என்னடா பண்ணி வைச்சிருக்கீங்க… Fake ஐபிஎல் நடத்தி ரஷ்யர்களுக்கு விபூதி அடிச்ச குஜராத் கிராமம்!

ஐபிஎல் மாதிரியான பணம் விளையாடுகிற ஒரு தொடரை ஃபேக்கா நடத்தி, அந்தப் போட்டிகளை வைச்சு பெட்டிங்கும் நடத்தி ரஷ்யர்களுக்கு விபூதி அடிச்சிருக்கு ஒரு கும்பல்.. நீங்க கேட்டது சரிதான். உண்மையிலேயே ஒரு Tournament நடக்குறதா Tver, Voronezh மற்றும் Moscow நகரங்கள்ல இருக்க பெட்டிங் பிரியர்களை நம்ப வைச்சு, அபீசியல் டெலகிராம் சேனல் மூலமா பெட்டிங்கையும் நடத்திருக்காங்க.. சொன்னா நம்ப மாட்டீங்க… சி.எஸ்.கே, மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸோட ரியல் ஜெர்ஸியோட விளையாடுன 21 பேரும் விவசாயக் கூலித் தொழிலாளர்களாம். அதே மாதிரி, 5 HD கேமராக்கள் மூலமா போட்டியை யூ டியூப்ல லைவ் ரிலேவேற காட்டிருக்காங்க.. போலீஸ் டீம் போய் அவங்களைப் பிடிக்குறப்ப கிட்டத்தட்ட Pre-quarter finals ஸ்டேஜ் வரைக்கும் போய்ட்டாங்க… 

ஃபேக் ஐபிஎல்

சரி எப்படி இப்படி ஒரு போலியான செட்டப்பை ரெடி பண்ணாங்க… இதுக்கு மாஸ்டர் மைண்ட் யாரு… 15 நாளுக்கு மேல ரஷ்யர்களை நம்ப வைக்க இவங்க என்னவெல்லாம் டிரிக் யூஸ் பண்ணாங்க… இதைப்பத்திதாங்க நாம பார்க்கப்போறோம். 

400 ரூபாய் சம்பளம்

குஜராத்தோட Mehsana மாவட்டத்துல இருக்க ஒரு சின்ன கிராமம்தான் மோலிபூர். இந்த கிராமத்துல இருக்க விவசாயக் கூலிகள், வேலை இல்லாத இளைஞர்களை ஒரு கும்பல் அணுகியிருக்கு. ஒரு மேட்சுக்கு 400 ரூபாய் சம்பளம்… விளையாட வர்றீங்களானு 21 பேரை தங்களோட வலையில விழவைச்சிருக்காங்க. ஐபிஎல் முடிஞ்சு 3 வாரத்திலேயே இந்த Fake IPL தொடரை ஆரம்பிச்சுட்டாங்களாம். 

ஃபேக் ஐபிஎல்

ரஷ்யால குறிப்பிட்ட நகரங்கள்ல இருக்க பப்கள்தான் பெட்டிங்குக்கு மையப் புள்ளியா இருக்கும். அப்படியான பப்களில் பெட்டிங் பிரியர்கள் படையெடுப்பாங்களாம். அவங்கதான் இந்த மோசடி கும்பலோட ஒரே டார்க்கெட். அவங்களை நம்ப வைக்கிறதுக்காக, ஒரு விவசாய நிலத்தை ஒரு மாசத்துக்கு காண்ட்ராக்டுக்கு எடுத்து கிரவுண்ட் செட்-அப் போட்டிருக்காங்க. பெரிய பெரிய ஹாலஜன் பல்புகள்லாம் போட்டு செட் அமைச்சிருக்காங்க. அதேமாதிரி, ஐபிஎல் டீம்ஸோட ஜெர்ஸிகளோட இளைஞர்களையும் களமிறக்கிட்டு, விளையாட்ட யூடியூபில் லைவ் செய்ய 5 ஹெச்.டி கேமாரக்களையும் செட் பண்ணிருக்காங்க.. இதைவிட பெரிய விஷயம் என்னான்னா, ஃபேமஸான ஸ்போர்ட்ஸ் கமெண்டேட்டரான ஹர்ஷா போக்ளே மாதிரியே மிமிக்ரி செய்ற ஒருத்தரை மீரட்ல இருந்து கூட்டிட்டு வந்து கமெண்ட்ரியும் பண்ணிருக்காங்க. அதோட, கிரவுண்ட் சவுண்டை இண்டர்நெட்ல இருந்து டவுன்லோட் பண்ணி, அதையும் ரியாலிட்டிக்காக பிளே பண்ணிவிட்டிருக்காங்க. 

Also Read : மிரட்டல் சதம்… சூர்யகுமார் யாதவ் ஏன் பெஸ்ட்?

எப்படி கல்லா கட்டுனாங்க?

பவுண்டரி, விக்கெட்னு பெட்டர்ஸ் பெட் கட்டுவாங்கல, அதை அப்படியே ஆன்ஃபீல்டு அம்பயருக்கு சொல்லிடுவாங்களாம். என்ன பண்ணனும்ங்குற இன்ஸ்ட்ரக்‌ஷனோட அம்பயர் ஃபீல்டுல இருக்க பேட்ஸ்மேன், பௌலருக்கு தகவல் போய்டுமாம். அதுக்கேத்த மாதிரி ஸ்லோ பால் போட்டு, பேட்ஸ்மேன் சிக்ஸர், ஃபோர் அடிக்க ஏதுவா பௌலிங் போடுவாங்களாம். அதேமாதிரிதான் விக்கெட்னாலும். Infact போலீஸ் இந்த கும்பலை கேட்ச் பண்ணப் போனபோது 3 லட்ச ரூபாய் மதிப்பிலான பெட்டிங் நடந்துட்டு இருந்ததையும் கண்டுபிடிச்சிருக்காங்க.. இந்த சம்பவம் தொடர்பா இதுவரைக்கும் 4 பேரை அரெஸ்ட் பண்ணிருக்க குஜராத் போலீஸ், அவங்க பணம் எப்படி கைமாறுச்சுங்குற ஹவாலா நெட்வொர்கையும் டிரேஸ் பண்ற வேலையை ஆரம்பிச்சிருக்காங்களாம். 

ஃபேக் ஐபிஎல்

யாரு மாஸ்டர் மைண்ட்!

குஜராத் கிராமத்துல வீரர்களை 400 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்துனது, கிரவுண்ட், லைட், கேமரா செட்டப் எல்லாம் பண்ணது சோயப் தவ்டானு ஒருத்தர். ரஷ்யாவுல பெட்டிங்குன்னு ஃபேமஸா இருக்க ஒரு பப்ல வேலை பார்த்துட்டு, நாடு திரும்புனவராம் அவரு. இவர்தான் எல்லாத்தையும் ஒருங்கிணைச்சதா குஜராத் போலீஸ் சொல்றாங்க. ஆனா, அவர்கிட்ட விசாரணை நடத்துனப்போ, ரஷ்யால இருக்க பப்ல தான் மீட் பண்ண ஆசிஃப் முகமதுனு ஒருத்தர சந்திச்சாராம். அவரோட ஐடியாபடியே இந்த Fake IPL நடத்துனதா சொல்லிருக்கார். ரஷ்யாவுல பெட்டிங் பண்றவங்களுக்கு ஆன்லைன்ல கிளாஸ் எடுத்த அனுபவம் இருக்கவராம் இந்த ஆசிஃப். அவரே அங்க இருக்க சில பப்களில் வேலையும் பார்த்திருக்காராம். என்னடா பண்ணி வைச்சிருக்கீங்க… 15 நாளா முழுநேர வேலையாவே இதைப் பார்த்திருக்கீங்களேனு குஜராத் போலீஸ் மெர்சலாகிட்டாங்களாம். 

இந்தியாவில் பெட்டிங் லீகலா?

இந்திய சட்டப்படி பெட்டிங் இங்க அனுமதி இல்லை. சட்டப்பூர்வ அனுமதியோட பெட்டிங் சைட்ஸ் நடத்த முடியாது. ஆனால், நம்ம நாட்டுக்கு வெளில இருந்து செயல்படுற பெரும்பாலான பெட்டிங் சைட்ஸ் இந்திய ரூபாய்ல பெட்டிங் நடத்த அனுமதிக்குறாங்க..

சரி, இந்த Fake IPL மோசடி பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்றதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!

1 thought on “என்னடா பண்ணி வைச்சிருக்கீங்க… Fake ஐபிஎல் நடத்தி ரஷ்யர்களுக்கு விபூதி அடிச்ச குஜராத் கிராமம்!”

  1. Đến với J88, bạn sẽ được trải nghiệm dịch vụ cá cược chuyên nghiệp cùng hàng ngàn sự kiện khuyến mãi độc quyền.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top