செலவு ரொம்ப கம்மிதான்… தமிழ்நாட்டின் 7 பட்ஜெட் Honeymoon ஸ்பாட்ஸ்!

திருமணத்துக்குப் பிறகான Honeymoon-க்கு ஏற்ற தமிழ்நாட்டின் 7 பட்ஜெட் ஸ்பாட்கள் பத்திதான் நாம பார்க்கப் போறோம்.

Honeymoon

திருமணத்துக்குப் பிறகு திருமண வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பாக, தம்பதிகள் தங்களுக்கென பெர்சனலாக ஒருவருக்கொருவர் டைம் ஒதுக்க சிறந்த வாய்ப்பை தேனிலவு வழங்குகிறது. பெரும்பாலானோர் திருமணத்தைத் திட்டமிடும்போதே, அதன்பிறகான தேனிலவு பற்றியின் பக்காவாக பிளான் செய்துவிடுவதுண்டு. வேலை பரபரப்பு உள்ளிட்ட பிஸியான வாழ்க்கை முறைக்கு இடையே, இப்படியாக ஒருவருக்கொருவர் துணையோடு ஹில் ஸ்டேஷன் போன்ற இடங்களில் வாழ்க்கைத் துணையோடு நேரம் செலவழிப்பது புத்துணர்ச்சியை அளிக்கும்.

அப்படி தமிழகத்தின் 7 பட்ஜெட் Honeymoon ஸ்பாட்டுகள் பற்றிதான் நாம இப்போ பார்க்கப் போறோம்.

ஊட்டி

ஊட்டி
ஊட்டி

தமிழகத்தின் ரொமான்டிக்கான இடமாகக் கருதப்படுவது ஊட்டி. வெக்கேஷன் என்றாலே ஊட்டிதான் என சின்ன வயசுல இருந்தே ஒரு இமேஜ் நமக்கெல்லாம் மனப்பாடம் ஆகிடுச்சுதானே… மலைகள் சூழ் மலைகளின் ராணி என்றழைக்கப்படும் ஊட்டியில் உங்கள் மனதுக்குப் பிடித்த இணையரோடு சில நாட்களைக் கழிப்பதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். மேட்டுப்பாளையத்தில் தொடங்கி ஊட்டி வரையிலான ரெஃப்ரெஷ்ஷான மலைரயில் பயணம் தொடங்கி ஊட்டியின் ஒவ்வொரு ஸ்பாட்டுமே உங்களுக்கு காலத்துக்குமான நினைவுகளை அளிக்க வல்லவை. அதேபோல், ஊட்டி தேனிலவு பயணம் உங்கள் பர்ஸுக்கும் பெரிய பிரச்னையை ஏற்படுத்தாது என்பது கூடுதல் ஸ்பெஷல்.

கொடைக்கானல்

கொடைக்கானல்
கொடைக்கானல்

ஊட்டி மலைகளின் ராணி என்றால், கொடைக்கானல் மலைகளில் இளவரசி. பிரையண்ட் பார்க், கொடைக்கானல் ஏரி போட் ரைட், வெள்ளி நீர்வீழ்ச்சி குளியல் என உங்களுக்கு கொடைக்கானல் கொடுக்கும் புதுவித அனுபவங்கள் ஏராளம். மலைகள் சூழ் நகரில் உங்கள் வாழ்க்கைத் துணையோடு ஒரு வாக்கிங் போய்வரும் அனுபவத்தையும் மிஸ் பண்ணிடாதீங்க. சரியான கிளைமேட்டில் கொடைக்கானல் போய்ட்டு வர்றது தனிப்பட்ட அனுபவம் பாஸ்..!

ஏற்காடு

ஏற்காடு
ஏற்காடு

ஊட்டி, கொடைக்கானல் வரிசையில் இதுவும் தமிழகத்தின் மிகப்பிரபலான மலைவாசல் ஸ்தலம். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு கிழக்குத் தொடர்ச்சி மலையின் சேர்வராயன் மலையில் அமைந்திருக்கிறது. ஆண்டு முழுவதும் இருக்கும் ஜில்லென்ற கிளைமேட் இதன் மிகப்பெரிய பிளஸ். அடர்ந்த காடுகளுக்கு இடையே அமைந்திருக்கும் Emerald lake படகுப் பயணம், கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, லேடீஸ் சீட் ஸ்பாட் விசிட், பகோடா வியூ பாண்ட் என இரண்டிலிருந்து மூன்று நாட்களை உங்கள் துணையோடு கழிக்க பெஸ்ட் ஸ்பாட் ஏற்காடு.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி
கன்னியாகுமரி

தமிழகத்தின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை என கன்னியாகுமரியிலேயே ஒருநாள் பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கின்றன. சூரியோதத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் கடலுக்கு அருகிலேயே நின்று கண்டுகளிக்க முடியும். அத்தோடு, பத்மநாபபுரம் அரண்மனை, குளச்சல், முட்டம் கடற்கரைகள், மாத்தூர் தொட்டிப்பாலம், பேச்சிப்பாறை அணை, மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் போன்ற இடங்களுக்கும் விசிட் அடிக்கலாம். இங்கிருந்து திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலும் சில மணி நேரப் பயணம்தான்.

குற்றாலம்

குற்றாலம்
குற்றாலம்

கேரள எல்லையோரம் அமைந்திருக்கும் தென்காசி மாவட்டத்தில் இருக்கும் குற்றாலம், அருவிகளுக்காகவே புகழ்பெற்றது. அதுவும் சீசன் நேரத்தில் குற்றலாம் விசிட் அடித்தால் மெயின் அருவி, ஐந்தருவி தொடங்கி புலியருவி வரையிலான அருவிகளில் நீராடும் அனுபவமே அலாதியானது. தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம், இளஞ்சி குமரன் ஆலயம், பன்பொழில் திருமலை கோயில் போன்ற புகழ்பெற்ற கோயில்களுக்கும் மறக்காம விசிட் அடிங்க..!

மேகமலை

மேகமலை
மேகமலை

தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து 30 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் பகுதிதான் மேகமலை. நான்கைந்து மலைச்சிகரங்களுக்கு மத்தியில் பள்ளத்தாக்கு போன்று அமைந்திருக்கும் இதன் அமைவிடமே உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே விரியும் மேகமலை செல்லும் சாலையே சுகானுபவம்தான். ஹைவேவிஸ் மேலணை, தூவானம் அணை, வெள்ளியாறு, இரவங்கலாறு அணைகளுக்கு ஒரு விசிட் போடலாம். அத்தோடு, ஹைவேவிஸ் அணையில் பிடிக்கப்படும் மீன்களை ஃபிரஷ்ஷாக அங்கேயே சமைத்துக் கொடுக்கவும் செய்வார்கள். அந்த அனுபவத்தை மிஸ் பண்ணிடாதீங்க. இறைச்சல் பாறை அருவியையும் உங்களோட விசிட்டிங் லிஸ்ட்ல வைச்சுக்கோங்க.

மகாபலிபுரம்

மகாபலிபுரம்
மகாபலிபுரம்

பல்லவ நகரான மகாபலிபுரம் குடைவரை சிற்பங்களுக்குப் பெயர்போனது. சென்னை, புதுச்சேரிக்கு வரும் வெளிநாட்டினர் தவறாமல் ஆஜராகிவிடும் புராதான நகரம் மகாபலிபுரம். நகரின் ஒவ்வொரு மூலையிலும் பல்லவ மன்னர்கள் விட்டுச் சென்ற சுவடுகளைக் காணலாம். குறிப்பாகக் கடற்கரை கோயில், பஞ்ச பாண்டவ ரதங்கள், அர்ஜூனன் தபசு, புலிக்குகை, அருகிலிருக்கும் சோழ மண்டல் கலைக் கிராமம் என உங்களுக்கு புது எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும் இடங்கள் இங்கு ஏராளம். கோயில் நகரான காஞ்சிபுரம் அருகில் இருப்பதால், அங்கும் ஒரு குட்டி விசிட் அடிக்க மறந்துடாதீங்க..!

Also Read – #RevengeTravel – கொரோனாவுக்குப் பிறகு வேகமெடுக்கும் சுற்றுலா!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top