மனசுக்குள்ள யார்கிட்டயும் சொல்ல முடியாமல் ஆழமா கிடந்த காதலை சொல்ல வைச்சு மைண்ட ரிலேக்ஸ் பண்ணி விட்டது 96 படம்தான். காதலை மட்டுமில்ல ஸ்கூல் டேஸ், நட்பு, ரொம்ப நாள் கழிச்சு ஊருக்கு போற ஃபீல்னு ஏகப்பட்ட விஷயங்களை நமக்குள்ள இருந்து கிளப்பி விட்டுச்சு. அதைப் பத்திதான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.
96 படம் ஏன் மக்களுக்கு அவ்வளவு பிடிச்சது? சிம்பிள், எல்லாருக்குள்ளவும் யார் கிட்டயும் சொல்லாத, கைகூடாத பள்ளிக்கால காதல் ஒண்ணு இருக்கும். பத்திருபது வருசங்கள் கழிஞ்சாலும், வாழ்க்கையில் ஏதோ ஒரு நொடியில் அந்தக் காதல் பத்தின ஞாபகம் ஒரு மின்னல் மாதிரி திடீர்னு வரும். அந்த மின்னலைப் பலரும் பாத்திருக்கக்கூட மாட்டாங்க. அது பார்த்தவருக்கு மட்டுமே தெரியும். மத்தவங்களுக்கு ஒரு இடி சத்தம் கேட்டுட்டுப் போயிரும். அந்த மின்னல் கொஞ்ச நேரத்துக்கு மனசைப் போட்டு என்னமோ செய்யும். அந்தப் பழைய காதலோட ஞாபகத்துக்கு போயிட்டு கொஞ்சம் நிம்மதியாவோ துக்கமாவோ வாழ்ந்துட்டு வருவோம். ஆனா, சில பேர் அந்த மின்னல் வெட்டின ஒரு நொடியிலேயே வாழ்க்கையை வாழ்ந்திட்டிருப்பாங்க. 96, ராமும் அப்படி அந்த ஒரு நொடியில் வாழ்ந்துகிட்டிருக்கவன் தான். ஆனா, என்ன பாக்குற அத்தனை பேரோட வாழ்க்கையிலயும் அந்த ஒரு நொடியை ஞாபகப்படுத்தி விட்டுட்டுப் போயிருவான். ஏன் 96 படம் மக்களுக்குப் பிடிச்சதுன்னு வாங்க பாப்போம்.
விட்டுட்டுப் போன இடத்துலயே நின்னுகிட்டிருந்த ராமை கிண்டல் அடிக்குற ஒவ்வொருத்தரும், அவங்களோட வாழ்க்கையில் யாரோ விட்டுட்டுப் போன ஒரு இடத்துல சில மணி நேரங்களாவது நின்னுகிட்டிருந்திருப்பாங்க. என்னதான் வெளிய கிண்டலடிச்சாலும், உள்ளுக்குள்ளாற அந்த ஞாபகம் படம் பார்த்த பலருக்கும் வந்து போனது இந்தப் படத்தை பல பேருக்கு நெருக்கமாவே ஆக்கிருச்சு.
இந்தப் படம் ஏன் மக்களுக்குப் பிடிச்சதுன்னு விஜய் சேதுபதி கிட்ட கேட்டப்போ அவர் ஒரு பதில் சொன்னார், அதைக் கடைசியில் பார்ப்போம் முழுசா பாருங்க.
Life of Ram பாட்டுதான் தமிழ் சினிமாவோட சிறந்த introvert anthem songனு சொல்லலாம். அந்தப் பாட்டு முழுக்க ராம் என்ன என்னமோ பண்ணுவான், என்னடா பன்றன்னுலாம் தோணும். ஆனா, அந்த பாட்டு முடியும் போது அதுதான் அவன் வாழ்க்கைனு புரிஞ்சிரும், ஒரு மூட் செட் பண்ணி நம்மளைக் கொண்டு போயிரும். அவன் ஒரு ஷாட்ல விரிஞ்சு பாய்ஞ்சோடுற ஒரு நதிக்கு முன்னால் உட்கார்ந்திகிட்டு நமக்கு முகத்தைக் காட்டிகிட்டு உட்கார்ந்திருப்பான், பின்னாடி நாலு பசங்க ஓடி வந்து குதிக்கும் போது லேசா ஜெர்க்காகி ஒரு நிமிசம் திரும்பிப் பார்ப்பான். அவன் நம்மகிட்ட காட்ட விரும்புற அவன் வாழ்க்கையும், சொல்ல விரும்புறதும் அவ்வளவுதான். அதுக்கு மேல அவன் கிட்ட இருந்து விஷயத்தை வாங்க ஜானு சிங்கப்பூர்ல இருந்து வரனும், அப்பவும் அவனா விருப்பப்பட்டாதான் ஜானுவோட கல்யாணத்துக்கு அவன் போனதை அவன் சொல்வான். நம்ம எல்லாருக்குள்ளவும் நெருங்கின நண்பர்கள் கிட்டகூட சொல்லாத சொல்ல விரும்பாத ரகசியங்கள் இருக்கும்ல, அத்தனையவும் பல வருசங்கள் கழிச்சு படம் பார்த்த அத்தனை பேரையும் யோசிக்க வைச்சது.
படமே ஒரு மியூசிக்கல் ட்ரீட்னு சொல்லலாம். கோவிந்த் வசந்தாவோட வயலின் கம்பிகள் எழுப்பின அதிர்வுகள் காலங்காலமா நம்ம மனசுக்குள்ள ஒளிஞ்சுகிடந்த காதல் மேல எதிரொலிச்சு பல பேர ரகசியமா கண்ணீர் சிந்த வச்சது, பல பேர கதறி அழவச்சது, பல பேரை பழைய ஞாபகங்களுக்குள்ள மூழ்க வச்சிருச்சு. கார்த்திக் நேத்தாவும் உமா தேவியும் தங்களோட பாடல் வரிகளிலும் இன்னும் கணத்தைக் கூட்டியிருப்பாங்க. இளையராஜா தன்னோட பங்குக்கு பலபேரை அவங்களோட காலத்துக்கே கூட்டிட்டுப் போய் பெர்சனலா கனெக்ட் பண்ண வச்சாரு. ஜானு யமுனை ஆற்றிலே பாட்டை ஒரு முறையாவது பாடிடுனு அதிகமா ஏங்குனது ராமை விட படம் பார்த்துகிட்டிருந்த ரசிகர்கள் தான். ஜானு கடைசியா அந்தப் பாட்டைப் பாடினப்போ சில்லறைய சிதறவிட்டதும் ராம் மட்டுமில்ல. த்ரிஷாவுக்கான சின்மயியோட குரலும் சரி, பாடல்களிலும் சரி திரிஷாவோட நடிப்புக்கு அந்தக் குரல் பயங்கரமான பலத்தை சேர்த்தது. விஜய் சேதுபதி, அவர் மேல எல்லா படங்களிலும் விஜய் சேதுபதியாவே வருவார்னு குறை சொல்லப்படும்ல, 96 ல ராமா முழுசா மாறி நின்னிருப்பாரு மனுஷன். நீயெல்லாம் மனுஷனே இல்லை தெரியுமா சேதுண்ணா.
ஒரு நொடிக்கு 320 கிலோமீட்டர் வேகத்துல சேட்களில் முத்தங்களையும் கண்ணீரையும் காதலையும் அள்ளியெடுத்துக் கொட்டுற வாட்ஸப் யுகத்தில் வாழ்ந்துகிட்டிருக்க இந்த ஜெனரேஷனுக்கும் இந்தப் படம் புடிச்சது, ஒரு நாளைக்கு 100 SMS மட்டுமே இருந்த ஜெனரேஷன்ல வாழ்ந்த காதலர்களால் அளவாத்தான் காதலிக்க முடிஞ்சது, வெறும் hi, 108 முறை ஜபிக்குற gud nit எல்லாம் அவங்களால அனுப்ப முடியாது, இனும் 20 மெசேஜ்தான்டா இருக்கு வெண்னை மவனேன்னு நெட்வொர்க் காரன் வேற ஞாபகப்படுத்துவான் அந்த 90s kids-க்கும் இந்தப் படம் புடிச்சது. படம் காட்டுற காலகட்டத்துல கஷ்டப்பட்டு காதலிச்ச அந்த தலைமுறைக்கும் இந்தப் படம் புடிச்சது. காரணம், அந்தப் படத்துக்குள்ள இருந்த ‘ஒரு இன்னசெண்ட்டான காதல்’னு ஒரு வரியில கூட முடிச்சிரலாம். ஆனா, அப்படி ஒரு வரிலலாம் முடிக்க முடியாது.
பள்ளிக்கால காதலும் அந்த நினைவுகளை கிளறிவிட்டது ஒரு பக்கம்னா, விஜய் சேதுபதி, திரிஷா, ஆதித்யா, கௌரி, பக்ஸ், தேவதர்ஷினி, சின்ன சின்ன கதாபாத்திரங்கள், ஆச்சர்ய சர்ப்ரைஸா வந்த ஜனகராஜ், எனக்குத் தெரியும்டானு முகமெல்லாம் சிரிச்ச கவிதாலயா கிருஷ்ணானு அத்தனை கதபாத்திரங்களும் கச்சிதமா நம்ம மனசை கொள்ளையடிச்சுட்டுப் போனாங்க.
Also Read: நாடோடிகள் பாணியில் நடந்த பார்த்திபன் – சீதா திருமணம்!
ஒரு காட்சியில் கண்ணீரோட ஜானு கண்ணாடி மேல கைய வச்சு நிப்பாங்க, அடுத்த காட்சி அந்தக் கண்ணாடியில் விஜய் சேதுபதி மட்டும் தெரிவார். இப்படி கவிதையாவே பல காட்சிகளை சொல்ல முடியும். நீளம் கருதி கம்மியாவே சொல்வோம்.
96 படம் ஏன் மக்களுக்கு இவ்வளவு புடிச்சதுன்னு விஜய் சேதுபதிகிட்ட கேட்டப்போ, படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலயே மக்கள் அங்க ராமையும், ஜானுவையும் பாக்க மறந்துட்டாங்க, அவங்களைத்தான் ஸ்க்ரீன்ல பார்த்தாங்க. எல்லாருக்கும் ஏதோ ஒரு காட்சி அவங்களோட கனெக்ட் ஆகிருச்சு. இது அவங்களோட படம். அதான் மக்களுக்குப் புடிக்க காரணம்னு சொல்லியிருப்பாரு.
யோசிச்சு பார்த்தா அது உண்மைதான். தியேட்டர்களுக்குள்ள ஒரு மேஜிக் நடந்தது. திரையில் மட்டுமே படம் ஓடலை, பார்த்த ஒவ்வொருத்தரோட மனசுக்குள்ளவும் அவங்களோட கதை படமா ஒடுச்சு. அதுதான் மக்களுக்கு படம் ரொம்பவே புடிக்க காரணம்.
அந்தாதி நீ பாட்டுல கடைசியா நாசர் குரலில் ஒரு கவிதை வரும், ஒருவேளை காதல் திரும்பினால், தயங்கி நின்றால் கொஞ்சம் கிட்ட போய் திறந்த மனதோடு பேசுன்னு சொல்வார்ல, அப்படித்தான் 96 படமும் நம்ம நினைவுகளோட தயங்காம பேச வைச்சது.
உங்களுக்கு ஏன் 96 படம் புடிச்சதுன்னு கமெண்ட்ல சொல்லுங்க.