இந்திய அணி

என்ன சிம்ரன் இதெல்லாம்…” இப்படியொரு அட்வான்டேஜா… பிசிசிஐ பண்ண மாஸ்டர் பிளான்?!

2011-க்குப் பிறகு 12 வருஷங்களுக்கு அப்புறம் இந்தியால நடக்குது வேர்ல்டு கப் டோர்னமெண்ட். தோனி தலைமையில அந்த வேர்ல்டு கப்பை அடிச்ச இந்தியன் டீம் அதுக்கப்புறம் வேர்ல்டு கப்பை ஜெயிக்கல. அதுபோக, கடைசி 3 வேர்ல்டு கப்களையும் ஹோஸ்டிங் டீம்னு சொல்லப்படுற சொந்த ஊர் டீம்தான் கில்லியா நின்னு அடிச்சிருக்கு. இப்படியான ஒரு சூழ்நிலைல இந்தியன் டீமோட லீக் மேட்சுகளுக்கு போட்டிருக்க ஷெட்யூல்ஸுக்குப் பின்னாடி ஐபிஎல் ரொம்ப முக்கியமான ஒரு பிளே பண்ணிருக்கு. அதைவைச்சு பிசிசிஐ அடிச்ச மாஸ்டர் ஸ்டோர் பத்தியும், அது எப்படி இந்தியன் டீமுக்கு ஹெல்ப் பண்ணும்ங்க்றதைப் பத்தின டீடெய்ல்ஸைத்தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

ஐபிஎல்லுக்கும் வேர்ல்டு கப்புக்கும் என்ன சம்மந்தம்? முழங்காலுக்கு தலைமுடிக்கும் முடிச்சு போடுற மாதிரி இருக்கேனு நீங்க நினைக்கலாம். உண்மைல இந்தியன் டீமோட ஷெட்யூலைப் பார்த்தா ஒரு சில விஷயங்களை நாம புரிஞ்சுக்க முடியும். இந்தியன் டீம் இந்த வேர்ல்டு கப்ல 9 லீக் மேட்ச் ஆடுறாங்க. முதல் மேட்ச் சென்னை சேப்பாக்ல நடக்குது. அதுவும் ஸ்ட்ராங்கான கண்டெண்டரா இருக்க ஆஸ்திரேலியன் டீமுக்கு எதிரா… இதுல ஐபிஎல்லை பொறுத்திப் பார்த்தா, சேப்பாக் சிஎஸ்கேவோட ஹோம் கிரவுண்ட். ஐபிஎல்ல மொத்தம் 14 மேட்ச்கள்ல ஒவ்வொரு டீமும் தங்களோட சொந்த கிரவுண்ட்ல 7 மேட்ச், எதிர் டீமோட ஹோம் கிரவுண்ட்ல 7 மேட்ச் விளையாடுவாங்க. ஹோம் கிரவுண்ட் கண்டிஷன்ஸ் உள்ளூர் டீமுக்கே பெரும்பாலும் சாதகமா இருக்கும்.

1983, 2011 வேர்ல்டு கப் வின்னிங் டீமுக்கும் இப்ப இருக்க இந்தியன் டீமுக்கும்  இருக்க முக்கியமான வித்தியாசம் என்னன்னு நீங்க நினைக்கிறீங்க… அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. இந்த கேள்விக்கு சுனில் கவாஸ்கரும் ஹர்பஜன் சிங்கும் என்ன சொன்னாங்கங்குறதை வீடியோவோட கடைசில நானே சொல்றேன்.

இந்த பாயிண்டை எடுத்துக்கிட்டுதான் பிசிசிஐ ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக் அடிச்சிருக்காங்க. என்னன்னு பார்த்தா ஆஸ்திரேலியா இந்தியாவை சேப்பாக்ல எதிர்கொள்றாங்க. சிஎஸ்கே டீமைப் பொறுத்தவரைக்கும் கரண்ட் பிளேயிங் லெவன்ல இருக்க ஒரு ஆஸ்திரேலியன் பிளேயர்ஸ்கூட சிஎஸ்கேல இல்லை. ஆப்கானிஸ்தான் மேட்ச் டெல்லில விளையாடுறாங்க இந்தியா. அதே கதைதான் இங்கயும் டெல்லி டீம்ல ஒரு ஆஃப்கன் பிளேயர் கூட இல்லை. பாகிஸ்தான் பிளேயர்ஸ் ஐபிஎல் விளையாடுறதுல்ல, அப்புறம் புனே எம்சிஏ ஸ்டேடியம் எந்தவொரு ஐபிஎல் டீமுக்கும் ஹோம் கிரவுண்ட் இல்லைங்குறதைத் தவிர்த்துப் பார்த்தா, மத்த 7 மேட்சையும் இப்படித்தான் பிளான் பண்ணிருக்காங்க. பஞ்சாப் டீம்ல நியூஸிலாந்து பிளேயர் ஒருத்தர்கூட இல்லாத நிலைமைல அந்த டீமை தரம்சாலால எதிர்த்து விளையாடுது இந்தியா. இதே நிலைமைதான் லக்னோல இங்கிலாந்துக்கும், மும்பைல ஸ்ரீலங்கன் டீமுக்கும்… கொல்கத்தால சௌத் ஆப்பிரிக்காவையும் பெங்களூர்ல நெதர்லாந்தையும் சந்திக்குது இந்தியன் டீம். கண்ண மூடிட்டு யோசிச்சுப் பார்த்தா இந்த டீம்கள்லயும் அந்தந்த நாடுகளோட பிளேயர்ஸ்னு ஒருத்தர்கூட இல்லை.

Also Read – வேர்ல்டு கப் விவாதத்துக்குள்ள அஸ்வின் எப்படி வந்தார் – யூடியூப் வீடியோ மேஜி!

1983, 2011 டீம்களைப் பொறுத்தவரைக்கும் வேர்ல்டு கிளாஸ் பேட்டர்ஸ், பௌலர்ஸோட தரமான ஆல்ரவுண்டர்களும் இந்தியன் டீம்ல இருந்தாங்க. நீங்க எதிர்பார்த்ததை விட 8,9,10 பேட்ஸ்மேன்ஸ் 5, 6 ஓவர்ஸ்ல 30, 40 ரன் அடிச்சா, அதுவும் குறிப்பா ஃபர்ஸ்ட் பேட் பண்றப்ப அது மிகப்பெரிய அட்வாண்டேஜ்னு கவாஸ்கர் சொல்லிருப்பார். அதுவே ஹர்பஜன், `2019 வேர்ல்டு கப்ல 10-வது இடத்துல இறங்குறவர் வரை பேட் பண்ணது இங்கிலாந்துக்கு மிகப்பெரிய அட்வாண்டேஜா இருந்துச்சு. இப்ப இருக்க டீமும் அப்படித்தான். ஆஸ்திரேலியாவோட பேட்டிங் லைன் அப்பும் டீப்பானது. இந்தியன் டீமோட பேட்டிங் லைன் அப்பையும் நாம குறை சொல்ல முடியாது. குறிப்பா நம்பர் 8ல ஷ்ரதுல் தாக்குர் இறங்குனா, அவருக்கு அப்புறம் குல்தீப்பும் பேட் பண்ணக் கூடியவர்’னு சொல்லிருப்பார்.

இந்த பிரச்னையைத்தான் அஸ்வின் பல மாசங்களுக்கு முன்னவே சுட்டிக்காட்டிருப்பார். இது பிசிசிஐயோட மாஸ்டர் ஸ்ட்ரோக்னு நினைக்கிறீங்களா… இதைப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கங்குறதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top