அவங்கள மாதிரி பாட முடியாதுப்பா.. சித்ராவின் பெஸ்ட் பாடல்கள் லிஸ்ட்!

தமிழ் சினிமால எத்தனை சிங்கர்ஸ் வந்தாலும் சித்ராவோட மவுஸ் மட்டும் எப்பவும் குறையாது. வாரிசு படத்துல அம்மா பாட்டை இப்போ பாடியிருக்காங்க. எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், வித்யாசாகர், யுவன் ஷங்கர் ராஜா, சிற்பி, ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.வி.பிரகாஷ் குமார், சந்தோஷ் நாராயணன், இமான், விஷால் சந்திரசேகர், சாம் சி.எஸ், நிவாஸ் பிரசன்னா, பிரேம் ஜி, தமன் வரை முன்னணி மியூசிக் டைரக்டர்கள் எல்லார் மியூசிக்லயும் பாடிட்டாங்க. தாத்தா, பாட்டி, அம்மா, அப்பால தொடங்கி இன்னைக்கு இருக்குற 2’கே கிட்ஸ் வரைக்கும் சித்ரா வாய்ஸ்க்கு அடிமை தான். எந்த மியூசிக் டைரக்டர் காம்போல பெஸ்ட் பாடல்களை சித்ரா கொடுத்துருக்காங்கன்னு பாப்போம்?  

இளையராஜா – சித்ரா

சித்ரா, எந்த மியூசிக் டைரக்டர்ஸ்கூட சேர்ந்த நிறைய நல்ல பாட்டு பாடியிருக்காங்கனு கேட்டா, எல்லாருமே டக்னு இளையராஜாவைதான் சொல்லுவாங்க. ஃபாசில் டைரக்ட் பண்ண நோக்கேததூரத்து கண்ணும் நட்டு  படத்துல சித்ரா பாடியிருந்தாங்க. அதோட தமிழ் ரீமேக்தான் பூவே பூச்சூடவா. மலையாளத்துல சித்ரா பாடுனதை கேட்டு ஃபாசில் இளையராஜாகிட்ட சித்ராவைப் பத்தி சொல்லியிருக்காரு. அவரும் ஆடிஷன் வர சொல்லியிருக்காரு. சித்ராகிட்ட கீர்த்தனைகள் பாட சொன்னதும், பதற்றத்துல தப்பு தப்பா பாடியிருக்காங்க. ஆனால், இளையராஜா டக்னு அந்தப் பொண்ணு பாட்டை பிக்கப் பண்ணதைப் பார்த்து நீதானா அந்தக் குயில் படத்துக்காக பூஜைக்கேத்த பூவிது பாட்டை பாட சொல்லி ரெக்கார்ட் பண்ணியிருக்காரு. அதுக்கடுத்து சின்னக்குயில் பாடும் பாட்டு பாடலை ரெக்கார்ட் பண்ணியிருக்காரு. ஆனால், சம்பவம் என்னனா, ஃபஸ்ட் சித்ராவை ஆடிஷனுக்கு கூப்பிட்டதே சின்னக்குயில் பாட்டை பாடுறதுக்குதான். அந்தப் பாட்டு பாடுன பிறகு எக்கச்சக்கமான பாட்டு இளையராஜா இசைல பாடிட்டாங்க. சித்ரா பாடி முதல்ல ரிலீஸ் ஆன படம், சிந்து பைரவி. நானொரு சிந்து பாட்டுக்கு தேசிய விருதும் வாங்குனாங்க. எஸ்.பி.பிகூட சேர்ந்து இவங்க பாடுன எல்லா பாடல்களும் ஹிட்டு. அவர்கூட காலம் காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்பணம் பாட்டைதான் முதல்ல பாடியிருக்காங்க. அதுக்கப்புறம் எல்லா டூயட் பாட்டும் பிளாக்பஸ்டர்தான். 

இளையராஜாவுடன் சித்ரா

இளையராஜா மியூசிக்ல ஒரு ஆல்பம் முழுக்க ஒரே சிங்கர் பாடுறதுலாம் கஷ்டம். சித்ராவுக்கு அந்த வாய்ப்பு கிடைச்சுது. ஃபஸ்ட் அவங்க கீதாஞ்சலி படத்துல எல்லா பாட்டும் பாடுனாங்க. ரீசண்டா மிஷ்கின் பாடி ட்ரெண்டான துள்ளி எழுந்தது பாட்டுலாம் இளையராஜாகூட சேர்ந்து பாடுனாங்க. ஒரு ஜீவன், மலரே பேசு எல்லாமே ஹிட்டு. அதுக்கப்புறம் நிறைய ஆல்பம் பாடினாங்க. குழலூதும் கண்ணனுக்கு, ஏதேதோ எண்ணம் வளர்த்தேன், என் ஜோடி மஞ்சக்குருவி, குருவாயூரப்பா, அந்தியிலே வானம், இந்த மான், உன் பார்வையில் ஓராயிரம், குயிலே குயிலே, முத்தமிழ் கவியே, குடகு மலை, வெள்ளி கொலுசுமணி, அடி வான்மதி, கல்யாண தேன் நிலா, காதல் கவிதைகள் படித்திடும் நேரம், தூளியிலே ஆட வந்த, பாசமுள்ள பாண்டியரே, அடி ஜின் ஜிஞ்சுனுக்கா, தென் பொதிகை, ஆலப்போல் வேலப்போல் இப்படி ஏகப்பட்ட பாடல்கள் இளையராஜா இசையில் சித்ரா பாடி மரண ஹிட் ஆகியிருக்கு. மெலடி, குத்து, ஐட்டம், மாஸ், டூயட், இண்ட்ரோனு எல்லா விதமான எக்ஸ்பெரிமெண்ட் பாட்டும் இளையராஜா மியூசிக்லயே பாடிட்டாங்க. இதெல்லாமம் சும்மா எக்ஸாம்பிள்க்கு சொல்ற பாட்டு. இன்னைக்கு பிரியங்கா மூலம் பலரின் ஃபேவரைட்டா மாறுன சின்ன சின்ன வண்ணக்குயில் பாட்டு, மாலையில் யாரோ மனதோடு பேச, நினைவோ ஒரு பறவைலாம் வேறலெவல் ஃபீல். 2’கே கிட்ஸ்லாம் இந்தப் பாட்டை இப்போ கவர் வெர்ஷன்ல போட்டு வைப் பண்ணிட்டு இருக்காங்க. “இந்த காலத்துல நான் அதிகமா கேக்குறது சித்ரா பாடல்களைதான். எனக்கு அவள் மகளா பிறந்துருக்கணும்னு”னு ஜானகி சொல்லுவாங்க. பெரிய பெரிய சிங்கர்ஸே மேடைல சொல்லுவாங்க. சித்ராவை மாதிரிலாம் என்னால பாட முடியாதுனு. அவ்வளவு தரமான பாடல்களை பாடியிருக்காங்க. 

Also Read: யார் இந்த ஜென்ஸி; இத்தனை ஹிட் பாடல்களை பாடியிருக்காங்க!

ஏ.ஆர்.ரஹ்மான் – சித்ரா

ரஹ்மானுடன் சித்ரா

சித்ரா ரொம்ப அமைதியானவங்க. இனிமையா பழகுறவங்க. தப்பித்தவறிகூட யாரையும் காயப்படுத்த மாட்டாங்க. இந்த குணம்தான் ஏ.ஆர்.ரஹ்மானையும் சித்ராவையும் இணைச்சுருக்கும்போல. ரஹ்மான் மியூசிக் போட்ட முதல் படத்துலயே ருக்குமணி பாட்டை பாடியிருப்பாங்க. தென் கிழக்கு சீமையிலே, வீர பாண்டி கோட்டையிலே, புத்தம் புது பூமி, அஞ்சலி அஞ்சலி, என் காதலே, தென்மேற்கு பருவக்காற்று பாட்டுலாம் பாடியிருக்காங்க. ஆனால், ரஹ்மான் மியூசிக்ல அவங்க பாடி இன்னைக்கும் பலர் ரிப்பீட் மோட்ல கேட்டுட்டு இருக்குற பாட்டு கண்ணாளனே. அதேமாதிரி என் மேல் விழுந்த பனித்துளியேலாம், கேட்டா சொர்க்கத்துக்கு பொய்ட்டு வந்த மாதிரி இருக்கும். உயிரை அப்படியே உருவி எடுக்குற பாட்டு உயிரே உயிரே. நீங்க காதல் தோல்வியே அடையாதவரா இருந்தாலும் இந்தப் பாட்டைக் கேட்டா, காதல் தோல்வி ஃபீல் வரும். இந்திரால தொட தொட மலர்ந்ததென்ன, குலுவாலில்லே, மலர்களே மலர்களே, மானா மதுரை மாமரக் கிளையிலே பாட்டுலாம் செம ஹிட்டு. கண்ணாம்பூச்சி ஏனடா, என் கண்ணா மாதிரி இன்னொரு பாட்டுலாம் கிடைக்குமா? மெலடியாவே போகுதேனு நினைச்சா, இஞ்ரேருங்கோ பாட்டைக் கேளுங்க. சிங்கள வார்த்தைகள் அந்தப் பாட்டுல நிறைய இருக்கும். ரெக்கார்டிங் முடிக்கவே அவ்வளவு டைம் ஆச்சாம். எனக்கு தெரிஞ்சு ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்ல கொஞ்சம் பாட்டுதான் பாடியிருக்காங்க. எல்லாமே ஹிட்டு. மலர்கள் கேட்டேன் பாட்டுக்காக சித்ராவை கூப்பிடும்போது அவங்க அவுட் ஆஃப் தி ஸ்டேஷன். அப்போ, சரினு விட்ருக்காரு. திரும்ப வந்ததும் சித்ராவைக் கூப்பிட்டு அந்தப் பாட்டை ரெக்கார்ட் பண்ணியிருக்காரு. கிட்டத்தட்ட 3 மாசம் சித்ராவுக்காக ரஹ்மான் வெயிட் பண்ணியிருக்காரு.

எஸ்.ஏ.ராஜ்குமார் – சித்ரா

எஸ்.ஏ ராஜ்குமார் மியூசிக்ல ராசா ராசா உன்னை வைச்சிருக்கேன் நெஞ்சில பாட்டுல ஆரம்பத்துல ஹம்மிங் ஒண்ணு வரும், சித்ரா அதை பாடியிருப்பாங்க பாருங்க. வேற யாருக்கும் அந்த ஹம்மிங் செட் ஆகாது. அதேமாதிரி, நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு, ஒரு தேவதை வந்துவிட்டாள், சேலையில வீடு கட்டவா, காற்றே பூங்காற்றே பாட்டுலாம் எஸ்.ஏ.ராஜ்குமார் மியூசிக்ல பாடியிருக்காங்க. இப்போ நான் சொன்ன பாட்டுல செம செக்ஸியான பாட்டு சேலையில வீடு கட்டவா. சித்ராவா இவ்வளவு செக்ஸியா பாடுறாங்கனு ஆச்சரியமா இருக்கும். சித்ரா – தேவா சேர்ந்தும் நிறைய சம்பவங்களை பண்ணிருக்காங்க. பாட்ஷா படத்துல நீ நடந்தால் நடையழகு, சிகப்பு கலரு சிங்கிச்சா, எந்தன் உயிரே எந்தன் உயிரே, காலமெல்லாம் காதல் வாழ்க, கனவே கலையாதே சின்ன பையன் சின்ன பொண்ண காதலிச்சான், ஆடியில சேதி சொல்லி, அண்ணாமலை அண்ணாமலை, ராசிதான் கை ராசிதான் இப்படி தேவா மியூசிக்ல இவங்க பாடுன லிஸ்டையும் சொல்லிட்டே போகலாம். யுவன் ஷங்கர் ராஜா மியூசிக்ல விரல் விட்டு எண்ணும் பாடல்களைதான் பாடியிருக்காங்க. சென்னை 28-ல யாரோ பாட்டு இவங்க பாடுனதுதான். எவ்வளவு வயசானாலும் உங்க குரல் இன்னும் எப்படி இளமையாவே இருக்குனு இந்தப் பாட்டு கேட்டா கேட்க தோணும். கொடி படத்துல சந்தோஷ் நாராயணன் மியூசிக்ல ஆராரிரோனு அம்மா பாட்டு பாடியிருக்காங்க. நிவாஸ் கே பிரசன்னா மியூசிக்ல சேதுபதி படத்துல கொஞ்சி பேசிட வேணாம் பாட்டு இவங்க பாடுனதுதான். அந்தப் பாட்டைக் கேட்டாலே லவ் பண்ற மோட் தானா ஆக்டிவேட் ஆயிடும். விவேக் மெர்வின் மியூசிக்ல விழிகளில் விழுந்தவளோனு பாட்டு இருக்கு. அதை கேட்டுப் பாருங்க. வேற வைப் இருக்கும். 

ஜிப்ரான் மியூசிக்ல எல்லாத்தையும் தூக்கி சாப்பிடுற மாதிரி பாட்டு ஒண்ணு பாடியிருப்பாங்க. மௌனம் பேசும் வார்த்தை யாவும் பாட்டு. ஸ்கூல் பசங்க லவ் பாட்டு அது. அவங்க சினிமா இண்டஸ்ட்ரில பாடத் தொடங்கி 40 வருஷம் மேல ஆச்சு. இன்னும் ஸ்கூல் பசங்க டூயட்டுக்கு பாட்டுப் பாடுறாங்கனா சும்மா இல்லை. சின்னக்குயில்னு சும்மாவா சொன்னாங்க. வித்யாசாகர் மியூசிக்ல நீ காற்று நான் மரம்னு பாட்டு வரும். சித்ரா பாடும்போது அப்படியே சம்மர் கூட விண்டரா மாறுன ஃபீல் வரும்.  90’ஸ் கிட்ஸ் ஸ்கூல் டைம்ல அதிகமா கேட்ட பாட்டு, ஒவ்வொரு பூக்களுமே. அப்படி ஒரு எனர்ஜியும் எமோஷனும் இந்தப் பாட்டைக் கேட்டா வரும். ஹாரிஸ் மியூசிக்ல இதுதானா பாட்டு இவங்க பாடுனது. நான் போகிறேன் மேலே மேலே பாட்டு இன்னைக்கு விண்டேஜ் சாங்னு சொல்லி கொண்டாடிட்டு இருக்காங்க. அதுலலாம் சித்ரா வாய்ஸ் அய்யோ அப்படி இருக்கும். இப்படி சித்ரா இதுவரைக்கும் 25,000 பாடல்களுக்கு மேல பாடியிருக்காங்க. ஒவ்வொரு பாட்டுலயும் அவங்க பண்ண குட்டி குட்டி விஷயங்களை வைச்சு அவ்வளவு மணி நேரம் பாட் காஸ்ட் பேசலாம். கன்னடம், தெலுங்கும், தமிழ், இந்தி இப்படி எந்தப் மொழில பாடுனாலும் அந்த மொழியை பேசுறவங்கதான் இவங்கனு நினைக்க வைக்கிற மேஜிக் சித்ராகிட்ட இருக்கு. எல்லா சிங்கர்ஸும் சித்ராகிட்ட பார்த்து வியக்குற மொமண்ட் அதுதான். 

தனுஷ் சூப்பர் சிங்கர்ல சொல்லுவாரு, தமிழ்ல கெத்து காட்றதுனு சொல்லுவாங்க. அதைதான் நீங்க இப்போ பண்ணீங்கனு சொல்லுவாரு. பாட்டுப் பாடி நம்மள தூங்க வைக்கிற, அழ வைக்கிற, சந்தோஷப்பட வைக்கிற, இதமா உணர வைக்கிற, ஏங்க வைக்கிற, தயங்க வைக்கிற வாய்ஸ் சித்ராவோடது. அவங்க பாடுனதுலாம் இன்னைக்கு வர்ற பாடகர்களுக்கு டிக்‌ஷனரி. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top