`என்னைக் கட்டிவைச்சு அடிங்க’ – ஆனந்தராஜிடம் விரும்பிக் கேட்ட ரஜினி

நடிகைகளை ஓட ஓட விரட்டி ரேப் பண்றது, சிகரெட்டும், குடியுமா திரையில வந்து வில்லனாவும், குணச்சித்திரமாவும் கலக்கிட்டு இருக்குற நம்ம ஆனந்த ராஜ் நிஜத்துல இந்த பழக்கமே இல்லாதவர். என்ன ஷாக்கா இருக்குல்ல, அவரோட சம்பவங்களைத்தான் இந்த வீடியோவுல பார்க்கப் போறோம்.

Anandaraj
Anandaraj

ஒரு ஷூட்டிங் ஸ்பாட் அது. வேலைகள் பரபரன்னு நடிச்சு முடிக்க, பேக்கப் ஆகுது. நடிகர்கள் எல்லோரும் ஸ்பாட்ல இருந்து ரூமுக்கு வந்துடுறாங்க. அப்போ அந்த நடிகரும் ரூமுக்கு வர்றாரு. அப்போ அவரோட ரூம்க்கு ஒரு கால் வருது. நீங்க ப்ரெஷ் ஆயிடுங்க. கார் வரும். அதுல ஏறி ஒரு இடத்துக்கு வாங்கன்னு ஒரு ஹீரோ சொல்ல. இவரும் ரெடி ஆகி, வந்த கார்ல ஏறுறாரு. கார் போய்ட்டிருக்கு. இப்போ நீங்க என்ன ட் ட்ரிங்ஸ் சாப்பிடுறீங்கனு ஹீரோ தரப்புல கேட்குறாங்க. எனக்கு அந்த பழக்கமெல்லாம் இல்லனு கார்ல போற நடிகர் சொல்ல, டிரைவருக்கு ஒரு அழைப்பு வருது. கார் யூடர்ன் அடிச்சு, மறுபடியும் ஹோட்டலுக்கு போய் அந்த நடிகரை இறங்கச் சொல்றாங்க. அவரும் இறங்கிட்டாரு. இப்போ அவருக்கு ஏன் ஏறச்சொன்னாங்க, இறங்கச் சொன்னாங்கனு ஒரு குழப்பம். யோசிச்சு பார்க்க அந்த ட்ரிங்ஸ் வேணாம்னு சொன்னதுக்கு அப்புறமாத்தாங்குறதை புரிஞ்சுக்கிறாரு. அப்படி குடிப்பழக்கம் இல்லைனு சொல்லி இறக்கிவிடப்பட்ட நடிகர் பெயர் ஆனந்த் ராஜ். நடிகைகளை ஓட ஓட விரட்டி ரேப் பண்றது, சிகரெட்டும், குடியுமா திரையில வந்து வில்லனாவும், குணச்சித்திரமாவும் கலக்கிட்டு இருக்குற நம்ம ஆனந்த ராஜ் நிஜத்துல இந்த பழக்கமே இல்லாதவர். என்ன ஷாக்கா இருக்குல்ல, அவரோட சம்பவங்களைத்தான் இந்த வீடியோவுல பார்க்கப் போறோம்.

Anandaraj
Anandaraj

திரைப்படப் பயிற்சிக் கல்லூரி மாணவர்

ஆனந்த் ராஜ்க்கு சொந்த ஊர் பாண்டிச்சேரி. கல்லூரி படிப்பு முடிச்ச உடனே ராணுவம் மற்றும் வனத்துறை வேலைக்கு முயற்சி செய்றார். வேலைக்கு எழுதிப்போட, அதுவும் வந்து சேர, அம்மா என் மகனை அப்படில்லாம் அனுப்ப முடியாதுனு சொல்லிட்டு கிழிச்சு போட்டுறாங்க. கடைசியா அடையார் தென்னிந்திய திரைப்பட பயிற்சிக் கல்லூரியில சேர்றார். அங்க இவருக்கு சீனியர் பேட்ச்தான் நாசர், ரகுவரன் எல்லோருமே. அந்த கல்லூரியிலதான் சினிமா பத்தி முழுமையா தெரிஞ்சுக்குறார். கன்னட நடிகர் சிவராஜ்குமாரும், இயக்குநர் ஆர்.கே செல்வமணினு எல்லோருமே ஒரே பேட்ச். படிப்பு முடிஞ்சு, சிறந்த மாணவரா அவார்டு வாங்க கல்லூரி அரங்குல வெயிட் பண்ணிட்டிருக்கார். இப்பொ சிறந்த மாணவனுக்கான விருது பத்தி அறிவிக்கிறாங்க. அதை வாங்கப் போன ஆனந்தராஜும் மேடைக்கு ஏறுறார். இப்போ அந்த விருதைப் பத்தின அறிமுகம் பேச ஆரம்பிக்கிறாங்க. “சிறந்த மாணவர்னு அவார்டு வாங்கின யாரும் சினிமாவுக்கு போனதே இல்லை. அது இந்த இன்ஸ்ட்யூட்டோட ராசி. இவராவது சினிமாவுக்கு போய் பெரிய ஆளா வரணும்”னு அறிவிச்சுட்டு, ஆனந்த்ராஜ் கைல கொடுக்க, மேடையில் இருந்தவருக்கு அதிர்ச்சி. விருதை அப்படியே போட்டு ஓடிரலாமானுகூட நினைச்சிருக்கார். கீழ உட்கார்ந்திருந்தவங்க எல்லோரும் அவ்ளோதான் இவன் முடிஞ்சான்னு சிரிக்க, தர்மசங்கடமான நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கார், ஆனந்த் ராஜ்.

முதல் வாய்ப்பில் அவமானம்!

பயிற்சிக் கல்லூரி முடிச்சதுக்கு அப்புறமா சினிமா வாய்ப்பு தேடி அலையுறார். அந்தக் காலக்கட்டங்கள்ல நடிகர் விஜயகாந்த்க்கு பிறந்தநாள் போஸ்டர் ஒட்டுற அளவுக்கு ரசிகர். இப்போ கோபுர வாசலிலே படத்துல முதல்முதலா வில்லன் வேடம் கிடைக்குது. சென்னையில இருந்து ஊட்டிக்கு போயிருச்சு படக்குழு. நடிகர் கார்த்திக்குக்கு வில்லனா நடிக்க போறோம்னு ஆனந்தராஜ்க்கு ரொம்ப சந்தோஷம். மேக்கப் போட்டு வர்றார். ஸ்பாட்ல அன்னைக்கு ஷூட் ஸ்டார்ட் ஆகலை. பரபரன்னு எல்லோரும் பேசிட்டு இருக்காங்க. நடிகர் கார்த்திக் இயக்குநர்கிட்ட கோபமா பேசுறார். அதுக்குப் பின்னால இயக்குநர் வந்து ஆனந்த் ராஜ்கிட்ட அந்த அதிர்ச்சி தகவலைச் சொல்றார். ‘கார்த்திக் சார் அவரோட ப்ரெண்ட் நல்லா இருக்கும்னு விரும்புறார். அதனால நீங்க இந்தப் படத்துல இருந்து விலகிக்கங்க’னு சொல்றார். உலகமே இருண்ட மாதிரி ஒரு சூழல். அந்த மாதிரி தகவல் கேட்டதுமே ஒரு ஓரமா ஆலமரத்தடியில விநாயகர் சிலை முன்னாடி நின்னு அழுறார், ஆனந்த் ராஜ். எல்லாமே தெரிஞ்சுதான் கூப்பிட்டு வந்தாங்க, இப்போ ஏன் வேணாம்னு சொல்றாங்க. சரி எல்லாமே நல்லதுக்குத்தான்னு மனசை தேத்திகிட்டு, கிளம்புறார். அடுத்ததா ஒருவர் வாழும் ஆலயம் படத்துல அறிமுகமாகிறார், ஆனந்த்ராஜ். இவரோட நடிப்பைப் பார்த்து அடுத்ததடுத்து படங்கள் வரிசைக்கட்ட தமிழ் தெலுங்கு, கன்னடம்னு தென்னிந்திய மொழிகள்ல பிசியான நடிகரா மாறுறார்.

Anandaraj
Anandaraj

சிறந்த வில்லன்!

எந்த கேரெக்டர் கிடைச்சாலும், அதுல ஸ்கோப் இருக்கணும். அது சின்ன இடம்னாலும் அதுல சிக்சர் அடிக்கிறதுல கில்லாடி. அங்கங்க சின்ன சின்ன வில்லத்தனமான ரோல் கிடைச்சது. அதையும் பக்காவா பண்ணார். அதுல மிகச் சிறந்த உதாரணம் பாட்ஷா படத்தைக் கூட சொல்லலாம். படத்தோட ஷூட்டிங் 95 சதவிகிதம் முடிஞ்சது. இப்போ ஒரு சின்ன போர்ஷன் இருக்கு. அதை யார் வச்சு பண்ணலாம்னு ரஜினியும், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவும் யோசிக்க, ஆன்ந்த் ராஜ் பண்ணா நல்லா இருக்கும்னு ரஜினி சொல்லியிருக்கார். இயக்குநரும் அழைச்சு பேசுறார், உடன் ரஜினியும் இருக்கிறார். ‘நீங்க ஒரு சின்ன கேரெக்டர் பண்ணனும் சொல்ல, என்ன கேரெக்டர்’னு ஆர்வத்தோட ஆனந்த்ராஜ் கேட்க, ‘என்னை கட்டி வச்சு அடிக்கணும்’னு ரஜினி சொல்ல, படக்குனு அதிர்ச்சியாகி, ‘நான் கிளம்புறேன் சார். நீங்க செருப்படி வாங்கிக் கொடுக்க முடிவு பண்ணிட்டீங்க, ஸ்கிரீன்லாம் கிழிஞ்சிடும் சார்’னு சொல்லியிருக்கார். அதுக்கு ரஜினி சொன்னதுதான் அல்டிமேட் ‘நாங்களும் யோசிச்சுப் பார்த்தோம். என்ன அடிச்சா அதை மக்கள் ஏத்துக்கிற மாதிரி ஒரு ஆள் நீங்கதான். அதுதான் கேட்கிறேன்’னு சொன்னார். உங்களுக்கு ஓகேன்னா நான் பண்றேன் சார்னு சொல்லிட்டு ஆசிர்வாதம் வாங்கிட்டு நடிக்க ஓகே சொன்னார், ஆனந்த் ராஜ். அதேபோல ஆனந்த் ராஜ் – ரஜினி உரசல் சீன்கள் நல்லா ஒர்க்கவுட் ஆகியிருந்தது. ரஜினியை அடிக்கக் கூடிய ஆள்தாங்குறது நம்புற மாதிரியே இருந்தது. இதுபோக அசால்ட்டா போற போக்குல பண்ணிட்டு போறது ஆனந்த் ராஜோட ஸ்டைல். மாநகர காவல், பரதன், திருமூர்த்தி, மாமன் மகள், மூவேந்தர், சிம்மராசி, சூர்யவம்சம், பாட்டாளி, பெரியண்ணா, கிரி, ஏழுமலைனு பல வில்லத்தனமான கேரெக்டர்கள்ல வெளுத்து வாங்கியிருப்பார்.

Also Read – எனக்கும் செருப்புக்கும் மட்டுமே தெரியும் கஷ்டம்… யோகி பாபு சக்ஸஸ் ஸ்டோரி!

காமெடி நடிகர்!

பாலைவன பறவைகள்ல இருந்து 8 படங்கள் ஹீரோவா நடிச்சார். அதுக்கப்புறம் மறுபடியும் வில்லன் அவதாரம் தொடர்ந்துகிட்டே இருந்தது. கமிட்டாகுற ஒவ்வொரு படங்கள்லயும் வந்துபோற இடம் சின்னதா இருந்தாலும், ஏதாவது ஒரு பெர்பார்மன்ஸை கொடுத்துட்டு போயிடுவார். 'ங்கொப்பன் தாமிரபரணியில தலைமுழுக', 'தோத்துக்கிட்டே இருக்கியேடா', 'போலீஸ் காரனுக்குனு ஒரு சட்டம் இருக்கு, இங்க இந்திரனோட சட்டம்'னு வில்லனா ஏதாவது ஒரு சீன்ல ஸ்கோர் பண்ணிடுவார். கொஞ்ச நாளைக்கப்புறமா நானும் ரெளடிதான்னு ஒரு படம் பண்றாரு. அதுல இருந்து காமெடி கலந்த ஆனந்த் ராஜ் வெளியே வந்தாரு. 'அள்ளிப்போட்டு எடுத்துட்டு வந்தியா', 'என்னடா பாம்லாம் போடுறீங்க'னு ஒன்லைனர்லாம் தெறி ஹிட்டாச்சு. அடுத்தடுத்து தில்லுக்கு துட்டு, மரகத நாணயம், ஜாக்பாட், சிலுக்குவார்பட்டி சிங்கம்னு காமெடியோட உச்சத்தைத் தொட்டார். அதுலயும், தில்லுக்கு துட்டுல 'கொஞ்சம் காமெடி பண்ண உடனே வில்லன்ங்குறதையே மறந்துடுவீங்களே'னு டெரர் வாய்ஸ்ல பேசுறதெல்லாம் வேற லெவல்ல இருந்தது.
ஆனந்தராஜ்
ஆனந்தராஜ்

பாலிசி!

சினிமாக்காரர்கள்கிட்ட பொதுவா ஒரு பாலிசி இருக்கும். நம்மளைவிட அதிகமா மற்ற நடிகர்கள் படங்கள் நடிகிறப்போ, பொறாமை குணம் கொஞ்சம் எட்டிப் பார்க்கும். ஆனா ஆனந்த் ராஜ்க்கு அதைப் பத்தி எல்லாம் கொஞ்சம்கூட கவலை இல்லை. உங்க வண்டி வர்றப்போ நீங்க போங்க, எனக்குனு வர்ற வண்டியில நான் வர்றேன். மத்தவங்க வண்டிய பத்தி நான் கவலைப்பட மாட்டேன்ங்குறதுதான் இவரோட பாலிசி. இதுபோக, அதேபோல நடிக்கிறது சின்ன கேரெக்டரா இருந்தாலும் ஓகே. அந்த சின்ன இடத்துலயும் நம்ம பெர்பார்மன்ஸ் கவனிக்கிற மாதிரி இருக்கணும்ங்குற கொள்கையும் கொண்டவர். சொல்லப்போனா இதைச் சரியாவே இதுவரைக்கும் செய்துகிட்டு வர்றாரு.

இவரோட நடிப்புல எனக்கு பிடிச்சது பாட்ஷா இந்திரன் கேரெக்டர்தான். உங்களுக்கு எந்த கேரெக்டர் பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.

2 thoughts on “`என்னைக் கட்டிவைச்சு அடிங்க’ – ஆனந்தராஜிடம் விரும்பிக் கேட்ட ரஜினி”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top