விஜய்க்கு தெலுங்கானா முதல்வர் உடனே அப்பாயின்மென்ட் கொடுத்தது ஏன்? Insiders Info

தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவை, நடிகர் விஜய் சந்தித்த துதான் தற்போது கோலிவுட், டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பான பேச்சாக உள்ளது. எப்படி நிகழ்ந்தது இந்த சந்திப்பு… அதன் பின்னணி என்ன.. என்பதைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். 

சந்திரசேகர ராவ் - விஜய்
சந்திரசேகர ராவ் – விஜய்

நடிகர் விஜயின் அடுத்த திரைப்படத்தின் வேலைகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் அந்தப்  படத்திற்கு பெயர் வைக்கப்படாத நிலையில், தளபதி 66 என்ற பெயரில் படத்தின் தயாரிப்பு மற்றும் சூட்டிங் வேலைகள் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. இந்தப் படத்தின் இயக்குனர் வம்சி பைடிபைலி. இந்தத் திரைப்படத்தை தில் ராஜூவின் ஸ்ரீவெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படி இயக்குனர், தயாரிப்பாளர் இருவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், இந்த திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹைதாரபாத்தில் நடப்பதாலும், படத்தின் ஹீரோ விஜய், மரியாதைநிமித்தமாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவை சந்தித்துவிடுவது நல்லது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தயாரிப்பாளர் தில் ராஜூ மூலம், முதலமைச்சர் சந்திரசேகர் ராவை, ரநடிகர் விஜய் சந்திப்பதற்கான அப்பாயிண்ட்மெண்ட் கேட்கப்பட்டது. 

தெலுங்கு திரையுலகிலும் தனக்கென ஒரு மார்க்கெட்டையும், தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருக்கும் நடிகர் விஜய், கொரோனா காலகட்டத்தில் அந்த மாநிலத்திற்கும் நிதி உதவி செய்தார். நிவாரண உதவிகளையும் வழங்கினார். அதனால், முதலமைச்சர் சந்திரசேகர ராவின் அப்பாயிண்ட்மெண்ட் உடனடியாக விஜய்க்கு கிடைத்தது. அதையடுத்து, அந்தச் சந்திப்பு தெலுங்கானாவின் பிரகதி பவனில் நடைபெற்றது. நடிகர் விஜய்க்கு முதலமைச்சர் சந்திரசேகர ராவ், சால்வை போர்த்தி நினைவுப்பரிசையும் வழங்கினார். 

சந்திரசேகர ராவ் - விஜய்
சந்திரசேகர ராவ் – விஜய்

இந்தச் சந்திப்புக் இவை மட்டுமே காரணமில்லை. அரசியல் ரீதியாக சந்திரசேகர ராவ், கடுமையாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி-யையும், பிரதமர் மோடியையும் விமர்சனம் செய்து வருகிறார். நடிகர் விஜய் வெளிப்படையாக பி.ஜே.பி மற்றும் பிரதமர் மோடி எதிர்ப்பைக் காட்டவில்லை என்றாலும், தனது நடவடிக்கைகள், திரைப்படங்களில் வைக்கும் சில குறியீடுகள் மூலம் பி.ஜே.பி மற்றும் பிரதமர் எதிர்ப்பை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக, அவரை ஜோசப் விஜய் என்று சொல்லி பி.ஜே.பி தரப்பினர் விமர்சனம் செய்தது, கடந்தாண்டு வருமானவரி சோதனை என்ற பெயரில் அவரை கடுமையாக நடத்தியது போன்ற விஷயங்களில் பி.ஜே.பி எதிர்ப்பு மனநிலையில்தான் விஜய் உள்ளார். அதோடு, பி.ஜே.பி-யை எதிர்க்கும் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியையும்  விஜய் சந்தித்தார் என்ற விபரங்கள் எல்லாம் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதையடுத்தே சந்திரசேகர ராவ் உடனடியாக நடிகர் விஜய்க்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து, சால்வை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கினார் என்றும் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

Also Read – இன்டர்நேஷனல் லெவல் ட்ரோலில் பீஸ்ட் விஜய்… என்ன காரணம்?!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top