உசேன் போல்ட்

உசேன் போல்ட்டின் குழந்தைகளின் பெயர் வைரல் – ஸ்பெஷல் என்ன?

ஜமைக்காவைச் சேர்ந்த உசேன் போல்ட்டைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஓட்டப்பந்தயங்களில் மின்னல் வேகத்தில் சென்று பதக்கங்களைப் பெறக்கூடியவர். ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் இதுவரை எட்டு முறை தங்கம் வென்று சாதனைப் படைத்தவர். ஓய்வு பெற்ற பிறகு குறைந்த கால அளவில் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டினார். ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு அணிக்காக போட்டிகளிலும் பங்கேற்றார். இதனையடுத்து கிரிக்கெட்டிலும் ஆர்வம் செலுத்தினார். தற்போது இசைத்துறையிலும் தனது முத்திரைகளைப் பதித்து வருகிறார். தற்போது, இவரது இரட்டைக் குழந்தைகளின் பெயர் சமூக வலைதளங்களில் பலரையும் கவர்ந்துள்ளது.

உசேன் போல்ட்
உசேன் போல்ட்

சமீபத்தில் உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. தந்தையர் தினத்தன்று உசேன் போல்ட் தனது சமூக வலைதள பக்கங்களில் தனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஆனால், குழந்தை பிறந்த தேதி எதையும் அவர் குறிப்பிடவில்லை. தனது மனைவி காசி பென்னட்டுடன் அவர்களது மூத்த மகளான ஒலிம்பியா லைட்னிங் போல்ட் மற்றும் தற்போது பிறந்த இரட்டைக் குழந்தைகள் புகைப்படத்தில் இருக்கின்றனர். இரட்டைக் குழந்தைகளுக்கு அவர் செயின்ட் லியோ போல்ட் மற்றும் தண்டர் போல்ட் என பெயர் வைத்துள்ளார். இந்தப் பெயர்கள் சமூக வலைதளவாசிகளை அதிகம் கவர்ந்துள்ளது. 

ஒலிம்பியா லைட்னிங் போல்ட்
ஒலிம்பியா லைட்னிங் போல்ட்

உசேன் போல்ட்டின் மனைவி காசி பென்னட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதே புகைப்படத்தைப் பதிவிட்டு தந்தையர் தின வாழ்த்துக்களை உசேன் போல்ட்டுக்கு தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய குழந்தைகளுக்கு மிகச்சிறந்த அப்பா ராக் ஸ்டார், அளவில்லாமல் உசேன் போல்ட்டை நேசிப்பதாகவும் தெரிவித்துள்ளார். உசேன் போல்ட் குடும்பத்தின் கியூட்டான புகைப்படத்துக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். உசேன் போல்டுக்கு ஏற்கெனவே ஒலிம்பியா லைட்னிங் போல்ட் என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், இடி, மின்னல் என தனது குழந்தைகளின் பெயரை வைத்துள்ள உசேன் போல்ட்டின் பெயரை குறிப்பிட்டு பலரும் தங்களது அன்பைப் பகிர்ந்து வருகின்றனர்.

Also Read : ஒலிம்பிக் களத்தின் முதல் திருநங்கை – நியூசிலாந்தின் லாரெல் ஹப்பார்ட் சாதனை!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top