Ajith Kumar

மினியேச்சர் ஹெல்மெட் முதல் இன்டீரியர் டிசைன் வரை.. அஜித் பற்றிய 11 சுவாரஸ்யங்கள் #HBDAjith

ஹெல்மெட்களின் காதலரான அஜித், ஒரே ஒரு ஹெல்மெட்டுக்காக 25,000 ரூபாய்க்கும் மேல் செலவழித்திருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

தல’ என்றும்அல்டிமேட் ஸ்டார்’ என்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித் குமார் இன்று 50வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஆரம்பகாலத்தில் மெக்கானிக்காகவும், ஜவுளி ஏற்றுமதி தொழிலும் ஈடுபட்டு வந்த அவர், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நட்சத்திரம் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார்.

அஜித் பற்றிய சுவாரஸ்யமான 11 விஷயங்கள்

 • தனது வீடு, அலுவலகங்களின் இன்டீரியரை வடிவமைப்பதில் அலாதி பிரியம் உண்டு. அவர் வீடு மட்டுமல்லாது, நெருங்கிய நண்பர்களின் வீடுகளுக்கும் இன்டீரியர் டிசைன் செய்து கொடுத்திருக்கிறார்.
 • தினசரி மாலை 6 மணிக்கு ஷூட் முடிந்ததும், சென்னையில் இருந்தால் ஜிம்முக்கும் அங்கிருந்து வீட்டுக்கும் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மாலை நேரங்களைக் குழந்தைகளுடன் கழிப்பதும், அவர்களுடன் விளையாடுவதும் பிடித்தமான பொழுதுபோக்கு.
Ajith Kumar
 • மாலை ஆறு மணிக்கு மேல் அஜித் ஒருவருக்கு போன் செய்கிறார் என்றால், `உங்களிடம் பேச இது சரியான நேரம்தானா?’ என்ற கேள்வியுடனே பேசத் தொடங்குவார்.
 • காரில் சென்றுகொண்டிருக்கும்போது ரசிகர் எவரேனும் டூவீலரில் ஹெல்மெட் இல்லாமல் அவரைச் சந்தித்து பேச முயன்றால், அவர்களுக்கு ஹெல்மெட் வாங்கிக் கொடுத்து அணியச் சொன்ன சம்பவங்களும் நடந்திருக்கின்றன. இதற்கு பெர்சனலாக ஒரு காரணமும் உண்டு என்கிறார்கள். அவருடைய நெருங்கிய நண்பர் சாலை விபத்தில் உயிரிழந்தது, ரொம்பவே பாதித்ததாம்.
 • ஓய்வு நேரங்களில் தூங்குவதில் அவர் எப்போதும் ஈடுபாடு காட்டுவதில்லை. மாறாக, அதுபோன்ற சமயங்களில் போட்டோகிராஃபி, ஓவியம் மற்றும் சமையல் என மற்ற விஷயங்களில் ஈடுபடுவார்.
Ajith Kumar
 • ஒரு படத்தில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, ஒரு பெரிய இயக்குநரோ அல்லது வேறு ஒரு தயாரிப்பாளரோ தன்னை சந்திக்க முயன்றால், என்ன காரணம் என்றாலும் அந்த சந்திப்பைத் தவிர்த்து விடுவாராம். தான் பணியாற்றிக் கொண்டிருக்கும் புராஜக்டில் முழு கவனமும் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புவதே இதற்குக் காரணம்.
 • ஒரு படத்தின் ப்ரீ-புரடக்‌ஷன் வேலைகள் தொடங்கிய முதல் நாளில் இருந்து டப்பிங் பணிகள் முடியும் கடைசி நாள் வரை ஒரே போன் நம்பரைப் பயன்படுத்துவாராம். அந்த புராஜக்டை திருப்தியாக முடித்துக் கொடுத்துவிட்டோம் என்ற திருப்தி ஏற்பட்ட அடுத்த நாளே, தனது போன் நம்பரை மாற்றிவிடுவது அஜித்தின் வழக்கம்.
 • பெரிய இயக்குநர்கள் மூலம் ஹிட் கொடுக்காமல் முன்னணி நடிகர் அந்தஸ்தைப் பெற்ற வெகுசில நடிகர்கள் பட்டியலில் முக்கியமானவர். மாறாக, வி.இஸட்.துரை, எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ், சரவண சுப்பையா என பல முக்கிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமை அஜித்துக்கு உண்டு.
Ajith kumar
 • தன்னைவிட வயதில் மூத்த நடிகர்களோடு ஒரு சீன் நடிக்க நேர்ந்தால், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இயக்குநர்களிடம் சொல்லி அவர்களிடம் முதலில் அந்தக் காட்சியை விளக்கச் சொல்வாராம். வெங்கட்பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்தில் நடித்தபோது, முதலில் அர்ஜூனிடம் காட்சியை விளக்கும்படி அஜித் சொன்ன சம்பவம் நடந்திருக்கிறது.
 • அஜித் நடித்த முதல் படம் கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான `பிரேம புஸ்தகம்’. இயக்குநர் ஸ்ரீனிவாஸ் படத்தின் ஷூட்டிங்கின்போது கடலில் மூழ்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் ஸ்ரீனிவாஸ் பெயரில் அறிமுக இயக்குநர்களுக்கு இன்றளவும் விருது வழங்கி வருகிறார்கள்.
 • கார் ரேஸ், சூப்பர் பைக், ஏரோ மாடலிங், சமையல், போட்டோகிராபி தவிர பிடித்தமான மற்றொரு பொழுதுபோக்கு மினியேச்சர் ஹெல்மெட், ஸ்டாம்புகள் சேகரிப்பது. இதற்கென அஜித், தனது வீட்டில் பெரிய கலெக்‌ஷனே வைத்திருக்கிறாராம். ஹெல்மெட்களின் காதலரான அஜித், ஒரே ஒரு ஹெல்மெட்டுக்காக 25,000 ரூபாய்க்கும் மேல் செலவழித்திருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

Also Read: இந்த க்விஸ்ல நீங்க 8/10 வாங்குனாதான் அஜித் ஃபேன்.. என்ன டீல் ஓகேவா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top