டவுன் பஸ் சாங்ஸ்

டவுன் பஸ் பாட்டுகளோட மியூசிக் டைரக்டர்லாம் யாரு தெரியுமா?

டவுன் பஸ் டிரைவர்களுக்குனு ஒரு ப்ளேலிஸ்ட் இருக்கும். அவங்க போடுற சில பாட்டெல்லாம் நாம பஸ்ல மட்டும்தான் கேட்க முடியும். டிவிலயோ, ரேடியோலயோகூட வராது. இந்த பாட்டைக் கேட்டாலே பஸ்ல போற வைப்ஸ் வந்துடும். ஆனா பாருங்க அந்த பாட்டெல்லாம் என்ன படம், யார் ஹீரோ, யார் மியூசிக் டைரக்டர் எதுவும் நமக்குத் தெரியாது. இன்னைக்கு இதை தெரிஞ்சுக்கிட்டே ஆகணும்டானு உக்காந்து ஒவ்வொரு பாட்டா செக் பண்ணா.. செம்ம சுவாரஸ்யமான மேட்டர்லாம் சிக்குச்சுங்க. அப்படி நம்ம நிறைய வாட்டி கேட்ட சில டவுன் பஸ் பாடல்கள் பத்தின டீட்டெய்ல்ஸ்தான் இந்த வீடியோ.

* தூதுவளை இலை அரைச்சு

தமிழ்நாட்டுல இந்தப் பாட்டை கேட்காதவங்க யாருமே இருக்க முடியாது. ஆனா இது என்ன படம்னு கேட்டா 98% ஆட்களுக்குத் தெரியாது.  தாய் மனசு அப்படிங்குற படத்துல வந்த பாட்டு இது. பருத்திவீரன் சித்தப்பு சரவணன்தான் இந்தப் படத்தோட ஹீரோ.  மனோவும், எஸ்.ஜானகியும் சேர்ந்து பாடின பாட்டுல பப்ளூ ஆடிருப்பாரு. இந்த பாட்டுக்கு இசையமைச்சது தேவா. லிரிக்ஸ் எழுதுனது தனுஷோட அப்பா கஸ்தூரி ராஜா.

* மல்லிகை மொட்டு மனசு தொட்டு

1994 ல வந்த சக்திவேல் படத்துல வந்த பாட்டு இது.  செல்வாவும் கனகாவும் இந்த பாட்டுல ஆடிருப்பாங்க. இந்த செல்வா சமீபத்துல வலிமைல கூட நடிச்சிருந்தாரு.   இந்தப் பாட்டுல Female வெர்சன் பாடினது ஸ்வர்ணலதா, Male வெர்சன் பாடினது அருண்மொழி. பேரைச் சொன்னா நிறைய பேருக்கு தெரியுமானு தெரியல. ஒரு சம்பவம் சொன்னா கண்டிப்ப தெரியும். எஸ்.பி.பி முன்னாடி இளைய நிலா பொழிகிறதே புல்லாங்குழல் வாசிச்சாரே அவரே தான். இது இளையராஜா பாட்டு.

* என்னவென்று சொல்வதம்மா

எஸ்.பி.பியோட எவர்கிரீன் க்ளாசிக் லிஸ்ட்ல எப்பவும் இருக்குற இந்த பாட்டு பிரபு நடிச்ச ராஜகுமாரன் படத்துல வந்தது. இதுல ஹைலைட் என்னென்னா இது பிரபு நடிச்ச 100வது படம். எஜமான், சின்னக்கவுண்டர் படங்களை எடுத்த ஆர்.வி உதயகுமார்தான் இந்த படத்தோட டைரக்டர். இந்த பாட்டை எழுதுனதும் அவர்தான். பொதுவா இவர் எடுக்குற படத்துல வர்ற எல்லாப் பாட்டையும் இவரேதான் எழுதுவாரு.  

* அடி பூங்குயிலே

ராஜ்கிரண் நடித்து இயக்கிய அரண்மனைக்கிளி படத்துல வந்த பாட்டு இது. மனோ, மின்மினி பாடின இந்த பாட்டை எழுதுனது வாலி. இந்த மின்மினி யார்னா ரோஜா படத்துல வந்த ‘சின்ன சின்ன ஆசை’ பாடினவங்க.

* எருக்கஞ்செடி ஓரம்

சரத்ராஜ், சிவரஞ்சனி நடிச்ச ‘சந்தைக்கு வந்த கிளி’ அப்படிங்குற படத்துல வந்த பாட்டு.  இந்த பாட்டு பாடாத டவுன் பஸ்ஸே இருக்க முடியாது. ஆனா இப்படி ஒரு படம் வந்ததா கூகுளுக்கே தெரியல. இந்த பாட்டுக்கு இசையமைச்சது தேவாவா சிற்பியாங்குற குழப்பமும் இருக்கு. யாருக்காவது தெரிஞ்சா கமெண்ட்ல சொல்லுங்க.

* கொண்ட சேவல் கூவும் நேரம்

பாக்யராஜ் நடிச்ச எங்க சின்ன ராசா படத்துல வர்ற பாட்டு இது. இந்த லிரிக்ஸை கேட்டாலே தெரிஞ்சிருக்கும் இது பாக்யராஜ் படம்தான்னு. வாலி எழுதி இரட்டை இசையமைப்பாளர்களான சங்கர் கணேஷ் இசையமைச்ச பாட்டு இது.  Out of Topic-ல ஒரு குட்டி தகவல். சமீபத்துல பாக்யராஜை செலிபிரேட் பண்ற மாதிரி தமிழ்நாடு நவ் ஒரு நிகழ்ச்சி நடத்துனது. அதுல ‘எங்க சின்ன ராசா’ங்குற டைட்டிலை உதயநிதிக்கு டெடிகேட் பண்ணாரு பாக்யராஜ். இதை ஏன் இப்போ சொல்றேன்னா.. அடுத்து நாம பார்க்கப்போற படத்துக்கும் உதயநிதிக்கும் ஒரு கனெக்சன் இருக்கு.

* அந்தியில வானம்

இந்த படத்தோட பேரு சின்னவர். இப்போ புரியுதா என்ன கனெக்சன்னு. இதுவும் பிரபு நடிச்ச படம்தான். ஸ்வர்ணலதா, மனோ பாடின பாட்டு இது. இளையராஜா இசை. பாட்டு எழுதுனது கங்கை அமரன். இந்த படத்துலயே மலேசியா வாசுதேவன் பாடின படகோட்டும் பட்டம்மா பாட்டும் ரொம்ப ஃபேமஸ்.

* தாமரை பூவுக்கும்

சுஜாதா மோகன் பாடின இந்தப் பாட்டு பாரதிராஜாவோட ‘பசும்பொன்’ படத்துல வந்தது.   வித்யாசகர் மியூசிக். பாட்டு எழுதினது வைரமுத்து. யுவராணி பெர்ஃபாமன்ஸ் தெறியா இருக்கும். ஒரு சுவாரஸ்யம் என்னன்னா இந்த படத்துல கதை, வசனம் எழுதினது நம்ம சீமான் அண்ணன்.

* கருத்த மச்சான்

இந்த பாட்டு மாஸ்டர் படத்துல வந்தப்பறம் 2கே கிட்ஸ்க்கும் ஃபேவரிட் ஆகிடுச்சு. இந்த பாட்டோட விசுவல்ஸ் லோகேஷ்க்கு ரொம்ப பிடிக்குமாம். இந்த பாட்டுக்கு இசை மட்டுமில்ல எழுதினதும் இளையராஜாதான். இந்த பாட்டு பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து அப்படிங்குற படத்துல வந்தது. நடிகர் நெப்போலியன், நடிகை சுகன்யா ரெண்டு பேருக்குமே இதுதான் முதல் படம்.

* மருத அழகரோ

கேரக்டர் ரோல்ல நடிச்சிட்டு இருந்த லிவிங்ஸ்டன் முதல்முறையா ஹீரோவா நடிச்ச ‘சுந்தரபுருசன்’ படத்துல வர்ற பாட்டு இது. ரம்பா ஹீரோயின். நாட்டாமை, உன்னை நினைத்து, மேட்டுக்குடினு மியூசிகல் ஹிட் கொடுத்த சிற்பி இந்த படத்துக்கு இசையமைச்சிருந்தாரு.  

Also Read – அடேய் சும்மா இருங்கடா… டெலிவரி பாய்ஸ் ரீல்ஸ் அலப்பறைகள்!

1 thought on “டவுன் பஸ் பாட்டுகளோட மியூசிக் டைரக்டர்லாம் யாரு தெரியுமா?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top