மில்லியன் ஃபாலோயர்ஸ் உடன் யூ டியூபில் கலக்கும் 2 கே கிட்ஸ்!

குழந்தைகள் அதிகமாக நேரங்களை செலவிடும் தளங்களில் யூ டியூபும் ஒன்று. குறிப்பாக குழந்தைகள் வியூவர்ஸாக மட்டும் இல்லாமல் கிரியேட்டராகவும் இருந்து தங்களை விட வயதில் பெரிய யூ டியூபர்களுடன் போட்டி போட்டு வருகின்றனர். அவ்வகையில், மில்லியன் கணக்கான சப்ஸ்கிரைபர்களைப் பெற்று யூ டியூபில் டாப்பில் இருக்கும் குழந்தைகள் நடத்தும் சேனல்களைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

Ryan’s World

அமெரிக்காவின் டெக்ஸாஸைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ரியான். பொம்மைகளை ரிவியூ செய்வது, அறிவியல் தொடர்பான பரிசோதனைகள், மியூசிக் வீடியோக்கள், கைவினைப் பொருட்களை செய்வது உட்பட தன்னுடைய அன்றாட வாழ்வில் நடக்கும் ஃபன்னியான விஷயங்களை வீடியோவாகப் பதிவு செய்வது என யூ டியூபை கலக்கி வருகிறார். இதுவரை 29.8 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை இவர் பெற்றுள்ளார். அதிகம் சம்பாதிக்கும் யூ டியூபர்களின் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார். இந்த சிறுவன் ரிவியூ செய்த பொம்மைகளை உள்ளூரில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாகவும் வழங்கி வருகின்றார். 2015 முதல் யூ டியூபில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Evantubehd

பென்சில்வேனியாவைச் சேர்ந்த 15 வயதான யூ டியூபர்தான் இவான். பொம்மைகளை ரிவியூ செய்யும் இவானின் சேனலுக்கு இதுவரை சுமார் 6.92 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இவரது ஃபேஸ் ரியாக்‌ஷன் பார்வையாளர்களை எளிதில் கவரக்கூடியதாக உள்ளது. சேலஞ்சஸ் வீடியோக்களையும் அறிவியல் பரிசோதனைகள் தொடர்பான வீடியோக்களையும் அவ்வப்போது தன்னுடைய யூ டியூப் தளத்தில் பதிவிட்டு வருகின்றார். 2011 முதல் யூ டியூபில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Kids toys

கிட்ஸ் டாய்ஸ் சேனலில் க்வின்ஸி மற்றும் லாரிஸ் என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர். 15 வயதான இவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். பல நாடுகளையும் சேர்ந்த பொம்மைகளின் ரிவ்யூ, பிரபலங்களின் Then மற்றும் Now புகைப்படங்களின் தொகுப்பு ஆகியவற்றை வீடியோக்களாக பதிவிட்டு வருகின்றனர். இதுவரை 2.51 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்றுள்ளனர். 2012-ம் ஆண்டு முதல் யூ டியூபில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.

Ethan Gamer

இங்கிலாந்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன்தான் எத்தன். கேம்களை விளையாடுவதுதான் இவரின் தனித்துவம். இந்த சேனலைத் தவிர எத்தன் என்று மற்றொரு சேனலையும் இவர் நடத்தி வருகிறார். அதில் அன்பாக்ஸிங், விளாக்ஸ் போன்றவற்றை பதிவிட்டு வருகிறார். இவருக்கு 2.84 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். கேம்களை மிகவும் உற்சாகமே விளையாடும் அணுகுமுறை அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த விஷயமாம். இவர் 2013 முதல் யூ டியூபில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Jillian and Addie

பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஜிலியன் மற்றும் ஆடி இருவருக்கும் 15 வயதுக்குள் இருக்கும். இதற்கு முன்னதாக BABYTEETH4' என்ற பெயரில் சேனலை இயக்கி வந்தனர். தற்போதுJillian and Addie’ என்று தன்னுடைய பெயரை மாற்றியுள்ளனர். இதுவரை சுமார் 2.37 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்றுள்ளனர். 2007 முதல் யூ டியூபில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். மிஸ்ட்ரியான விஷயங்களை இவர்கள் வீடியோவாக பதிவு செய்து வருகின்றனர்.

Hulyan Maya

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்தவர்கள்தான் ஹூல்யான் மற்றும் மாயா. ஹூல்யானுக்கு 12 வயதும் மாயாவுக்கு 9 வயதும் ஆகிறது. அன்றாடம் வீட்டில் விளையாடுவது மற்றும் விளாக் வீடியோக்களை தன்னுடைய யூ டியூப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதுவரை 1.74 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்றுள்ளார். 2008 முதல் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

Hailey’s Magical Playhouse for Kids

அமெரிக்காவைச் சேர்ந்த 9 வயது சிறுமிதான் ஹெய்லி. பொம்மைகளை வைத்து விளையாடி அதனை வீடியோவாக பதிவு செய்து யூ டியூபில் பதிவிட்டு வருகிறார். இதுவரை 2.21 மில்லியன் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். 2015 முதல் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

Also Read : ரொம்ப செலவழிக்கிறீங்களா?.. சிம்பிளான இந்த 11 டிப்ஸை டிரைப் பண்ணுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top