காதல் ரொம்பவே அழகானது. காதலை தமிழ் சினிமா இயக்குநர்கள் ரொம்பவே சிறப்பா காட்சிப்படுத்துவாங்க. குறிப்பாக பாடல்களின் வழியாக காதலை இயக்குநர்கள் சொல்லுற அழகே தனிதான். அவ்வகையில், 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் அமைந்துள்ள டாப் 10 காதல் பாடல்களின் பட்டியல் இங்கே…
1) தட்டான் தட்டான்
தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம், கர்ணன். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ’தட்டான் தட்டான்’ பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். யுகபாரதி வரிகளை எழுதியுள்ளார். தனுஷ் மற்றும் மீனாக்ஷி இளையராஜா பாடலைப் பாடியுள்ளனர்.
2) யாரையும் இவ்ளோ அழகா பார்க்கல
கார்த்தி நடிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம், சுல்தான். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ’யாரையும் இவ்ளோ அழகா பார்க்கல’ பாடலுக்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர். விவேகா பாடல் வரிகளை எழுதியுள்ளார். சிம்பு மற்றும் மெர்வின் இந்தப் பாடலைப் பாடியுள்ளனர்.
3) செல்லம்மா செல்லம்மா
சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம், டாக்டர். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ’செல்லம்மா செல்லம்மா’ பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி இந்தப் பாடலை பாடியுள்ளனர்.
4) நேத்து
தனுஷ் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம், ஜகமே தந்திரம். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ’நேத்து’ பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தனுஷே இந்தப் பாடலின் வரிகளை எழுதி பாடியுள்ளார்.
5) அவன் பார்த்து சிரிக்கல
விஜய் ஆண்டனி நடிப்பில், ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம், கோடியில் ஒருவன். நிவாஸ் கே பிரசன்னா இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை மோகன் ராஜன் எழுதியுள்ளார். மால்வி சுந்தரேசன் இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.
6) மெஹருசைலா
சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம், மாநாடு. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ’மெஹருசைலா’ பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். யுவன், ரிஸ்வான், ராஜ பவதாரிணி ஆகியோர் இந்தப் பாடலைப் பாடியுள்ளனர்.
7) செண்டுமல்லியா
சூர்யா நடிப்பில், தா.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம், ஜெய்பீம். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ’செண்டுமல்லியா’ பாடலுக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். யுகபாரதி இந்தப் பாடலை எழுதியுள்ளார். அனந்து மற்றும் கல்யாணி நாயர் இந்தப் பாடலைப் பாடியுள்ளனர்.
8) போதை கணமே
ஹரிஷ் கல்யாண் நடிப்பில், கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம், ஓ மணப்பெண்ணே. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ’போதை கணமே’ பாடலுக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். அனிருத் மற்றும் ஷாஷா திருப்பதி இந்தப் பாடலை பாடியுள்ளனர்.
9) ஏல ஏலோ
யோகிபாபு நடிப்பில், மடோன் அஷ்வின் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம், மண்டேலா. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ’ஏல ஏலோ’ பாடலுக்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். அறிவு பாடலை எழுதி பாடியுள்ளார்.
10) சார சார காற்றே
ரஜினிகாந்த் நடிப்பில், சிவா இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம், அண்ணாத்த. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘சார சார காற்றே’ பாடலுக்கு இமான் இசையமைத்துள்ளார். யுகபாரதி பாடல் வரிகளை எழுதியுள்ளார். சித் ஸ்ரீராம் மற்றும் ஷ்ரேயா கோஷல் இந்தப் பாடலை பாடியுள்ளனர்.