாய்ங்க.

ரஜினி வயசுக்கு ஏத்த கதையா இருக்கணுமே?

‘வாவ்.. வாட் எ மேன்… உங்களுக்கு இன்னும் வயசாகல’ங்குற காலத்தையெல்லாம் கடந்து நாளாகிடுச்சு. இப்போ தன் வயசுக்கு ஏத்த கதைகளை செலக்ட் பண்ணி பண்ண ஆரம்பிச்சுட்டாரு ரஜினி. வயசான காலத்துல அலுங்காம குலுங்காம ஒரு மாஸ் படம் எப்படி எடுக்கலாம்னு ஜெயிலர் மூலமா பண்ணிக்காட்டிருக்காங்க. தலைவா நீங்க சும்மா கைட்டி நில்லுங்க மிச்சத்தை நான் பார்த்துக்குறேன்னு நெல்சனும் அனிருத்தும் சேர்ந்து மாஸ் ஏத்திட்டாங்க. சப்போர்ட்டுக்கு நாலு பேர் கெஸ்ட் ரோல் பண்ணதுல படம் சூர ஹிட் அடிச்சிருச்சு. ஆனா லோகேஷ் படத்துல எதிர்பார்க்க முடியாதே… ஆக்சன்லாம் ஹெவியா இருக்கும். இந்த வயசுல ரஜினியை வச்சி அப்படியெல்லாம் பண்ணிட முடியுமா… அப்படினு நான் கேக்கல. பக்கத்து டேபிள்ல ‘பாபா’ குமார்னு ஒரு ரஜினி ஃபேன் பேசிட்டு இருந்தாரு.

லோகேஷ் ஃபார்மேட் ரஜினி ஃபேன்ஸ்க்கு புடிக்குமா?

நாலு பாட்டு, மூணு ஃபைட்டு, தலைவரே இறங்கி காமெடி பண்ணனும், மாஸ் பன்ச் டயலாக் பேசணும் இதெல்லாம்தான் ஒவ்வொரு படத்துலயும் ரஜினி ஃபேன்ஸ் எதிர்பார்க்குற அம்சங்கள். லோகி படத்துல ஃபைட்டு ஓகே. பாட்டு, காமெடி, பன்ச் டயலாக்லாம் எதிர்பார்க்க முடியாதே. லோகேஷ் ஃபார்முலா ஆக்சன் சீக்வன்ஸ்லாம் பாட்ஷாவுக்கு அப்பறம் ரஜினி ஃபேன் ஆனவங்களுக்கு பிடிக்கலாம். முள்ளும் மலரும் காலத்து ஃபேமிலி ஆடியன்ஸ்க்கு செட் ஆவாதேங்குறதுதான் ஒரு டவுட்டு.

இதுவும் LCU-ல வருமா?

அட லியோவே LCU-வா இல்லையானு சொல்ல மாட்டேங்குறாங்க. ஆனா ஒண்ணு இதுவும் எல்.சி.யூனா தமிழ் சினிமா வரலாற்றுல செம்ம மேட்டரா இருக்கும். கமலும் ரஜினியும் ஒரே யுனிவர்ஸ்ல வருவாங்க. லியோவும் எல்.சி.யூனா விஜய்யும் அந்த யுனிவர்ஸ்ல வருவாரு. ஃப்யூச்சர்ல எல்லாரும் ஒரே படத்துல வந்தா தியேட்டர் என்ன மாதிரி தெறிக்கும்னு யோசிச்சுப் பாருங்க. நினைக்குறப்போவே கூஸ்பம்ஸ் வருது.

Also Read – லோகேஷ்.. விஜய்.. அனிருத்… லியோ-வுக்கு என்னென்ன சவால்கள் இருக்கு?!

இதனால லியோவுக்கு என்ன சவால்?

முன்னாடி ரஜினி vs கமல்னு இருந்த போட்டி இப்போ ரஜினி vs விஜய்னு மாறியிருக்கிற மாதிரிதான் சோசியல் மீடியாக்கள் பார்க்குறப்போ ஃபீல் ஆகுது. யார் ஒரிஜினல் சூப்பர் ஸ்டார்னு மாத்தி மாத்தி அடிச்சுக்குறாங்க. ஏற்கனவே லியோல வச்சிருந்த ஸ்னைப்பர் சீனை லோகேஷ்கிட்ட இருந்து திருடி ரஜினி ஜெயிலர் படத்துல வைக்க சொன்னாருனு ஒரு க்ரூப்பு கிளப்பிவிட பதிலுக்கு லோகேஷ் லியோ படத்துல விலகிட்டாரு பாத்தீங்களா லோகி அவரோட டிவிட்டர் பயோல லியோவைத் தூக்கிட்டாரு. அப்படினு மாத்தி மாத்தி வதந்தியை பரப்ப ஆரம்பிச்சாட்டாங்க. இந்த பிரசர் எல்லாமே லியோ படத்து மேலதான் விழுகும். ரெண்டு தரப்புமே கண்கொத்தி பாம்பா இதை வாட்ச் பண்ணுவாங்க. ஏன்னா லியோ செட் பண்ற பெஞ்ச் மார்க்தான் தலைவர் 171-க்கு விழும். நம்மாளு வேற சும்மா இல்லாம போன படம் சரியா போகல, காஸ்டிங் சரியில்லைனு ஆடியோ லாஞ்ச்ல கழுவி ஊத்துவாப்ல. ஆக தலைவர் 171 எதிர்பார்ப்பு லியோவுக்குதான் சேலஞ்ச்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top