Aarthi Ramamurthy

சிலிக்கான் வேலியைக் கலக்கும் தமிழ்ப் பெண் – யார் இந்த ஆர்த்தி ராமமூர்த்தி?

சோசியல் ஆடியோ செயலியான கிளப்ஹவுஸின் சர்வதேசப் பிரிவு தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஆர்த்தி ராமமூர்த்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். யார் இந்த ஆர்த்தி ராமமூர்த்தி?

கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவியான ஆர்த்தி ராமமூர்த்தி மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக் உள்ளிட்ட சிலிகான்வேலியின் பெரும் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம்மிக்கவர். மைக்ரோசாஃட் நிறுவனத்தின் எக்ஸ் பாக்ஸ் லைவ் பிரிவில் விஷூவல் ஸ்டூடியோ உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்த அவர், 6 ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறார். அதன்பிறகு ஃபேஸ்புக்கின் தயாரிப்புப் பிரிவில் இணைந்தார். ஃபேஸ்புக்கில் க்ரூப்கள் எனப்படும் குழுக்கள் உருவாக்கத்தில் ஆர்த்தியின் பங்கு மிகப்பெரியது. ஃபேஸ்புக் கம்யூனிட்டிகளை பில்ட் செய்ய பயனாளர்களை ஊக்குவித்தது.

ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களின் வளர்ச்சியால் ஃபேஸ்புக்கின் டிராஃபிக் குறைந்த நேரத்தில் கம்யூனிட்டி பில்டிங் அதன் வளர்ச்சியைக் குறையாமல் பார்த்துக் கொண்டது. நெட்டிசன்களை எங்கேஜ் செய்த இந்த ஐடியாவின் பின்னணியில் இருந்தவர் ஆர்த்தி. 2017 – 2020 காலகட்டத்தில் ஃபேஸ்புக்கின் கிரியேட்டர் மானிடைசேஸன் பிரிவின் புராடக்ட் லீட் பதவியில் இருந்தார். ஃபேஸ்புக்கில் ஒரிஜினல் வீடியோக்களைப் பதிவிடும் படைப்பாளிகளுக்கான மானிடைசேஸன் என்ற புதிய முன்னெடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை மேற்கொண்டது இவரது தலைமையிலான டீம். ஃபேஸ்புக்கில் கிரியேட்டர் மானிடைசேஸன் முயற்சி யூ டியூபுக்கு சவால் விடும் வகையில் அமைந்தது. ஒரு வகையில் படைப்பாளிகளை ஃபேஸ்புக்கில் புதிய களம் அமைத்துக் கொடுத்தது இந்த முயற்சி. டெக் உலகில் பரவலாகப் பாராட்டுப் பெற்றது.

ஆர்த்தி ராமமூர்த்தி

லூமாய்ட்

சிலிக்கான் வேலியின் முன்னணி நிர்வாகியாக உயர்ந்த ஆர்த்தி, லூமாய்ட் எனும் ஸ்டார்ட் அப்பை சான்பிரான்சிஸ்கோவில் தொடங்கினார். ஆப்பிளின் ஐ வாட்ச் உள்ளிட்ட விலை உயர்ந்த கேட்ஜெட்களை வாடகைக்கு எடுத்து அதன் பயன்பாடு பற்றி பயனாளர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் லூமாய்ட் அந்த கேட்ஜெட்களை வாடகைக்குக் கொடுத்தது. அமெரிக்காவின் முன்னணி ஸ்டார்ட் அப் ஆக்ஸிலேட்டரான ஒய் காம்பினேட்டரின் ஆதரவோடு அந்த ஸ்டார்ட் அப் வளர்ந்தது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் ஐடியாக்கள் பிடித்திருக்கும் சூழலில், அதற்கான நிதியுதவியை அளிக்கும் வகையில் 2005-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஒய் காம்பினேட்டர். ரெட்டிட், ஏர் பி.என்.பி, ஸ்டிரைப், குரூஸ் ஆட்டோமேஷன் உள்ளிட்ட முன்னணியில் இருக்கும் பல நிறுவனங்களும் ஒய் காம்பினேட்டரின் ஆதரவோடு ஆரம்ப காலங்களில் நடைபோட்டவை. இது மட்டுமல்லாது சான்பிரான்சிஸ்கோவின் சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றாகவும் லூமாய்ட் வளர்ந்தது.

ஆர்த்தி ராமமூர்த்தி - ஸ்ரீராம்
ஆர்த்தி ராமமூர்த்தி – ஸ்ரீராம்

இவரது கணவர் ஸ்ரீராம் கிருஷ்ணனும் சிலிகான் வேலியின் முன்னணி டெக் வல்லுநர்தான். ட்விட்டர், ஃபேஸ்புக் என இவரது புரஃபைலும் ரொம்பவே பேமஸானது. லாக்டவுனில் வீட்டிலிருந்தபோது இந்தத் தம்பதி பிரபலமாகத் தொடங்கியிருந்த சோசியல் ஆடியோ செயலியான கிளப் ஹவுஸில் தி குட் டைம் ஷோ’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை விளையாட்டாகத் தொடங்கினார்கள். ஆனால், அதன் ரீச் அவர்களே எதிர்பார்க்காத வகையில் எகிறியது. மார்க் ஜக்கர்பெர்க் முதல் எலான் மஸ்க் வரை பரந்துவிரிந்த நட்பு வட்டாரத்தைக் கொண்டிருந்த இந்த தம்பதி, அவர்களை தங்களது நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து பேச வைத்தது டெக் உலகம் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பிரபலமாகியது. குறிப்பாக மார்க் ஜக்கர்பெர்க்கோடு கடந்த பிப்ரவரியில் நடந்த நிகழ்ச்சி, சமீபத்தில் எலான் மஸ்கோடான உரையாடல் இரண்டும் கிளப் ஹவுஸைத் தாண்டியும் மற்ற சோசியல் மீடியாக்களிலும் ரீச்சானது. இந்தநிலையில்தான், கிளப்ஹவுஸின் சர்வதேசப் பிரிவின் தலைவராகியிருக்கிறார் கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவியான ஆர்த்தி ராமமூர்த்தி. கிளப் ஹவுஸ் இன்ஃப்ளூயன்ஸராக வலம் வரும் ஆர்த்தி - ஸ்ரீராம் தம்பதிதி குட் டைம் ஷோ’-வைத் தொடர்ந்து நடத்தப்போவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

Also Read – சினிமாவின் எந்த ஜானர் உங்களுக்கு செட்டாகும்… கண்டுபிடிக்கலாம் வாங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top