கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஊதியம் `கட்’ – சர்ச்சையான மதுரை மின்வாரிய சுற்றறிக்கை

கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களின் டிசம்பர் மாத ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று மின்வாரியத்தின் மதுரை மண்டலத் தலைமைப் பொறியாளர் சுற்றறிக்கை விடுத்திருக்கிறார்.

கொரோனா தடுப்பூசி

தேசிய அளவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 125 கோடி டோஸ்களுக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டிருக்கும் நிலையில், இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாதவர்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதைத் தவிர்த்து வரும் நபர்களைக் கண்டறியும் பணிகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. அதேநேரம், தடுப்பூசி போடாதவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படாது என்று அம்மாநில அரசு முடிவெடுத்திருக்கிறது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

அதேபோல், தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்லத் தடை விதித்து கிருஷ்ணகிரி ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக்கில் மது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசி போடுவது குறித்து ஊடகங்கள் வழியாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மின்வாரிய பொறியாளர் சுற்றறிக்கை

மின்வாரியப் பொறியாளர் சுற்றறிக்கை
மின்வாரியப் பொறியாளர் சுற்றறிக்கை

இந்தநிலையில், மின்வாரியத்தின் மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் மின்வாரிய ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். அந்த சுற்றறிக்கையில், “மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் COVID 19 தடுப்பு மருந்து முதல் மற்றும் இரண்டாம் தவணையினை வரும் 07/12/2021- க்குள் செலுத்திக்கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் டிசம்பர் மாத ஊதியம் நிறுத்தம் செய்யப்படும் என கடந்த 26/11/2021 அன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் வாரிய தலைவரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, தங்கள் வட்டத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தடுப்பு மருந்து செலுத்திக்கொண்டதற்கான விபர அறிக்கையைத் தவறாமல் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழ்நாடு மின்சார வாரியம்

மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை உரிய மருத்துவ சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க அறிவுறுத்தும்படி மதுரை மண்டலத்தில் உள்ள அனைத்து மேற்பார்வை பொறியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுகுறித்த விரிவான அறிக்கையினை 07/12/2021 அன்று சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

தலைமைப் பொறியாளர் விளக்கம்

இந்தநிலையில், மின்வாரிய ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயே சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. தடுப்பூசி போடாத ஊழியர்களின் ஊதியம் பிடிக்கப்படாது என்று மின்வாரியத்தின் மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் தற்போது விளக்கமளித்திருக்கிறார்.

Also Read – Omicron: ஒமிக்ரான் திரிபு – கவலையளிக்கும் விஷயம் என உலக சுகாதார அமைப்பு சொல்வது ஏன்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top