வெயிட் லாஸ் இன்றைய சூழலில் மிகப்பெரிய இன்ஸ்ஃபைரிங்கான விஷயமா இளைஞர்கள்கிட்ட மாறிட்டு வருது. உடற்பயிற்சி எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு உங்கள் டயட்டும் ரொம்பவே முக்கியம் பாஸ். புது டயட் ஃபாலோ பண்ணலாம்னு ஐடியால இருக்கீங்களா… அப்படின்னா உங்களுக்கான கட்டுரைதான் இது. எந்தவொரு புது டயட்டையும் ஃபாலோ பண்ணனும்னு நினைக்கிறதுக்கு முன்னாடி உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய 5 கேள்விகள்…
நான் ஏன் வெயிட் லாஸ் பண்ணனும்?
உங்களோட முழுமையான ஃபோகஸூம், எனர்ஜியும் தேவைப்படப் போற விஷயம் வெயிட் லாஸ். அதனால, ஏன் நாம வெயிட் லாஸ் பண்ணனும்கிற கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கோங்க. அது உடல்நிலை சம்பந்தப்பட்ட காரணங்களுக்காகவா… இல்ல அப்படின்னு நீங்க நினைக்கிறீங்களா.. இல்ல உடல்நலன் ரொம்ப மோசமா இருக்கு என்னோட ஃபிட்னெஸ் லெவலை நான் அதிகரிக்கணும்னு நினைக்கிறீங்களான்னு ஒருவாட்டி நல்லாவே அனலைஸ் பண்ணிடுங்க பாஸ்.
சீட் பண்ணாம எந்த அளவுக்கு டயட்டை ஃபாலோ பண்ண முடியும்?
நீங்க ஏற்கனவே டயட்டை ஃபாலோ பண்ணிருந்தா நிச்சயம் இது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். டயட்டை விட அதை சரியாக் கடைபிடிக்கிறதுதான் கஷ்டம் என்பது. டயட் என்பது உங்கள் உணவுப் பழகத்தை முற்றிலுமாகவே மாத்திப்போடக் கூடிய பிளான். இதனாலதான், நிறைய பேரு தங்களோட கோலை அச்சீவ் பண்றதுக்கு முன்னாடியே டயட்டை கைவிட்டுடுறாங்க. சோ, டயட்டைத் தொடங்குறதுக்கு முன்னாடி இந்தக் கேள்விக்கான பதிலைத் தெளிவா யோசிச்சு முடிவெடுங்க.
இது சரியான டைம்தானா?
வெயிட் லாஸ் ஜர்னியின் முக்கியமான விஷயமே, அதை சரியான டைமிங்கில் முடிவெடுத்து செயல்படுத்துவதில்தான் இருக்கிறது. உதாரணமா, வேலை காரணமாக நீங்க புது நகரத்துக்குப் போக வேண்டிய சூழல் ஏற்படலாம். அதனால், உங்க உணவுப் பழக்கவழக்கம் மொத்தமா மாறிப்போயிருக்கலாம். அப்படிப்பட்ட சூழலில் வெயிட் லாஸுக்கான ஜர்னியைத் தொடர்வதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
வொர்க் அவுட் உங்களுக்கு ஃபிட்டாகுமா?
உங்களின் பிஸியான வொர்க் ரொட்டீனில் வொர்க் அவுட்டுக்கு நேரம் ஒதுக்க முடியுமா என்பதை யோசித்து முடிவெடுங்கள். ரொம்பவே பிஸியான ஷெட்யூல் இருக்க வேலைல நீங்க இருக்கும்போது டயட் வேலைக்காகாது. அதனால, நீங்க எதிர்மறை சிந்தனைகளுக்கு ஆளாகி மொத்த பிளானையும் கைவிடுறதுக்கும் வாய்ப்பிருக்கு.
வெளியில சாப்புடுற ஆளா நீங்க?
சிலருக்கு விதவிதமான உணவுகள் மேல் பிரியம் இருக்கலாம். அதனால், அடிக்கடி ஹோட்டல்களை நாடும் பழக்கம் இருக்கும். அப்படி, எத்தனை நாளைக்கு ஒருமுறை அல்லது எத்தனை வேளைக்கு ஒருமுறை நீங்க வெளில சாப்டுவீங்கனு முதல்ல ஒரு கேள்வியைக் கேட்டுக்கோங்க. அடிக்கடி வெளியில சாப்பிடுற ஃபுட்டியா இருந்தா டயட் பிளான், `வாய்ப்பில்லை ராஜா’ கேஸ்தான்.
ஃபிட்னெஸ்ல நீங்க எந்தளவுக்கு கான்சியஸா இருக்கீங்கனு உங்க அனுபவத்தை கமெண்ட்ல சொல்லுங்க மக்களே… பலருக்கு இன்ஸ்பிரேஷனா இருக்கவும் வாய்ப்பு…
Also Read – முகத்தில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகளைக் குறைக்கலாம் வாங்க – 5 வழிகள்!