தாமிரபரணி

ஹரி – விஷாலின் வெறியாட்டம் – தாமிரபரணி ஏன் ஸ்பெஷல்?

ரத்தக்களறியா ரத்னம் படத்தோட டைட்டில் ரிலீஸ் ஆகியிருக்கு. விஷால் வெறித்தனமா இருக்கார். ஏற்கனவே ரெண்டுமுறை இணைஞ்ச ஹரி – விஷால் கூட்டணியில தாமிரபரணியும், பூஜையும் பாக்ஸ் ஆபீஸ் பட்டையக் கிளப்புற மாதிரி சம்பவம் பண்ணியிருக்கு. மார்க் ஆண்டனியில கம்பேக் குடுத்துட்டு அடுத்த ஹிட்டுக்காக ஹரியுடன் இணைஞ்சிருக்கார், விஷால். ஆனா உண்மையிலேயே இது ஹரிக்கு ரொம்ப முக்கியமான படம். ஆனா இவங்க இணைஞ்சு சம்பவம் பண்ணின முதல் படம் தாமிரபரணி இன்னைக்கும் அவ்ளோ ஸ்பெஷல் இருக்கு.

விஷாலோட கரியர்ல சண்டக்கோழி எவ்ளோ முக்கியமோ, அதே அளவுக்கு தாமிரபரணி ரொம்ப முக்கியம். சண்டக்கோழியில செகண்ட் ஹாஃப் ராஜ்கிரனோடதுன்னா, தாமிரபரணி முழுக்க விஷாலோட வெறியாட்டம்தான். முந்தைய படமான சிவப்பதிகாரம் படத்துல இருந்து மீட்டுக் கொண்டுவந்த படம். முழுக்க முழுக்க சவுத் தமிழ்நாட்டோட ஸ்டாரா கொண்டுபோய் மக்கள் மத்தியில சேர்த்தப்படம்னு கூட சொல்லலாம். ‘குடும்பத்துக்குள் பகை வந்தா யார் ஜெயிக்கிறாங்கங்குறது முக்கியம் இல்ல, யாருமே தோற்கக் கூடாதுங்குறதுதான் கெளரவம். இதுதான் தாமிரபரணியோட கான்செஃப்ட்.

ஹரி!

ஊருக்குள்ள கெட்டவனா பெயரை மாத்திட்டு வாழுற விஷாலுக்கு தய்மாமா பிரபு மேல அளவு கடந்த பாசம். நல்லவர் பிரபுவுக்கு நாசர் அண்ட் கோ கொடுக்குற தொல்லையில இருந்து பிரபு மீண்டாரா, விஷால் எப்படி மாமாவை பாதுகாத்தார்னு அடிதடி, அன்பு கலந்து சொல்லியிருப்பார் ஹரி. இந்த கதை நடக்குற இடம் ஹரியோட சொந்த மண்ணுங்குறதால இந்த மக்ரூன் குடுக்குற வேலைலாம் வேணாம்னு வசனங்கள்ல கூட நேட்டிவிட்டி இருக்க மாதிரி பண்ணியிருப்பார். அதேபோல ஸ்கிரீன் ப்ளேவுல கெட்டவா சுத்துற ஹீரோவையும் மக்களுக்கு பிடிக்கிற மாதிரி டோஸ் ஏத்தியிருப்பார். அப்படியே ஆப்போசிட்டா குடும்பத்துக்குள்ள பாண்டிங் காட்டுறப்போ டீப்பா போய் உருக வைச்சிருப்பார். சென்டிமெண்ட்டான வசனங்கள் ஹரியோட இன்னொரு ப்ளஸ். உள்ளூர் கிரவுண்ட்ங்குறதால கொஞ்சம் ஆக்‌ஷன் சீக்வென்ஸ்ல இறங்கி அடிச்சிருப்பார், ஹரி. ப்ளாஷ்பேக்ல ஆரம்பிக்கிற படத்துக்குள்ளயே ரெண்டு ப்ளாஷ்பேக் இருக்கு அப்படிங்குறதே படம் முடிஞ்சு யோசிச்சாத்தான் அட ஆமால்லனு யோசிக்கத் தோணும். தன் ஊரின் மண்மணத்தை மாறாமல் நம்மையே கதைக்குள்ளயே உலவ விட்டிருப்பார். ஹரியோட இயக்கத்துல வெளியான படங்கள்ல இந்த படத்தோட பெயர்தான் பெரிசு.

கேரக்டர்ஸ்!

ஆக்ஷன் ஹீரோவா விஷாலுக்கு இன்னொரு ஹிட். தெக்கத்திப் பையனுக்கு உரிய நெறமும் ஒசரமும் அம்சமாகப் பொருந்திப் போனார் விஷால். ‘நான் ரொம்பக் கெட்ட வன்லே’னு சண்டைக் கோழியாய் திமிரு பிடிச்சு அலையுறதும், தண்டவாளத்துல அரிவாளை தீட்டுறதும்னு ஆக்ரோஷமான நடிப்பு விஷாலோடது. அதே விஷால்தான் க்ளைமாக்ஸ்ல கண்களை ரிங்கை காட்டி கலங்க வைச்சிருப்பார். விஷால் உலக்கையை தூக்கி அடிச்சா, பிரபு உருகித்தவிக்கிறதுல ஸ்கோர் பண்ணார். பிரபுவோட செகண்ட் இன்னிங்ஸ் ஸ்டார்ட் ஆனதுக்குக் காரணமும் தாமிரபரணிதான். அதேபோல பர்ஸ்ட் ஹாஃப் முழுக்க வில்லியா வலம் வர்ற நதியா, பிரபுவோட கால்ல மெட்டி பார்க்கிற காட்சி அழகான கவிதை. வில்லத்தனம் காட்டுறப்போவும் சரி, பிரபுவுக்காக நாசர்கூட சண்டைபோடுறதும்னு மிரட்டினார் நதியா. முதல் படம்னே தெரியாத அளவுக்கு ஹீரோயின் பானு காதல், ஏக்கம், பரிதவிப்புனு அசத்தியிருப்பார். க்ளைமாக்ஸ்ல பார்க்கிற பானுவுக்கு இது முதல் படம்னே சொல்ல முடியாது. அந்த அளவுக்கு மெச்சூரிட்டியான நடிப்பு. இதுபோக நாசர், மனோரமா, விஜயகுமார், நிழல்கள் ரவி, ஆகாஷ், ரோஹிணினு ஃப்ரேமுக்கு ஃப்ரேம் நட்சத்திரக் கூட்டம்தான். எல்லோருக்குமே ஸ்கோர் பண்ணக் கூடிய இடங்கள் பல இருக்கு.

Also Read – ஜீவா, ஆர்யா, அதர்வா தமிழ் சினிமா நல்ல நடிகர்கள்-தான்… எங்க மிஸ் பண்றாங்க?

டெக்னிக்கல் டீம்!

ஆக்ஷன் காட்சிகளில் ப்ரியனின் கேமரா களம் இறங்கி அதிரடியாவும், அதுவே மத்த இடங்களைக் காட்டும் போது இதமாவும், யதார்த்தமாகவும் மாறுது. இசை யுவன்சங்கர் ராஜா சண்டக்கோழி, திமிருனு ஒன்னு சேர்ந்த கூட்டணி மூணாவது முறையா தாமிரபரணியில் ஒன்னு சேர்ந்தது. விஷாலோட இன்ட்ரோ சீன்லயே பிஜிஎம்ல மாஸ் பண்ணியிருப்பார், யுவன். க்ளைமாக்ஸ் காட்சியில விஷால் ஃபீல் பண்றப்போ, பின்னணி இசையால மிரட்டியிருப்பார். அதுலயும் கற்பூர நாயகியே கனகவல்லி பட்டை, கருப்பான கையால என்ன புடிச்சானு மெட்டை எடுத்து யூஸ் பண்ணியிருப்பார், யுவன்.

எமோஷனல் சீன்ஸ்!

ஒரு கமர்சியல் படத்துக்கு ஆக்‌ஷன் எவ்ளோ முக்கியமோ, அதே அளவுக்கு எமோஷன் முக்கியம். அதைக் கச்சிதமா பண்ணியிருந்தார் ஹரி. எமோஷனல் சீன்ஸ்ல கொஞ்சம் சொதப்பினாலும் போர் அடிச்சிரும். ஆனா இந்த படத்துல ஆக்‌ஷன் நடந்த அடுத்த சீனே எமோஷனலுக்கு மோடு மாறி டாப்கியர்ல பறக்கும். எமோஷன் காட்சிகள்ல வர்ற நறுக் சுறுக் வசனங்கள் படத்தோட மிகப்பெரிய பலம். க்ளைமாக்ஸ்ல என் காதல் செத்துப்போச்சுனு தெரியும், ஆனா அது ஜெயிச்சதா, தோத்ததானு தெரியணுனு பானு கேட்கிறப்போ வசனமே இல்லம ரிங் எடுத்துக் கொடுப்பார் விஷால். அதுதான் டயலாக் மொத்த எமோஷனும் கன்வே ஆகிடும். எமோஷனல் காட்சிகள்னா பக்கம் பக்கமா வசனம் பேசணும்னு இல்லாம, டயலாக்கை குறைச்சும் அதை கன்வே பண்ணலாம்னு காட்டியிருந்தார் ஹரி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top