நாகர்கோவில்

மக்கா… நாகர்கோவில்காரங்க ஏன் யுனீக் பீஸ் தெரியுமா?

கன்னியாகுமரிகாரங்களை எப்பவும் மத்த மாவட்டக்காரங்க கொஞ்சம் வித்தியாசமாத்தான் பார்ப்பாங்க. அந்த பார்வைல கொஞ்சம் வைத்தெரிச்சல் இருக்கும், யார்ரா இவனுங்கனு ஆச்சரியம் இருக்கும், என்ன பாஷை பேசுற நீ-னு குழப்பமும் இருக்கும். “பழகிப்பார் பாசம் தெரியும். பகைத்துப்பார் வீரம் புரியும்”னு பெருமை பேசிட்டு திரியுறவங்க நாரோலியன்ஸ் இல்லை. தான் உண்டு தான் வேலை உண்டுனு இருக்குறவன் சமநிலை தவறுனா என்ன ஆகும்னு மாஸா பேசுறவங்களும் கிடையாது. அப்புறம் எப்படிப்பட்டவங்கனு தான கேக்குறீங்க? ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒரு கட்சிக்கு ஓட்டுப்போட்டா… இவங்க மட்டும் வேற கட்சிக்கு ஓட்டுப்போட்டு அவங்களை சில சமயங்கள்ல ஜெயிக்க வைச்சு, நம்மளாலதான் அவங்க சென்ட்ரல்ல ஆட்சியே புடிச்சாங்கனு நம்புற பிஞ்சு மனசு கொண்ட நஞ்சில்லா நெஞ்சங்கள்தான் இவங்க. கன்னியாகுமரிகாரங்களை ஏன் யூனிக் பீஸ்ஸா எல்லாரும் பார்க்குறாங்க. அதைத்தான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

என்ன பாஷை பேசுற மேன் நீ…

நம்ம கன்னியாக்குமரியன்ஸ் பண்ண சில மொரட்டுத்தனமான சம்பவங்களை சொன்னா அவங்க ஏன் யூனிக் பீஸ்னு நீங்களே புரிஞ்சுக்குவீங்க. ஃபஸ்ட் அவங்க பேசுற பாஷைதான் எல்லாத்துக்கும் காரணம். தமிழையும் முழுசா பேசமாட்டாங்க. மலையாளத்தையும் முழுசா பேசமாட்டாங்க. இரண்டையும் மிக்ஸில போட்டு அடிச்சு வெரைட்டியான ஒண்ணை பேசுவாங்க. சோ, இந்த கிராம்மர்களை தூக்கிட்டு அவங்க முன்னாடி வந்தீங்கன்னா, “என்னல, உச்சைக்கு வந்து சலம்பிட்டு நிக்க. போய் சோலிய பாரு. கொம்மை தேடுவா”னு அனுப்பி விட்ருவாங்க. கன்னியாகுமரி மக்கள் விசித்திரமா நிறைய வார்த்தைகளை பேசுவாங்க. ஒரு ஊருக்கும் இன்னொரு ஊருக்கும்கூட வட்டார மொழில நிறைய வேறுபாடுகள் இருக்கும். அவங்க மொழியால உள்ளூர் மக்களே குழம்பிபோவாங்கனா பார்த்துக்கோங்க. அப்படி ஒரு சம்பவத்தை எழுத்தாளர் பிரபு தர்மராஜ் தன்னோட பக்கத்துல எழுதியிருந்தாரு. அதை முதல்ல சொல்றேன்.

“நாகர்கோவிலிலுள்ள ஒரு பைக் ஷோரூமுக்கு மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பைக்கர் ஒருத்தர் விஜயம் செய்து தன்னுடைய வண்டியில் கீ ஒர்க் ஆகவில்லை என்று பராதி சொல்லவே சர்வீசிலிருந்த மகான் ஜாப் ஷீட்டில் ‘Key Assembly complaint’னு எழுதியிருக்காரு. வண்டியில் சாவி போடும் மெக்கானிசத்தை சரி பார்த்து சர்வீஸ் செய்து அன்று மாலையில் வண்டியைக் கஸ்டமரான பைக்கரிடம் கொடுத்திருக்கிறார்கள். அந்த பைக்கர் மறுநாளும் சர்வீஸ் செண்டருக்கு வந்து மீண்டும் வண்டியை விட்டுவிட்டு அதே புகாரைச் சொல்லி பழுது நீக்குமாறு சொல்லவே சர்வீசிலிருந்தவர்கள் மீண்டும் செக் செய்து வாரண்டி முறையில் புதிதாக ஒரு Key assembly யைப் புதிதாக மாற்றிக் கொடுக்கவே பைக்கர் வந்து வண்டியை ஓட்டிக் கொண்டு போயிருக்கிறார்.

Nagercoil
Nagercoil

பைக்கர் மறுநாளும் வந்து மீண்டும் மீண்டும் புகார்ப்பட்டியல் வாசிக்க சர்வீஸ் குழுவுக்கு வியப்பு அப்பிக் கொண்டது. அப்படியென்ன ஒரு புதிரான வண்டி? மீண்டும் வாரண்டி முறை கைகூடாது என்பதாலும் கஸ்டமரின் மனம் நோகக் கூடாது என்றும் எண்ணி கைக்காசில் புதிதாக ஒரு சாவிசெட் மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள். மறுநாளும் அதே பைக்கர் வரவே சர்வீஸ் சென்டரில் பெகளம் நிகழ்ந்திருக்கிறது. வாய் தர்க்கம், கைகலப்பு என்று நீளவே பைக்கர் தன்னுடைய ஏரியாவிலுள்ள லோக்கல் கைய்ஸ் துணையோடு கொஞ்சம் ஆயுதங்களும் தரித்து ஷோரூமுக்குள் தாக்கும் நோக்கத்தோடு நுழைந்திருக்கிறது.
ஆயுதங்களோடு மர்ம தீவட்டிகள் ஷோரூமுக்குள் நுழைந்ததைக் கண்ட ஓனர் பின்பக்கச் சுவர் ஏறிக்குதித்து ஒரு தோப்புக்குள் ஓடி மறைந்திருக்கிறார். கடை ஊழியர்கள் ரூமுக்குள் ஓடித் தப்பவே கலவரக்குழு CCTV  கேமரா முன்பாகப் போய் அறைகூவல் விடுத்துக் கூவி கையின் நடுவிரலைக் காட்டி கலாட்டா செய்திருக்கிறது. அப்போது சர்வீஸ் செக்ஷன் மேனேஜர் அந்தக் குழுவிடம் போய் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு அவர்களைச் சமாதானப் படுத்தி வண்டியில் சாவியைப் போட்டு ஆன் செய்து வலது பக்க ஹேண்டில் பாரில் இருந்த சுவிட்சை ஆன் பண்ணி செல்ஃப் ஸ்டார்ட்டரைத் தட்ட வண்டி சிங்கம் போல உறுமியிருக்கிறது.

சர்வீஸ் மேனேஜர் மகிழ்ச்சியுடன், “பாருங்கள்! கீ நன்றாகவே ஒர்க் ஆகிறது!” என்று சொல்ல படபடத்த பைக்கர், “அந்த சுட்சி இல்ல கேட்டேளாண்ணா! எடத்தோட்டுல இரிக்கில்லியா அந்த சுச்சி?” என்று ஹாரனைக் கைகாட்ட மெக்கானிக் குழுவும் அடிதடிக் குழுவும் திகைத்துப் போயிருக்கிறது.
சர்வீஸ் செக்ஷன் மேனேஜர் மீண்டும், “நீங்க கீ ஒர்க் ஆவலைன்னுதானே சொன்னீங்க?”
“ஆமா சென்னைய்ன்! இதும் கீதானே? கீக்கிக்கிக்கீ? பப்பாய்ங்ன்னி சொன்னாத்தாம் மனசுலாவுமோ?”
இதைக்கேட்ட சர்வீஸ் மேனேஜர் ஸ்பாட்டிலேயே ரத்தம் கக்கி மயங்கிச் சரிந்திருக்கிறார்.  இத்தனைக்கும் அந்த பைக்கர் ஒரு இஞ்சினியரிங் படித்த பட்டதாரி என்பதும், அவர் ஆறுமுறை நாகர்கோவில் வந்து சர்வீஸ் முடித்து மார்த்தாண்டம் வரைக்கும் ஓட்டிக் கொண்டு போன போது வழியில் ஒருமுறை கூட ஹாரன் அடிக்கிறதா என்பதைச் சோதிக்கவில்லை என்பதும்தான் வரலாற்றுச் சோகம்.  கன்னியாமரியான்ஸ் என்பவர்கள் இந்தப் பூவுலகின் பூப்போன்றவர்கள் என்னும் காரியம் இப்போதாவது உங்களுக்கு உறைக்கிறதா நண்பர்களே!”னு போட்ருந்தாரு. இந்த சம்பவத்தைப் படிச்சதும் சிரிப்பு அடக்க முடியலை.

கிழங்கு - மீன்
கிழங்கு – மீன்

கிழங்கு மயக்குனதும் சாளை மீனும்…

கன்னியாகுமரியன்ஸ் ஃபுட்ல கேரளா ஸ்டைலும் இருக்கும். தமிழ்நாட்டு ஸ்டைலும் இருக்கும். ரெண்டும் மிக்ஸ் ஆனால், ரொம்ப கேவலமா இருக்குமேனு நினைக்கப்பிடாது. அடிச்சு சொல்றேன். கன்னியாகுமரி கிடைக்கிற மாதிரி டேஸ்ட்டான மீனு இந்த தமிழ்நாட்டுல வேற எங்கயும் கிடைக்காது. கிழங்க மயக்கி, சாளை மீன் குழம்பு வச்சு தருவாங்க பாருங்க. ஆஹா… எச்சி ஊருது. அப்படியே ஞாயிற்றுக்கிழமை வந்துச்சுனா பீஃப் இல்லைனா சிக்கன் கண்டிப்பா இருக்கும். அதாவது, வாரத்துல குறைஞ்சது 5 நாள் மீன் சாப்பாடு. 1 நாள் சிக்கன்/மட்டன்/பீஃப். இன்னும் ஒரு நாள் பக்திமயமா இருக்குறவங்க வெஜ் சாப்பிடுவாங்க. வெஜ்லயும் சும்மா இல்லை. அவியல்னு ஒண்ணு வைப்பாங்க. அதுல எல்லாக் காய்கறியும் இருக்கும். அந்த டேஸ்ட் இருக்கே… சாப்பிட்டாதான் தெரியும். அப்படியே டீக்கடை பக்கம் போனீங்கனா கூட ஃபுட்டை எஞ்சாய் பண்ணலாம். உன்னியப்பம், பழம்பொறினு வெரைட்டி காட்டுவாங்க. இலையப்பம், உளுந்து கொழுக்கட்டைனு வீட்டுல செய்வாங்க. அதுவும் வேறலெவல்தான். முக்கியமா ஒண்ணு சொல்லணும். ரச வடை. வேற எந்த ஊர்லவும் அப்படி ஒரு டேஸ்ட்ல ரச வடை கிடைக்காது. தோசை, இட்லிகூட வைச்சு சாப்பிட்டோம்னா… இந்த பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சதுனு அதை அனுபவிக்கிறது அவங்கதான்.

கடவுளின் குட்டி தேசம்…

Kanyakumari District (Photo - Tour My India)
Kanyakumari District (Photo – Tour My India)

கடல், ஆறு, குளம், ஏரி, குட்டைனு எல்லா டைப் நீர்நிலைகளும் அதேமாதிரி மா, பலா, வாழை, நெல்லுனு எல்லாவிதமான பொருள்களும் விளையுற இடமாவும் இருக்கும். கேரளாவை கடவுளின் தேசம்னு சொல்லுவாங்க. கன்னியாகுமரியை தமிழ்நாட்டுல இருக்குற கடவுளின் குட்டி தேசம்னு சொல்லிக்கலாம். அவ்வளவு அழகான இடங்கள் இருக்கு. கன்னியாகுமரில இருந்து கேரளா பார்டர் வரை கடல் பக்கத்துல உள்ள ரோடு வழியாவும் நீங்க டிராவல் பண்ணலாம். அதே மாதிரி கன்னியாகுமரில இருந்து கேரளா பார்டருக்கு ரெண்டு பக்கமும் பச்சை பசேல்னு இயற்கை நிறைஞ்ச இடங்கள் வழியாவும் நீங்க டிராவல் பண்ணலாம். பொதுவா கன்னியாகுமரினு சொன்னதும் பிரபலமான இடங்கள்தான் நமக்கு தெரியும். ஆனால், அதைத் தவிர்த்து காளிகேசம், பேச்சிப்பாறை, கீரிப்பாறை, பத்துக்காணி, அருவிக்கரைனு ஏகப்பட்ட பலருக்கும் தெரியாத இடங்கள் குமரிக்குள்ள ஒளிஞ்சிருக்குனா பார்த்துக்கோங்க. காலநிலையும் மற்ற மாவட்டங்கள்ல இருந்து ரொம்பவே வித்தியாசமா இருக்கும்.

பாஷைல இருந்து லேண்ட்ஸ்கேப் வரைக்கும் எல்லாமே எல்லா மாவட்டங்கள்ல இருந்தும் வித்தியாசமா இருக்குறதுனாலதான் அவங்களை யூனிக் பீஸ்னு சொல்லலாம். இப்படி, கன்னியாகுமரி மக்கள்கிட்ட யூனிக் விஷயமா நீங்க பார்க்குற விஷயத்தைக் கமெண்ட்ல சொல்லுங்க.

Also Read – இதுக்கெல்லாமா போஸ்டரு… மதுரையின் போஸ்டர் கலாட்டா!

1 thought on “மக்கா… நாகர்கோவில்காரங்க ஏன் யுனீக் பீஸ் தெரியுமா?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top