ஏஞ்சலினா ஜோலி

ஏஞ்சலினா ஜோலி பற்றிய 13 சுவாரஸ்ய தகவல்கள்!

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகைகளில் ஒருவர் ஏஞ்சலினா ஜோலி. இவர் பிரபல ஹாலிவுட் நடிலர்களான ஜான் வாய்ட் மற்றும் மார்செலின் பெர்ட்ராண்ட் ஆகியோருக்கு 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி மகளாகப் பிறந்தார். இவர் 1990-களில் மிகவும் புகழ்பெற்ற நடிகராக மாறினார். ஏஞ்சலினா ஜோலி அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்குவது உண்டு. இதனால், தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய செய்திகளை அவ்வப்போது மட்டுமே வெளியிட்டு வந்தார். எனினும், நடிப்புத் துறையில் மிகவும் சிறந்த நடிகராகவே இருந்து வந்தார். ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். அவரைப் பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்கள் இங்கே…

Angelina jolie
Angelina jolie
 • உலகின் மிகவும் அழகான பெண்களில் ஒருவராக ஏஞ்சலினா ஜோலி தற்போது அறியப்பட்டாலும், தனது பள்ளி வாழ்க்கையின் போது அவரது தோற்றத்தால் பலரால் வெறுக்கப்பட்டார். பெவர்லி ஹில்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற ஏஞ்சலினாவை சக மாணவர்கள் பலரும் கேலி செய்துள்ளனர். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் ஒல்லியாகவும் கண்ணாடி அணிந்தும் காணப்பட்டுள்ளார். இதனால், பலரும் அவரை கேலி செய்துள்ளனர். 14 வயதில் பள்ளியில் இருந்து வெளியேற்றவும் பட்டார். பிறகு தன்னுடைய காதலனுடன் அவர் வாழத் தொடங்கியுள்ளார்
 • ஏஞ்சலினா ஜோலி இடது கை பழக்கம் உடையவர்.
 • தன்னுடைய டீனேஜ் பருவத்தின்போது ஏஞ்சலினா அதிகமாக டிப்ரஷன்களில் இருந்தார். போதைப் பொருள்களுக்கு அடிமையாகவும் இருந்தார்.
 • குங்ஃபூ பாண்டா மற்றும் ஷார்க் டேல் உள்ளிட்ட பல குழந்தைகளின் படங்களுக்கு ஏஞ்சலினா ஜோலி குரல் கொடுத்துள்ளார்.
 • ஏஞ்சலினாவின் உடலில் குறைந்தது 14 டாட்டூக்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
 • பீப்பிள் மேகசின் ஏஞ்சலினா ஜோலியை உலகின் மிகவும் அழகான பெண்ணாக அறிவித்தது.
 • ஏஞ்சலினா ஜோலிக்கு மொத்தம் ஆறு குழந்தைகள் உள்ளனர். அவர்களில் மூன்று பேர் தத்தெடுக்கப்பட்டவர்கள். தத்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவர் கம்போடியாவைச் சேர்ந்தவர். மற்றொருவர் எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர். இன்னொருவர் வியட்நாமைச் சேர்ந்தவர்.
 • ஏஞ்சலினா ஜோலியிடம் பைலட் லைசென்ஸ் உள்ளது. 2004-ம் ஆண்டு அவர் இதனைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து சிறிய விமானம் ஒன்றையும் சொந்தமாக வாங்கியுள்ளார்.
 • கத்தியை சேகரிக்கும் பழக்கம் உடையவர், ஏஞ்சலினா ஜோலி. தனது 12 வயது முதல் கத்தியை சேகரித்து வருகிறார். தன்னுடைய முதல் கத்தியை தனது தாயிடம் இருந்து வாங்கியுள்ளார். கத்திகள் வரலாற்றை நினைவூட்டுவதாக அவர் நினைக்கிறார். மேலும், கத்திகள் அழகாகவும் பாரம்பரியம் மிக்கதாகவும் இருப்பதாக அவர் நினைக்கிறார்.
 • அதிரடி திரைப்படங்களில் நடிப்பதிலும் ஏஞ்சலினா ஜோலி பெயர் போனவர். தனது திரைப்படங்களில் வரும் ஸ்டண்ட் சீன்களில் அவரே நடிக்கக்கூடியவர். அந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கும் ஹார்ட் வொர்க்கிங் பெர்சன்.
 • 2006-ம் ஆண்டு ஜோலி மற்றும் பிட் தம்பதியினர் குழந்தைகளுக்கு உதவுவதற்காக அறக்கட்டளை ஒன்றை உருவாக்கினர். மூன்றாம் உலக நாடுகளில் உள்ள அனாதைக் குழந்தைகளுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். மருத்துவ உலகிற்கும் உதவிகளை செய்து வருகின்றனர்.
 • இறப்பின் மீது ஏஞ்சலினா ஜோலிக்கு எப்போதும் ஒரு மோகம் இருந்து வந்துள்ளது. இது அவரது பாட்டியின் மரணத்தின் விளைவாக உருவாகியிருக்கலாம் என சிலர் கூறுகின்றனர். இந்த இறப்பின் மீதான மோகத்தால் அவர் ஃபியூனரல் டைரக்டராக ஆக வேண்டும் என எண்ணியுள்ளார். நேர்காணல் ஒன்றின் போது அவரிடம் இதுதொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஏஞ்சலினா, “எல்லா நேரங்களிலும் மரணத்தைப் பற்றி யோசிப்பதன் மூலம் பெரும்பாலான மக்கள் வாழ்க்கையைப் போற்றுவதைவிட தனது வாழ்க்கையை இன்னும் சிறப்பாகப் போற்ற முடியும்” என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
 • ஏஞ்சலினாவுக்கு ஊர்வன விலங்குகள் மீது ஈர்ப்பு அதிகம். அவரது பெட் அனிமல்கள் லிஸ்டில் பல்லிகள் மற்றும் பாம்புகள் ஆகியவை கூட இருந்தன.

Also Read : இந்தியாவில் எம்.எல்.ஏ-வான முதல் திரைப்பட நடிகர் – எஸ்.எஸ்.ஆரின் அரசியல் பயணம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top