இண்டர்வியூ

இன்டர்வியூவை பாஸிட்டிவா எதிர்க்கொள்ளலாம் வாங்க… டிப்ஸ்… டிப்ஸ்!

இன்றைக்கு பெரும்பாலான இளைஞர்கள் மத்தியில் இருக்கும் பிரச்னை வேலையில்லை என்ற கவலைதான். வேலைக்கு செல்லும்போது பெரும்பாலான ரவுண்ட்களில் வெற்றி பெற்றாலும் இன்டர்வியூக்களில் சொதப்புவதால் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. ஒவ்வொரு இன்டர்வியூவும் கொஞ்சம் வித்தியாசமானது. சில இன்டர்வியூக்களில் குறைந்த அளவு தயாரிப்பு போதுமானது. சில இன்டர்வியூக்களில் அதிகளவு தயாரிப்பு தேவையானதாக இருக்கும். ஆனால், அனைத்து இன்டர்வியூக்களிலும் பயன்படும் வகையில் பொதுவான சில டிப்ஸ்கள் உள்ளன. இன்டர்வியூக்களில் ஸ்மார்ட்டாக எப்படி செயல்படலாம்? எப்படி நம்மை தயார் செய்து கொள்ளலாம்? அதற்கான எளிமையான வழிகளைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கப்போறோம். 

இன்டர்வியூ
இன்டர்வியூ

ரிசர்ச் முக்கியம் பாஸ்

வேலைக்கான உங்களது விண்ணப்பத்தை அனுப்பும்போதே அந்த குறிப்பிட்ட நிறுவனத்தைப் பற்றிய தகவல்களை அறிந்திருப்பீர்கள். ஆனால், இன்டர்வியூக்கு செல்லும்போது இன்னும் கொஞ்சம் அதிகமாக / ஆழமாக அந்த நிறுவனத்தைப் பற்றி ரிசர்ச் செய்ய வேண்டும். அந்த நிறுவனத்தின் தற்போதைய புரோஜெக்ட் என்ன? அவர்களின் வாடிக்கையாளர்கள் யார்? உங்களை இன்டர்வியூ செய்பவர்கள் யார்? இவர்களைப் பற்றிய முக்கியமான செய்திகள் ஏதேனும் வெளிவந்துள்ளதா? போன்றவற்றை நீங்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தகவல்களை அந்த நிறுவனத்தின் வெப்சைட், சமூக வலைதளங்கள் வழியாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அந்த நிறுவனத்தைப் பற்றி எவ்வளவு தெரிந்து வைத்துள்ளீர்கள் என்பதை நீங்கள் உங்களை இன்டர்வியூ செய்பவர்களுக்கு பதில்களின் வழியாக தெரிவிப்பது நல்லது. உங்களது ஃபீல்ட் பற்றிய சமீபத்திய செய்திகளையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கேள்விகளை தயார் செய்து பாருங்கள்…

நீங்கள் விண்ணப்பக்கும் வேலை தொடர்பான திறன்கள் மற்றும் உங்களது அனுபவங்களை அடிப்படையாக வைத்து இன்டர்வியூவில் கேட்ப்பதற்கு வாய்ப்புள்ள கேள்விகளை தயார் செய்து வைக்கலாம். கேள்விகளை பட்டியலிட்டு அதற்கான பதில்களையும் சொல்லி பார்க்கலாம். இன்டர்வியூ என்பது அறிவையும் திறனையும் மட்டுமல்லாமல் உங்களது ஆளுமையையும் காண்பிப்பதற்கான ஒரு வாய்ப்பாகும். எனவே, உங்களது பொழுதுபோக்குகள் தொடர்பான கேள்விகளையும் கேட்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, அது தொடர்பான கேள்விகள் வரும்போது அதற்கு பதிலளிக்கவும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். உங்களது நல்ல பதில்களைப் பொறுத்தே வேலைக்கு நீங்கள் தகுதியானவரா இல்லையா என்பதை இன்டர்வியூ செய்பவர்கள் முடிவு செய்வார்கள். அதனால், எந்தவித பதட்டமும் இல்லாமல் தெளிவாக சுருக்கமாக உங்களது பதில்களைக் கூற வேண்டும். அதற்கு முன்தயாரிப்பு உங்களுக்கு கை கொடுக்கும். உங்களது ரெசியூமில் இருக்கும் தகவல்களில் இருந்துதான் பெரும்பான்மையான கேள்விகள் வரும் என்பதால் அதனை நன்றாக படித்துவிட்டு செல்வதும் நல்லது. உங்களது குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் முடிந்தால் அதனை பிராக்டிஸ் செய்து செல்வதும் சிறந்ததாக இருக்கும்.

முதல் கேள்விக்கான பதில்..

பொதுவாக எல்லா இன்டர்வியூலயும் `உங்கள பத்தி சொல்லுங்க’ என்பதுதான் முதல் கேள்வியாக இருக்கும். அப்போது நீங்கள் `என்னுடைய பெயர் இது.. நான் இங்க இருந்து வர்றேன்.. எனக்கு இதெல்லாம் புடிக்கும்’ – என சொல்லக்கூடாது. உங்களுடைய வேலை சம்பந்தப்பட்ட பயோவை நீங்கள் சொல்வதுதான் உங்களது இன்டர்வியூக்கு பாஸிட்டிவாக அமையும். உங்களோட ஷார்ட் டைம் கோல், லாங் டைம் கோல் போன்றவற்றையும் நீங்கள் குறிப்பிட்டு சொல்லலாம். அடுத்தடுத்து வரும் சில கேள்விகளுக்கு கான்ஃபிடன்டாக பதில் சொல்லுங்க. தெரியாத கேள்விகளுக்கு தெரியாதுனு பதில் சொல்லுங்க. அதில் எந்த தப்பும் இல்லை.

இன்டர்வியூ நடைபெறும் அலுவலகத்துக்கு செல்வதற்கான வழியை பிளான் செய்து கொள்ளுங்கள்..

இன்டர்வியூ நடைபெறும் அலுவலகம் எங்கு உள்ளது? அங்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகும்? அலுவலகத்துக்கு செல்வதற்கான ஷார்ட் கட்கள்.. போன்றவற்றை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். டிராஃபிக் போன்ற பிரச்னைகளில் சிக்கினால் தேவையில்லாமல் பதற்றம் அதிகமாகும். எனவே, நீங்கள் செல்வதை முறையாக பிளான் செய்து வைத்திருப்பது நல்லது. தாமதமாக செல்வது போன்ற விஷயங்கள் உங்கள் மீதான பாஸிட்டிவ் இம்ப்ரஷனை குறைக்கும். 

டிரெஸ்ஸிங் சென்ஸ்..

இன்டர்வியூவுக்கு என்ன ஆடையை நீங்கள் அணிந்து செல்ல வேண்டும் என்பதை முந்தைய நாளே முடிவு செய்து அதனை அயர்ன் செய்து வைத்துக்கொள்ளலாம். உங்களுடைய தோற்றம் தான் இன்டர்வியூ எடுப்பவர்களுக்கு முதல் இம்ப்ரஷனைக் கொடுக்கும். எனவே, உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் உடையை நீங்கள் தேர்வு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். கடைசி நேரத்தில் என்ன ஆடை அணிய வேண்டும் என்று நினைப்பது குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால், தேவையில்லாத பதற்றங்கள் ஏற்படும்.

கேள்விகள் கேட்க தயங்க வேண்டாம்..

இன்டர்வியூவில் `உங்களுக்கு எதாவது கேள்விகள் உள்ளதா?’ என்று கேட்கப்படும்போது மௌனமாக இருந்து `இல்லை’ என்று கூறுவதை முடிந்தவரை தவிர்க்கலாம். நீங்கள் இன்டர்வியூ செல்லும் அலுவலகம் பற்றி ரிசர்ச் செய்யும்போது உங்களுக்கு பல கேள்விகள் எழலாம். அவற்றை நினைவில் வைத்துக்கொண்டு அவர்களிடம் கேட்கலாம். கேட்கும் கேள்விகளை தெளிவாகவும் சுருக்கமாகவும் கேட்கலாம்.

தூக்கம் முக்கியம் பாஸ்..

இன்டர்வியூவுக்குத் தேவையான எல்லா தயாரிப்புகளை செய்துவிட்டு முந்தைய நாள் இரவு சரியாகத் தூங்கவில்லை என்றால் அதுவே பதற்றத்தை அதிகரிக்கும். எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்படும்போது அதனை சரியாகக் கையாள முடியாத நிலை ஏற்படும். எனவே, நிம்மதியான தூக்கம் மிகவும் அவசியமானது.

Also Read : லவ் ஃபெயிலியரையும் ஓவர்கம் பண்ணலாம் பாஸ்… இதை டிரை பண்ணிப் பாருங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top