தமிழ் சினிமா ரசிகர்களால் கன்னடத்துப் பைங்கிளி’, `அபிநய சரஸ்வதி’ என்று பாசத்தோடு கொண்டாடப்பட்டவர் சரோஜா தேவி.
சரோஜா தேவியை 70ஸ், 80ஸ் கிட்ஸ் ஏன் கொண்டாடினார்கள்… அதற்கான 4 காரணங்களைத்தான் நாம இப்போ தெரிஞ்சுக்கப் போறோம்.
சரோஜா தேவி – ஒரு பாடலுக்கு நடனம் டு ஹீரோயின்
கன்னட திரையுல ஜாம்பவான் ஹொன்னப்ப பாகவதரின் கண்டுபிடிப்பு சரோஜா தேவி. இசை நிகழ்ச்சி ஒன்றில் அவரது குரலைக் கேட்டு பாடகியாக்க நினைத்திருக்கிறார். ஆனால், தோற்றப்பொலிவு அவரை ஹீரோயின் சரோஜா தேவியாக்கியது. சிம்ரனின் ஜோடி’ படத்தில் த்ரிஷா தலைகாட்டியது போல், அப்போதைய முன்னணி ஹீரோயினான வைஜெய்ந்தி மாலாவுக்குத் தோழியாக பார்த்திபன் கனவு படத்தில் நடித்திருந்தார்.சரோ’ என்று திரையுலகினரால் செல்லமாக அழைக்கப்படும் அவர், தொடக்க காலத்தில் பி.ஆர்.பந்துலு இயக்கிய `தங்கமலை ரகசியம்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.

தமிழில் அவருக்கு முதல் ஹீரோயின் வாய்ப்பு அவ்வளவு சுலபமாகக் கிடைத்துவிடவில்லை. தங்கமலை ரகசியம் படத்தில் இருநூற்று ஐம்பது ரூபாய் சம்பளத்தில் ஆட வந்தவர் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஹீரோயினாகும் வாய்ப்பு ஏற்பட்டது. எம்.ஜி.ஆர், முதன்முதலில் இயக்கிய நாடோடி மன்னன் படத்தில் ஹீரோயினாக சரோவை நடிக்க வைக்க எண்ணினார். ஆனால், ஒரு பாடலுக்கு நடனமாடுபவரை ஹீரோயினாக நடிக்க வைப்பதா என்ற பேச்சு எழுந்தது. அவரின் தமிழ் உச்சரிப்பும் இடைஞ்சலாக இருந்தது. அதன்பிறகு, மேக்கப் டெஸ்டில் அசத்திய சரோ, நாடோடி மன்னனில் இளவரசி ரத்னாவாக ஜொலித்தார். ரத்னா கேரக்டர் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் அவரைக் கொண்டுபோய் சேர்த்தது. அவரைத் திரையில் பார்த்த ரசிகர்கள், ஒருபக்கம் பார்த்தால் பத்மினி; மறுபக்கம் பார்த்தால் வைஜெயந்தி மாலா எனக் கொண்டாடித் தீர்த்தனர்.
Also Read:
vedham pudhithu: தமிழ் சினிமாவை அதிரவைத்த `வேதம் புதிது’ – எம்.ஜி.ஆர் பார்த்த கடைசிப் படம்!
திறமைதான் பேசணும்
1970-களின் இறுதியில் சரோவுக்கு மிகப்பெரிய டஃப் ஃபைட் கொடுத்தவர் வைஜெயந்தி மாலா. இயக்குநர் ஸ்ரீதரின் கல்யாணப் பரிசு, அதன் தெலுங்குப் பதிப்பான பெல்லி காணுக’ ஆகிய இரண்டு படங்களிலும் சரோதான் ஹீரோயின். ஆனால், அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் இந்திப் பதிப்பானநஸ்ரானா’வில் வைஜெயந்தி மாலா. அதே சமயத்தில் எல்.வி. பிரசாத்தின் சுக்ரால்’ படம் மூலம் இந்தியில் அறிமுகமானார் சரோ. ஒரே நாளில் இந்த இரண்டு படங்களும் வெளியானதில், சுக்ரால் மிகப்பெரிய வெற்றிபெற்றது. கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது நஸ்ரானா. அந்தப் படத்தின் விமர்சனங்களில்,சரோ போல் அடிபட்ட மனத்தின் ஆழ்ந்த உணர்ச்சியை வெளிப்படுத்த, வைஜெயந்திமாலா சற்றுச் சிரமப் படுகிறார்’ என்று பத்திரிகைகள் எழுதின. அந்த அளவுக்கு கல்யாணப் பரிசு வசந்தி கேரக்ட்ராகவே வாழ்ந்திருப்பார் சரோஜா தேவி.

என் ரூட்டு தனி ரூட்டு
அன்றைய தமிழ் சினிமா ஹீரோயின்களான தேவிகா, பானுமதி, வைஜெயந்தி மாலா, பத்மினி உள்ளிட்டோரிடமிருந்து சரோஜா தேவியைத் தனித்துக் காட்டியது அவரது தனி பாணி. டிரெஸ்ஸிங், மேக்கப், ஹேர் ஸ்டைல் என்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதேபோல், நடை, உடை, பாவனையிலும் தனக்கென தனி வழக்கத்தைக் கொண்ட அவரை, `அபிநய சர்ஸ்வதி’ என்று புகழப்பட்டார். எம்.ஜி.ஆருக்கு இவரெல்லாம் ஹீரோயினா எனக் கேட்கப்பட்ட சரோஜா தேவி, தனது கரியரில் அவருடன் இணைந்து நடித்த படங்களின் எண்ணிக்கை 26. சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் நடித்திருக்கிறார்.
பாசிட்டிவிட்டி மேக்ஸ்
தனது கரியரின் ஆரம்ப காலகட்டங்களில் தமிழ் உச்சரிக்கவே சிரமப்பட்டிருக்கிறார். கல்யாணப் பரிசு படத்தில் `வரு ரூபாய்’,வண்ணுமில்லை ச்சும்மா’ என வசனங்களில் தடுமாறிய அவருக்கு ஜெமினி கணேசன் வசனங்களைச் சொல்லித் தருவாராம். ஆனால், பின்னாட்களில் இந்த வசன உச்சரிப்பைத் தனது தனித்த அடையாளமாக்கி சாதித்தவர் சரோ. முறைப்படி பரதம் கற்றதில்லை; நாடகத்தில் நடித்த அனுபவமும் கிடையாது; கவர்ச்சி என்பது எள்ளளவும் கிடையாது – இப்படி நெகட்டிவ்கள் இருந்தாலும் தனது அபிநயங்களாலும், தேர்ந்த நடிப்பாற்றலாலும், நளினத்தாலும் 70ஸ், 80ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் சரோஜா தேவி.

புதிய பறவை படத்தில் சிவாஜி கணேசனை காதலிப்பதாக நடித்து ஏமாற்றும் லதா கேரக்டராக இவர் பேசும் வசனம் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் வசனங்களில் முக்கியமானது. `கோப்பால்… கோப்பால்’ என்று கொஞ்சும் குரலில் அவர் பேசிய டயலாக்கின் ரீச் பத்தி நாங்க சொல்ல வேண்டியதில்லை மக்களே!
Also Read – `நவரச நாயகன்’ கார்த்திக் ஏன் கொண்டாடப்படுகிறார்… ஐந்து காரணங்கள்!





Very interesting topic, thank you for posting.
Tham gia cộng đồng game thủ tại Go88 để trải nghiệm các trò chơi bài, poker phổ biến nhất hiện nay.
Khám phá thế giới giải trí trực tuyến đỉnh cao tại MM88, nơi mang đến những trải nghiệm cá cược thể thao và casino sống động.