சந்தானம்

காமெடியன் சந்தானத்தை நாம ஏன் மிஸ் பண்றோம்… 3 காரணங்கள்!

காமெடியன் டு ஹீரோவா புரமோஷன் ஆகியிருக்கிறார் சந்தானம்… ஆனாலும், தமிழ் சினிமா ரசிகர்கள் காமெடியன் சந்தானத்தை ரொம்பவே மிஸ் பண்றாங்க… அதுக்கான 3 காரணங்களைத்தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

சிவகார்த்திகேயனும் இவரும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு காமெடியனாக நடிக்க வந்தவர்கள். ஒரு கட்டத்தில் இருவருமே காமெடி ரோல்களை விட்டுவிட்டு தனி ஹீரோவாகவே நடிக்கத் தொடங்கிவிட்டனர். சிவகார்த்திகேயனுடனான ஒப்பிடல் குறித்த கேள்விக்கு சந்தானம் என்ன பதில் சொன்னார் தெரியுமா… வீடியோவை முழுசா பாருங்க… அவர் என்ன சொன்னாருங்கிறதை நானே சொல்றேன்.

டிரெண்ட் செட்டர்

தமிழ் சினிமா காமெடிங்குறது ஒவ்வொரு காலகட்டத்துலயும் ஒவ்வொரு டிரெண்டை ஃபாலோ பண்ணிட்டு வரும்.. அப்படி, என்.எஸ்.கிருஷ்ணன் காலத்துல இருந்த காமெடி அடுத்து வந்த ஜெனரேஷன்ல இல்ல.. எம்.ஆர்.ராதா, நாகேஷ், சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன் காமெடிகள்ல இருந்து கவுண்டமணி – செந்தில், வடிவேலு, விவேக் காமெடிகள் முற்றிலும் மாறுபட்டவை. இப்படி ஒவ்வொரு ஜெனரேஷன்லயும் ஒரு டிரெண்ட் புதுசாவே உருவாகும். இந்த டிரெண்டை அந்தந்த காலத்துல உருவாகுற காமெடி ஆக்டர்கள் உருவாக்கி டிரெண்ட் செட்டரா இருப்பாங்க. 2000-த்துக்குப் பிறகு அப்படியான டிரெண்ட் செட்டர் காமெடியனா தன்னை தமிழ் சினிமாவில் நிலைநிறுத்திக்கிட்டவர்தான் நம்ம சந்தானம்.

கதையோடு அமையும் காமெடி

கோலிவுட் படங்கள்ல காமெடிக்குனு தனி டிராக் இருந்த பாதையை மாத்தி கதையோடு இயல்பா காமெடியும் வந்தா நல்லா இருக்கும்னு மாற்றத்தைக் காமிச்சவர் நம்ம சந்தானம். இப்படியான ஒரு தனி ராஜாங்கத்தை நடிகர் கவுண்டமணி செய்திருந்தாலும், அவருக்குப் பிறகு மிகப்பெரிய இடைவெளி விழுந்தது. அந்த இடைவெளியைக் கச்சிதமாகப் பூர்த்தி செய்தவர் சந்தானம். சிவா மனசுல சக்தி விவேக், ஒரு கல் ஒரு கண்ணாடி பார்த்தா, என்றென்றும் புன்னகை பேபி, கலகலப்பு வெட்டுப்புலி, சிறுத்தை காட்டுப்பூச்சினு இப்படியாக இவர் பண்ண சம்பவங்களோட லிஸ்ட் ரொம்பவே பெருசு. பல படங்கள்ல காமெடியோட சேர்ந்து கதையின் போக்குக்கும் இவரோட கேரக்டர் வலு சேர்க்கும்படி அமைக்கப்பட்டிருக்கும்.

ஹீரோவா… கொஞ்சம் ஓராமா நில்லு!

ஹீரோயிசத்தோட வாசம் தூக்கலா இருக்க படங்கள் வந்துட்டு இருந்த காலகட்டத்துல ஹீரோவையே கேள்வி கேட்டு மடக்குற காமெடியன்கள் கேரக்டர்கள் அப்போலாம் தமிழ் சினிமால ரொம்பவே அரிதா இருந்துச்சு.. ஆனா, இதை உடைச்சு ஹீரோவைக் கலாய்த்து வலுவா கேள்வி கேக்குற காமெடியான பல படங்கள்ல அதகளம் பண்ணிருப்பார் சந்தானம். அந்தவகைல எஸ்.எம்.எஸ். ஓகே ஓகே, பாஸ் என்கிற பாஸ்கரன் மாதிரியான படங்களை உதாரணமா சொல்லலாம். டைரக்டர் ராஜேஷோட இவர் கைகோர்த்திருந்த இந்த 3 படங்கள்லயும் ஹீரோக்களான ஜீவா, உதயநிதி, ஆர்யா ஆகியோருக்கு ஈக்வலான கேரக்டர் நம்ம ஆளுக்கு.. அதுலயும் அவரோட கவுன்டர் டயலாக்குகள்ல ஹீரோக்களே பல இடங்கள்ல நிலைகுலைஞ்சு பதில் சொல்ல முடியாம நிக்குற சீன்கள்லாம் வரும். அதுவும் ஓகே ஓகே மாதிரியான படங்கள்ல ஹீரோவோட சேர்ந்து அவங்களுக்கு ஈக்வலா பாடல்களயும் பெர்ஃபார்ம் பண்ணியிருப்பார்.

சிவகார்த்திகேயனோட ஒப்பீடு பத்தி ஒருமுறை இவர்கிட்ட கேள்வி கேட்டாங்க.. கடந்த 2017ல இவரோட சக்கைப்போடு போடு ராஜா, அப்புறம் சிவகார்த்திகேயனோட வேலைக்காரன் படங்கள் ஒரே நாள்ல ரிலீஸ் ஆச்சு… அந்தக் கேள்விக்கு அவர் எனக்கான போட்டினு நான் நினைக்கல.. எங்க படங்களுக்கு இடையில்தான் போட்டி. அது ஆரோக்கியமானது. ஈகோ இருந்தாதான் தப்பு… அது இல்லனு சந்தானம் விளக்கம் கொடுத்திருந்தாரு…

காமெடியனா சந்தானம் கலக்குன கேரக்டர்கள்ல உங்களோட ஃபேவரைட் எதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top