பிக்பாஸ் ஏழாவது சீசன் வந்துடுச்சு. ப்ரோமாலாம் பார்க்கும்போது Did you feel anything? No மீம்தான் ஞாபகம் வருது. முதல் சீசனப்போ இந்த கேம் தமிழ்நாட்டுக்கே புதுசுங்குறதால டீக்கடை, ஆபீஸ், வீடுனு எல்லா இடத்துலயும் இதே பேச்சா இருந்தது. வாரவாரம் ஒரு வைரல் சம்பவம் நடந்தது. ஓவியாவுக்கு என்னாச்சு… ஜூலிக்கு நல்லா வேணும்… ஆரவ் முத்தம் கொடுத்தானாம்டினு தமிழ்நாடு முழுக்க எங்க போனாலும் பிக்பாஸ் ஃபீவர்தான். அட அரசியல்வாதிகளே புலம்புற அளவுக்கு இருந்துச்சுனா பார்த்துக்கோங்களேன். டக்குனு 2017-க்கு ஜம்ப் பண்ணி பிக்பாஸ் முதல் சீசன்ல என்னெல்லாம் நடந்துச்சுனு பார்த்துட்டு வரலாம்.
- பிக்பாஸ்னு ஒண்ணு வரப்போகுது அதுல ஒருவீட்டுல 100 நாள் செலிபிரிட்டிகளை அடைச்சு வைப்பாங்களாம். கமல் ஆங்கரா வரப்போறாருனு சொன்னவுடனே ஏகப்பட்ட யூகங்கள் கெளப்புச்சு. ஹெச் ராஜால இருந்து நித்யானந்தா வரைக்கும் ஏகப்பட்ட சாய்ஸை அள்ளிவிட்டாங்க. தெறிக்கப்போகுதுனு டிவி முன்னாடி உக்காந்தா வையாபுரி, சக்தி, காயத்ரி ரகுராம்னு தமிழ் சினிமால மறக்கடிக்கப்பட்ட கலைஞர்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் மாதிரி வத்தலும் தொத்தலுமான போட்டியாளர்களைப் பார்த்து வெறுத்துப் போய் உக்காந்தது தமிழ் ஜனம். ஒரே ஆறுதல் அனுயா, ரைஸா, ஓவியானு சில முகங்கள்தான். நமீதா ஸ்பெஷல் எண்ட்ரி கொடுக்க போடு தகிட தகிடனு கொண்டாட்டமானாங்க. சோகம் என்னன்னா தமிழ்நாட்டுக்கே டார்லிங் மச்சானா இருந்த நமீதா 28 நாள்ல எவிக்ட் ஆனதும், உள்ள வந்தப்போ நீ யார்ரா கோமாளினு யாருக்குமே தெரியாத ஆரவ் டைட்டில் வின்னர் ஆனதும்தான் பிக்பாஸோட திருவிளையாடல்.
Also Read – விஜய்க்கு ஆப்போசிட், அஜித் ஃபேவரைட், எஸ்.ஏ.சி வழி.. ஜேசன் சஞ்சய் சம்பவம் பண்ணுவாரா?!
- பிக்பாஸ்ல யார் என்ன சொன்னாலும் அது மீம் டயலாக்கா மாறுனது. எல்லாத்துக்கும் இந்த பரணி பயதாங்க காரணம்னு கஞ்சா கருப்பு சொன்னதுல ஆரம்பிச்சு, நாமினேசன்னா என்னாங்கய்யானு சொன்னது, மண்டை சூடாகுது பிக்பாஸ்னு பரணி சொன்னது, தேவையில்லாம டிரிகர் பண்ணாதீங்கனு சக்தி சொன்னது வரைக்கும் வாரம் ஒரு டெம்ப்ளேட்களை அள்ளி வழங்குச்சு பிக்பாஸ்.
- சம்பவங்களாவும் ஏகப்பட்ட விஷயங்கள் நடந்தது. மருத்துவ முத்தம் கொடுத்தாரு கிளம்புன பஞ்சாயத்துதான் ஹைலைட்டு. ஏண்டா முத்தம் கொடுத்தவனை விட்டுட்டு ஒரு முட்டைய திருடி சாப்பிட்ட என்னைய வச்சு செஞ்சீங்களேடானு கணேஷ் வெங்கட்ராம் கேட்கிற மாதிரியான மீம் ஒண்ணு செம்ம ரோஃபலா இருந்தது. குறும்படம் போட்டதுல அந்த செகண்டு முன்னாடி ஓவியா அப்படி சொன்னாக்கானு ஜூலி சொன்னது வைரலோ வைரல். ராணி டாஸ்க்ல ஜூலியை ரெட்கார்பெட்ல போட்டு இழுத்தது, பரணி எகிறி குதிச்சு எஸ்கேப் ஆக டிரை பண்ணது இப்படி ஏகப்பட்ட சம்பவங்கள்.
- பிக்பாஸ் வந்து பேரைக் கெடுத்துக்கிட்டதும் நிறைய பேருக்கு நடந்தது. அதுல முதல் ஆளு ஜூலி. மெரீனா போராட்டத்துல இவங்க பெர்ஃபாமன்ஸ்லாம் பார்த்து, பெத்தா இப்படி ஒரு புள்ளைய பெக்கணும் சார்னு ஃபயர் விட்டவங்கள்லாம் பிக்பாஸ்ல ஜூலி பெர்ஃபாமன்ஸை பார்த்து இவனையா கும்பிட்டோம்னு தெறிச்சு ஓடுனாங்க. ஏகப்பட்ட நெகட்டிவிட்டி அவங்க மேல வந்தது. அடுத்தது காயத்ரி ரகுராம், சேரி பிகேவியர், முடி கமெண்ட்னு ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்தது. தூளியிலே ஆட வந்த குழந்தையாவே இருந்த சக்திக்கும் இந்த சீசன்னால ஏகப்பட்ட கெட்ட பெயர்தான் வந்தது.
- இந்த 100 நாட்களும் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் டார்லிங்கா இருந்தது ஓவியாதான். ஒதுங்கிக்கோ இல்லைனா ஸ்ப்ரே அடிச்சிருவேன்னு கேமராகூட ரொமான்ஸ் பண்ணதுல ஆரம்பிச்சு தலைவி என்ன பண்ணாலும் லவ்ஸ் குவிஞ்சது. ஜூலி அழுதப்போ சப்போர்ட் பண்ணது, எங்க அடிங்க பார்க்கலாம்னு சக்திகிட்ட எகிறனது, பரணி கெளம்புறப்போ பாய் சொல்லி அனுப்புனது இப்படி தமிழக மக்கள்கிட்ட செம்மயா ஸ்கோர் பண்ணி தேவதையா வலம் வந்தாங்க. அதனாலதான் ஹவுஸ்மேட்ஸ் நாமினேட் பண்ணாக்கூட மூணு கோடி வாக்குகள் வாங்கி பிக்பாஸ் சரித்திரத்தையே புரட்டி போட்டாங்க. ஓவியாவுக்கு போட்ட ஓட்டை எனக்கு போட்டிருந்தா சி.எம் ஆகிருப்பேனேனு அன்புமணி ராமாதாஸ் புலம்ப வச்சாங்க. ஒட்டுமொத்த வீடும் தனக்கு எதிரா இருந்தப்போவும் அசால்டா ஹேண்டில் பண்ண ஓவியாவே கன்ஃபசன் ரூம்ல அழுததும் தற்கொலை முயற்சி பண்ணி வெளியேறினதும் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்குன சம்பவங்கள். இன்னைக்கு வரைக்கும் தமிழ் பிக்பாஸ் வரலாற்றுல அதிகமான வியூஸ், டி.ஆர்.பி வாங்குனது அந்த எபிசோடாதான் இருக்கும்னு அடிச்சு சொல்லலாம்.
- பிக்பாஸ்ல இருந்து வெளிலவந்து ஆரவ், ஓவியாவுக்கு சில படங்கள் கிடைச்சது. ஹரிஷ், ரைஸா சேர்ந்து நடிச்ச பியார் பிரேமா காதல் கமலோட விஸ்வரூபம் 2-கூட க்ளாஸ்விட்டு ஜெயிச்சது, ஜூலி டிவி ஸ்டாராவும், காயத்ரி அரசியல் பிரமுகராவும் தொடர்றாங்க, கஞ்சா கருப்பு, பரணி, வையாபுரி, ஆர்த்தி, சக்தி இவங்க என்ன ஆனாங்கணே தெரியல. ஒட்டுமொத்தமா சிலருக்கு நல்லது நடந்திருக்கு. சிலருக்கு கெட்டது நடந்திருக்கு.
இவ்வளவு வைரல் சம்பவங்கள் அதற்கடுத்து வந்த எந்த சீசன்லயும் நடக்கலைனுதான் நான் நினைக்குறேன். பிக்பாஸ் முதல் சீசன்ல உங்களுக்கு மறக்க முடியாத சம்பவம் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.