கவுண்டர் டு கோளாறு… செலிபிரிட்டி மா.கா.பா-வின் பயணம்!

ஆர்.ஜேவா ஆரம்பிச்ச வாழ்க்கை வி.ஜேவா மாறுனப்போ மா.கா.பாவுக்கு செமயான ரீச்சை கொடுத்துச்சு. வி.ஜேல இருந்து சினிமாவுக்கு போனப்போ ‘ரைட்ரா இது நமக்கு சரி பட்டு வராது’னு எந்த ஈகோவும் பார்க்காமல் வருத்தமும் இல்லாமல் திரும்பவும் வி.ஜேவா வந்தது இன்னைக்கு கலக்கிட்டு இருக்காரு. அந்த மனுஷன் வாழ்க்கையைப் பார்த்தா, அச்சச்சோ பெரிய கோளாறா இருப்பாரு போலயேனு தோணும். அந்த வாழ்க்கை பயணத்தை பார்த்துடுவோமா?!

மா.கா.பா ஆனந்த்
மா.கா.பா ஆனந்த்

கனடாவுக்கு நீங்க போறீங்கன்னு வச்சுக்கோங்க. நீங்க மிஸ் பண்ணாம பாத்துட்டு வர இடம் என்னவா இருக்கும்? நயாகரா நீர்விழ்ச்சியை மிஸ் பண்ணாம பார்த்துட்டு வருவீங்கல்ல? ஆனா, மகாபா ஆனந்த் மூன்று முறை கனடாவுக்கு போயிருக்காராம். அதுலயும் ஒரு முறை தான் நயாகாரா நீர்வீழ்ச்சியைப் பார்த்திருக்காராம். முதல் முறை போனப்போ, நிகழ்ச்சி முடிஞ்சதும் மூனே நாள்ல நான் ஊருக்குப் போகனும்னு சொல்லியிருக்காரு, நயாகரா பாக்காம போனா எப்படின்னு கேட்டிருக்காங்க. நள்ளிரவு 12 மணிக்குப் போய் இருட்டுல நயாகரா சத்தம் மட்டும் கேட்டுட்டு வந்திருக்காரு. ரெண்டாவது முறை போனப்போதான் நயாகரா பார்த்திருக்காரு. மூன்றாவது முறை நயாகராவுக்குப் பக்கத்துலயே ரூம் எடுத்து தங்கியும் பெருசா ஆர்வமே இல்லாம இருந்திருக்காரு. அவர் தங்கின அறையோட பாத்ரூம் ஜன்னல் வழியா தெரிஞ்ச நயாகராவையே பார்த்துட்டு வந்திருக்காரு. யார்றா இவன் உலகமே அண்ணாந்து ஆச்சரியமா பாக்குற நயாகராவையே இப்படி கோக்குமாக்குத்தனமா பேசி இருக்கானானேன்னு யோசிக்குறீங்களா. மகாபா ஆனந்த் வாழ்க்கையில எல்லாத்தையும் இப்படி அவருக்குப் புடிச்ச மாதிரியே வாழ்ந்துகிட்டிருக்காரு. பாக்குறவங்களுக்கு கிறுக்குத்தனமா தோன்றினாலும் பரவாயில்லைன்றது தான் அவரோட பதிலா இருக்கு.

மா.கா.பா ஆனந்த்
மா.கா.பா ஆனந்த்

மகாபாவுக்கு ஒரு விநோதமான பழக்கம் இருக்காம். அதைச் சொன்னா யாரும் நம்பவும் மாட்டாங்க, எல்லாரும் ஒரு மாதிரி வேற பாப்பாங்க, ஆனாலும் நான் அப்படித்தான்னு ஓப்பனாவே சொல்லி இருக்காரு. அவர் குளிக்குறது தொடர்பாதான் அந்த சம்பவம். என்னவா இருக்கும்னு யோசிச்சு கமெண்ட்ல சொல்லுங்க. கடைசியா பதிலை சொல்றேன்.

மகாபாவுக்கு விளம்பரத் துறைகளில் Copy Editor ஆகனும்னுதான் ஆசையாம். அப்படி சில வருஷங்கள் அந்தத் துறையில் வேலை பாத்திருக்காரு. அந்த சமயத்தில் அறையில் FM Radio கேக்கும் போது அதுல பேசுற Rj-க்களுக்கு கவுண்டர் கொடுத்துகிட்டிருப்பாராம். நண்பர்கள்லாம், நீ ஏன் இதையே வேலையா பாக்கக்கூடாதுன்னு சொல்ல, அங்கதான் அவர் வாழ்க்கையில ஒரு டர்னிங் பாய்ண்ட் வந்திருக்கு. அடுத்தது பெட்டி படுக்கையோட அவர் காலடி எடுத்து வச்ச இடம், கோயம்புத்தூர் சூரியன் FM. முதல் நாள் ஷோ பண்ணும் போது சேனல் பேர் உட்பட பேச வேண்டிய எல்லாத்தையும் பேப்பர்ல எழுதி வச்சி பயத்தோட போய் உட்கார்ந்து மைக் முன்னாடி பேசி இருக்காரு. அப்போ, மைக்கை ஆன் பண்ண பிறகு எட்டு நொடிகளுக்கு மேல எதுவுமே பேசாம பதற்றத்துலயே திருதிருனு முழிச்சிருக்காரு. அப்போ என்ன தப்பு பண்றோம்னு உட்கார்ந்து யோசிக்க ஆரம்பிச்சு, பயங்கரமா பிரிப்பேர் பண்ண ஆரம்பிச்சிருக்கார். அவரோட குறைகளை சரி செய்திருக்கிறார். அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா ஒரு முறை, “ஒரு காலத்துல எல்லா ஆர்.ஜேக்களும் ஸ்க்ரிப்ட் எழுதி பிரிப்பேர் பண்ணித்தான் பேசுவாங்க. ஆனா, அந்த சமயத்துல ரெண்டே ரெண்டு ஆர்.ஜேங்க மட்டும் எதுவுமே ஸ்க்ரிப்ட் இல்லாம, எதுவும் பிரிப்பேர் பண்ணாம போய் பல மணி நேரம் ஷோ பண்ணிட்டு வருவாங்க. ஒருத்தன் நான், இன்னொன்னு மகாபா” அப்படின்னு சொல்லி இருப்பாரு. முதல் ஷோல பேச எழுதிட்டுப் போனதையே மறந்த மகாபாதான், ஸ்க்ரிப்டே இல்லாம மூன்று மணி நேரம்லாம் பேசி இருக்காரு. அந்தப் பயிற்சிதான் இன்னைக்கு அவரை அத்தனை ஷோக்களிலுமே டைமிங்க்லயும் அடிச்சு ஆட வச்சு ஒரு நல்ல பெர்ஃபாமராவே மாத்தியிருக்குன்னு சொல்லலாம்.

மா.கா.பா ஆனந்த்
மா.கா.பா ஆனந்த்

சிவகார்த்திகேயன், பிரியங்கா, மைனா நந்தினி, அறந்தாங்கி நிஷா இப்படி விஜய் டிவில மட்டுமே பல பேரோட சேர்ந்தும், தனியாவும் பல ஷோக்களை ஆங்கரிங் பண்ணியிருக்கார். கோபிநாத், தேவதர்ஷினி, ராமர், பாலா, குரேஷினு எக்கச்சக்கமான நபர்கள் இவரோட ஷோல பங்குபெற்றிருக்காங்க. சூப்பர் சிங்கர் ஜூனியர் செட்ல வர்ற குட்டிக்குழந்தையா இருந்தாலும் சரி, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா மாதிரியான பிரபலங்களா இருந்தாலும் சரி, எல்லாரோடவும் அவ்வளவு சகஜமா அவங்களுக்கு ஏற்ற மாதிரி இறங்கி பேசி கவுண்டர் கொடுப்பாரு, கலாய்ச்சுத் தள்ளிருவாரு. அது மக்கள் கிட்டவும் செமயா எங்கேஜ் ஆக காரணம் அவரோட டைமிங்க் சென்ஸும், பாடி லாங்குவேஜும், தமிழை வளைச்சு நெளிச்சு காமிக்கலா பேசுறதும், இயல்பா நடந்துக்குறதும் தான். இந்த திறமையை எங்க வளர்த்துகிட்டீங்கன்னு கேட்டா அவரே விளக்கம் சொல்றாரு.

மா.கா.பா ஆனந்த்
மா.கா.பா ஆனந்த்

“ஆர்.ஜே-வா இருந்த காலத்துல கத்துகிட்ட விஷயங்கள் தான் இதுக்கெல்லாம் அடிப்படைனே சொல்லலாம். சரளமா பேசனும், அதே சமயத்துல 8 செகண்ட்டுக்கு மேல எதுவும் பேசாம யோசிக்கக்கூடாது, உடனுக்குடன் கவுண்ட்டர் போட்டுரனும், ரேடியோல தான் பேசுறோம்ன்றதுனால நம்ம என்ன பன்றோம், எப்படி உட்கார்ந்திருக்கோம், அதெல்லாம் கேக்குற யாருக்கும் தெரியாது. அதனால, ரொம்ப இயல்பா நம்ம போக்குல பேசுவோம். ரேடியோலயே நாடகம்லாம் பண்ணுவோம் அதுலா சிரிப்போம், அழுவோம் விதவிதமா சேட்டைகள்லாம் பண்ணுவோம். அது எல்லாமே பின்னாடி டிவி ஷோக்கள், ஸ்டேஜ்லலாம் பேசும் போது ரொம்பவே கைகொடுத்தது.” யோசிச்சுப் பார்த்தா அப்படி முகம் தெரியாம ரேடியோல அவர் பண்ண பல சேட்டைகள் தான், இன்னைக்கு டிவி ஷோக்களில் பிரதிபலிக்குறது நல்லாவே தெரியும்.

Also Read: காமெடியன் டூ வி.ஏ.ஓ – தடைகளை உடைத்த ராமரின் சக்ஸஸ் ஸ்டோரி!

ஆர்.ஜே, வி.ஜே அந்த சம்பவங்கள் எல்லாம் தாண்டி, மாகாபாவோட ரியல் லைஃப்ல அவர் பல சேட்டைகள் செய்திருக்கார், செய்துகிட்டிருக்கார், செய்வார். சுருக்கமா சில சம்பவங்கள் சொல்றேன். அவர் ஒரு கிரிக்கெட் டீம் வச்சிருக்காரு, அந்த டீமோட பேர் சில்க் ஸ்மிதா டீம். ஒரு நாள் ஐ.பி.எல் மேட்ச் பாக்கும் போது லைட் எரியுற அந்த ஸ்டம்ப்பைப் பார்த்ததும் ஐ நல்லா இருக்கேன்னு அவருக்குத் தோணிருக்கு. உடனே எங்கே கிடைக்கும்னு தேடி, ஆஸ்திரேலியால இருக்க அவரோட நண்பருக்கு போன் பண்ணி சொல்ல, அவரும் அந்த ஸ்டம்ப்பை வாங்கி அனுப்பியிருக்காராம். விலை நம்ம ஊர் மதிப்புல வெறும் 60,000 ரூபாய்தான். அவர் வீட்டம்மாகிட்ட செமையா திட்டு வாங்கி இருக்கார். அவர் பசங்களுக்கு பொம்மை வாங்க கடைக்குப் போனா, அடிச்சு பிடிச்சு முதல்ல கடைக்குள்ள போய் பொம்மைகள் வாங்குறது அவர் பசங்களுக்கு முன்னாடி மாகாபா தானாம். வித்தியாசமா சமைக்குறேன்ற பேர்ல கில்லி பிரியானி, பெக்கர் சிக்கன்னு பல அயிட்டங்களைப் புதுசு புதுசா சமைச்சு சில சமயங்களில் சூப்பரா வருமாம், பல சமயங்களில் சொதப்பிருமாம். அப்படி அப்போ அப்போ ஒரு ஹாபி, அதுக்கு தேவையான பொருள்களை வாங்கிட்டு வீட்டுல திட்டு வாங்குறதும் வாடிக்கையாம். அப்படி சமைக்குறதுக்காக ராக்கெட் ஸ்டவ்னு ஒன்னு புதுசா வாங்கி இருக்காராம்.

மா.கா.பா ஆனந்த்
மா.கா.பா ஆனந்த்

முதல்ல கேட்டேன்ல அவர் வீட்ல குளிக்கும் போது அவர் செய்யுற ஒரு வித்தியாசமான பழக்கம் என்னன்னா, “அவர் வீட்ல குளிக்கும் போது பாத்ரூம்ல தாப்பா போட மாட்டாராம். கதவை பூட்டிகிட்டு குளிக்குறது கொஞ்சம் பயமாம்.” மாகாபா டோன்ல “அடச்சை”ன்னு உங்களுக்குத் தோணுதா, கமெண்ட்ல சொல்லிட்டுப் போங்க.

மாகாபாவோட எந்தக் கவுண்ட்டர் காமெடி கேட்டு நீங்க விழுந்து விழுந்து சிரிச்சிருக்கீங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top