ஜாக்கிசான்

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் பற்றிய இந்த 11 சுவாரஸ்யங்கள் தெரியுமா?

கடல், ரயில், யானை வரிசையில ஜாக்கிசான் ஆக்சன் காட்சிகளையும் எப்போ பார்த்தாலும் சலிக்காது. எல்லாரோட ஃபேவரிட்டா இருக்குற ஆசியாவின் சூப்பர் ஸ்டார் ஜாக்கிசான் பத்தின 11 சுவாரஸ்யங்களைத்தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

* ஜாக்கிசான் பிறந்தப்போ ஆபரேசன் பண்ண டாக்டருக்கு கொடுக்க அவங்க அப்பாகிட்ட பணம் இல்லையாம். அந்த டாக்டர் ‘1000 ரூபா தர்றேன். இந்த குழந்தையை எனக்கு கொடுத்திடுறீங்களா?’ என்று கேட்டிருக்கிறார். ஆனால் அவருடைய பெற்றோர் மறுத்துவிட்டனர். ஜாக்கிசானோட அப்பா சார்லஸ், சைனீஸ் ஆர்மில சீக்ரெட் ஸ்பையா இருந்தவர். அவங்க அம்மா போதைப் பொருள் வித்துட்டு இருந்தவங்க. சொல்லப்போனா அவங்களை கைது பண்ண போனப்போதான் சார்லஸ் அவங்களை மீட் பண்ணிருக்காரு. இந்த உண்மையெல்லாம் ஜாக்கிசானுக்கு ரொம்ப லேட்டாதான் தெரிஞ்சதாம்.

* ஆக்சன் காட்சியை காமெடியாக கொடுத்த விதம்தான் ஆசியாவின் சூப்பர்ஸ்டார் ஆக்கியது. ஜாக்கிசானுக்கு ஊமைப் படங்கள்தான் ரொம்ப பிடிக்குமாம். குறிப்பா சார்லின் சாப்ளின். “எனக்கு சாப்ளின் மாதிரிதான் பண்ணனும்னு ஆசை. ஆனா நான் வொர்க் பண்ண டைரக்டர்ஸ்லாம் என்னைய ப்ரூஸ் லீ மாதிரி பண்ண சொல்றாங்க” என்பார். ப்ரூஸ்லீயை கடவுள் மாதிரி பார்த்தாராம். எண்டர் தி டிராகன் படத்துல ப்ரூஸ் லீ கூடவே நடிச்சார் ஜாக்கிசான். ஒரு ஆக்சன் சீன்ல ப்ரூஸ்லி நிஜமாவே அடிச்சதும், வலிக்கலைனாலும் வலிச்ச மாதிரி நடிச்சு ப்ரூஸ் லீகிட்ட இன்னும் ஃப்ரெண்டாகிருக்காரு.  

* டிஸ்யூம் டிஸ்யூம்னு ஃபைட் பண்ற ஜாக்கிசான்தான் நம்ம ஃபேவரிட். ஆனா அவர் ஒரு பாடகரும்கூட. கிட்டத்தட்ட 100 பாடல்களுக்கு மேல பாடிருக்காரு. போலீஸ் ஸ்டோரி படத்துல ஹீரோ ஸ்டோரி அப்படிங்குற தீம் சாங் பாடிருப்பாரு. ஹாங்காங் போலீஸ் வேலைக்கு ஆள் எடுக்குறதுக்கான விளம்பரங்கள்ல இந்தப் பாட்டைதான் பயன்படுத்துறாங்க.

* ஜாக்கிசானை அந்த ஊரு டி.ராஜேந்தர்னு சொல்லலாம். ஒரு படத்துல நடிக்கிறது, பாடுறது மட்டுமல்ல டைரக்டர், ப்ரொடியூசர்னு எல்லா வேலையும் பார்ப்பாரு. ஜாக்கிசான் இரண்டு முறை கின்னஸில் இடம்பிடித்திருக்கிறார்.அதில் ஒன்று சைனீஸ் ஜோடியாக் படத்தில் 15 வேலைகள் பார்த்து அதிக கிரிடிட் ஒரு படத்தில் இடம்பெற்றது கின்னஸ் சாதனையானது. இன்னொன்னொரு உயிருடன் இருக்கும் நடிகர்களில் அதிக ஸ்டண்ட் செய்தவர் என்ற சாதனை.

* தசாவதாரம் ஆடியோ லாஞ்ச்சில் கலந்துகொண்டதுதான் ஜாக்கிசான் பங்குபெற்ற ஒரே தமிழ் மேடை.  தமிழில் வணக்கம் சொல்லி ஆரம்பித்தது, ரவிச்சந்திரன் என்ற பெயரை சொல்ல முடியாமல் தடுமாறியது என அவருடைய ஒவ்வொரு பேச்சுக்கும் செம்ம ரெஸ்பான்ஸ். கமலை இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்று சொன்னவர் ‘ஒருநாள் நாம சேர்ந்து நடிப்போம்’ என்றும் சொன்னார். அதையெல்லாம் விட ஹைலைட், ஆடியோ லாஞ்ச் முடிந்ததும் கீழே கிடந்த பேப்பர்களை தானே அள்ளி எடுத்துப் போய் ஓரமாகப் போட ஒட்டுமொத்த க்ரவுடும் ஜாக்கிசானின் அந்த செயலுக்கு ஆர்ப்பரித்தது.

* ஜாக்கிசானுக்கு தமிழ் டப்பிங் செய்பவர் முரளிகுமார். ஒரிஜினல் படங்களில் ஃபைட் சீனில் இல்லாத வசனங்களைக் கூட பேசி ஜாக்கிசானுக்கு கைதட்டல் வாங்கித்தருபவர் இவர்தான். சுட்டி டிவியில் வந்த ஜாக்கிசான் கார்ட்டூனுக்கும் இவர்தான் டப்பிங். தசாவதாரம் ஆடியோ லாஞ்சுக்கு ஜாக்கிசான் வந்தபோது அவரை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று நினைத்தார் முரளிகுமார். ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.  

* ஜாக்கிசானோட சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 2800 கோடி இருக்கலாம்னு சொல்லப்படுது. ஆனா இந்த சொத்து எதுவுமே அவரோட பையன் ஜெய்சி சானுக்கு போகாது. மொத்த சொத்தையும் அறக்கட்டளைக்கு தானமா கொடுத்திருக்காரு ஜாக்கி. என் மகனுக்கு திறமை இருந்தா அவனே சம்பாதிக்கட்டும். என் சொத்தைக் கொடுத்தா சோம்பேறி ஆகிடுவான்னு சொல்லிருக்காரு ஜாக்கிசான்.

* சைனீஸ் படங்களில் ஹிட் கொடுத்துவிட்டு 80-களில் ஹாலிவுட்டுக்கு வந்தபோது ஜாக்கிசானுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது. அதனால் நிறையவே சிரமப்பட்டிருக்கிறார். இனி இங்கிலீஸ் கத்துக்கிட்டாதான் பொழைப்பு ஓட்ட முடியும் என்று முடிவு செய்து நான்கு இங்கிலீஸ் டீச்சர்ஸ் வைத்து ஒருநாளைக்கு 9 மணி நேரம் செலவிட்டு ஆங்கிலம் கற்றுக்கொண்டார்.

* ஆஸ்கர் விருது மேடையில் ஜாக்கிசான் பேசியது எல்லாரையும் நெகிழ வைத்தது. ஆஸ்கர் விருது மீது ஜாக்கிசானுக்கு தீராத காதல் இருந்தது. ஆனால் நாம எடுக்கிற காமெடி ஆக்சன் மூவிக்கெல்லாம் எப்படி விருது கொடுப்பாங்கனு நினைச்சிருக்காரு. ஒருநாள் ஆஸ்கர் கமிட்டியில் இருந்து ஜாக்கிக்கு ஒரு போன் வந்தது. படபடவென்று ஆங்கிலத்தில் பேசியது அவருக்கு புரியவில்லை. உங்களுக்கு ஆஸ்கர் விருது தர்றோம்னு அவங்க சொன்னதை, நாம யாருக்கோ அவார்டு கொடுக்கணும் போல என்று நினைத்திருக்கிறார். பிறகு டிவியில் அறிவிப்பு வந்த பிறகுதான் தனக்கு ஆஸ்கர் என்பதை தெரிந்திருக்கிறார். அப்பவும் ‘நான் இந்த வருசம் எந்த படத்துலயும் நடிக்கலையே, எதுக்கு அவார்டு’ என்று குழம்பியவரிடம் Lifetime Achievement Award என்று விளக்கியிருக்கிறார்கள்.

Also Read – காலேஜ் கல்ச்சுரல்ஸ் டான்ஸ்னா இந்த 15 விஷயம் கண்டிப்பா இருக்கும்!

* ஜாக்கிசானுக்கு டூப் கிடையாது எல்லா ஸ்டண்டையும் அவரேதான் செய்வார் என்பதால் அவர் உடலில் அடிபடாத இடங்களே கிடையாது. போலீஸ் ஸ்டோரி 2  படத்தில் போலி கண்ணாடி சுவருக்கு பதிலா ஒரிஜினல் கண்ணாடி சுவரில் மோதி உடைத்து முகமெல்லாம் ரத்தக்களரியானது. ப்ராஜக்ட் ஏ என்ற படத்தில் ஆறு மாடிக் கட்டிடத்தில் இருந்து குதிக்கவேண்டும். மூன்று ஷாட் எடுக்க மூன்று முறையும் ஒரிஜினலாகக் குதித்து தலையில் அடிவாங்கியிருக்கிறார். ஒரு மனுஷனுக்கு ஹெலிகாப்டர் மோதி ஆக்ஸிடெண்ட் ஆகுமா அதுவும் ஜாக்கிக்கு நடந்திருக்கிறது.  போலீஸ் ஸ்டோரி 3 படத்தில் ஹெலிகாப்டர் தாக்கி ஷோல்டர் உடைந்தது. மருத்துவக்குழு வரும்வரை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார் ஜாக்கி.

* ஜாக்கி சான் சில சர்ச்சைகள்லயும் சிக்குனாரு. லின் அப்படிங்குற தைவான் நடிகையை திருமணம் பண்ணி அவங்களுக்குப் பிறந்த பையன்தான் ஜெய்சி சான். அந்த திருமணத்திற்கு பிறகு எலைன் வு அப்படிங்குற ஒரு நடிகையை காதலிச்சதாவும் அவங்களுக்கு ‘எட்டா’ அப்படிங்குற மகள் இருப்பதாகவும் அவங்களை ஜாக்கிசான் கைவிட்டதாகவும் ஒரு சர்ச்சை கிளம்புனது. இது பத்தி ஜாக்கிசான் ‘அது என் வாழ்க்கைல பண்ண மிகப்பெரிய தவறு’னு பதிவு பண்ணிருக்காரு. சமீபத்துல ஜாக்கிசானோட மகள் எட்டா வறுமைல வாடுறதா செய்திகள்ல வந்தது.

244 thoughts on “ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் பற்றிய இந்த 11 சுவாரஸ்யங்கள் தெரியுமா?”

  1. indian pharmacy paypal [url=http://indiapharmast.com/#]reputable indian pharmacies[/url] india online pharmacy

  2. mexico pharmacies prescription drugs [url=https://mexicandeliverypharma.online/#]mexican pharmaceuticals online[/url] mexico pharmacy

  3. pharmacies in mexico that ship to usa [url=http://mexicandeliverypharma.com/#]mexico drug stores pharmacies[/url] reputable mexican pharmacies online

  4. medication from mexico pharmacy [url=https://mexicandeliverypharma.com/#]mexican online pharmacies prescription drugs[/url] mexican mail order pharmacies

  5. medication from mexico pharmacy [url=https://mexicandeliverypharma.online/#]mexican mail order pharmacies[/url] reputable mexican pharmacies online

  6. pillole per erezione in farmacia senza ricetta pillole per erezioni fortissime or viagra generico in farmacia costo
    http://www.boosterblog.net/vote-146-144.html?adresse=viagragenerico.site&popup=1 cialis farmacia senza ricetta
    [url=http://www.emporiumshopping.com/go.php?url=viagragenerico.site]miglior sito per comprare viagra online[/url] cialis farmacia senza ricetta and [url=http://www.guiling.wang/home.php?mod=space&uid=14834]viagra originale in 24 ore contrassegno[/url] viagra 50 mg prezzo in farmacia

  7. sweet bonanza 90 tl sweet bonanza siteleri or <a href=" http://winkler-sandrini.it/info/mwst01i.pdf?a%5B%5D=places+to+buy+viagra+online “>pragmatic play sweet bonanza
    http://images.google.co.th/url?q=https://sweetbonanza.network sweet bonanza yorumlar
    [url=https://www.google.com.bz/url?sa=t&url=https://sweetbonanza.network]sweet bonanza free spin demo[/url] sweet bonanza and [url=https://forex-bitcoin.com/members/370962-oauopxopjd]sweet bonanza 90 tl[/url] sweet bonanza indir

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top