ஜெயலலிதா மரணம்: வார்டிலேயே ஆபரேஷன் நடந்ததா – ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை என்ன சொல்கிறது? #BTS

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதே, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடுடன் 2016 செப்டம்பர் 22-ம் தேதி சென்னை கிரீன்வேஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எழுபது நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் இருந்த அவர் டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அப்போது ஜெயலலிதா மறைவு குறித்து விசாரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் பதவி விலகி தர்மயுத்தம் நடத்திய நிலையில், ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்க இருந்த சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலடைக்கப்படவே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். இந்த சூழ்நிலையில், ஜெயலலிதா மறைவு குறித்தும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் விசாரிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு.

கிட்டத்தட்ட நான்காண்டுகளுக்குப் பிறகு ஆணையத்தின் விசாரணை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி சமர்ப்பித்தார். அந்த அறிக்கை தமிழக சட்டமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க சசிகலா தடையாக இருந்தார் என்றும், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவர் சிவக்குமார் உள்ளிட்டோரைக் குற்றம்சாட்டியவர்களாகக் கருதி விசாரணை நடத்தலாம் என்றும் ஜெயலலிதா இறந்த தேதி குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால், இந்த விவரங்கள் அப்படியே பத்திரிகைகளில் வெளிவந்தபடியே அறிக்கையில் இருக்கிறதா?… அறிக்கை என்ன சொல்கிறது.. வெளியில் என்ன பேசிக் கொள்கிறார்கள். விரிவாகச் சொல்கிறது Behind The Sambavam நிகழ்ச்சியின் இந்த எபிசோடு.

1 thought on “ஜெயலலிதா மரணம்: வார்டிலேயே ஆபரேஷன் நடந்ததா – ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை என்ன சொல்கிறது? #BTS”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top