2k kids viral video

`அத்தை அவங்கள அழ வேண்டாம்னு சொல்லுங்க!’ – 2கே கிட்ஸ் வைரல் வீடியோ அலப்பறைகள்!

இணைய உலகத்துல அப்பப்போ சில வீடியோக்கள் வைரலாவது உண்டு. அதுவும் குறிப்பா `என்னடா இது 90ஸ் கிட்ஸ்க்கு வந்த சோதனை’னு பல 2’கே கிட்ஸ்களின் வீடியோக்கள் வெளியாகி 90ஸ் கிட்ஸின் ஆதங்கத்தை 2கே கிட்ஸ் வாங்கிப்பாங்க. அந்த வகையில, சமீபத்துல் 2’கே கிட்ஸ்களின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்கள்ல வெளியாகி பலரது கவனத்தையும் பெற்றிருக்கு. அப்படி என்ன வீடியோ அது.. வாங்க பாக்கலாம்!

சமூக வலைதளங்கள்ல வைரலாகிட்டு இருக்கும் அந்த வீடியோல 2’கே கிட்ஸ் இரண்டு பேரும் அதுல ஒருத்தரோட அம்மாவும் பேசுறாங்க. என்ன பேசுறாங்கனா.. “அத்தை சொல்றதுதான் கரெக்ட்டு.. ஃபீல்லாம் பண்ணாத பேபி”னு அந்த பொண்ணு சொல்ல...மருமகளே! அதெல்லாம் ஃபீல் பண்ணாதீங்க இரண்டு பேரும். உங்களால வந்துர முடியும். ஏன் ரெண்டு பேரும் மாறி மாறி ஃபீல் பண்றீங்க. உங்க ரெண்டு பேர் மேலேயும் எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று அத்தை சமாதானப்படுத்த.. பையன் உட்கார்ந்து ஒரு பக்கம் அழ… அத பாத்து அந்த பொண்ணு, “நான் ஃபீல் பண்ணல அத்தை, அவங்கள அழ வேணாம்னு சொல்லுங்க.. அப்புறம் என்னால பேச முடியல.. அதுக்காக தான் சொல்றேன்”னு திரும்பவும் அந்த பொண்ணு சொல்ல.. இப்படியே போகுது அந்த வீடியோ.

Sanjay_Sobi
Sanjay and Sobi

என்னா.. என்னா பீலிங்”னு மைண்ட் வாய்ஸ் வெளிய கேக்குற அளவுக்கு போகும் அந்த இதோட வீடியோ முடியல இன்னும் இருக்கு... இவங்க ரெண்டு பேரு பேசுறத பாத்து அத்தை,“டேய், அழாதடா.. அவ்வளவு தைரியமா அந்த புள்ளயே சொல்லுது. நம்மலாள முடியும் இவனே.. அழாத சொல்றேன் திருப்பி திருப்பி கண்ண கசக்கிட்டு இருக்க”னு அந்த வீடியோ போகுது. பாவம் `அவுங்களுக்கு என்ன கஷ்டமோ’னு நினைக்க தோணுனாலும், “இந்த வயசுல ஓவர் ஃபீலிங் உடம்புக்கு ஒத்துக்காதுனுதான் சொல்லத் தோணுது”னு 90’ஸ் கிட்ஸ் வீடியோ பாத்து கூவிட்டு இருக்காங்க.

Also Read : துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்! – காரணம் என்ன?

சரி யாரு இவங்க… ஏன்தான் அழுதுட்டு இருக்காங்க?

இன்ஸ்டாகிராம்ல அதிகமான ஃபாலோயர்ஸ் இருக்குற ஐடி, குட்டி வடிவேலு. இந்த பேஜோட அட்மின் தான் 2’கே கிட்டான சஞ்சய். அதாவது குட்டி வடிவேலு என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சஞ்சய். இதுல நிறைய வீடியோவ டப்ஸ்மாஷ் பண்ணி போட்டுட்டு வந்துருக்காரு, 2கே கிட்ஸோட குட்டி வடிவேலு. இந்த இன்ஸ்டாகிராம் ஐடிய யாரோ சில நாள்களுக்கு முன்னாடி ஹேக் பண்ணிருக்காங்க. அதை நினைச்சு கவலைப்பட்டு தன்னோட லவ்வரான.. (ஆமாங்க நெசமாத்தான்!) சோபி கூட பேசுற வீடியோதான் இப்போ வைரல் ஆகிட்டு இருக்கு. இவங்களுக்கு நிறைய ஃபேன் பேஜஸூம் இருக்கு.

சஞ்சய் - சோபி
சஞ்சய் – சோபி

தி.மு.க பதவியேற்றதும் முதல் கையெழுத்தை குட்டி வடிவேலுவோட இன்ஸ்டா ஐடியை மீட்பது தொடர்பா இருக்கனும்ன்றது வரைக்கும் மீம்ஸ் போட்டு 90’ஸ் கிட்ஸ் ஓட்டிட்டு இருக்காங்க. குட்டி வடிவேலு, சஞ்சய்- சோபினு புதிய அக்கவுன்ட் ஒண்ணையும் சஞ்சய் இப்போ ஓப்பன் பண்னி இருக்காரு. அதுல இப்போ 14,000-க்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ் வந்துருக்காங்க. என்னதான், பயங்கரமா 90’ஸ் கிட்ஸ் இவங்கள கலாய்ச்சாலும்… தங்களுக்குனு தனியா ஒரு ஃபேன் பேஸ வச்சு மாஸ் காட்டதான் செய்றாங்க இந்த சஞ்சய்-சோபி 2’கே கிட்ஸ்!

1 thought on “`அத்தை அவங்கள அழ வேண்டாம்னு சொல்லுங்க!’ – 2கே கிட்ஸ் வைரல் வீடியோ அலப்பறைகள்!”

  1. Excellent postings Many thanks!
    web page
    Thanks, Quite a lot of postings.
    casino en ligne
    Whoa tons of amazing knowledge!
    casino en ligne
    Cheers! Plenty of knowledge.
    casino en ligne
    Thanks a lot! Very good stuff.
    casino en ligne
    Reliable data, With thanks!
    casino en ligne
    Wow quite a lot of valuable information.
    casino en ligne
    Thank you, Numerous material!
    casino en ligne
    Regards! Numerous knowledge!
    casino en ligne
    Information well considered..
    casino en ligne

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top