வீட்டின் சமையலறையில் இருக்கும் சிங்க் எப்போதும் ஜன்னலுக்குக் கீழே இருக்கும்படி டிசைன் செய்யப்படுவது ஏன்… காரணம் என்னவா இருக்கும்னு எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா?
வீட்டின் டிசைன்
வீடு கட்ட வேண்டும் என்று நீங்கள் நினைக்கும்பட்சத்தில், இருக்கும் இடவசதியைப் பொறுத்து அதன் வடிவமைப்பைத் தேர்வு செய்வீர்கள். உங்கள் ரசனையைப் பொறுத்து, கிளாசிக்கான டிசைன் வேண்டுமா அல்லது மாடர்னாக இருக்க வேண்டுமா என்பது பற்றியெல்லாம் முடிவெடுப்பீர்கள். நீங்கள் தேர்வு செய்யும் டிசைனைப் பொறுத்து வீட்டின் முகப்பு, ஹால், பெட்ரூம், கிச்சன் உள்ளிட்ட இடங்களின் அமைப்பும் மாறும். ஆனால், ஒரு சில விஷயங்கள் எல்லா வீட்டிலும் ஒரே மாதிரியே இருக்கும். அப்படியான விஷயங்களில் ஒன்று நமது கிச்சனில் அமைக்கும் சிங். அது எப்போதுமே ஜன்னலுக்குக் கீழே இருக்கும்படியே டிசைன் செய்வார்கள். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்னு எப்பவாவது சிந்தித்ததுண்டா… இதற்குப் பதில் பெரும்பாலும் இல்லை என்பதாகவே இருக்கும்.
கிச்சன் சிங்க்

ஆனால், இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதி இந்தக் கேள்வியை எழுப்பி, Reddit-ல் பதிவிடவே அது வைரலாகியிருக்கிறது. `நாங்கள் கிச்சனை புதுப்பித்துக் கொண்டிருக்கிறோம். கிச்சனில் இருக்கும் சிங்கை இடமாற்றினால், அதிக இடவசதி கிடைக்கும் என்று எண்ணினோம். ஆனால், அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் தெரியவந்தது. எல்லா வீடுகளிலும் கிச்சன் சிங்க் என்பது ஜன்னலுக்குக் கீழேதான் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான காரணம் என்ன.. ஏன் எல்லா வீடுகளிலும் கிச்சன் சிங்கை ஜன்னலுக்குக் கீழே இருக்கும்படியே டிசன் செய்கிறார்கள்’ என்ற கேள்வியோடு ஒரு போஸ்ட் போட்டிருந்தார்.
இந்தக் கேள்விக்கு நூற்றுக்கணக்கானோர் பதிலளிக்கத் தொடங்கினர். மேலும், பலர் கூகுள், கிச்சன் எக்ஸ்பர்ட்ஸின் ஐடியாக்களை மேற்கோள் காட்டி பதில்களை அளித்திருந்தனர். அவர்கள் கூற்றுப்படி, `கிச்சனில் இருக்கும் சிங் ஜன்னலுக்குக் கீழே இருக்கும்படி டிசைன் செய்வதற்குக் காரணமே அந்த ஜன்னல்தான். சுவரின் வெளிப்பகுதியாக இருக்கும் ஜன்னலுக்குக் கீழே சிங்கை அமைப்பதன் மூலம், அதிலிருந்து வெளியேறும் கழிவுகளுக்கான பைப்பின் நீளத்தைக் குறைக்க முடியும். அதாவது, இப்படி டிசைன் செய்தால் வேஸ்ட் பைப் நீளம் குறைவாக இருக்கும். இது புத்திசாலித்தனமான யோசனை மட்டுமல்ல; பணத்தை சேமிக்கும் வழியும் கூட’ என கிச்சன் எக்ஸ்பர்ட் நிறுவனம் ஒன்றை பெரும்பாலானோர் மேற்கோள் காட்டியிருந்தனர்.

அதேபோல், ஜன்னலுக்குக் கீழே சிங்க் அமைக்கப்படும்போது, அதன் வழியாக இயற்கை ஒளி அதிகம் உள்ளே வர வழிவகுக்கும். மேலும், நீங்கள் கைகளால் பாத்திரங்களைக் கழுவும்போது, அவை சீக்கிரமாக உலர வாய்ப்பு ஏற்படும். பாத்திரங்களில் இருக்கும் துர்நாற்றமும் வெளியேறும் என்று கமெண்டுகளைத் தெறிக்க விட்டிருக்கிறார்கள்…
இந்தப் பதில்கள் சரிதானா… இல்லை, எல்லா வீடுகளிலும் கிச்சன் சிங்க் டிசைனுக்குப் பின்னாடி வேற எதுவும் காரணம் இருக்கானு நீங்க நினைக்கிறீங்களா.. கமெண்ட்ல சொல்லுங்க மக்களே!
Also Read – Solo Trip-க்கு பிளான் பண்றீங்களா… நோட் பண்ண வேண்டிய 11 விஷயங்கள்!
Hi every one, here every person is saring these kinds of knowledge,
therefore it’s good to read this weblog, and I used tto visit this website every day. https://z42MI.Mssg.me/