டவுன் பஸ் ஃப்ளேலிஸ்ட்

டவுன் பஸ் ப்ளேலிஸ்ட்… சில சுவாரஸ்யங்கள்!

டவுன் பஸ்ல எப்பவும் போடுற பாடல்கள் பத்தின சுவாரஸ்யமான தகவல்கள்னு நாம ஒரு வீடியோ பண்ணிருந்தோம். அதுக்கு ஏகோபித்த ஓஹோபித்த ஆதரவு கொடுத்ததுக்கு நன்றி மக்களே. பாஸ் இந்த பாட்டை ஏன் மிஸ் பண்ணீங்கனு உரிமையா கமெண்ட் பண்ணிருந்தீங்க. அதனால இதோ பார்ட் 2. இதுலயும் நாம அடிக்கடி கேட்ட ஆனா, படம் கூட தெரியாத பல பாடல்களை பத்தின சுவாரஸ்யமான தகவல்தான் இந்த வீடியோல பார்க்கப்போறீங்க.

* ஆடியில சேதி சொல்லி

விஜயகாந்த் நடிச்ச என் ஆசை மச்சான் படத்துல வர்ற இந்த பாட்டை பாடினது சித்ரா. தேவா இசையமைச்ச இந்த படத்துல எல்லா பாட்டுமே ஹிட்டுதான். பாட்டை எழுதினது காளிதாசன். தேவாவோட நிறைய பாடல்களை இவர் எழுதிருக்காரு. அருணாச்சலம் படத்துல வர்ற ‘தலைமகனே கலங்காதே’ இவர் எழுதுனதுதான். பொதுவா விஜயகாந்த் பாடல்கள்ல மதுரை ரெஃபரன்ஸ் அடிக்கடி வரும். இந்தப் பாட்டுலயும் ‘மாமன் கூட சேர்ந்திருப்பேன் மதுரை வீரன் பொம்மிபோல’னு ஒரு வரி வரும்.

* அத்தி பழம் சிவப்பா

எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் சித்ராவும் சேர்ந்து பாடின இந்தப் பாடல் சரத்குமார் நடிச்ச ராஜ பாண்டி படத்துல வந்தது. இசையமைச்சது தேவா. ‘ஒரு வெள்ளைக்கார பொண்ணு இந்தியா வந்தாலும் உன்னைக் கண்டு திகைப்பா’ வரியை எழுதினது வேற யாருமில்ல, ‘ஒரு வெள்ளைக்காரி காசு தீர்ந்தா வெறுத்து ஓடிப்போவா’னு எழுதின அதே வைரமுத்துதான்.

* சின்ன சின்ன சேதி சொல்லி 

விஜய், விஜயகாந்த் சேர்ந்து நடிச்ச செந்தூரப்பாண்டி படத்துல வர்ற பாட்டு இது. இந்த படத்துக்கு கதை எழுதுனது விஜய்யோட அம்மா ஷோபா சந்திரசேகர். இயக்கியது விஜயோட அப்பா எஸ்.ஏ சந்திரசேகர். இந்தப் படத்துக்கும் இசை தேவாதான். மனோவும் ஸ்வர்ணலாதாவும் பாடியிருப்பாங்க. நாளைய தீர்ப்புக்கு அடுத்து விஜய்க்கு இது ஹீரோவா ரெண்டாவது படம். ஆனா அப்பவே அவர் டான்ஸ் அவ்ளோ கிரேஸ்ஃபுல்லா இருக்கும். யுவராணியும், விஜய்யும் செம்ம கியூட்டா டான்ஸ் ஆடியிருப்பாங்க. என்னைக் கொண்டு போ கையோடு ஒட்டியிருப்பேன் மெய்யோடுனு எதுகை மோனைல விளையாடும்போதே தெரிஞ்சுருக்கும் இந்த பாட்டை எழுதினது வாலிதான்னு.

* அடி ஆசை மச்சான் வாங்கித்தந்த

இந்த பாட்டு பிரபு நடிச்ச கும்மிப்பாட்டு படத்துல வந்தது. இளையராஜா இசைல கஸ்தூரி ராஜா இந்தப் பாடலை எழுதிருந்தார். இந்தப் படத்துல வந்த எல்லாப் பாட்டுமே ஸ்வர்ணலாதாவும் அருண்மொழியும்தான் பாடியிருந்தாங்க. இந்த இடத்துல ஒரு தேவையாணி ஃபேனா ஒரு விசயத்தை பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கேன். அனுராதா ஶ்ரீராம், சுஜாதா, ஸ்வர்ணலாதானு யார் குரல்ல வந்த பாட்டுக்கு நடிச்சாலும் அழகான எக்ஸ்பிரசன்களால அந்த பாட்டுக்கு ஒரு உயிர் கொடுக்குறதுல தேவையாணிக்கு நிகர் அவங்கமட்டும்தான்.

* என்னை தொட்டு அள்ளிக் கொண்ட

இந்த பாட்டு வந்த படத்தோட பேரு ‘உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்’. கார்த்திக் நடிச்ச இந்தப் படத்துக்கு இளையராஜா இசை. மோனிஷாவும் கார்த்தியும்தான் இந்தப் பாட்டுல வருவாங்க. இந்த மோனிஷா இந்த படம் ரிலீஸ் ஆன அதே வருசம் ஒரு கார் ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாங்க. கவிஞர் பிறைசூடன் இந்தப் பாட்டை எழுதிருந்தார். ஸ்வர்ணலாதாவும் எஸ்.பி.பியும் பாடியிருந்தாங்க.

* செங்குருவி செங்குருவி 

ஜானகியும் எஸ்.பி.பியும் பாடுன ரகளையான இந்த பாட்டு விஜயகாந்த் நடிச்ச திருமூர்த்தி படத்துல வந்தது. தேவா இசை, வாலி லிரிக்ஸ். பாடலுக்கு நடுவுல சிரிக்குறது, கேலி பண்றதுனு எஸ்.பி.பியோட எல்லாக் குறும்பும் இருக்கும். ஒடிசா கோவில் பேக்ட்ராப்ல ஹீரோயின் ரவளி துள்ளிக்குதிச்சு ஆடிட்டு இருப்பாங்க, நம்மாளு நடந்தே ஸ்கோர் பண்ணிடுவாரு. ரவளியோட மொத்த அழகையும் ஒரே வார்த்தைல ‘அடி சீனிச்சக்கரையே’னு எழுதி வாலிபக் கவிஞர்னு நிருபிச்சிருப்பாரு வாலி.

* ஆசை அதிகம் வச்சு

பாலு மகேந்திரா இயக்கிய மறுபடியும் படத்துல வர்ற பாட்டு இது. ரோகிணி இந்தப் பாட்டுல ஆடியிருப்பாங்க. 80ஸ் கிட்ஸ் இளையராஜா ரசிகர்கள் இந்தப் பாட்டு வந்தப்போவே கேட்டு ரசிச்சிருப்பாங்க. 90ஸ் கிட்ஸ்க்கு இந்தப் பாட்டு பரிச்சயம் ஆனது சூப்பர் சிங்கர் லக்ஸ்மி பாடின வீடியோ பார்த்துதான். இப்போ 2கே கிட்ஸ்க்கு இந்தப் பாட்டை கொண்டு போய் சேர்த்தது லோகேஷ் கனகராஜ். கைதில இந்த பாட்டை பயன்படுத்தியிருப்பாரு. இப்படி  ஒவ்வொரு ஜெனரேசன்லயும் யாராவது ஒருத்தர் இந்தப் பாட்டுக்கு திரும்பத் திரும்ப உயிர் கொடுக்குறாங்கனு சொல்லலாம்.

* கலைவாணியோ ராணியோ

கரகாட்டக்காரன் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து கங்கை அமரன் – ராமராஜன் கூட்டணி இணைந்த இன்னொரு படம் வில்லுப்பாட்டுக்காரன். இந்த பாட்டை பாடினது எஸ்.பி.பி, இசை இளையராஜா. கங்கை அமரன் எழுதின இந்த பாட்டுல ரெண்டு ஸ்பெஷல். ஒண்ணு வில்லுப்பாட்டுல சாமியைப் பத்தி பாடுற மாதிரியும் இருக்கும். ஹீரோயினுக்கு பாடுற மாதிரியும் இருக்கும். இன்னொன்னு கலைவாணியோ ராணியோல ராணி வேற யாருமில்ல இந்த படத்தோட ஹீரோயின் ராணி.  

* மத்தாளம் கொட்டுதடி மனசு

போன வீடியோல கமெண்ட்ல நிறைய பேர் சொன்ன பாட்டு இது. இது ரஞ்சித் ஹீரோவா நடிச்ச சிந்து நதிப் பூ படத்துல வந்த பாட்டு. இந்தப் படத்துல அடியே அடி சின்னப்புள்ள, ஆத்தாடி என்ன உடம்புனு எல்லாப் பாட்டும் ஹிட்டு. இந்த பாட்டெல்லாம் இளையராஜா போட்டதுனு நிறைய பேரு நினைக்குறாங்க. ஆனா இது சௌந்தர்யன் போட்ட பாடல்கள். சுவரங்களின் அரசி ஸ்வர்ணலதா பாடின பாட்டு, எஸ்.பி.பியும் குரல் கொடுத்திருப்பாரு.

* மெதுவா தந்தி அடிச்சானே 

அரவிந்த் சாமி நடிச்ச ‘தாலாட்டு’ படத்துல வந்த பாட்டு. இளையராஜா இசை, புலமைப்பித்தன் எழுதியிருப்பாரு. மனோவும் மின்மினியும் பாடியிருப்பாங்க. இந்த வீடியோவுக்காக யூ-டியூப்ல இந்தப் பாட்டை பாத்துட்டு இருந்தப்போ பக்கத்துல இருந்தவர்ட்ட ‘ஏண்ணே வேகமா அடிச்சாதான தந்தி.. லாஜிக் இடிக்குதே’னு கேட்டேன். அதுக்கு அவர் ‘அட அதை விடு தம்பி.. இந்த சிவரஞ்சனி இருக்கே.. ஒரு காலத்துல எவ்வளவு பெரிய கனவுக்கன்னி தெரியுமா? எருக்கஞ்செடி ஓரம் இருக்கி புடிச்சேன், பூத்தது பூந்தோப்பு, ஏரிக்கையா ஏரிக்கையா ரிக்‌ஷாவுல இப்படி எத்தனை எத்தனை பாட்டு. ப்ச்ச்.. தமிழ் சினிமா கொண்டாட மறந்த பேரழகி தம்பி.. இப்போ எங்க என்ன பண்ணுதோ’ னு புலம்புனாரு. ’20 வருசத்துக்கு முன்னாடியே சினிமாலாம் வேணாம்னு ஆந்திராவுல செட்டில் ஆகிட்டாங்களாம்ணே. மூணு குழந்தைங்க. பெரிய பையன் வளர்ந்து சினிமாவுல நடிக்க வந்துட்டான். பொண்ணுகூட..’ நான் பேசிட்டு இருக்கும்போதே கடுப்பாகி கெளம்பிட்டாரு பாவத்த.

17 thoughts on “டவுன் பஸ் ப்ளேலிஸ்ட்… சில சுவாரஸ்யங்கள்!”

  1. Thank you for sharing excellent informations. Your web site is so cool. I am impressed by the details that you’ve on this website. It reveals how nicely you understand this subject. Bookmarked this web page, will come back for extra articles. You, my friend, ROCK! I found simply the information I already searched all over the place and just could not come across. What an ideal web site.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top