தனி ஒருவன்

`ஒரே படம்… மொத்த நெகட்டிவிட்டியும் க்ளோஸ்’ – மோகன் ராஜாவின் ‘தனி ஒருவன்’ மேஜிக்!

தனி ஒருவன் படத்தைப் பொறுத்தவரை மோகன் ராஜா, ஒரு கதையா அதை எழுதலையாம். அப்புறம் எப்படி புரொடியூஸர்கிட்டலாம் இந்த ஸ்கிரிப்ட்ட சொல்லி ஓகே பண்ணாரு? ரீமேக் ராஜானு மோகன் ராஜாவ கலாய்ப்பாங்க. இந்தப் படத்துக்கு அப்புறம் மோகன் ராஜா, ஜெயம் ராஜா, தனி ஒருவன் ராஜானு கூப்பிடுறதானு எல்லாருக்கும் ஒரு குழப்பம் வந்துச்சு. அதுக்கு அவர் சொன்ன ஹார்ட் டச்சிங் விஷயம் என்ன தெரியுமா? ஹிப்ஹாப் தமிழாவை, ஏன் மோகன் ராஜா இந்தப் படத்துக்கு மியூசிக் டைரக்டரா செலக்ட் பண்ணாரு? டவுட் இருக்குல… கிளியர் பண்ணிருவோம். படம் பார்த்துட்டு நயன்தாராவோட ரியாக்‌ஷன் என்ன தெரியுமா? படத்தோட ஹைலைட்டே வில்லன்தான்… அவர் ஸ்கிரிப்ட் கேட்டதும் சொன்ன இன்ட்ரஸ்டிங்கான பஞ்ச் என்ன தெரியுமா? இதெல்லாம் தெரிஞ்சுக்க வீடியோ ஃபுல்லா பாருங்க!

தமிழ் சினிமால ஒவ்வொரு டைரக்டர் பேரைச் சொன்னதும் நமக்கு டக்னு சில படங்கள் நியாபகத்துக்கு வரும். அந்த வகையில மோகன் ராஜாவோட பெயரைச் சொன்னா நமக்கு நியாபகம் வர்ற முதல் படம் ‘தனி ஒருவன்’. ‘பாகுபலி’ மாதிரி தனி ஒருத்தனா நின்னு கயிறைப் புடிச்சு அந்தப் படத்தை சக்ஸஸ்க்கு இழுத்துட்டுப் போனது மோகன் ராஜாதான். டைரக்டர்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் ஏன், ஃபிலிம் இன்ஸ்டிடியூட் ஸ்டூடன்ஸ்னு பலரும் தலைல தூக்கி வைச்சு தனி ஒருவனைக் கொண்டாடுனாங்க. எனக்கு நல்லா நியாபகம் இருக்கு. நான் இந்தப் படத்துக்கு முதல் நாள் போகும்போது தியேட்டர்ல ஆளே இல்லை. என்னடா, இப்படி ஒரு படம் மனுஷன் எடுத்துருக்காரு. யாரையும் காணலைனு தோணுச்சு. ஆனால், அதுக்கு அடுத்த நாள்ல இன்னொரு தடவை படம் பார்க்கலாம்னு பார்த்தா டிக்கெட் கிடைக்கலை. அப்படிப்பட்ட இந்தப் படத்துக்கு டஃப் கொடுக்குற மாதிரி இன்னொரு படத்தை மோகன் ராஜா எடுப்பாரா? அப்டின்ற கேள்வி இன்னைக்கும் பலரோட மனசுல ஓடிக்கிட்டு இருக்கு. அந்தக் கேள்வியை அவர்கிட்ட கேட்டுட்டு கண்டண்ட்குள்ள போலாமா?

பவர்பாயின்ட் பிரசன்டேஷன்

தனி ஒருவன் கதைங்கிறது மோகன் ராஜாக்குள்ள ரொம்ப நாளா ஒடிக்கிட்டு இருந்த விஷயம்னு சொல்லலாம். ஆனால், அதை வார்த்தைகள்ல எப்படிக் கொண்டுவர்றது அப்டினு மோகன் ராஜா யோசிச்சிட்டே இருந்துருக்காரு. அதனாலம் இதைக் கதையா நரேட் பண்ணாம. ஸ்கிரீன் ப்ளே ஓரியன்டடா எல்லார்க்கிட்டயும் நரேட் பண்ணியிருக்காரு. ஜெயம் ரவி ஒரு மேடைல சொல்லும்போதுகூட “நமக்கு சினிமா பேக்ரௌண்ட் இருக்கு. அதுனால இந்தக் கதையை நாம புரிஞ்சிக்கிட்டோம். ரொம்ப காம்ப்ளிகேட்டடான இந்தக் கதையை எப்படி இவர் மியூசிக் டைரக்டர்கிட்ட, மத்த ஆர்டிஸ்ட்டுகிட்டலாம் சொல்லி வேலை வாங்கப்போறாருனு டவுட் இருந்துச்சு” அப்டினு சொல்லுவாரு. உண்மையிலேயே ஒரு மைண்ட் கேம் மாதிரி போற இந்தக் கதையை புரொடியூசர்கிட்ட சொல்லும்போது பவர் பாயிண்ட் பிரசண்டேஷனா போட்டு காமிச்சிருக்காரு. அந்த பிரசண்டேஷன் யூ டியூப்ல இருக்கு. அதைப் பார்த்தீங்கனா உங்களுக்கே தெரியும் மனுஷன் எவ்வளவு வேலை ஸ்கிரிப்ட்டுக்காக பண்ணியிருக்காரு அப்டினு.

கதை சொல்ற அந்த பவர்பாயிண்ட் கான்செப்டே கொஞ்சம் வித்தியாசமா நல்லா இருந்துச்சு. படத்தோட டயலாக்ஸைக் கண்டிப்பா மென்ஷன் பண்ணியே ஆகணும். “வெளிச்சத்துல இருக்குறவன்தான் இருட்டைப் பார்த்து பயப்படுவான். நான் இருட்டுலயே வாழ்றவன், நல்லவனுக்கு நல்லது செய்றதல வெறும் ஆசை மட்டும் தான் இருக்கும். கெட்டவனுக்கு கெட்ட செய்றதுல பேராசை இருக்கும், எல்லா பெரிய விஷியத்துக்கு முன்னாடியும் நம்ம சாதாரணமா நினைக்குற சின்ன விஷியங்கள் இருக்கு. உன் எதிரி யார்னு சொல்லு நீ யார்னு சொல்றேப்” இதெல்லாம் வேற லெவல் டயலாக்ஸ். இப்படி சொல்லிட்டே போகலாம். இதுக்குலாம் ரைட்டர் சுபாவும் முக்கியமான காரணம்.

ரீமேக் ராஜா டு மோகன் ராஜா

மோகன் ராஜா ரீமேக் பண்ண எல்லாப் படங்களுமே ரசிகர்கள் மத்தியில செம வர்வேற்பைப் பெற்றுச்சு. இந்த மனுஷன மாதிரி இவ்வளவு கிளியரா ரீமேக் பண்ற ஆளு இல்லைனும் அவரை பாராட்டுவாங்க. ஆனால், அதேநேரத்துல, என்னதான் இருந்தாலும் சொந்தமா சிந்திக்க மாட்டாரு. ரீமேக் பண்ணியே பொழப்பை ஓட்றாரு. ரீமேக் ராஜாப்பா இவருனு கலாய்க்கிறவங்களும் இருக்காங்க. அதுக்குலாம் அமைதியா இருந்து பல மொழிகள்ல ரீமேக் பண்ற அளவுக்கான ஸ்ட்ராங்கான ஸ்கிரிப்டை தமிழ் சினிமா வழியா கொடுத்து செமத்தியான பதிலடி கொடுத்துருப்பாரு. அந்த ராஜாவை மோகன் ராஜா, எம்.ராஜா, ஜெயம் ராஜா இப்படிலாம் சொல்லி கூப்ட்டாங்க. ஆனால், அவரு மோகன் ராஜானு சொல்றதைதான் விரும்புவார். “உனக்கு அறிவில்லையா? ஜெயம்ன்றது எவ்வளவு பெரிய பிராண்ட். அதை வேணாம்னு சொல்றியே?”னு பலர் அவர்கிட்ட கேட்ருக்காங்க. ஆனால், ‘நல்ல சினிமா ரசனையை எனக்குக் கொடுத்த அப்பாவோட பேரை எனக்கு வைக்கிறதுதான் பெருமை. எனக்கு ஜெயம் கொடுத்தவரே மோகன்தான்’னு மனுஷன் சக்ஸஸ் மீட்ல கண்கலங்கி பேசியிருப்பாரு. உண்மையிலேயே மொத்த டீம்லையும் தனி ஒருவன்னா அது மோகன் ராஜாதான்.

ஹிப்ஹாப் தமிழா

இன்னைக்கு பலர் அவரோட மியூசிக்கை விமர்சிக்கலாம், பாடல் வரிகளை விமர்சிக்கலாம். ஆனால், தனி ஒருவன் படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா பண்ணது தரமான சம்பவம். “தீமைதான் வெல்லும், தனி ஒருவன் நினைத்து விட்டால், கண்ணால கண்ணால” – இப்படி எல்லாப் பாட்டுலயும் வர்ற லிரிக்ஸ், மியூசிக் எல்லாமே வேறலெவல்ல பண்ணியிருப்பாரு. முதல்ல ஸ்கிரிப் சொல்லும்போது மோகன் ராஜாக்கிட்ட, “மூணு குத்துப்பாட்டு எனக்கு கொடுத்துருங்க”னுதான் ஹிப்ஹாப் தமிழா சொல்லியிருக்காரு. ஆனால், மோகன் ராஜா “அதையெல்லாம் அடுத்தப் படத்துல பண்ணிக்கோ. நீ ஆரம்ப காலத்துல பண்ண ஆல்பம் சாங்ஸ்ல இருக்குற உணர்வு, அதுல வர்ற லிரிக்ஸ், உன்னோட லோகோல இருக்குற பாரதியார். அதுக்கு பின்னாடி ஒரு மேட்டர் இருக்குனு” உன்னைக் கூப்பிட்டேன்னு சொல்லியிருக்காரு. மோகன் ராஜா நம்பினதை ஹிப்ஹாப் தமிழா நிறைவேற்றிட்டாரு. பிஜிஎம்-லா பின்னியிருப்பாரு. ஹிப்ஹாப் தமிழாவா போட்டதுன்ற மாதிரி இருக்கும். இன்னொரு ஸ்பெஷல் என்னனா இந்தப் படத்துல ஹிப்ஹாப் தமிழா அடிச்சது ஹேட்ரிக் சிக்ஸ்.

நயன்தாரா ரியாக்‌ஷன்

ஜெயம் ரவிக்கு வந்த பெஸ்ட் பேர்ல நயன்தாராவும் ஒருத்தங்க. தமிழ் சினிமால வந்த பெஸ்ட் புரொபோஸல் சீன்ஸ்ல தனி ஒருவன் சீனும் ஒண்ணு. வார்த்தையாலையே புரொபோஸ் பண்ணி பழகுன தமிழ் சினிமால அமைதியா ஒரு புரொபோஸல் நடந்தது இந்தப் படத்துலதான்னு நினைக்கிறேன். வால்தனம் பண்றது, லவ் டார்ச்சர் கொடுக்குறது, மிரட்டுறது, காதல் கிரிக்கெட் பாட்டுல சின்ன சின்ன ரிவெஞ்ச் எடுக்குறதுனு செம கியூட்டா அந்தக் கேரக்டரை ஹேண்டில் பண்ணியிருப்பாங்க. இந்தப் படம் வந்தப்ப நயன்தாராவுக்கு வரிசையா ஹிட் வந்திட்டு இருந்துச்சு. இந்தப் படம் பார்த்துட்டு மோகன் ராஜாக்கிட்ட நான் பண்ண படமா இதுன்னு ஆச்சரியப்பட்டாங்களாம். செம ஹேப்பி ஆகிட்டாங்களாம்.

தமிழ் சினிமாவின் சிறந்த லவ் புரொபோஸல் சீன்ஸ் பத்தி வீடியோ வேணும்னா அதை கமெண்ட்ல சொல்லுங்க. சிறப்பா உருகிருவோம்.

சித்தார்த் அபிமன்யு

தனி ஒருவன் கதையோட ஸ்ட்ராங்கான பில்லர் அரவிந்த் சாமிதான். தமிழ் சினிமால இவ்வளவு அழகான வில்லன இதுக்கு முன்னாடி யாரும் பார்த்ததில்லை. சட்டைல ஒரு சின்னக் கசங்கல்கூட ஏற்படாம மனுஷன் களத்துல இறங்கி வில்லத்தனம் பண்ணியிருப்பாரு. அரவிந்த் சாமி மாதிரி மாப்பிளை வேணும்னு கேட்டுட்டு இருந்தவங்கலாம் இந்தப் படம் பார்த்ததுக்கு அப்புறம் வில்லனா இருந்தாலும் பரவால்ல எனக்கு அரவிந்த் சாமி மாதிரிதான் மாப்பிளை வேணும்னு ஸ்ட்ராங்கா கேக்க ஆரம்பிச்சிட்டாங்கனு சொல்லலாம். ஒரு கேரக்டர் பண்ணும்போது அதை நம்மள தவிர வேற யாரும் பெஸ்ட்டா பண்ணிடக்கூடாதுனு நினைச்சு நடிச்சிருப்பாரு போல. அந்த ரோல்க்கு வேற யாரையும் நினைச்சுக்கூட பார்க்க முடியல. ஜஸ்ட் ஈவில் அவ்வளவுதான். இந்த ஸ்கிரிப்ட அரவிந்த் சாமிக்கிட்ட மோகன் ராஜா சொன்னதும் அவர் சொன்ன பஞ்ச் என்னனா, “இந்தக் கதைக்கு நான் தேவை. எனக்கு இந்தக் கதை தேவை” அப்டின்றதுதான். இவரைத் தவிர்த்து ஜெயம் ரவி கேங், தம்பி ராமையா, சித்தார்த் அபிமன்யு கேங் இப்படி எல்லா நடிகர்களும் சிறப்பா நடிச்சிருப்பாங்க். குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் எடிட்டிங். அடுத்த ட்விஸ்ட் என்னனு நம்மள யோசிக்க விடாமல் டக் டக்னு எடிட் போட்டு கட் பண்ணி கொண்டு போய்ருப்பாரு, கோபி.

“ஷார்ட் ஃபிலிம் எடுத்துட்டு வர்றவங்கள நம்புறாங்க. சினிமா ஃபேமில இருந்து வர்றேன். என்னை நம்ம மாட்றாங்க”னு மோகன் ராஜா மேடைல சொல்லி ஃபீல் பண்ணுவாரு. அதையெல்லாம் “இக்னோர் நெகட்டிவிட்டி”னு தள்ளி வைச்சு தரமான படம் ஒண்ணைக் கொடுத்து தன்னோட தலையெழுத்தையே மாத்தி கெத்து காமிச்சிட்டாரு, ராஜா.

Also Read: அன்பே மடோனா… ‘பிரேமம்’ செலினுக்கு தமிழ் ரசிகனின் கடிதம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top